கொடுக்காமல் போவது எப்படி?
கொடுக்காமல் போவது எப்படி?
எனக்கு
பணத்திற்கு குறைவில்லை
ஆகாரத்திற்கு குறைவில்லை
உடைகளுக்கு குறைவில்லை
சுகத்திற்கு குறைவில்லை
அன்பிற்கு குறைவில்லை
ஒரு குறையும் இல்லை
இந்த ஒன்றை தவிர (திருமணம்)
அனைத்தையும் நான் கேட்காமலே
எனக்கு நிறைவாக கொடுத்த தேவன்
நான் வாய்விட்டு கேட்டப் பிறகும்
இந்த ஒரு காரியத்தை எனக்கு
கொடுக்காமல் போவது எப்படி?
என்னை நேசிக்கிற தேவன்,
நான் ஏங்கினதை எனக்கு
கொடுக்காமல் போவது எப்படி?
என் கண்ணீரைக் கண்ட தேவன்
அதற்கு பதில்
கொடுக்காமல் போவது எப்படி?
என் முழு மனதையும் அறிந்த தகப்பன்
தன் மகளுக்கு பிடித்ததை
கொடுக்காமல் போவது எப்படி?
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
-லூக்கா 18 : 7
Comments
Post a Comment