உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம் சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. -உன்னதப்பாட்டு 1 : 1 விளக்கம் : சாலொமோன் பாடின இந்த புத்தகம், ஒரு தீர்க்கத்தரிசனம் கலந்த கவிதைப் பாடல் என்றே சொல்லலாம். ————————————————————————- வசனம் 2-7: சாலொமோனை (மணவாளனாகிய இயேசுவை) பார்த்து, சூலமித்தியாள்(மணவாட்டியாகிய சபை) பாடுகிறாள். ————————————————————————- அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. -உன்னதப்பாட்டு 1 : 2 விளக்கம் : அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக சபை சொல்கிறது, மணவாளரே! இயேசுவே! உங்களால் எனக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் முத்தம், அதாவது உங்கள் வார்த்தை. கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் தேவனுடைய வார்த்தை தான். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. - யோவான் 1 : 1 அந்த வார்த்தை மாம்சமாகி , கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய ...
ஆரோகண சங்கீதம் என்றால் என்ன? ஆரோகண சங்கீதம் இது ஆங்கிலத்தில் Songs of Ascent என்று அழைக்கப்படும் இது சங்கீதம் 120 முதல் 134 வரை உள்ள 15 சங்கீதங்களை குறிப்பிடுகிறது. இந்த சங்கீதங்கள் எபிரேய மொழியில் "Shir HaMa'alot" (שִׁיר הַמַּעֲלוֹת) என அழைக்கப்படுகின்றன, அதன் அர்த்தம் "ஏறும் பாடல்கள்" அல்லது "படிகட்டுகளில் ஏறிச் செல்லும் பாடல்கள்" என்பதாகும். ஆரோகண சங்கீதம் – நோக்கம்: இந்த சங்கீதங்களை மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்ரவேலர்கள் எருசலேம் ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் போதும், குறிப்பாக மூன்று பெரிய விழாக்களில் (பஸ்கா, பெந்தகொஸ்தே, குதிரைவிழா) பாடினர் என்று நம்பப்படுகிறது. இந்த பயணங்கள் நிறைய சவால்கள் நிறைந்தவைகளாக இருந்தன. அந்தப் பயணத்தின்போது தேவனை நினைத்து பாடப்படும் ஆராதனையான இவை, ஆவிக்குரிய எழுச்சியையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள்: பயணத்திற்குரிய துணிவு, நம்பிக்கை, பாதுகாப்பு, சிரமங்களில் உள்ள ஆவிக்குரிய நிலை ஆகியவை இதில் அடங்கியுள்ளன. தேவனை நோக்கிச் செல்லும் ஒரு "ஆரோகணப் பயணத...
ஆவி, ஆத்துமா, சரீரம் பைபிளின்படி “ஆவி, ஆத்துமா, சரீரம்” என்றால் என்ன? சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. -1 தெசலோனிக்கேயர் 5 : 23 இங்கு மனிதன் மூன்று பாகங்களாக குறிப்பிடப்படுகிறான்: சரீரம் (Body – Greek: sōma ) - Physiological நம்முடைய உடம்பாகிய சரீரம். சரீரம் (1) பார்ப்பது, (2) கேட்பது, (3) சுவாசிப்பது, (4) சுவைப்பது, (5) தொடுவது போன்ற 5 உணர்வுகள் மூலம் உலகத்தை அனுபவிக்கிறது. சரீரம் மரணத்திற்கு உட்பட்டது. சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக விளங்குகின்றது. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் , நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? -1 கொரி 6 : 19 ஆத்துமா (Soul – Greek: psuchē ) - Psychological ஆத்துமா என்பது முடிவெடுக்கும் பகுதியாக அமைகின்றது. ஆத்துமாவால் நாம் யார் என்பதற்கான அடையாளம் ஏற்படுகிறது. நம்முடைய உள்ளார்ந்த மனிதனி...
Comments
Post a Comment