பரிசுத்த ஆவி vs பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்:
பரிசுத்த ஆவி vs பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்:
- பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை குறித்தும், பரிசுத்த ஆவியானவர் நம் சரீரத்தை ஆலயமாககொண்டிருக்கிறார் என்பதை குறித்தும் பல கேள்விகள் நம்மில் பல பேருக்கு உண்டு.
- நானும் அப்படி ஒரு குழப்பத்தில் தான் இருந்தேன்.
- ஆனால் தற்போது அதற்கான சரியான விளக்கத்தை பெற்றுக் கொண்டேன்.
எப்படி விளங்கி கொள்வது:
- வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் என்று வரும் வசனத்தை எல்லாம் எடுத்து நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
- முதலாவதாக, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
- அந்த கிரேக்க மொழியில் சில Prepositions ஐ நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
- அப்போது தான் இது நமக்கு விளங்கும்.
Greek Prepositions:
1) Para
He is with you. (Present Tense)
2) En
He shall be in you. (Future Tense)
3) Epi
He comes upon you.
Greek Words for Holy Spirit
Pneuma - Ghost- ஆவி
Hagios - Holy- பரிசுத்த
En Preposition:
- நாம் இரட்சிக்கப்படும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து விடுகிறார் என்று நாம் அறிவோம்.
- பரிசுத்த ஆவியானவருடைய ஆலயம் நமது சரீரம் என வேதத்தில் வாசிக்கிறோம்.
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடையஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
-1 கொரி 6 : 19
- இந்த வசனத்தை கிரேக்க மொழியில் பார்த்தோமானால் En என்ற Preposition கொடுக்கப்பட்டிருக்கும்.
- அப்படியென்றால் நாம் இரட்சிக்கப்படும் பொழுது பெறுகிற ஆவியைக் குறித்து இங்குபேசப்படுகிறது.
- உதாரணமாக, நாம் தண்ணீர் குடித்தால், தண்ணீர் நம் உடம்பின் உள்ளே போவது போல, இங்கு பரிசுத்தஆவியானவரும் நம் சரீரத்திற்குள் வாசம் செய்கிறார்.
Epi Preposition:
அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
-அப்போஸ்தலர் 8 : 16
பரிசுத்த ஆவி உங்களிடத்தில்(உங்கள் மேல்) வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
-அப்போஸ்தலர் 1 : 8
- இந்த வசனத்தை வசனங்களை கிரேக்க மொழியில் பார்த்தோமானால் Epi என்ற Preposition கொடுக்கப்பட்டிருக்கும்.
- அப்படியென்றால் இது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது என்பதனை நாம் அறிந்துகொள்ளலாம்.
- உதாரணமாக, நாம் தண்ணீரில் குளித்தால் தண்ணீர் நம் உடம்பின் உள்ளே போவது இல்லை.
- ஆனால் உடம்பை முழுவதும் நனைக்கும்.
- அது போல தான் இங்கும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நாம் குளிக்கிறோம்.
- முழுவதும் நனைகிறோம்.
இனி வேதத்தில் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த குழப்பமே நமக்கு வேண்டாம். Preposition Check பண்ணினாலே தெரிந்து விடும். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து பேசுகிறார்களா? இல்லை, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்வதை பற்றி சொல்கிறார்களா? என்று.
Comments
Post a Comment