மத்தேயு 16:19 விளக்கம்
மத்தேயு 16:19 விளக்கம்
முன்னுரை:
மத்தேயு 16:16-19
- இயேசு தன் சீஷர்களிடம் “நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்கிறார்.
- இயேசு கிறிஸ்துவின் முக்கியமான அடையாளத்தை அவர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்களா? என்று அவர் பரிசோதிக்கிறார்.
- இயேசு என்ன கற்பித்தாலும், சீஷர்கள் இந்த ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களால் எதையுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
- இயேசு என்ற மையக்கற்பாறையின் மீது கட்டப்படாத எதுவும் சிதைந்துவிடும்.
- நீங்கள் “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுரு சரியாக பதிலளிக்கிறார்.
- பிறகு இயேசு, “மாம்சமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்தில் இருக்கின்ற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” என்கிறார்.
- அதாவது “மைய கற்பாறையாகிய தேவனின் போதனை” உனக்கு வெளிப்படுத்தியது என்கிறார்.
- கர்த்தர் உனக்கு இந்த நுண்ணறிவைக் கொடுத்ததால் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் என்கிறார்.
பெட்ரோஸ் மற்றும் பெட்ரா (Petros and Petra):
பெட்ரோஸ் - பேதுருவின் கிரேக்கப் பெயர் (பொருள் - கூழாங்கல்)
பெட்ரா - இயேசுவைக் குறிக்கிறது (பொருள் - கற்பாறை)
- இயேசு இங்கு வார்த்தைகளில் விளையாடுகிறார்.
- இயேசு “நீ பேதுருவாய் (பெட்ரோஸ்) இருக்கிறாய்” என்று குறிப்பிடுகிறார்.
- இந்த கல்லின் (பெட்ரா) மேல் என் சபையை கட்டுவேன் என்று இயேசு சொல்கிறார்.
- இந்த இரண்டும் ஒரே வார்த்தைகள் அல்ல.
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
-மத்தேயு 16 : 18
கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்:
முதல் விஷயம்:
- பேதுருவாகிய ‘பெட்ரோஸ்’ மீது என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு பேதுருவிடம் சொல்லவில்லை.
- ஆனால் ‘பெட்ரா’ மீது என் சபையைக் கட்டுவேன் என்கிறார்.
இரண்டாவது விஷயம்:
- “பரலோகராஜ்யத்தின் திறவுகோலை நான் உனக்குத் தருவேன்” என்று இயேசு பேதுருவிடம் சொல்லியிருந்தாலும்,
- அதை இயேசு பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு கூறுகிறார்.
பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
-மத்தேயு 18 : 18
- இந்த வசனத்தில் “ மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு சொல்கிறார்.
- இங்கு “உனக்கு” என்று ஒருமையில் இயேசு சொல்லவில்லை.
- “உங்களுக்கு” என்று பண்மையில் சொல்கிறார்.
மூன்றாவது விஷயம்:
- இயேசு பேதுருவிடம் “நீ பெட்ரோஸ் ஆக இருக்கிறாய், இந்த பெட்ரோஸ் மீது சபையை கட்டுவேன்” என்று சொல்லவில்லை.
- “நீ பேதுருவாய்(பெட்ரோஸ்) இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல்(பெட்ரா) என் சபையைக் கட்டுவேன்” என்கிறார்.
- இது ஒரு தளர்வான கூழாங்கல் அல்ல. இது ஒரு கற்பாறை.
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.
-மத்தேயு 27 : 60
- இந்த வசனம் இயேசுவின் கல்லறை கன்மலையில் வெட்டப்பட்டிருந்தது எனக் கூறுகிறது.
- அதாவது கற்பாறையில் இருந்து வெட்டப்பட்டிருந்தது என்று கூறுகிறது.
- அது ஒரு தளர்வான கூழாங்கல்லால் வெட்டப்பட்டது அல்ல.
