எதுவும், எதுவும் உங்களை தேவனின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது
Nothing means Nothing
எதுவும், எதுவும் உங்களை தேவனின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
எதுவும், எதுவும் உங்களை தேவனின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
-ரோமர் 8 : 38
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
-ரோமர் 8 : 39
- "தேவனின் அன்பு நிபந்தனையற்றது(unconditional)!" என்று மக்கள் சொல்வதை நான் அடிக்கடி கேட்கிறேன்.
- ஆனால் அவர்கள் தோல்வியடையும் தருணத்தில் அதே அன்பு ஓர் இருப்பாக மட்டும் “just existence” மாறி விடுகிறது.
- அவர்கள் நம்பிக்கை என்னவென்றால், நாம் சரியானதைச் செய்யும்போது தேவன் நம்மை நேசிக்கிறார்.
- ஆனால் ஏதாவது தவறு செய்யும் தருணத்தில் தேவன் நம்மை நேசிப்பதை நிறுத்திவிடுகிறார் என்று நம்புகிறார்கள்.
- நாம் வேத வசனத்தை வாசித்தோமானால், அந்த நம்பிக்கை தவறு என்று நமக்கே புரியும்.
- தேவன் மீதான நம் அன்பு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு எப்போதும் மாறாமல் இருக்கும்.
- அவர் நம்மீது அன்பு செலுத்துவது ‘அவர் யார்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது.
- நாம் என்ன செய்கிறோம் என்பதன் அடிப்படையில் அல்ல.
- அப்போஸ்தலனாகிய பவுல் எவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியோடும் இருக்கிறார் என்பதை நாம் ரோமர். 8:38-39 ல் பார்க்கிறோம்.
- புதிய சர்வதேச பதிப்பில், "நான் உறுதியாக இருக்கிறேன்..." என்று கூறுகிறது.(In the New International Version, it says, "For I am convinced...”)
- தேவனின் பிள்ளையாக நீங்கள் இருக்கும் பொழுது எதுவும்,
- உங்கள் பாவங்கள்,
- தோல்விகள்,
- தவறுகள் கூட,
- தேவனின் அன்பிலிருந்து உங்களைப் பிரிக்க முடியாது என்பதை அப்போஸ்தலன் பவுல் இங்கு குறிப்பிடுகிறார்.
- அதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? நீங்கள்
- உணர்வதை(feel)
- நினைப்பதை(think) அல்லது
- கற்பிக்கப்பட்டதை(taught) எல்லாம்.
- கடைப்பிடிக்காதீர்கள். Bible ல மட்டும் நம்புங்கள்.
- அவருடைய அன்பிலிருந்து எதுவும் உங்களை பிரிக்க முடியாது என்று வேத வார்த்தை நமக்கு தெளிவாக அறிவிக்கிறது.
- Nothing means Nothing.
- உங்கள் மீதான அவரது அன்பு, உங்கள் மாசற்ற(பரிசுத்தமான) செயல்பாட்டின் மீது சார்ந்தது அல்ல.
- உங்கள் தோல்விகளிலும் அவர் உங்களை நேசிக்கிறார்.
- அதனால் தான் அது ‘கிருபை’ என்று அழைக்கப்படுகிறது!
- இது நீங்கள் தேவனின் கிருபைக்கு தகுதியில்லாதவர்களாக இருக்கும் பொழுது கொடுக்கப்பட்ட கிருபை.
- நீங்கள் தேவனின் கிருபைக்கு தகுதியுடையவராக இருந்தால், அது கிருபையே அல்ல.
- எனவே அடுத்த முறை நீங்கள் ஏதாவது தவறு செய்தால், அவருடைய நிபந்தனையற்ற அன்பை (unconditional Love) பிடித்துக் கொள்ளுங்கள்.
- அவருடைய அன்பை Fresh ஆக பெற்றுக் கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு முறையும் அந்தத் தோல்வியையும், ஒவ்வொரு போராட்டத்தையும் சமாளிக்கும் திறன் (God’s Love) உங்களுக்கு இருக்கும்.
Comments
Post a Comment