Bible Quiz July 6 2022 to September 30 2022
(2 சாமுவேல் 23-24)
1) கீழ்க்கண்ட நபர்களில் தாவீதின் பராக்கிரமசாலிகள் யாவர்? (Select 3 options)
உரியா
நாத்தான்
எலியாம்
ஆசகேல்
எலிசூவா
செருயா
அபிசாய்
2) தாவீது ராஜா அர்வனாவின் களத்தையும், மாடுகளையும் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்?
விடை:
1) யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.
-2 சாமுவேல் 23 : 18
யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
-2 சாமுவேல் 23 : 24
மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.
-2 சாமுவேல் 23 : 34
ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.
-2 சாமுவேல் 23 : 39
[இந்த 4 பதில்களில் எந்த 3 பதில்களை நீங்கள் கூறியருந்தாலும், 4 பதில்களையுமே
2) ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குசர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.
-2 சாமுவேல் 24 : 24
(2 தெசலோனிக்கேயர் 1-3)
1) நாம் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் என்ன காண்பிக்க வேண்டும்?
2) கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் அன்புகூர்ந்து எதை கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிறார்?
3) ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நாம் என்ன செய்யவேண்டும்?
விடை:
1) நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம்
உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
-2 தெசலோனிக்கேயர் 1 : 4
2) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
-2 தெசலோனிக்கேயர் 2 : 16
3) மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச்சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
-2 தெசலோனிக்கேயர் 3 : 6
(1 இராஜாக்கள் 1-2)
1) சரியா?தவறா?;
அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப்பிடித்துகொண்டான்.
2) சரியா?தவறா?; சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்குவிவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்று அத்தாலியாள் சாலொமோன் ராஜாவிடம் கேட்டுக் கொண்டாள்.
விடை:
1) சரி
அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப்பிடித்துகொண்டான்.
-1 இராஜாக்கள் 1 : 50
2) தவறு
அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.
-1 இராஜாக்கள் 2 : 19
உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்குவிவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.
-1 இராஜாக்கள் 2 : 21
Day 152 - July 9 2022 - Saturday
(1 இராஜாக்கள் 3-4)
1) கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே எங்கு தரிசனமானார்?
2) நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு எவ்வளவு? (Select 3 options)
விடை:
1) கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதைஎன்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
-1 இராஜாக்கள் 3 : 5
2) நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபதுமரக்கால் மாவும்,
-1 இராஜாக்கள் 4 : 22
கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்ட பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம்.
-1 இராஜாக்கள் 4 : 23
Day 153 - July 10 2022 - Sunday
(1 இராஜாக்கள் 5-6)
1) ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் எந்த விருட்சங்களை கொடுத்துக்கொண்டுவந்தான்?
2) சாலொமோன் சந்நிதிஸ்தானத்தில் எந்த மரத்தால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்?
விடை:
1) அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.
-1 இராஜாக்கள் 5 : 10
2) சந்நிதிஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழஉயரமுமாயிருந்தது.
-1 இராஜாக்கள் 6 : 23
Day 154 - July 11 2022 - Monday
(1 இராஜாக்கள் 7-8)
1) வெண்கல வேலையை செய்த ஈராம் எந்த கோத்திரத்தாளின் மகன்?
2) ராஜாவும், இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தபோது ராஜாஎத்தனை ஆடுகளை சமாதானபலிகளாக பலியிட்டார்?
விடை:
1) இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்.
-1 இராஜாக்கள் 7 : 14
2) சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம்ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப்பிரதிஷ்டைபண்ணினார்கள்.
-1 இராஜாக்கள் 8 : 63
Day 155 - July 12 2022 - Tuesday
(1 இராஜாக்கள் 9-10)
1) சாலொமோன் கர்த்தருக்கு கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் எத்தனை முறை சர்வாங்கதகனபலிகளையும் சமாதான பலிகளையும் அவன் செலுத்தி வந்தான்?
2) ஒவ்வொரு வருஷத்திலும் சாலொமோனுக்கு வந்த பொன் எத்தனை தாலந்து நிறையாயிருந்தது?
விடை:
1) சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில்மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிறபலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான்.
-1 இராஜாக்கள் 9 : 25
2) ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.
-1 இராஜாக்கள் 10 : 15
Day 156 - July 13 2022 - Wednesday
(1 இராஜாக்கள் 11-12)
1) “இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக்கோத்திரங்களைக் கொடுப்பேன்” என்று அகியா மூலம் கர்த்தர் யாரிடம் சொன்னார்?
2) “நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம்வீட்டிற்குத் திரும்புங்கள்” இந்த வார்த்தைகளை கர்த்தர் யாரிடம் சொல்லி யூதா மக்களுக்கு சொல்லச்சொன்னார்?
விடை:
1) யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக்கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.
-1 இராஜாக்கள் 11 : 31
2) தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:
-1 இராஜாக்கள் 12 : 22
Day 157 - July 14 2022 - Thursday
(1 இராஜாக்கள் 13-14)
1) சரியா?தவறா?
கர்த்தர் கற்பித்த கட்டளையை மீறினதினால் பெத்தேலிலே இருந்த கிழவனான தீர்க்கதரிசியை
கர்த்தர் ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
2) சரியா?தவறா?
ரெகொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனைஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.
விடை:
1) தவறு
அவன் (தேவனுடைய மனுஷன்) போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது.