- மலைகளில் அமைந்து உள்ள பெரிய கற்பாறையைக் (பெட்ரா) குறிக்கிறது.
- அதே வார்த்தை மத்தேயு 7:24 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
-மத்தேயு 7 : 24
- இது கற்களின் குவியலையோ அல்லது சரளைக் கற்களையோ குறிக்கவில்லை.
- ஆனால் மலையில் இருந்து வெட்டப்பட்ட கற்பாறையை (பெட்ரா) குறிக்கிறது.
அஸ்திபாரம்:
- அஸ்திபாரம் என்றும் நிரந்தரமானது.
- இயேசுவின் வார்த்தைகள் மற்றும் போதனைகள் என்ற அஸ்திபாரம் என்றுமே அழியாது.
- எனவே சபை, பெட்ரா என்ற கற்பாறையான அஸ்திபாரத்தில் கட்டப்பட்டு இருக்கிறது.
- சபை, இயேசுவின் போதனைகள் என்ற கற்பாறை மூலம் கட்டப்பட்டு இருக்கிறது.
- அது என்றும் அழியாது.
மையக்கருத்து:
- இயேசுவானவர் “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்பது தான் அந்த போதனைகளின் மையக்கருத்து.
பிரதிநிதி பேதுரு:
- இயேசுவின் போதனைகள் மற்றும் இயேசுவின் வார்த்தையை உண்மையாக உயர்த்தும் அனைவரின் பிரதிநிதியாக பேதுரு கருதப்படுகிறார்.
திறவுகோல்கள்:
பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அதுபரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும்கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
-மத்தேயு 16 : 19
- இங்கு திறவுகோல்கள் என்று பண்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திறவுகோல் என்று ஒருமையில் கொடுக்கப்படவில்லை.
- எனவே இயேசுவின் போதனைகள் அனைத்தும் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள்.
- இயேசு பேதுருவிடம், “நான் உன்னிடம் ராஜ்யத்தின் திறவுகோல்களை தருகிறேன்” என்று கூறும்போது,
- மத்தேயு 18 இன் படி, எந்த விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் அடையாளத்தை மையமாக வைத்து உண்மையான வார்த்தைகளைப் பேசுகிறார்களோ,
- அவர்கள் மக்களின் வாழ்க்கையில் தேவனுடைய ராஜ்யத்தைத் திறப்பதற்கான திறவுகோல்களை பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
-லூக்கா 11 : 52
- இங்கு “நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ” என்று இயேசு சொல்கிறார்.
- ஏனென்றால் அவர்கள் தன் சொந்த “அறிவாகிய திறவுகோலை” எடுத்துக்கொண்டார்கள்.
- அதனால் நீங்களும் பரலோக ராஜ்யத்தில் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்று இயேசு சொல்கிறார்.
எப்படிப்பட்ட திறவுகோல்கள் பரலோக இராஜ்யத்தை திறக்க உதவும்:
- இயேசு கிறிஸ்துவின் அடையாளத்தை மையமாக கொண்ட திறவுகோல்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தை திறக்க உதவும்.
- கிறிஸ்துவின் அடையாளத்தை மையமாக கொண்ட போதனைகள், அந்த கற்பிக்கும் அறிவு மக்களின் வாழ்வில் தேவராஜ்யத்தைத் திறக்கிறது.
Future perfect tense of verb:
- பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்,
- பூலோகத்திலே நீகட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று இயேசு கூறும்போது
- அது சரியான மொழிபெயர்ப்பை காண்பிக்கிறது.
முடிவுரை:
- விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் வார்த்தையான கற்பாறையை மையமாக வைத்து மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும்.
- அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் மக்களின் வாழ்க்கையில்,
- பரலோகத்தின் திறவுகோல்களை கொண்டு
- அவர்களின் இருதயத்தில் தேவராஜ்யத்தைத் திறக்கிறீர்கள்.
Comments
Post a Comment