திருமண வாழ்க்கை

         திருமண வாழ்க்கை 

விட்டுக் கொடுக்காத 
திருமண வாழ்க்கையும் உண்டு.
விட்டுப் போகிற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

ணத்தை மட்டுமே மையமாக கொண்ட 
திருமண வாழ்க்கையும் உண்டு.
பாடுகள் பட்டாலும் அன்போடு வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

பண கஷ்டத்தோடு வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
மன இஷ்டத்தோடு வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

பொறுமையோடு வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
பெருமையோடு வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

ள்ளம் நிறைந்த 
திருமண வாழ்க்கையும் உண்டு.
காதல் நிறைந்த 
திருமண வாழ்க்கையும் உண்டு.

ருக்காக சேர்ந்து வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
யிராக நினைத்து வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

பிரிந்து போக வழியில்லையே என்று வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
பிரியவேக் கூடாது என்று வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

இரகசியங்களை மறைத்து வைக்கும் 
திருமண வாழ்க்கையும் உண்டு.
வெளிப்படையாக வாழும் 
திருமண வாழ்க்கையும் உண்டு.

தனிப்பட்ட பணம் என்று நினைக்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
நம்முடைய பணம் என்று நினைக்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

சந்தேகத்தோடு வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
நம்பிக்கையோடு வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
கூடி இருப்பதற்காக வாழ்கின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

லகங்களோடு காணப்படுகின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.
காதலோடு காணப்படுகின்ற 
திருமண வாழ்க்கையும் உண்டு.

ஆனாலும்,
இந்த கொடுமையான உலகில்,
குறைகளுள்ள ஒரு நபரோடு,
(குறைகள் இல்லாத ஒரு நபர் உலகில் உண்டோ!)
நிறைவான ஒரு திருமண வாழ்க்கையை,
ன்போடு, சையோடு, ன்பத்தோடு,
டுபாடோடு, ண்மையோடு, டலோடு,
ன்றென்றும், ற்றுக்கொண்டு, க்கியத்தோடு, 
ற்றுமையாக, யாத காதலுடன், ஒளசதமாக
கர்த்தருக்குள்,
ஒரு முறை வாழ்ந்து பார்க்க தான் ஆசை!!!

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?