-1 இராஜாக்கள் 13 : 24
2) தவறு
யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனைஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.
-1 இராஜாக்கள் 14 : 11
Day 158 - July 15 2022 - Friday
(1 இராஜாக்கள் 15-16)
1) ராமாவைக் கட்டினது யார்?
2) 7 நாட்கள் மாத்திரமே ராஜாவாய் இருந்தது யார்?
விடை:
1) ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகியபாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
-1 இராஜாக்கள் 15 : 17
2) யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்;ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள்.
-1 இராஜாக்கள் 16 : 15
Day 159 - July 16 2022 - Saturday
(1 இராஜாக்கள் 17-18)
1) “தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று”. அந்த ஆற்றின்பெயர் என்ன?
2) எலியா கட்டின பலிபீடத்தை சுற்றிலும் சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் மூன்றுதரமும்ஊற்றின தண்ணீரின் அளவு எவ்வளவு?
விடை:
1) கேரீத்
நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில்ஒளித்துக்கொண்டிரு.
-1 இராஜாக்கள் 17 : 3
2) 3*4=12
பிற்பாடு அவன்: நீங்கள் நாலு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
-1 இராஜாக்கள் 18 : 34
Day 160 - July 17 2022 - Sunday
(1 இராஜாக்கள் 19-20)
1) கர்த்தர் எலியாவை வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார். அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார். அப்பொழுது கர்த்தர் எதில் இருந்தார்?
2) கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று யார்சொல்லியிருக்கிறார்கள் என்று தேவனுடைய மனுஷன் குறிப்பிடுகிறார்?
விடை:
1) பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.
-1 இராஜாக்கள் 19 : 12
அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
-1 இராஜாக்கள் 19 : 13
2) அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர்பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில்ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்என்றான்.
-1 இராஜாக்கள் 20 : 28
Day 161 - July 18 2022 - Monday
(1 இராஜாக்கள் 21-22)
1) “நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ” கர்த்தர் யாரிடம்இந்த வார்த்தைகளைச் சொன்னார்?
2) நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை” இந்தவார்த்தைகளை பேசினது யார்?
விடை:
1) கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
-1 இராஜாக்கள் 21 : 17
நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன்நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.
-1 இராஜாக்கள் 21 : 18
2) அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டுபேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.
-1 இராஜாக்கள் 22 : 28
Day 162 - July 19 2022 - Tuesday
(1 தீமோத்தேயு 1-2)
1) கோடிட்ட இடங்களை நிரப்புக:
வேற்றுமையான உபதேசங்களைப் ——————————-, விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீகபக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ——————————— கட்டுக்கதைகளையும் முடிவில்லாதவம்சவரலாறுகளையும் ——————————, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, நான்மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியேசெய்வாயாக.
2) கோடிட்ட இடங்களை நிரப்புக:
தகுதியான —————————, நாணத்தினாலும், ——————————, தேவபக்தியுள்ளவர்களென்றுசொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே ——————————, தங்களை அலங்கரிக்கவேண்டும்.
-1 தீமோத்தேயு 1 : 3
நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியேசெய்வாயாக.
-1 தீமோத்தேயு 1 : 4
2) தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்றுசொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
-1 தீமோத்தேயு 2 : 10
Day 163 - July 20 2022 - Wednesday
(1 தீமோத்தேயு 3-4)
1) கண்காணியானவன் எப்படி இருக்க வேண்டும் என பவுல் குறிப்பிடுகிறார்? (Select 3 options)
2) உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு நீ விசுவாசிகளுக்கு எதில் மாதிரியாகஇருக்க வேண்டும்? (Select 3 options)
விடை:
1) ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
-1 தீமோத்தேயு 3 : 2
அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
-1 தீமோத்தேயு 3 : 3
2) உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
-1 தீமோத்தேயு 4 : 12
Day 164 - July 21 2022 - Thursday
(1 தீமோத்தேயு 5-6)
1) ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால் யாரிலும்கெட்டவனுமாயிருப்பான்?
2) எது எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது?
விடை:
1) ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
-1 தீமோத்தேயு 5 : 8
2) பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேகவேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
-1 தீமோத்தேயு 6 : 10
Day 165 - July 22 2022 - Friday
(2 இராஜாக்கள் 1-2)
1) அகசியா ராஜா எலியாவிடத்திற்கு எத்தனை முறை ஒரு தலைவனையும், 50 சேவகரையும் அனுப்பினான்?
2) எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை ———— இடமட்டும் போக அனுப்புகிறார் என்று 3 தடவை சொன்னார். அந்த 3 இடங்கள் யாவை?
1) 3
திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
-2 இராஜாக்கள் 1 : 13
2) பெத்தேல்/எரிகோ/யோர்தான்
எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
-2 இராஜாக்கள் 2 : 2
பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
-2 இராஜாக்கள் 2 : 4
பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
-2 இராஜாக்கள் 2 : 6
Day 166 - July 23 2022 - Saturday
(2 இராஜாக்கள் 3-4)
1) மோவாபியர் மேல் யுத்தம் பண்ண எந்தெந்த ராஜாக்கள் சென்றனர்?
2) எலிசா சூனேமியாளின் மகனை காண சென்ற போது முந்திப் போய் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல்வைத்தது யார்?
விடை:
1) அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும்அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும்தண்ணீர் இல்லாமற்போயிற்று.
