Feb 2023 - Monthly Quiz
ஆபிரகாம்- ஆதி 11-25
கேள்விகள்
1)ஆபிரகாம் கர்த்தரிடம் நான் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வேன் என்பதை எதினால் அறிவேன் என்ற போது, கர்த்தர் சில மிருகங்களை கொண்டு வரச் சொன்னார். அதில் எதை அவன் துண்டிக்கவில்லை?
(பட்சிகள் , வெள்ளாடு, கிடாரி, ஆட்டுக்குட்டி)
2)ஆபிரகாம் கர்த்தரிடம் இத்தனை நீதிமான்களை கண்டால் அவர்கள் நிமித்தம் இந்த ஸ்தலத்தை அழிப்பீரோஎன்று எத்தனை முறை கேட்டார்?
(5, 6, 4, 7)
3)லோத்து யார்? (ஆபிரகாமின் குமாரன், ஆரானின் குமாரன், நாகோரின் குமாரன், தேராகின் குமாரன்)
4)லோத்து சிறைப்பட்டு போன போது, ஆபிரகாம் எத்தனை ஆட்களை கூட்டிக் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தான்?
(318, 316, 317, 340)
5)ஆபிரகாமின் மனைவி சாராள் மரித்த இடம் எது?
(கீரியாத்அர்பா, எபிரோன், மம்ரே, மெசொப்பொத்தாமியா)
6) மக்பேலா என்னும் நிலத்தின் குகையை முந்நூறு சேக்கல் நிறைவெள்ளிக்கு ஆபிரகாம் வாங்கினார்.(சரியா,தவறா?)
7) ஆபிரகாம் முதன்முதலில் கர்த்தருக்கு கட்டின பலிபீடம் மோரே என்ற கானானிய தேசத்தில் அமைந்துள்ளது. (சரியா,தவறா?)
8) கானான் தேசத்தில் எட்டு வருஷம் குடியிருந்த பிறகு சாராய், ஆகாரை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (சரியா,தவறா?)
9) ஆகார் பாரானின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்த போது, தேவதூதன் அவளை அழைத்தார். (சரியா,தவறா?)
10) கானானிய குமாரத்திகளில் என் குமாரனுக்கு பெண் கொள்ள வேண்டாம் என்று ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடம் சொன்னார். (சரியா,தவறா?)
———————————————————————————
Questions 11-15
Match the following:
(Example: 5,4,3,2,1)
இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிரகாமின் வயது - 127 (1)
ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது இஸ்மவேலின் வயது - 86 (2)
ஆபிரகாம் ஆரானை விட்டு புறப்பட்ட போது அவன் வயது - 175 (3)
சாராள் மரித்த போது அவள் வயது - 13 (4)
ஆபிரகாமின் ஆயுசு நாட்கள் - 75 (5)
——————————————————————————
16) ஆபிரகாம் வீட்டின் விசாரணைக்கர்த்தனின் பெயர் என்ன?
17) ”யேகோவாயீரே” என்பதன் அர்த்தம் என்ன?
18) ஆபிரகாம் ‘எபிரேயன்’ என்று முதன்முதலில் அழைக்கப்பட்ட வசனம் எது?
19) கர்த்தர் ஆபிரகாமிடம் “பயப்படாதே” என்று ஒரே ஒரு தடவை சொன்னார். அந்த வசனம் எது?
20) ஆபிரகாமுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்?8 (சாராள், ஆகார் மற்றும் கேத்தூராள் அவனுக்கு பெற்ற பிள்ளைகள்)
பதில்கள்:
1) பட்சிகள் (15:10)
2) 6 (18:26-32)
3) ஆரானின் குமாரன் (11:31)
4) 318 (14:14)
5) கீரியாத்அர்பா (23:2)
6) தவறு - நானூறு சேக்கல் நிறைவெள்ளிக்கு (23:16)
7) சரி (12:6-7)
8) தவறு - பத்து வருஷம் (16:3)
9) தவறு - பெயர்செபாவின் வனாந்தரத்திலே (21:14)
10) சரி (24:3)
Questions 11-15
Answers: 2, 4, 5, 1, 3
(1)இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிரகாமின் வயது - 86(16:15)
(2) ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது இஸ்மவேலின் வயது - 13 (17:25)
(3)ஆபிரகாம் ஆரானை விட்டு புறப்பட்ட போது அவன் வயது - 75 (12:4)
(4)சாராள் மரித்த போது அவள் வயது - 127(23:1)
(5)ஆபிரகாமின் ஆயுசு நாட்கள் - 175(25:7)
16) எலியேசர்(15:2)
17) கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும் (22:14)
18) ஆதி 14:13
19) ஆதி 15:1
20) 8 [சாராள்(1), 21:3 ஆகார்(1), 16:15, கேத்தூராள்(6)25:2]
Comments
Post a Comment