தீர்க்கத்தரிசனமும், தீர்க்கத்தரிசிகளும்
தீர்க்கத்தரிசனமும், தீர்க்கத்தரிசிகளும்
பழைய ஏற்பாட்டில் அராமிய மொழி எங்கு காணப்படுகிறது?
- தானியேல் முதலாம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் இருந்து ஏழாவது அதிகாரம் வரைக்கும் அராமிய மொழி காணப்படுகிறது (1:2 to 7).
- நெகேமியா புத்தகத்தில் ஆங்காங்கே அராமிய மொழி காணப்படுகிறது.
- எரேமியா புத்தகத்தில் ஆங்காங்கே அராமிய மொழி காணப்படுகிறது.
புதிய ஏற்பாட்டில் அராமிய மொழி எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?
- புதிய ஏற்பாட்டில் அராமிய மொழி எழுத பயன்படுத்தப்படவில்லை.
- ஏனென்றால் கி.மு.334 ஆம் ஆண்டு இந்த உலகத்தை தன்னுடைய ஆட்சிக்கு கீழே கொண்டு வந்த மகா அலெக்சாண்டர் என்ற கிரேக்க மன்னன்
- கிரேக்க மொழியை கி.மு.333 ஆம் ஆண்டு சர்வதேச மொழியாக மாற்றினான்.
- இஸ்ரவேலிலும் மக்கள் அராமிய மொழி பேசினாலும் அவர்கள் எழுதியது கிரேக்க மொழியில்.
புதிய ஏற்பாட்டில் சில இடங்களில் அராமிய மொழியில் பேசப்பட்டவைகள்:
- ஆனால் புதிய ஏற்பாட்டில் சில இடங்களில் அராமிய மொழியில் பேசப்பட்டதை எழுதியிருக்கிறார்கள்.
- தலீத் - எழும்பு
- தாகூமி - சின்ன பெண்ணே!
- ஏலோயீ,ஏலோயீ - என்னுடைய தேவனே, என்னுடைய தேவனே
- லாமா - ஏன் எதற்காக
- சபக்தானி - என்னை கைவிட்டு விட்டீரே
தீர்க்கத்தரிசனம், தீர்க்கத்தரிசி இந்த வார்த்தைகள் அராமிய மொழியில் சொல்லப்பட்டனவா?
- தீர்க்கத்தரிசனம், தீர்க்கத்தரிசி இந்த வார்த்தைகளை அராமிய மொழியில் உபயோகப்படுத்த தேவை ஏற்பட்டு இருக்கவில்லை.
தீர்க்கத்தரிசனம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் 4 வார்த்தைகளால் குறிப்பிடப்படும்.
- Ro’eh என்றால் “காண்கிறவன்” என்று அர்த்தம்.
- See’r என்று ஆங்கில வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
முதல் எடுத்துக்காட்டு:
- சாமுவேல் ஒரு See’r.
- ஆனால் தமிழில் சாமுவேல் ஒரு தீர்க்கத்தரிசி.
இரண்டாம் எடுத்துக்காட்டு:
- தாவீதுக்கு 2 பேர் இருந்தனர்.
- நாத்தான் மற்றும் காத்.
- இவர்கள் இருவரும் See’r.
யார் இவர்கள்:
- ஆண்டவருடைய மகத்துவங்களை காண்கிறவர்கள்.
- சாமுவேல் சில காண்கிறவர்களை உருவாக்கினார்.
- அவர்களுக்கு பெயர் காண்கிறவர்களின் புத்திரர்கள் (Sons of seers).
தீர்க்கத்தரிசிகளின் புத்திரர் - காண்கிறவர்களின் புத்திரர்:
- Ben roeh.
- Benim roeh.
- Ben என்றால் ஒருமை.
- Benim என்றால் பண்மை.
- எபிரேய மொழியல் “enim” என்று முடிந்தால் அது பண்மை.
- இவர்களை தமிழ் வேதாகமத்தில் “தீர்க்கத்தரிசிகளின் புத்திரர்” என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
சவுலும் தீர்க்கத்தரிசிகளில் ஒருவனோ:
- சாமுவேலின் காலத்தில் ஒரு வழக்கச்சொல் இருந்தது.
