யாருமில்லை என்று கலங்குகிறாயோ!

யாருமில்லை என்று கலங்குகிறாயோ!

அன்பில்லாத வாழ்வில் 
அரவணைக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

கலங்கி தவிக்கும் போது
காப்பாற்ற யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

சங்கடத்தில் இருக்கும் பொழுது
சந்தோஷத்தை கொடுக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

பணம் நிறைந்த வாழ்வில்
பாசம் காட்ட யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

மாயையான உலகில்
மன்னிக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

தத்தளிக்கும் போது
தாய் பாசம் காட்ட யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

நன்றியற்ற உலகில்
நேசிக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

வலி நிறைந்த வாழ்வில்
வழி காண்பிக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

நீ அழைக்க விருப்பப்பட்டால்
நீ அழைத்தால்
இரட்சகராகிய இயேசு
இரக்கம் காட்டி
அன்பு காட்டி
ஆறுதல் சொல்லி
உன்னை அரவணக்க
உன் அருகி்ல் இருப்பார்

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.  
 -சங்கீதம் 42 : 11



Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்