Tamil Christianity poems and writings

 பலர் சிலர்


-சரீர மரணத்திற்காக ஜெபிக்கிற பலரை நான் கண்டதுண்டு,

ஆனால் ஆத்தும மரணத்திற்காக ஜெபிக்கிற சிலரை தான் நான் கண்டிருக்கிறேன்

-சரீரத்தை மட்டும் காப்பாற்றி கொண்டுசாட்சி சொல்லும் பலரை நான் கண்டதுண்டு,

ஆனால் ஆத்துமாவை காத்து கொண்டேன் என்று சாட்சி சொல்லும் சிலரை தான் நான் கண்டிருக்கிறேன்

-ஜெபக் குறிப்புகள் வைத்துநாட்டை திருத்த பலர் முற்படுவதை நான் கண்டதுண்டு,

ஆனால் தன்னை திருத்தி கொள்ள ஒரு சிலர் முற்படுவதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்

-மக்களை திருப்திப்படுத்துகிற ஊழியக்காரர்கள் பலரை நான் கண்டதுண்டு,

ஆனால் தேவனை திருப்திப்படுத்துகிற ஊழியக்காரர்கள் சிலரை தான் நான் கண்டிருக்கிறேன்

-நாட்டின் எழுப்புதலுக்காக ஜெபிக்கிற பலரை நான் கண்டதுண்டு,

ஆனால் தனிமனித எழுப்புதலுக்காக ஜெபிக்கிற சிலரை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்.

-பலரும் பின்பற்றுகிற தவறானது உங்களுக்கு வேண்டுமா?

சிலர் பின்பற்றுகிற சரியானது உங்களுக்கு வேண்டுமா?

-இங்கு பலர் செய்யும் தவறை நாமும் செய்யாமல்,

சிலர் செய்யும்  நன்மையானவற்றை நாமும் செய்தோமானால், அந்த ஒரு சிலருக்கு கிடைக்கக் கூடிய பரலோகம் நமக்கும் கிடைக்கும்.

இந்த பதிவை கண்டு ‘நல்லா இருக்கு’ என்று சொல்லுகிற பலர் எனக்கு வேண்டாம்,

இந்த பதிவை கண்டு மனந்திரும்புகிற சிலர் எனக்கு போதும்.


—————————————————————————————


ஆவிக்குரிய  புத்தகம்,

சபையில் கொடுக்கக்கூடிய பிரசங்கம்,

கிறிஸ்தவ யூடியூப் காணொலிகள்,

கிறிஸ்தவ சமூக ஊடக பதிவுகள்,

கிறிஸ்தவ பாடல்கள்,

சீர்திருத்த மேற்கோள்கள்,

தனிநபரின் வேத விளக்கம்,

பெரிய போதகர்களின் வேத விளக்கம்,

இவை அனைத்தையும் நீங்கள் பகுத்தாராய்ந்து எது சரியானது என்று அறிய வேண்டும்

வேதத்தை பகுத்தாராய வேதத்தை குறித்த அறிவு அவசியம்.

வேதத்தை குறித்த அறிவிற்கு வேதத்தை திரும்ப திரும்ப படிப்பது அவசியம்

பிரசங்கங்கள் கேட்பது தவறு அல்ல,

ஆனால் பிரசங்கங்களை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு

வேதத்தை மட்டும் முழுமையாக நம்புங்கள்.


The spiritual book,

The Sermon given in a congregation/Church

The Christian Youtube videos,

The Christian Social media posts,

The Christian Songs,

The reformation quotes,

The Scripture explanation of the individual,

The Scripture explanation of the big pastors,

We need to discern all of these, and know Which is right.

To discern things, We need Scripture Knowledge.

To get Scripture knowledge, we need to read Bible over and over again.

It is not wrong listening sermons, 

And don’t rely on sermons completely.

Rely on Bible alone. 


———————————————————————


மனிதனின் பிரசங்கங்களைக் கேட்பதற்கு முன்பு

தேவனின் வேதத்தை முழுமையாக படியுங்கள்.

அப்போதுதான் அந்த பிரசங்கம் மாம்ச மனிதனிடம் இருந்து வருகிறதா அல்லது ஆவிக்குரிய மனிதனிடம்இருந்து  வருகிறதா என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்


Before listening to the Sermons of Man

Read the Scripture of God thoroughly.