-2 இராஜாக்கள் 3 : 9
2) கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும்சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: பிள்ளைவிழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.
-2 இராஜாக்கள் 4 : 31
(2 இராஜாக்கள் 5-6)
2) எலிசா “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்று வேண்டிக்கொண்ட போதுஅவனுடைய வேலைக்காரன் அந்த மலை எதினால் நிறைந்திருக்கிறதை கண்டான்?
விடை:
1) பின்பு அவன் உள்ளேபோய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்றுஎலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.
-2 இராஜாக்கள் 5 : 25
2) அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும்அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
-2 இராஜாக்கள் 6 : 17
Day 168 - July 25 2022 - Monday
(2 இராஜாக்கள் 7-8)
1) கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒருமரக்கால் கோதுமைமாவும், இரண்டு மரக்கால் வாற்கோதுமையும்எத்தனை சேக்கலுக்கு விற்கப்பட்டது?
2) யோராம் நித்திரையடைந்த பின்பு, அவனுக்குப் பதிலாக ராஜாவானது யார்?
விடை:
1) அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடையவார்த்தையின்படியே, ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்பட்டது.
-2 இராஜாக்கள் 7 : 16
2) யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில்அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.
-2 இராஜாக்கள் 8 : 24
Day 169 - July 26 2022 - Tuesday
(2 இராஜாக்கள் 9-10)
1) இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமின் பெற்றோர் யார்?
2) “என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும்செம்மையாயிருக்கிறதா” என்று யெகூ யாரிடம் கேட்டான்?
விடை:
1) யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகியயேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில்சமாதானம் ஏது என்றான்.
-2 இராஜாக்கள் 9 : 22
அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகியநாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகேகுதிரை ஏறிவருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
-2 இராஜாக்கள் 9 : 25
2) அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும்செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
-2 இராஜாக்கள் 10 : 15
Day 170 - July 27 2022 - Wednesday
(2 இராஜாக்கள் 11-12)
1) அத்தாலியாளை எங்கு கொன்று போட்டார்கள்?
2) ராஜாவாகிய யோவாசின் எத்தனையாவது வருஷமட்டும் ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனார்கள்?
விடை:
1) அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலேஅவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.
-2 இராஜாக்கள் 11 : 16
2) ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் ஆசாரியர்கள் ஆலயத்தைப்பழுதுபாராதேபோனபடியினால்,
-2 இராஜாக்கள் 12 : 6
Day 171 - July 28 2022 - Thursday
(2 இராஜாக்கள் 13-14)
1) யார் யாரிடம் சொன்னது?
“என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே”.
2) யார் யாரிடம் சொன்னது? “நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது”.
விடை:
1) யோவாஸ் to எலிசா
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின்ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
-2 இராஜாக்கள் 13 : 14
2) யோவாஸ் to அமத்சியா
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி:லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுரு மரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்குமனைவியாக விவாகஞ் செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப் போட்டது.
-2 இராஜாக்கள் 14 : 9
1) கீழ்க்கண்டவற்றில் இஸ்ரவேலின் மேல் [யூதா அல்ல] அரசாண்ட ராஜாக்களை மாத்திரம் கண்டறியவும். 15 வதுஅதிகாரத்தை படித்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். (Select 4 options)
2) ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தது யார்?
விடை:
1) சல்லூம் (2 இராஜாக்கள் 15:10)
மெனாகேம் (2 இராஜாக்கள் 15:14)
பெக்காகியா (2 இராஜாக்கள் 15:22)
ஓசெயா (2 இராஜாக்கள் 15:30)
(தவறுதலாக, மெனாகேம் என்ற option கொடுக்கப்படவில்லை. எனவே, மீதி 3 பெயர்களையும் சரியாக குறிப்பிட்டவர்களை சரியான பதிலாக எடுத்துக் கொண்டேன்.)
2) ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.
-2 இராஜாக்கள் 16 : 16
1) சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து எங்கு குடியிருந்து, கர்த்தருக்குப்பயந்து நடக்கவேண்டிய விதத்தை அசீரிய ராஜா குடியேற்றியிருந்த மக்களுக்கு போதித்தான்?
2) எசேக்கியா ராஜாவின் எத்தனையாவது வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்குவிரோதமாய் வந்து அதை பிடித்தான்?
விடை:
1) அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலேகுடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
-2 இராஜாக்கள் 17 : 28
2) மூன்றுவருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.
-2 இராஜாக்கள் 18 : 10
(எசேக்கியா ராஜாவின் 4வது வருஷத்தில் அசீரிய ராஜா சமாரியாவை முற்றுகைப் போட்டான். சமாரியா எசேக்கியா ராஜாவின் 6வது வருஷத்தில் பிடிப்பட்டது)
1) அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தது யார்?
2) எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும்அனுப்பினது யார்?
விடை:
1) அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில்லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள்எல்லாரும் செத்த பிரதேங்களாய்க் கிடந்தார்கள்.
-2 இராஜாக்கள் 19 : 35
2) அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியாவியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
-2 இராஜாக்கள் 20 : 12
1) ஆமோனைக் கொன்றது யார்?
2) ராஜாவாகிய யோசியா அனுப்பின ஆட்கள் எந்த தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் பேசினார்கள்?
