March 2023 - Bible Quiz
TRM Monthly Bible Quiz - March 2023
TRM Monthly Bible Quiz - March 2023 - Jesus
Jesus
Clue: மத்தேயு புத்தகத்தில் இருந்து மாத்திரமே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
Questions:
Choose the best answer:
1)”யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே?” என கேட்டது யார்?
அ) மேய்ப்பர்கள் ஆ)சாஸ்திரிகள் இ) ஏரோதுராஜா ஈ) யூதேயாவின் மக்கள்
2)இயேசு, “அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே” என்று சொன்னபோது எதைக் குறித்து பேசினார்?
அ)உயிர்த்தெழுதல் ஆ)பாவமன்னிப்பு இ)சத்தியம், ஈ)உபவாசம்
3)“இயேசு பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்”. இங்கு யாருடைய தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது?
அ)ஏசாயா ஆ)எரேமியா இ)யோனா ஈ)எலியா
4) தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பவன் எந்த இடத்தில் விதைக்கப்பட்டவன்?
அ) வழி அருகே ஆ) கற்பாறை 13 இ) முள்ளுள்ள இடம் ஈ) நல்ல இடம்
5) “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்” என்று இயேசு யாரைக் குறித்து சொன்னார்?
அ)இரட்சிக்கப்பட்டவர்கள் ஆ)தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இ)யூதர்கள் ஈ)அப்போஸ்தலர்கள்
6)ஒரே அதிகாரத்தில் இருக்கக்கூடிய கீழ்க்கண்ட வசனங்களை வரிசைப்படுத்தவும் (Arrange in order):
(எது முதலாவது வரும், எது இரண்டாவது வரும் என்று வரிசைப்படுத்தி 6,5,4,3,2,1 இது போல பதிலை பதிவிடவும்)
a. தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
b. இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்
c. நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டார்கள்
d. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்;
e. இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
f. அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்
7)Match the following
1)ஏரோது - பிரதான ஆசாரியன்
2)காய்பா - சிலுவையை சுமந்தவன்
3)பொந்தியு பிலாத்து - காற்பங்கு தேசாதிபதி
4சிரேனே ஊரானாகிய சீமோன் - இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைத்தவன்
5)அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு - தேசாதிபதி
சரியா?தவறா?
8)யாக்கோபு, யோசே, சீமோன், யூதா இவர்கள் நால்வரும் இயேசுவின் சகோதரர்கள்.
9) ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக்காவலில் வைத்திருந்தான்.
10)”என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும்” என்று இயேசுவிடம் கேட்டது அல்பேயுவின் தாய்.
11) தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்ட நீதிமான் ஆபேல்.
12) யூதாஸ் காரியோத்து இறந்த பின், அவன் எறிந்துவிட்டு போன 30 வெள்ளிக்காசைக் கொண்டு பிரதான ஆசாரியர் குயவனுடைய நிலத்தைக் கொண்டார்கள்.
Answer the following:
13)யூதேயாவை ஏரோதுக்கு பிறகு அரசாண்டது யார்?
14) பிசாசு இயேசுவை தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, தூதர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்ன போது, இயேசு அவனுக்கு என்ன பதில் உரைத்தார்?
15) “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை” என்று இயேசு யாரைக் குறித்து கூறுகிறார்?
16) யார் தனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்று இயேசு குறிப்பிடுகிறார்?
17) “அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.” இயேசு இந்த வார்த்தையை யாரிடம் கூறினார்?
18) மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று இயேசு கேட்ட போது, பேதுரு என்ன பதில் உரைத்தார்?
19)”மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்” என்று இயேசு யாரிடம் சொன்னார்?
20) “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்” என்று இயேசு யார் யாரிடம் சொன்னார்?
Answers:
1) சாஸ்திரிகள் (மத் 2:1)
2) சத்தியம் (மத் 5:36)
3)ஏசாயா (மத் 8:16-17)
4) கற்பாறை(மத் 13:20-21)
5) அப்போஸ்தலர்கள் (மத் 19:28)
6) d, f, b, a, c, e (மத் 21)
7) பதில் : 3,1,5,2,4
ஏரோது - காற்பங்கு தேசாதிபதி (14:1)
காய்பா - பிரதான ஆசாரியன் (26:3)
பொந்தியு பிலாத்து - தேசாதிபதி (மத்27:2)
சிரேனே ஊரானாகிய சீமோன் - சிலுவையை சுமந்தவன்(மத் 27:32)
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு - இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைத்தவன்(மத் 27:57-60)
8) சரி (மத் 13:55)
9) சரி (மத் 14:3)
10) தவறு
செபெதேயுவின் குமாரருடைய தாய் (மத் 20:20-21)
11)தவறு
சகரியா (மத்தேயு 23:35)
12) சரி (மத்தேயு 27 : 7)
13) அர்கெலாயு (மத் 2:22)
14) உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:3-7)
15) நூற்றுக்கு அதிபதி (மத் 8:8-10)
16) சீஷர்கள் / பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ (மத் 12:49,50)
17) கானானிய ஸ்திரீ (மத் 15:22,26)
18) நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து (மத் 16:16)
19) சீஷர்கள் (19:25)
20) ஐந்து தாலந்தை வாங்கினவனிடமும், இரண்டு தாலந்து வாங்கினவனிடமும் (மத் 25:15,21)
Comments
Post a Comment