- சவுலும் Roeh’களில் ஒருவனோ?
- ஆனால் தமிழ் வேதாகமத்தில் சவுலும் தீர்க்கத்தரிசிகளில் ஒருவனோ என்று எழுதப்பட்டுள்ளது.
- விடிய விடிய சவுல் roeh செய்தான்.
- அதாவது “தீர்க்கத்தரிசனம் உரைத்தான்” என தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.
தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
-1 சாமுவேல் 19 : 24
சவுல் தீர்க்கத்தரிசனம் உரைத்தான்:
- சவுல் தாவீதை துரத்திக் கொண்டு போகிறான்.
- முதலாவது ஒரு இராணுவ சேனையை அனுப்புகிறார்.
- நாயோத் என்ற இடம்.
- தீர்க்கத்தரிசிகள் வாழ்ந்த ஒரு இடம்.
- சவுல் அனுப்பின சேனை போய் தீர்க்கத்தரிசனம் உரைக்க ஆரம்பித்தார்களாம்.
- சவுல் இன்னொரு குழு அனுப்புகிறான்.
- அவர்களும் தீர்க்கத்தரிசனம் உரைக்க ஆரம்பித்தார்களாம்.
- சவுல் மூன்றாவது முறை ஒரு குழுவை அனுப்புகிறான்.
- அவர்களும் தீர்க்கத்தரிசனம் உரைக்க ஆரம்பித்தார்களாம்.
- பின்பு சவுலே சென்றான்.
- அவனும் தீர்க்கத்தரிசனம் உரைத்தான்.
- அவர்கள் தேவனுடைய வல்லமையை கண்டார்கள்.
- கண்டதை சொன்னார்கள்.
- Roeh கள் சாதாரண மனுஷன் பார்க்க முடியாத தேவனுடைய வல்லமையை கண்டார்கள்.
- அப்படிப்பட்ட விஷயங்களை கண்டால், வாய் சும்மா இருக்குமா?
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
-1 சாமுவேல் 19 : 21
அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
-1 சாமுவேல் 19 : 23
- ஒரு அழகான விஷயத்தை கண் பார்த்தால் வாய் wow என்று சொல்லும்.
- ஒரு விபத்தை கண் பார்த்தால் வாய் அய்யோ என்று சொல்லும்.
- எனவே Roeh கள் யாரும் பார்க்கக் கூடாத மகத்துவங்களை பார்த்ததால், அவர்கள் அதை வாயினாலே சொன்னார்கள்.
ஆண்டவர் தானாகவே தன்னுடைய மகிமையை காண்பிப்பது - Ro’eh:
- தீர்க்கத்தரிசிகளின் புத்திரர் மேளங்களோடும், வாத்தியங்களோடும் மலையில் இருந்து தீர்க்கத்தரிசனம் உரைத்து கொண்டு கீழே வந்தார்கள்.
- ஆண்டவரே தானாக மகிமையை காட்டுவார்.
2) Hoz’eh in Hebrew
3) Esh-Elohim in Hebrew
- இது அதிகமான இடங்களிலே பயன்படுத்தப்படவில்லை.
- Hozeh என்றால் “பார்ப்பவன்” என்று அர்த்தம்.
- நீங்கள் எதைப் பார்ப்பீர்களோ அதைக் காண்பீர்கள்.
- ஆனால் ஆண்டவரே வந்து மகிமையை காட்ட மாட்டார்.
- தாங்களாகவே வந்து அந்த மகிமையை பார்க்க விரும்புவார்கள்.
- இதற்காக அவர்கள் மலை உச்சியின் மீது போய் துதித்து ஆராதனை செய்வார்கள்.
- ஆண்டவரின் மகிமையை பார்ப்பதற்கு முயற்சி செய்வார்கள்.
- மோசே - Hoseh
- மோசேயைப் போல ஒரு தீர்க்கத்தரிசி இல்லை என்ற இடத்தில் Hoseh என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- ஏனென்றால் அவன் தேவனையே பார்க்க விரும்பினான்.
