ஆண்டவரே, என் மனதை கட்டுப்படுத்த எனக்கு உதவுங்கள்

ஆண்டவரே, என் மனதை கட்டுப்படுத்த எனக்கு உதவுங்கள் 

நமது ஆவிக்குரிய போராட்டம் என்பது பல நேரங்களில் நம் மனம் மற்றும் சிந்தனைகளோடு தான்.

நமது மூளையில் மற்றும் மனதில் தோன்றுகிற அனைத்துமே சரியானது தான் என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது.

“நாம் யாருடைய குரலை கேட்கிறோம்” என்று அடையாளம் கண்டுகொள்வது மிகவும் முக்கியம். 

உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால், பிசாசு அதை கட்டுப்படுத்தும். 

எனவே, உங்கள் மூளைக்குள் எதை அனுமதிக்க வேண்டும் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

நாம் தேவனுடைய வார்த்தைகளால் நம் மனதை நிரப்பும்போது, ​​​​நாம் எதிரியின் தாக்குதலுக்கு எந்தவொரு இடமும் கொடுப்பதில்லை. 

தவறான எண்ணங்களை தவிர்ப்பது என்பது, நாம் பிசாசை எதிர்ப்பதில் செய்யக்கூடிய முதல் வேலை.

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
 -எபேசியர் 4 : 22

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
 -எபேசியர் 4 : 23

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
 -எபேசியர் 4 : 24

உங்கள் மனம் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் திறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் சொந்த வழியில் சிக்கி, உங்கள் இருதயம் கடினமாகி, நீங்கள்  தேவனுடைய காரியங்களுக்கு செவிக்கொடுக்காமல் போய்விடவேண்டி நேரிடும்.

அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
 -ரோமர் 1 : 21

ஒவ்வொரு பாவமும் மனதில் ஒரு எண்ணமாகத் தொடங்குகிறது. 

தேவபக்தியற்ற எண்ணங்களை(unGodly thoughts) உங்கள் மனதில் அனுமதிப்பதால், 
  • ஒழுக்கக்கேடான ஆசைகள் (Immoral Desires)
  • பொல்லாத நடத்தை (Wicked Behavior)
  • ஆவிக்குரிய மரணம் (Spiritual Death)
இவைகள், உங்களுக்கு வரும்.

“தவறான எண்ணங்கள் குறைபாடுள்ள உணர்வுகளுக்கு வழிவகுக்கும், இது ஆபத்தான உண்மைகளாக மாறும்." 

அதன் பாதையின் வழியிலேயே அதை நிறுத்து!!

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
 -ஏசாயா 26 : 3

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
 -பிலிப்பியர் 2 : 5

தேவனுடைய வார்த்தையை அறிந்துகொண்டு , அதை இருதயத்தில் நிலைநிறுத்துவதே உங்கள் மனதை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4