Only then you understand that the sermon is coming from a Carnal man or Spiritual Man


————————————————————————————-


அன்று ஆதாம்,ஏவாளின் பாவத்தின் வெட்கத்தை மூட ஒரு விலங்கை (ஆட்டுகுட்டி)பலி கொடுத்துஅதின்தோல்களை அவர்களுக்கு ஆடையாக கொடுத்தார்.

இன்று நம் எல்லோருடைய பாவத்தின் வெட்கத்தையும் மூட தன்னையே (ஆட்டுகுட்டி)பலியாக்கிஅவரின்நீதியையே நமக்கு ஆடையாக கொடுத்திருக்கிறார்.  


In Early days, To cover the Adam and Eve sin’s Shame, God took a life of animal (Lamb)and gave his skin as their clothing. 

Today, To cover all of our Sin’s Shame, God gave his life(Lamb) and gave his righteousness as our clothing. 


—————— —————————————————

ஆசீர்வாதத்திற்காகவும்,

நாம் நினைப்பதெல்லாம் கிடைப்பதற்காகவும்,

இஷ்டப்படி வாழ்வதற்காகவும்,

கிருபையின் காலம் கொடுக்கப்படவில்லை


பாவத்தில் இருந்து வெளிவருவதற்காகவும்மனந்திரும்புவதற்காகவும்நம்மை சீர்திருத்திகொள்வதற்காகமட்டுமே

கிருபையின் காலம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமாக அந்த நித்திய ஜவனுக்காக நம்மை தயார்ப்படுத்துகிற காலம்.


The period of grace is not given

for the Worldly blessings,

To get whatever we ask for ,

To live as we like.


The period of grace is given to us 

Only to get out of our sin

to repent,

to reform ourselves.

And importantly to prepare ourselves for the Eternal Life. 


———————————————————————-

பாவத்திலிருந்து மனந்திரும்புகள் என்று எல்லோரும் பிரசிங்கிக்கிறோம்,

ஆனால் இங்கு எது பாவம் என்பதையே யாரும் அறியவில்லை,

பாவம் என்றால் என்ன என்பதை அறிந்தால் மாத்திரமே அதிலிருந்து வெளிவர வேண்டும் என்ற உணர்வு வரும்,

பாவம் என்றால் என்ன ?

பாவம் நம்மை தேவனிடம் இருந்து பிரிக்கும் ஒரு பிளவு,

பாவம் மற்றவர்களுக்கு விரோதமாக செய்யக்கூடிய தீங்கு,

பாவம் என்பது பெரிதாக செய்யக்கூடிய கொலை,களவு,விபச்சாரம் மாத்திரமல்லகண்களின் இச்சைஇருதயத்தின் இச்சை இவையும் அடங்கும்,

பாவம் என்பது அவயங்களின் கிரியை மூலம்

மாத்திரம் அல்லஇருதயத்தின் சிந்தனைகளின் மூலமும் வரும்,

நீங்கள் கேட்கலாம் சினிமா பார்ப்பது, பாட்டு கேட்பதெல்லாம் எப்படி பாவமாகும்? என்று.

தேவனிடம் இருந்து உங்களை பிரிக்கிற ஒவ்வொரு செயலும் பாவமே!

பாவம் என்பது ஒரு சிறய பொய்யில் ஆரம்பித்துஅடுத்தவரை குறைபேசுவதில் வந்து முடிகிறது.

ஒரு சின்ன தவறு செய்தால் கூடஐயோநாம் பாவம் செய்கிறோமேஎன்று உங்களின் இருதயத்தில் குத்தப்பட்டால் தான் நீங்கள் சரியான முறையில் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்

பாவம் என்பது மரணம்.

சரீர மரணம் அல்லஆவிக்குரிய நித்திய மரணம்.

இவை அனைத்தையும் குறித்த உபதேசம் தான் சுவிஷேசத்தின் முழுமை


————————————————————————————-

துதியின் மகிமை

து - த்+
துதியில் (த்) ஆகிய (தே)வன் ; நமக்கு () ஆகிய ()யிரைத் தந்த பிதாவையும் காண்கிறேன்.
துதியில் (து) என்ற எழுத்தில், மேல் நோக்கி உயர்ந்திருக்கிற பிதாவாகிய (தே)வனையும் காண்கிறேன்.

தி-த்+
துதியில் (த்) ஆகிய (தே)வன்; நமக்காக () ஆகிய ()ரத்தத்தை சிந்தின ()யேசுவையும் காண்கிறேன்.
துதியில் (தி) என்ற எழுத்தில், கீழ் நோக்கி நமக்காக பூமிக்கு வந்த இயேசுவாகிய (தே)வனையும் காண்கிறேன்.