- அதனால் அவனுக்கு தன்னை காண்பித்தார்.
கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
-உபாகமம் 34 : 12
- Esh என்றால் மனுஷன்.
- Esh-ia என்றால் மனுஷி.
- தேவனுடைய மனுஷன் என்று பொருள்.
- இந்த Esh-Elohim என்ற வார்த்தை roeh, hoseh எல்லாருக்கும் பயன்படுத்துவார்கள்.
- இங்கு சாமுவேல் என்ற Esh-Elohim இருக்கிறார்.
- Nabi என்று Arabic மொழியில் அழைக்கப்படும்.
- இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
- முதன்முதலில் இந்த வார்த்தை ஒரு பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது - மிரியாம்
- முதன்முதலில் நவி என்று அழைக்கப்பட்டாள்.
- Nevia- Navi ன் பெண்பால்.
- கடைசியாக navi என்று அழைக்கப்பட்டது மல்கியா
- தேவன் சார்பாக பேசுகிறவர் என்று அர்த்தம்.
Beth - Hebrew Alphabet:
- அது ஒரு சொல்லுக்கு முன்னால் வந்தால் ba என்ற சப்தம் வரும். (எ.கா ஆதி 1:1 beheshit Baahaa)
- அது ஒரு சொல்லுக்கு இடையில் வந்தால் va என்ற சப்தம் (எ.கா Sabbath ,Savath)
- ஆனால் Arabic ல இரண்டுமே ba சப்தம் தான் (எ.கா Nabi)
Navi என்ன பேசுவார்கள்:
- இரண்டு விஷயங்கள் பேசுவார்கள்.
- Forth telling - மனிதர்களுக்கு சொல்லுவது.
- Fore telling - predictions
- எதிர்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றி சொல்வது
- பழைய ஏற்பாட்டில் உள்ள முழு தீர்க்கத்தரிசிகளின் தொகையிலும், 30/100 பேர் தான் மக்களோடு பேசினார்கள்.
- அதிலும் பாதி பேர் தான் எதிர்காலத்தை பற்றிச் சொன்னார்கள்.
- மற்றவர்கள் ஆண்டவரோடு பேசினார்கள். ஆண்டவரைத் துதித்தார்கள்.
- ஆண்டவரை துதிப்பது தான் பழைய ஏற்பாட்டு தீர்க்கத்தரிசிகளின் தலையாய ஊழியம்.
தீர்க்கத்தரிசனம் என்பது என்ன?
- தீர்க்கத்தரிசனம் என்பது எதிர்காலத்தைப் பற்றி சொல்வது அல்ல.
- தீர்க்கத்தரிசனம் என்பது ஆண்டவரை துதிப்பது.
- கி.மு 270 க்கும் கி.மு 250 வது ஆண்டுக்கும் இடையில் முழு பழைய ஏற்பாடும் கிரேக்க மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. (Septuagint - LXX - 70)
- அப்படி மொழிப்பெயர்க்கும் போது எபிரேய மொழியில் இருப்பது போன்ற சொற்கள் கிடைக்காமல் prophetess என்ற சொல்லை பயன்படுத்தினார்கள்.
- கி.பி. 1611 ம் ஆண்டு ஆங்கிலத்தில் prophet என மாற்றினார்கள்
Navi:
- Navi என்றால் கர்த்தருக்காக பேசுபவன்.
- ஒரு மனிதன்
Navim:
- தீர்க்கத்தரிசிகளின் புத்தகங்கள்.
- யோசுவா முதல் மல்கியா வரை.
- ஆனால் Navim என்றால் அது மனிதனே அல்ல.
- 34 புத்தகங்களைக் குறிக்கும்.
Torah va nevim:
- நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசிகளும்.
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
-மத்தேயு 5 : 17
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
-மத்தேயு 7 : 12
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
-மத்தேயு 24 : 24
கள்ளத்தீர்க்கதரிசிகளும்:
- பழைய ஏற்பாட்டுக்கு புறம்பான உபதேசம்.