விடை:
1) ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, ராஜாவை அவன் அரமனையிலேகொன்றுபோட்டார்கள்.
-2 இராஜாக்கள் 21 : 23
2) அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின்குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம்வகுப்பிலே குடியிருந்தாள்.
-2 இராஜாக்கள் 22 : 14
1) ராஜாவாகிய யோசியாவின் எத்தனையாவது வருஷத்திலே கர்த்தருக்கு பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப்பட்டது?
2) யோயாக்கீன் எத்தனை வருடங்கள் யூதாவிலே அரசாண்டான்?
3) யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையைஉயர்த்தினது யார்?
விடை:
1) ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலேஆசரிக்கப்பட்டது.
-2 இராஜாக்கள் 23 : 23
2) யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின் பேர் நெகுஸ்தாள்.
-2 இராஜாக்கள் 24 : 8
3) யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம்இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
-2 இராஜாக்கள் 25 : 27
1) கோடிட்ட இடங்களை நிரப்புக:
அவர் நம்முடைய —————————— நம்மை இரட்சிக்காமல், தம்முடைய —————————, ஆதிகாலமுதல்கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட ——————————, நம்மை இரட்சித்து, பரிசுத்தஅழைப்பினாலே அழைத்தார்.
2) கோடிட்ட இடங்களை நிரப்புக:
கர்த்தருடைய ஊழியக்காரன் ———————————-, எல்லாரிடத்திலும் —————————-, ————————-, தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
விடை:
1) அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல்கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலேஅழைத்தார்.
-2 தீமோத்தேயு 1 : 9
2) கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
-2 தீமோத்தேயு 2 : 24
1) சரியா?தவறா? : “தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களை விட்டு நாம் விலகவேண்டும்”.
2) சரியா?தவறா? : “தோமா என்பவன் இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, லூக்காவை விட்டு பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்”.
விடை:
1) சரி
தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
-2 தீமோத்தேயு 3 : 5
2) தவறு
ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்(பவுல்) பிரிந்து, தெசலோனிக்கேபட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும்போய்விட்டார்கள்.
-2 தீமோத்தேயு 4 : 10
1) அர்பக்சாத் யாருடைய குமாரன்?
2) புத்திரரில்லாமல் மரித்தது யார்?
விடை:
1) சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
-1 நாளாகமம் 1 : 17
2) நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
-1 நாளாகமம் 2 : 30
1) செருபாபேலின் குமாரத்தி யார்?
2) தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தது யார்?
விடை:
1) பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியாஎன்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
-1 நாளாகமம் 3 : 19
2) யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடேஅவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
-1 நாளாகமம் 4 : 9
1) ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் எத்தனை பேர் இருந்தார்கள்?
2) கெர்சோமின் புத்திரருக்கு எந்த 4 கோத்திரத்தில் பதின்மூன்று பட்டணங்கள் கிடைத்தது?
விடை:
1) ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்றுஅறுபதுபேராயிருந்தார்கள்.
-1 நாளாகமம் 5 : 18
2) கெர்சோமின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
-1 நாளாகமம் 6 : 62
1) மனாசேயின் இரண்டாம் குமாரன் பெயர் என்ன?
2) மோசாவைப் பெற்றது யார்?
விடை:
1) மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம் பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகள் இருந்தார்கள்.
-1 நாளாகமம் 7 : 15
2) ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப்
பெற்றான்.
-1 நாளாகமம் 8 : 36
1) ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனை கொன்று போட்டது யார்?
2) மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள்எத்தனை பேர்?
விடை:
1) பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும், கப்சேயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில்வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை பெய்த நாளில் அவன் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
-1 நாளாகமம் 11 : 22
2) மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள்பதினெண்ணாயிரம்பேர்.
-1 நாளாகமம் 12 : 31
1) சரியா?தவறா; “தேவனுடைய பெட்டியை அபியத்தார் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல்ஏற்றிக்கொண்டுவந்தார்கள்”.
2) சரியா?தவறா?; “தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார்” என்ற தாவீதுசொன்ன ஸ்தலத்திற்கு பெயர் பாகால்சேபூல்”.
விடை:
1) தவறு
அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல்ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.
-1 நாளாகமம் 13 : 7
2) தவறு
அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள்உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.
-1 நாளாகமம் 14 : 11
1) லேவியருக்குள்ளே கீதவித்தையைப் படிப்பித்தது யார்?
2) தம்புரு, சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்க நியமிக்கப்பட்டவர்கள் யாவர்?
விடை:
1) லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான்.
-1 நாளாகமம் 15 : 22
2) அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும்கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,
-1 நாளாகமம் 16 : 5
நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ———————-, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை —————————- எடுத்து,
நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ————————— உனக்கு உண்டாக்கினேன்.
2) கோடிட்ட இடங்களை நிரப்புக:
அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், ——————-, அமலேக்கியர்என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், ——————— கூடத் தாவீது ராஜா———————————— என்று நேர்ந்துகொண்டான்.
விடை:
1) இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என்ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
-1 நாளாகமம் 17 : 7
நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
-1 நாளாகமம் 17 : 8
2) அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர்என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும் கூடத் தாவீது ராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
-1 நாளாகமம் 18 : 11
1) ஆதாரேசரின் படைத்தலைவன் யார்?
2) காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றது யார்?
விடை:
1) தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்குஅப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்குமுன்னாலே நடந்துபோனான்.