இருவரையும் இணைக்கிற (ருவமில்லாத, ()டைவெளியில்லாத [து மற்றும் தி ‘க்கு நடுவில், ஆவியாக பரிசுத்த ஆவியானவரையும்]
பரிசுத்தஆவியானவராகிய (தே)வனையும் காண்கிறேன்

மொத்தத்தில் துதியில் என் திரித்துவ (ஒருவரானதேவனை (த்) என்ற ஒற்றை மெய்எழுத்தில் காண்கிறேன். 
————————————————————————————
Tracts
✝️

சுவிசேஷக் கைப்பிரதி

இயேசு உங்களை இரட்சிக்க அழைக்கிறார்.

இந்த கைப்பிரதியில் என்ன தான் இருக்கிறது என்று ஒரு நிமிடம் செலவு செய்து வாசித்து பார்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


யாருக்குமே என்னை பிடிக்கல? ஏன் தான் வாழுகிறோமோ? ஏன் தான் என் வாழ்வில் மட்டும் இவ்வளவு கஷ்டம் என்று நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். உங்களை தேடி இயேசு வந்திருக்கிறார் இந்த கைப்பிரதி மூலமாக.


உலக வாழ்க்கை

இயேசுவுடனான வாழ்க்கை

ஏன் தான் மானிடராய் பிறந்தேனோ?

என்னை மானிடனாய் பிறக்க வைத்தது தேவனுடைய நோக்கம்

வாழ்க்கை என்பது கண்ணீர்,பிரச்சனைதுக்கம்வெறுப்பு

நம்முடைய கண்ணீர்பிரச்சனைதுக்கம்வெறுப்புக்கு மத்தியில் தேவன் நம்மோடு இருப்பார்

வாழ்க்கையில் விரக்தி

வாழ்க்கையில் நம்பிக்கை

பாவம் நிறைந்திருக்கும்

பாவத்தை போக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்

எனக்காக ஒருவருமில்லை

எனக்காக ஒருவர் இருக்கிறார்


1)பாவம் என்றால் என்ன

நீங்கள் மது அருந்துவீர்களாபுகை பழக்கம் இருக்கிறதாஆபாசப்படம் பார்ப்பீர்களா?  பொறாமைப்படுவீர்களாமற்றவர்களை குறை பேசுவீர்களாமற்றவர்களுக்கு கெடுதல் நினைத்திருக்கிறீர்களாஇது போன்ற பழக்கங்களை தான் கிறிஸ்தவம் பாவம் என்கிறது


2)பாவத்திற்கு தண்டனை என்ன?

மரணம்அதாவது நரகம்


3)பாவத்தை எப்படி சரி செய்வது?

இந்த பாவங்கள் அனைத்தையும்ஒருவரால் , ஒரே நிமிடத்தில் கழுவ முடியும்அவர் வேறு யாருமல்லஇயேசுவேவாருங்கள் அவருடம்உங்கள் பாவமும் கழுவப்பட்டுஇனிமேலும் பரிசுத்தமான வாழ்க்கையை வாழஉதவி செய்வார்


4)ஐயோநானும் பாவம் செய்திருக்கிறேன் என்று மனம் வருந்துகிறீர்களா?

கவலை வேண்டாம்வாருங்கள் இயேசுவிடம்உங்களுடைய பாவமும் கழுவப்படும்

நீங்களும் நித்தியமான வாழ்வாகிய பரலோகத்தை சுதந்தரிப்பீர்கள்.  


இயேசு நமக்காக இரத்தம் சிந்தி, சிலுவை மரணம் அடைந்து , நமக்கு பாவத்திலிருந்து விடுதலையை கொடுத்திருக்கிறார். சந்தோஷத்தை, சமாதானத்தை கொடுத்திருக்கிறார். எனவே, கவலை வேண்டாம். வாருங்கள் இயேசுவிடம். சுதந்தரியுங்கள் பரலோக இராஜ்யத்தை. நித்தியமான ஜீவனையும் பெற்றுக் கொள்ளுங்கள். 

இயேசு வேண்டுமா? (பரலோகம்)

உங்கள் பாவம் வேண்டுமா?(நரகம்)

முடிவு உங்கள் கையில். 

———————————————————————————



Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?