சங் 105:15 விளக்கம்:
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
-சங்கீதம் 105 : 15
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும்,
கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் யார்?
ராஜாக்கள், ஆசாரியர்கள், தீர்க்கத்தரிசிகள்.
என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும்
என்னுடைய Nevim கு தீங்கு செய்யாமலும் இருங்கள். அதாவது வேதத்திற்கு தீங்கு செய்யாமலும் இருங்கள். இந்த இடத்தில் எபிரேய மொழியில் nevim என்று இருக்கிறது.
லூக்கா 24:25 விளக்கம்:
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
-லூக்கா 24 : 25
தீர்க்கதரிசிகள்
பழைய ஏற்பாடு
அப் 10:43 விளக்கம்:
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
-அப்போஸ்தலர் 10 : 43
தீர்க்கதரிசிகளெல்லாரும்
வேதம் அவரைக் குறித்து சாட்சி கொடுக்கிறது.
ரோமர் 12:6 விளக்கம்:
நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
-ரோமர் 12 : 6
Romans 12:6 Having then gifts differing according to the grace that is given to us, whether prophecy, let us prophesy according to the proportion of faith;
- வேதத்தை அழகாக புரிந்து கொண்டு கற்றுக் கொடுக்கின்ற வரத்தை உடையவன்.
- அவனுக்கு இருக்கிற விசுவாசப் பிரமாணத்தின்படி, வேதத்தை விளங்கப்படுத்தக்கடவன்.
1 கொரி 12:10 விளக்கம்:
வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
-1 கொரி 12 : 10
1 Corinthians 12:10 To another the working of miracles; to another prophecy; to another discerning of spirits; to another divers kinds of tongues; to another the interpretation of tongues:
- வேதத்தை குறிக்கிறது.
1 கொரி 12:8 விளக்கம்:
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
-1 கொரி 12 : 8
1 Corinthians 12:8 For to one is given by the Spirit the word of wisdom; to another the word of knowledge by the same Spirit;
- அறிவை உணர்த்தும் வசனம் என்பது வெளிப்பாடுகள்.
- அதாவது இந்த அறிவை உணர்த்தும் வசனத்தில் வரும்.
- அதை சரியாக பயன்படுத்த ஆண்டவர் ஞானத்தை கொடுக்கிறார்.
- அறிவை உணர்த்தும் வசனம் என்பது தீர்க்கத்தரிசனம் அல்ல; சபையிலே வருகிற வெளிப்பாடு.
- தீர்க்கதரிசனம் உரைத்தல் என்பது தேவனுடைய வார்த்தையை பகுத்து கொடுப்பது.
- வெளிப்பாட்டு வரம் - word of knowledge
1 கொரி 14:1 விளக்கம்:
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
-1 கொரி 14 : 1
1 Corinthians 14:1 Follow after charity, and desire spiritual gifts, but rather that ye may prophesy.
தீர்க்கதரிசன வரத்தை
- வேதத்தை விரும்புங்கள்.
- அதனால் அந்நிய பாஷை பேச விரும்புவதை விட வெளிப்பாடு சொல்ல விரும்பு.
- வார்த்தையை கேட்பது மாத்திரமல்ல.
- வார்த்தையை விளங்கிக் கொள்ளவும் விரும்புங்கள்
- எல்லோரும் வேதத்தை புரிந்து கொள்ளுகிற வரத்தை நாடுங்கள்.
எண் 11:25-26 விளக்கம்:
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
-எண்ணாகமம் 11 : 25
அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
-எண்ணாகமம் 11 : 26
- மோசே - Hoseh
- காண்பவன் அல்ல, பார்க்க விரும்புகிறவன்.
- அந்த 70 பேரும் ஆண்டவரை வித்தியாசமான முறையிலே பார்த்தார்கள்.
- 68 பேரும் பார்த்து முடித்தார்கள்.
- எல்தாத், மேதாத் மாத்திரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எண் 11:29 விளக்கம்:
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
-எண்ணாகமம் 11 : 29
- எல்லாரும் தேவனைப் பார்க்கின்ற Hoseh களாக வர வேண்டும் என்கிறார்.