-1 நாளாகமம் 19 : 16
2) திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகியகோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம்அவ்வளவு பெரிதாயிருந்தது.
-1 நாளாகமம் 20 : 5
1) சரியா?தவறா?; “தாவீது இஸ்ரவேலை மறுபடியும் இலக்கம் பார்த்ததினால் கர்த்தர் இஸ்ரவேலிலே பஞ்சத்தைவரப்பண்ணினார்”.
2) சரியா?தவறா?; “சாலொமோனின் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும்அருளுவேன்” என்று கர்த்தர் சொன்னார்.
விடை:
1) தவறு
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில்எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.
-1 நாளாகமம் 21 : 14
2) சரி
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன்சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் சாலொமோன்என்னப்படும்; அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்.
-1 நாளாகமம் 22 : 9
1) யார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்?
2) பெத்தகியாவின் பேர்வழிக்கு விழுந்த சீட்டு எத்தனையாவதாய் இடம் பெற்றது?
விடை:
1) எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகியஇவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.
-1 நாளாகமம் 23 : 22
2) பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
-1 நாளாகமம் 24 : 16
1) கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான 288 பேரில் ஆசாப்பின் குமாரர்கள், எதுத்தூனின்குமாரர்கள், ஏமானின் குமாரர்கள் எத்தனை எத்தனை பேர்? (For example ஆசாப்பின் குமாரர்கள்-1; எதுத்தூனின் குமாரர்கள்-2; ஏமானின் குமாரர்கள்-3 என்றால் 1:2:3) என்று பதிவிடவும்)
2) விவேகமுள்ள யோசனைக்காரன் யார்?
விடை:
1) 4:6:14
ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
-1 நாளாகமம் 25 : 2
கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
-1 நாளாகமம் 25 : 3
இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
-1 நாளாகமம் 25 : 5
2) கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
-1 நாளாகமம் 26 : 14
1) நப்தலி கோத்திரத்தின் தலைவன் யார்?
2) யார் யாரிடம் சொன்னது: “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும்இரு”.
3) தேவனுடைய ஆலயத்திற்காக தாவீது கொடுத்த தங்கத்தின் அளவு எவ்வளவு?
1) செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா: நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
-1 நாளாகமம் 27 : 19
2) தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீபயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர்உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார்.
-1 நாளாகமம் 28 : 20
3) அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும்உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம்தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
-1 நாளாகமம் 29 : 4
1) சாலொமோனுக்காக எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு குதிரையின் விலை என்ன?
2) சாலொமோனுக்காக ஈராம் அனுப்பின புத்திமானாகிய நிபுணன் யார்?
விடை:
1) அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டன.
-2 நாளாகமம் 1 : 17
2) இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
-2 நாளாகமம் 2 : 13
1) சரியா? தவறா?
“கேருபீன்களின் முகங்கள் ஆலயத்து வெளிப்புறமாய் நோக்கியிருந்தது”.
2) சரியா? தவறா?
“ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும், ஈராம்அபி ராஜாவாகியசாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்”.
விடை:
1) தவறு
இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால்ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
-2 நாளாகமம் 3 : 13
2) சரி
ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும்,
-2 நாளாகமம் 4 : 15
செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபிராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.
-2 நாளாகமம் 4 : 16
1) ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமானஸ்தலத்திலே வைத்த போது அதில் எது மாத்திரம் இருந்தது?
2) சாலொமோன் தான் உண்டாக்கின வெண்கலப் பிரசங்கபீடத்தை எங்கு வைத்தான்?
விடை:
1) இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கைபண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலேவேறொன்றும் இருந்ததில்லை.
-2 நாளாகமம் 5 : 10
2) சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப்பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராகவிரித்து:
-2 நாளாகமம் 6 : 13
1) சாலொமோன் மற்றும் ஜனங்கள் எந்த நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்?
2) இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே யார் வாசம்பண்ணலாகாது என்று சொல்லி சாலொமோன்தனியாக ஒரு மாளிகை கட்டினான்?
விடை:
1) எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.
-2 நாளாகமம் 7 : 9
2) சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின்ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின்குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.
-2 நாளாகமம் 8 : 11
1) தர்ஷீசின் கப்பல்கள் எத்தனை வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவந்தன?
2) ரெகொபெயாமின் பகுதி விசாரிப்புக்காரன் யார்?
விடை:
1) ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்றுவருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
-2 நாளாகமம் 9 : 21
2) பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல்புத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய்இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
-2 நாளாகமம் 10 : 18
அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத்————————-, தங்கள் இருதயத்தை ————————— தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப்—————————- எருசலேமுக்கு வந்தார்கள்.
2) கோடிட்ட இடங்களை நிரப்புக:
அவர்கள் தங்களைத் ————————- கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்குஉண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை——————————; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் ——————————- கட்டளையிடுவேன்.
விடை:
1) அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.
-2 நாளாகமம் 11 : 16
2) அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என்உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
-2 நாளாகமம் 12 : 7
1) யெரொபெயாம் யார்? (Select 3 options)
2) ஆசாவுக்கு விரோதமாக பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் வந்தது யார்?
விடை:
1) சாலொமோனின் ஊழியக்காரன், இஸ்ரவேலின் ராஜா, நேபாத்தின் குமாரன்
ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின்குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
-2 நாளாகமம் 13 : 6
2) சேரா
அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறுஇரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.
