தீர்க்கத்தரிசி விளக்கம்
தீர்க்கத்தரிசி விளக்கம்
- வேதத்தில் தீர்க்கத்தரிசி என பல இடங்களில் வாசிக்கிறோம்.
- ஆனால் அவர்களெல்லாரும் எதிர்கால தீர்க்கத்தரிசனத்தை உரைத்தவர்கள் அல்ல.
- Roe’h என்றால் “காண்கிறவன்” என்று அர்த்தம்.
- ஆங்கிலத்தில் “Seer” எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
- தமிழில் “ஞானதிருஷ்டிக்காரன்” என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
- இவர்களுக்கு இவர்கள் போய் வேண்டி கேட்டுக் கொள்ளாமலே, ஆண்டவர் தரிசனம் கொடுப்பார்.
- Hoze’h என்றால் “பார்க்கிறவன்” என்று அர்த்தம்.
- ஆங்கிலத்தில் “Seer” எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
- தமிழில் “ஞானதிருஷ்டிக்காரன்” என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
- ஆனால் இவர்கள் ஆண்டவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பி ஆண்டவரிடத்தில் போய் மன்றாடி, அவரை பார்ப்பார்கள்.
- ஆண்டவரை இசைக் கருவிகள் மூலம் இசை வாசித்து துதிப்பவர்களும் இவர்கள் தான்.
- Navi என்றால் எதிர்காலத்தை குறித்து தீர்க்கத்தரிசனம் உரைப்பவர்கள்.
- ஆங்கிலத்தில் Prophet எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
- Arabian மொழியில் இது Nabi என்று அழைக்கப்படும்.
- prophet என்ற ஆங்கில வார்த்தையானது ஒரு கூட்டு கிரேக்க வார்த்தையின் ஒலிபெயர்ப்பாகும்;
- pro (முன்/நோக்கி) ; phesein (சொல்ல)
- எனவே, ஒரு (ப்ரோப்டஸ்) என்பது எப்போதாவது எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவிப்பது உட்பட,
- தேவனிடத்திலிருந்து மனிதர்களுக்கு செய்திகளை தெரிவிப்பவர்.
- ஒரு தீர்க்கதரிசி என்பவர் தேவனுக்காக அவருடைய மக்களிடம் பேசுபவர்.
- இந்த வார்த்தை பெரும்பாலான இடங்களில் வரும்.
- Esh-Elohim என்றால் தேவனுடைய மனுஷன் என்று பொருள்.
Roe’h |
Hoze’h |
Look (காண்பவர்கள்) |
See (பார்ப்பவர்கள்) |
"look" என்பது உங்கள் கண்களை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தி காண்பதாகும். |
“see" என்பது உங்கள் கண்களைப் பயன்படுத்தி யாரையாவது அல்லது எதையாவது கவனிப்பது. |
தரிசனம் காண்கிறவர்கள் |
தரிசனம் பார்க்கிறவர்கள் |
ஞானதிருஷ்டிக்காரன் |
ஞானதிருஷ்டிக்காரன் |
ஆண்டவரே இவர்களுக்கு தரிசனம் கொடுப்பார். |
ஆண்டவரின் தரிசனத்தை பார்க்க ஆசைப்பட்டு, துதிப்பார்கள். |
Ro’eh |
Hoze’h |
Navi |
சாதோக் - ஆசாரியன் (2 சாமு 15:27) |
காத் (2 சாமு 24:11, 1 நாளா 29:30) |
நாத்தான் (1 நாளா 29:30, 2 நாளா 9:29) |
சாமுவேல் (1 நாளா 9:22, (1 நாளா 26:28, 1 நாளா 29:30) |
ஏமானின் புத்திரர்கள் (1 நாளா 25:4) |
|
சவுல் (1 நாளா 26:28) |
இத்தோ (2 நாளா 9:29) |
|
அப்னேர் (1 நாளா 26:28) |
யெகூ (2 நாளா 19:2) |
|
யோவாப் (1 நாளா 26:28) |
ஆசாப் (2 நாளா 29:30) |
|
அனானி (2 நாளா 16:7) |
எதுத்தூன் (2 நாளா 35:15) |
|
- இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆசாப், ஏமான், எதுத்தூன் என்ற மூவருமே Hoze’h என்று மேலே உள்ள அட்டவணையில் நாம் காண்கிறோம்.
- எனவே, இவர்கள் ஆண்டவரைத் துதித்து பாடி, அவரை பார்க்க விரும்புகிறார்கள்.
- இவர்கள் தீர்க்கத்தரிசிகள் அல்ல.
- இவர்களின் பாடல்கள் தேவனின் ஆவியால் தூண்டப்பட்டது அல்லது வழிநடத்தப்பட்டது.
- நன்றி, துதி என்பதை தான் குறிக்கிறது.
- இவர்கள் மூவரின் பாடல்களும் சங்கீதம் புத்தகத்திலும் இடம் பெறுகின்றன.
ஆசாப் |
எதுத்தூன் |
ஏமான் |
சங் 50,73-83 |
சங் 88 |
சங் 39,62,77 |
- 1 சாமுவேல் 19 இல், சவுல் 3 சேவகர்களை அனுப்பியதாகவும், தேவனுடைய ஆவியானவர் அவர்கள் மேல் வந்து, அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்ததாகவும் வாசிக்கிறோம்.
- கடைசியாக சவுல் சென்றார், அவரும் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
- இங்கே, இது தீர்க்கத்தரிசனத்தைக் குறிக்கவில்லை. அவர்கள் கர்த்தரின் மகிமையைக் கண்டார்கள்.
- அவர்களில் நிரம்பியிருக்கும் மகிமையின் காரணமாக, அவர்கள் தங்கள் சுயநினைவின்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
- அது தான் தீர்க்கத்தரிசனம் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சவுல் ஒரு Roe’h என்று மேலே உள்ள அட்டவணையில் வாசிக்கிறோம்.
Comments
Post a Comment