தேவன்(ELOHIM) மற்றும் கர்த்தர்(YAHWEH)
தேவனின் கை (Elohim) versus கர்த்தரின் மனது (Yahweh)
தேவனுடனான உங்கள் உறவில் கவனம் செலுத்துங்கள், உங்கள் கவலைகளையும் வருத்தங்களையும் அவரிடம் கொடுத்துவிடுங்கள்.
நோவாவின் குடும்பம் பேழைக்குள் நுழைகிறது:
“தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்”.
-ஆதியாகமம் 7 : 16
- எபிரேய மொழியில்,
“தேவன் -the God” என்பது “எலோஹிம் -Elohim”
- “ யாஹ்வே” — கர்த்தரின் இந்த பெயருக்கு "உடன்படிக்கை நண்பன்" என்று பொருள். தேவன் நம்முடன் செய்த உடன்படிக்கை, அவருக்கும் நமக்கும் உள்ள பிணைப்பாகும்.
- “ எலோஹிம்” — “தேவனின் இந்த பெயருக்கு "சூழ்நிலைகளை நகர்த்தும் படைப்பாளர்" என்று பொருள்”.
- இயேசுவை உங்கள் தேவன் மற்றும் இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் உடன்படிக்கை நண்பரான யாஹ்வே உங்களை அவருடன் நெருக்கமாக வைத்துக் கொள்வார்.
- பைபி்ளில் பல இடங்களில், குறிப்பாக முக்கியமான இடங்களில் யாஹ்வே மற்றும் எலோஹிம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தாவீது மற்றும் கோலியாத்:
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.

-1 சாமுவேல் 17 : 46
- உங்கள் உடன்படிக்கை நண்பரான யாஹ்வே உங்கள் எதிரிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்.
- உலகத்தில் உள்ள அனைவரும், உங்கள் வாழ்க்கையில் ‘உங்கள் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு எலோஹிம் இருப்பதை அறிவார்கள்.
உசியா - யூதாவின் ராஜா:
தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
-2 நாளாகமம் 26 : 5
- மேலேயுள்ள வசனங்களில் யாஹ்வே பயன்படுத்தப்படும் விதம்,
- இயேசுவை நம்முடைய உடன்படிக்கை நண்பராக (யாஹ்வே) நாம் அறிந்து கொள்ளும்போது, எலோஹிம் நம்முடைய நன்மைக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார் என்று சொல்கிறது.
- எலோஹிம் உங்களுக்காக சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் மாற்றுவார்.
- நாம் யாஹ்வே - உடன் தனிப்பட்ட நட்பைத் தேடும்போது அது நடக்கும்.
கர்த்தர் யோசபாத்தை யுத்தத்தில் இருந்து காப்பாற்றினார்:
ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.

-2 நாளாகமம் 18 : 31
- யோசபாத் ராஜா தவறு செய்து, தனது உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருந்த போது, அவர் யாஹ்வே நோக்கி கூப்பிட்டார்.
- எலோஹிம் அவருக்காக சூழ்நிலைகளை நகர்த்தி அவரைப் பாதுகாப்பாக வைத்தார்.
- தேவனின் வல்லமையை மட்டும் தேடாதீர்கள், அவருடைய முகத்தையும் தேடுங்கள்.
- அவருடன் நேரத்தை செலவிடுங்கள்.
- உங்கள் முயற்சியால் உங்களை உங்களால் மாற்றிக் கொள்ள முடியாது.
- ஆனால் நீங்கள் இயேசுவை தேடி அவரை உங்கள் உடன்படிக்கை நண்பராக தெரிந்திருக்கும் போது நீங்கள் அவரால் மாற்றப்படுவீர்கள்.
Comments
Post a Comment