-2 நாளாகமம் 14 : 9
1) தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணினது யார்?
2) யாருடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது?
விடை:
1) தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.
-2 நாளாகமம் 15 : 16
2) தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
-2 நாளாகமம் 16 : 9
1) யாரிடத்தில் பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்?
2) “நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின்தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள்” என்று இஸ்ரவேலின் ராஜா யாரைக் குறித்து சொன்னார்?
விடை:
1) அவனுக்கு உதவியாக கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.
-2 நாளாகமம் 17 : 16
2) அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகியஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,
-2 நாளாகமம் 18 : 25
ஆசாரியனாகிய அசரியா, கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும் மேலான நியாயாதிபதி.
2) சரியா? தவறா? ;
“தேவன் யுத்தமில்லாத இளைப்பாறுதலை கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம்அமரிக்கையாயிருந்தது”.
விடை:
1) தவறு
இதோ, ஆசாரியனாகிய அமரியா, கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகியசெபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலானநியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்துகாரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.
-2 நாளாகமம் 19 : 11
2) சரி
இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.
-2 நாளாகமம் 20 : 30
1) குடல்களில் உண்டான தீராத நோயினால் இறந்தது யார்?
2) வியாதியாயிருந்த ஆகாபின் குமாரனாகிய யோராமை பார்க்க சென்றது யார்?
விடை:
1) இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் (யோராம்) குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனைவாதித்தார்.
-2 நாளாகமம் 21 : 18
2) அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலேவெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின்குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
-2 நாளாகமம் 22 : 6
[அகசியாவின் இன்னொரு பெயர் யோவாகாஸ். Refer
-2 நாளாகமம் 21 : 17]
(This is a little tricky Question. But don’t worry. I will give ✅ answer to everyone)
1) கிரீடத்தை வைத்து, சாட்சியின் ஆகமத்தை கையிலே கொடுத்து, யாரை ராஜாவாக்கினார்கள்?
2) “நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன?” என்ற ஜனத்திடம் கேட்டது யார்?
விடை:
1) பின்பு ராஜகுமாரனை(யோவாஸ்) வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன்கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.
-2 நாளாகமம் 23 : 11
2) அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள்சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக்கைவிடுவார் என்றான்.
-2 நாளாகமம் 24 : 20
1) யார் யாரிடம் சொன்னது; “அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும்”.
2) யார் யாரிடம் சொன்னது; “தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல”.
விடை:
1) தேவனுடைய மனுஷன் to அமத்சியா
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச்செய்ய வேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
-2 நாளாகமம் 25 : 9
2) ஆசாரியர்கள் to உசியா
ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
-2 நாளாகமம் 26 : 17
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.
-2 நாளாகமம் 26 : 18
(அசரியா என்ற ஆசாரியனும், மற்ற 80 ஆசாரியர்களும் சேர்ந்து உட்பிரவேசித்து தான் உசியா ராஜாவிடம் பேசினார்கள். கடைசியாக “என்றார்கள்” என plural ல முடியும். எனவே ஆசாரியர்கள் to உசியா என்ற பதில் தான் சரி. அப்படி ஒரு option ஐ நான் கொடுத்திருக்க கூடாது. எனவே, அசரியா to உசியாவையும் சரியான பதிலாக எடுத்துக் கொண்டேன்).
1) யோதாம் எத்தனை வருஷங்கள் எருசலேமில் அரசாண்டான்?
2) ஆகாஸ் ராஜா, தனக்கு ஒத்தாசைபண்ண யாரிடத்திற்கு ஆட்களை அனுப்பினான்?
விடை:
1) அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
-2 நாளாகமம் 27 : 8
2) அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்குஆட்களை அனுப்பினான்.
-2 நாளாகமம் 28 : 16
1) ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தை முதல் மாதம் முதல் தேதியிலே பரிசுத்தம் பண்ணத் துவக்கி என்று முடித்தார்கள்?
2) எந்த கோத்திரத்து ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராத பிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்? (Select 3 options)
விடை:
1) முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடையமண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் (எட்டாம் நாளில்) பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
-2 நாளாகமம் 29 : 17
2) அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள்தங்களைச் சுத்தம்பண்ணிக் கொள்ளாதிருந்தும், எழுதியிராத பிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.
-2 நாளாகமம் 30 : 18
1) தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தது யார்?
2) அசீரிய ராஜாவாகிய சனகெரிப்பை கொன்றது யார்?
விடை:
1) கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்டகாணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக்காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.
-2 நாளாகமம் 31 : 14
2) அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகலபராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப்செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள்பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
-2 நாளாகமம் 32 : 21
1) சரியா? தவறா?
“ஆமோனை வெண்கலச்சங்கிலியால் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்”.
2) சரியா? தவறா?
“யோசியா ராஜா உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் காதுகள் கேட்க வாசித்தான்”
விடை:
1) தவறு
ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக்கொண்டுபோனார்கள்.
-2 நாளாகமம் 33 : 11
2) சரி
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,
-2 நாளாகமம் 34 : 29
ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலேகண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்கவாசித்தான்.
-2 நாளாகமம் 34 : 30
1) யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் எந்த வருஷத்திலே பஸ்கா ஆசரிக்கப்பட்டது?