வெளி 1:3 விளக்கம்:
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
-வெளிப்படுத்தல் 1 : 3
- இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை - முழு வேதத்தையும்
- வாசிக்கிறவனும் - சும்மா வாசிச்சாலே போதும்
- கேட்கிறவர்களும் - வாசிக்க தெரியவில்லை என்றால் மற்றவன் வாசிக்க நீங்கள் கேளுங்கள்.
- கைக்கொள்ளுகிறவர்களும் - வேதத்தில் உள்ள கட்டளைகளை கைகொள்ளுகிறவர்கள்.
1 கொரி 12:28 விளக்கம்:
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.
-1 கொரி 12 : 28
சபையிலே (ஒருமை):
- சபைகளிலே அல்ல, ஒவ்வொரு சபையிலும்
- Ekklesia in Greek - Church- சபை
முதலாவது
- Proton in Greek - first
அப்போஸ்தலரையும்,
- Apostlolos in Greek - Apostles - அப்போஸ்தலர்
- Apostoli என்கிற அப்போஸ்தலர்கள் அல்ல
- ஒருமையில் சொல்லப்பட்டுள்ளது.
- ஒரு சபைக்கு ஒரு அப்போஸ்தலர் தான்.
- நாம் Pastor என சொல்லுகிறோம்.
- சபையின் மேய்ப்பன்.
- எல்லா காரியங்களையும் செய்யும் வரம் பெற்றவர்கள்.
- விசேஷ கிருபை கொண்டவர்.
இரண்டாவது தீர்க்கதரிசிகளையும்
- prophetes in Greek
- பண்மையில் சொல்லப்பட்டுள்ளது.
- இரண்டு அர்த்தங்களை கொண்டது.
- வேதம் மற்றும் வேதத்தை விளக்கப்படுத்துகிற மனிதர்கள்.
- Nevim ஐ விளக்கப்படுத்துகிற nevim கள்.
போதகர்கள்
- ஒழுக்கத்தையும், எப்படி சபையை நடத்துவது என்றும் கற்றுக் கொடுப்பார்கள்.
பின்பு அற்புதங்கள்
- இவ்வளவு நேரம் நபர்களை குறித்து பார்த்தோம்.
- அடுத்தது மற்றவைகளை பார்க்கிறோம்.
- பொதுவான வரம்.
- எல்லோருக்கும் வரும்.
ஆளுகைகளையும்
- Administration
பலவித பாஷைகளையும்
- கடைசியாக அந்நிய பாஷை.
எபேசி 4:12-13 விளக்கம்:
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
-எபேசியர் 4 : 12
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
-எபேசியர் 4 : 13
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு
- உலகத்திலே பரிசுத்தவான்களை சீர்பொருந்தும்பொருட்டு
சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்
- உலகமெங்கும் சுவிசேஷம் போய் சேர வேண்டும்.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது
- உலகத்தில் இருக்கிற சபைகள்
சிலரை அப்போஸ்தலராகவும்,
- உலக சபைகளில் சிலரை அப்போஸ்தலராகவும்.
- இயேசுவின் காலத்தில் அப்போஸ்தலர் போல.
- உலகமெங்கும் சுவிசேஷம் அறிவிப்பவர்களாக இருப்பார்கள்.
சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும்,
- சர்வ உலகத்திலும், சர்வதேச சபையில் தீர்க்கத்தரிசனம் சொல்லுபவர்கள்.
சிலரைச் சுவிசேஷகராகவும்
- Billy Graham போன்றவர்கள்.
- லட்சக்கணக்கானோர் இரட்சிக்கப்படுவார்கள்.
போதகராகவும்
- உலகம் முழுவதும் படித்துக் கொடுப்பவர்கள்.
யூதா 1:3 விளக்கம்:
பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
-யூதா 1 : 3
பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட
- பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை மாத்திரம் ஒப்புக்கொடுக்கப்பட்ட .
Comments
Post a Comment