2) இஸ்ரவேலில் மீதியான மக்கள் யாருடைய ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் பாபிலோனுக்கு அடிமையாகஇருந்தார்கள்?
விடை:
1) யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
-2 நாளாகமம் 35 : 19
2) பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.
-2 நாளாகமம் 36 : 20
1) பவுல் யாருக்காக மன்றாடி இந்த நிரூபத்தை பிலேமோனுக்கு எழுதுகிறார்?
2) எபிரேயர் 1 ம் அதிகாரம் யாருடைய மேன்மையை விளக்குகிறது?
விடை:
1) என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
-பிலேமோன் 1 : 10
2) இந்தக் கடைசி நாட்களில் குமாரன்(இயேசு) மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும்சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
-எபிரேயர் 1 : 2
1) தேவனுடைய கிருபையினால் யாருக்காக மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு இயேசு மரணத்தை உத்தரித்தார்?
2) நாம் எதை முடிவுபரியந்தம் பற்றிக்கொண்டிருந்தால் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்?
விடை:
1) என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்குதேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும்கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
-எபிரேயர் 2 : 9
2) நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
-எபிரேயர் 3 : 14
1) இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறது எது?
2) இயேசு எந்த முறைமையின்படி பிரதான ஆசாரியராயிருக்கிறார்?
விடை:
1) தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாகஉருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
-எபிரேயர் 4 : 12
2) அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும்ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
-எபிரேயர் 5 : 6
1) சரியா? தவறா? ; ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது தமதுபேரிலே தானே ஆணையிட்டுஆசீர்வதித்தார்.
2) சரியா? தவறா? ; “சாலேமின் ராஜா என்பதற்கு நீதியின் ராஜா என்று அர்த்தம்”.
விடை:
1) சரி
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர்ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
-எபிரேயர் 6 : 13
2) தவறு
இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்குஎன்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும்அர்த்தமாம்.
-எபிரேயர் 7 : 2
1) கோடிட்ட இடங்களை நிரப்புக:
இவர்கள் செய்யும் ஆராதனை —————————————— சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, ————- கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் ————- ———————— நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
2) கோடிட்ட இடங்களை நிரப்புக:
ஆகையால் ——————— உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களைநிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட——————————அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் —————————————-.
விடை:
1) இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்டமாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
-எபிரேயர் 8 : 5
2) ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர்மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
-எபிரேயர் 9 : 15
1) சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால் என்னநடக்கும்?
2) தேவனுக்குப் பிரியமாயிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (All Answers are Applicable, but answer according to chapter 11)
விடை:
1) சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
-எபிரேயர் 10 : 26
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமேஇருக்கும்.
-எபிரேயர் 10 : 27
2) விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன்அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
-எபிரேயர் 11 : 6
1) எது இல்லாமல் கர்த்தரைத் தரிசிக்க முடியாது?
2) எதினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது?
விடை:
1) யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
-எபிரேயர் 12 : 14
2) பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
-எபிரேயர் 13 : 9
1) நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்தகர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளை எந்த ராஜா எடுத்துக்கொடுத்தான்?
2) பாபிலோனில் இருந்து திரும்பி வந்த நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எத்தனைபேர்?
விடை:
1) நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்தகர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
-எஸ்றா 1 : 7
2) நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத்தொண்ணூற்றிரண்டுபேர்.
-எஸ்றா 2 : 58
1) சரியா?தவறா?; “கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதோடு, 3ம் அதிகாரம் நிறைவடைகிறது”.
2) சரியா?தவறா?; “அர்தசஷ்டா ராஜாவுக்கு எழுதப்பட்ட மனு எபிரேய பாஷையில் எழுதப்பட்டு இருந்தது”.
விடை:
1) சரி
முந்தின ஆலயத்தைக்கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின்தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக்கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.
-எஸ்றா 3 : 12
2) தவறு
அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும்எழுதியிருந்தது.
-எஸ்றா 4 : 7
1) எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டது யார்?
2) தேசாதிபதியாகிய தத்னாயும், எந்த ராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்?
விடை:
1) அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இது வரைக்கும் அது கட்டப்பட்டு வருகிறது; அது இன்னும் முடியவில்லைஎன்றார்கள்.
-எஸ்றா 5 : 16
2) அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள்வகையராவும், தரியு ராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.
-எஸ்றா 6 : 13
1) எஸ்றா முதலாம் மாதம் பாபிலோனிலிருந்து புறப்பட்டு எந்த மாதத்தில் எருசலேமுக்கு வந்தார்?
2) ‘லேவியின் புத்திரரில் ஒருவரையும் காணவில்லை’ என்று எஸ்றா எந்த நதியண்டையிலே கண்டுபிடித்தார்?
விடை:
1) முதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.
-எஸ்றா 7 : 9
2) இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்று நாள்தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும்அங்கே காணவில்லை.
-எஸ்றா 8 : 15
1) “என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்” என்று சொன்னது யார்?
2) ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர் யார்?
விடை:
1) என் தேவனே, நான் (எஸ்றா) என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம்வளர்ந்துபோயிற்று.
-எஸ்றா 9 : 6
2) ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
-எஸ்றா 10 : 18
1) நாம் முதற்பலன்களாவதற்கு தேவன் நம்மை எதினாலே ஜெநிப்பித்தார்?
2) ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், எது இல்லையென்றால் அவனுக்குப் பிரயோஜனமில்லை?
விடை:
1) அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.
-யாக்கோபு 1 : 18
2) என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப்பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
-யாக்கோபு 2 : 14
1) நீதியின் கனி எதில் விதைக்கப்படுகிறது?
2) தேவன் யாருக்கு கிருபை அளிக்கிறார்?
3) எந்த ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்?
விடை:
1) நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
-யாக்கோபு 3 : 18
2) அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
-யாக்கோபு 4 : 6
3) அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன்பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
-யாக்கோபு 5 : 15
1) நெகேமியா, ராஜாவின் வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?
2) நெகேமியா எந்த வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால்சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டார்?
விடை:
1) ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமதுஅடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக்கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்றுபிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.
-நெகேமியா 1 : 11
2) நான் அன்று இராத்திரி பள்ளத்தாக்கின் வாசல் வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத்துரவைக் கடந்து, குப்பைமேட்டுவாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின்வாசல்களையும் பார்வையிட்டேன்.
-நெகேமியா 2 : 13
1) ஊருணிவாசலை பழுதுபார்த்து கட்டியது யார்?
2) “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” என்று சொன்னது யார்?
விடை:
1) ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின்சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்துஇறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.
-நெகேமியா 3 : 15
2) அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரிஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.
-நெகேமியா 4 : 3
1) சரியா?தவறா?
“நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று நெகேமியா பிரபுக்களையும்அதிகாரிகளையும் கடிந்துகொண்டார்”.
2) சரியா?தவறா?
“அலங்கமானது கட்டப்பட்டு, தேபேத் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது”
விடை:
1) சரி
என் (நெகேமியா)மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள்அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒருபெரிய சபை கூடிவரச்செய்து,
-நெகேமியா 5 : 7
2) தவறு
அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.
-நெகேமியா 6 : 15
1) திரும்பி வந்த இஸ்ரவேலின் ஜனங்களில் எரிகோ புத்திரர் எத்தனை பேர்?
2) நெகேமியாவின் மறுபெயர் என்ன?
விடை:
1) எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
-நெகேமியா 7 : 36
2) ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதாஎன்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டினலேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
-நெகேமியா 8 : 9
1) கோடிட்ட இடங்களை நிரப்புக:
அவர்களுக்கு ———————- உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத்தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலேஒப்புவித்தீர்; அவர்கள் ——————-, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே ——————- விடுதலையாக்கிவிட்டீர்.
2) கோடிட்ட இடங்களை நிரப்புக:
தேசத்தின் ஜனங்கள் ———————- சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக்கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம்என்றும், நாங்கள் ————- வருஷத்தை ——————— வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம்என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
விடை:
1) அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத்தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலேஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
-நெகேமியா 9 : 28
2) தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக்கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம்என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும்ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
-நெகேமியா 10 : 31
1) கீழ்க்கண்டவற்றில் ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனாக இருந்தது யார்?
2) கீழ்க்கண்டவற்றில் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவராக இருந்தது யார்?
3) அந்நிய ஜாதிகளை சேர்த்துக் கொண்ட யூதரின் அநேக பிள்ளைகள் எந்த பாஷையை பேசினார்கள்?
விடை:
1) ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத்துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின்குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.
-நெகேமியா 11 : 17
2) மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷஅறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.
-நெகேமியா 12 : 25
3) அவர்கள் பிள்ளைகள் பேசினபேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின்பாஷையைத்தவிர, யூதபாஷையைத் திட்டமாகப் பேச அறியாதிருந்தார்கள்.
-நெகேமியா 13 : 24
1) நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி ஆவியினாலே எதற்கு கீழ்ப்படிய வேண்டும்?
2) நீங்கள் எதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது?
விடை:
1) ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக்கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்தஇருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;
-1 பேதுரு 1 : 22
2) நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடையசித்தமாயிருக்கிறது.
-1 பேதுரு 2 : 15
1) பெலவீன பாண்டமாயிருப்பது யார்?
2) கிறிஸ்தவன் எப்போது வெட்கப்படாமலிருந்து, தேவனை மகிமைப்படுத்த வேண்டும் ?
3) யாருக்கு கீழ்படிந்து, எதை அணிந்து கொள்ள வேண்டும்?
விடை:
1) அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத்தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டியகனத்தைச் செய்யுங்கள்.
-1 பேதுரு 3 : 7
2) ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனைமகிமைப்படுத்தக்கடவன்.
-1 பேதுரு 4 : 16
3) அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
-1 பேதுரு 5 : 5
1) கீழ்க்கண்டவர்களில் ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமூகத்தில் சேவிக்கிறது யார்?
2) எஸ்தரின் உண்மையான தகப்பன் பெயர் என்ன? (வளர்த்தவர் அல்ல, பெற்றவர் யார்?)
விடை:
1) ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.
-எஸ்தர் 1 : 11
2) மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின்குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக்காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும்கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.
-எஸ்தர் 2 : 15
1) சரியா?தவறா?; “ஆதார் மாதம் சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்க கட்டளைகள்அனுப்பப்பட்டது”.
2) சரியா?தவறா?; “ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்”.
விடை:
1) சரி
ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர்குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக்கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.
-எஸ்தர் 3 : 13
2) சரி
ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.
-எஸ்தர் 4 : 9
Comments
Post a Comment