Daily Bible Quiz Answers

       Bible Quiz Answers

Day 1- Feb 7 2022- Monday

 “நான் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறதே நலம்” என்று கூறயது யார்?

விடை: யோனா (யோனா 4:3)

Day 2- Feb 8 2022- Tuesday

இடது கை பழக்கமுள்ள நியாயாதிபதியின் பெயர் என்ன? 

விடை: ஏகூத் ( நியாயாதிபதிகள் 3:15)

Day 3- Feb 9 2022- Wednesday 

ஆதாமிடம் எந்த கனியை புசிக்க வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?

விடை: நன்மை, தீமை அறியத்தக்க விருட்சம் 
(ஆதியாகமம் 2:17)

Day 4- Feb 10 2022- Thursday

நோவாவின் குமாரரில் தன் தகப்பனின் நிர்வாணத்தை கண்டது யார்?

விடை: காம் (ஆதியாகமம் 9:22)

Day 5- Feb 11 2022- Friday

கர்த்தர் அழைக்கும் முன்பு ஆபிரகாம் எந்த பட்டணத்தில் குடியிருந்தார்?

விடை: ஊர் (ஆதியாகமம் 11:31)

Day 6- Feb 12 2022- Saturday

“கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ” எனக் கூறியது யார்? 

விடை: கர்த்தர் (ஆதியாகமம் 18:14)

Day 7- Feb 13 2022- Sunday

எந்த தேசத்தில் தன் குமாரனுக்கு பெண் கொள்ள வேண்டாம் என்று ஆபிரகாம் தன் ஊழியக்காரரிடம் கூறினார்? 

விடை: கானான் (ஆதியாகமம் 24:3)

Day 8- Feb 14 2022- Monday

ஈசாக்கு கட்டிய ஒரே பலிபீடம் எங்கு அமைந்துள்ளது? 

விடை: பெயெர்செபா (ஆதியாகமம் 26:23-25)

Day 9- Feb 15 2022- Tuesday

யாக்கோபு, "நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்ப பிழைத்தேன்" என்று சொல்லி பெயரிட்ட ஸ்தலம் எது?

விடை: பெனியேல் (ஆதியாகமம் 32:30)

Day 10- Feb 16 2022- Wednesday

கீழ்க்கண்டவற்றில் எந்த மூன்று பொருட்களையூதா தாமாருக்கு (வேசி என நினைத்துஅடைமானம்கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்


விடை: கைக்கோல், முத்திரை மோதிரம், ஆரம் (ஆதியாகமம் 38:18)

Day 11- Feb 17 2022- Thursday 

யோசேப்பின் மாமனார் ஒரு


விடை: ஆசாரியன் (ஆதியாகமம் 41:45)

Day 12- Feb 18 2022- Friday 

இந்த கோத்திரம் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரிப்பான்” என யாக்கோபு  எந்த கோத்திரத்தைகுறிப்பிடுகிறார்


விடை: தாண் (ஆதியாகமம் 49:16)

Day 13- Feb 19 2022- Saturday 

இருதயத்தில் சுத்தமுள்ளவர்களுக்கு என்ன ஆசீர்வாதம் கிடைக்கும் என இயேசு தன் உபதேசத்தில்குறிப்பிடுகிறார்


விடைஅவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8)

Day 14- Feb 20 2022- Sunday  

கீழ்க்கண்டவற்றில் எந்த இரண்டு பட்டணங்களுக்கு போக வேண்டாம் என இயேசு தம்முடைய 12 அப்போஸ்தலர்களையும் பிரசங்கிக்க அனுப்பியபோது கட்டளையிட்டார்


விடை: சமாரியர், புறஜாதியார் (மத்தேயு 10:5)

Day 15- Feb 21 2022- Monday  

கீழ்க்கண்ட வசனத்தின் கோடிட்ட இடங்களை நிரப்புக:

இந்த ஜனங்கள் தங்கள்———————- என்னிடத்தில் சேர்ந்துதங்கள்————————- என்னைக்கனம்பண்ணுகிறார்கள்அவர்கள்——————————- எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது


விடைவாயினால்உதடுகளினால்இருதயமோ   (மத்தேயு 15:8)

Day 16- Feb 22 2022- Tuesday  

கீழ்க்கண்டவற்றில் எந்த 2 நிகழ்வுகள்இயேசு உயர்ந்த மலையில் மறுரூபமான போது நிகழ்ந்தது?


விடைஅந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று; ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது(மத்தேயு 17:5)

Day 17- Feb 23 2022- Wednesday   

கீழ்க்கண்டவற்றில் எந்த 3 காரியங்களை பரிசேயரும்வேதபாரகரும் விரும்பினார்கள்?


விடை: 1. அவர்கள் மனுஷரால் ‘ரபீ’ என்று அழைக்கப்படுவதை விரும்பினார்கள்.
2. அவர்கள் ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களை விரும்பினார்கள்
3. அவர்கள் சந்தைவெளிகளில் வந்தனங்களை (வரவேற்பை)விரும்பினார்கள்
[மத்தேயு 23: 6-7]

Day 18- Feb 24 2022- Thursday   

ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து இயேசுவின்சிரசின் மேல் ஊற்றினது எதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது


விடை: அடக்கம் பண்ணுவதற்கு (மத்தேயு 26:12)

Day 19- Feb 25 2022- Friday   

கீழ்க்கண்ட வசனத்தின் கோடிட்ட இடங்களை நிரப்புக

அதற்கு அவர்நான் உன்னோடே இருப்பேன்நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்நீங்கள் இந்தமலையில் ———————————நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.


விடை: தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்
 (யாத்திராகமம் 3 : 12)

Day 20- Feb 26 2022- Saturday    

தான் கர்த்தரால் அனுப்பப்பட்டவன்” என்று எபிரேயர்களை நம்ப வைக்க தேவன் மோசேக்கு எத்தனை அற்புதஅடையாளங்களைக் கொடுத்தார்?


விடை: 3

1) மோசேயின் கோல் சர்ப்பமாக மாறியது.

(யாத். 4:2-3)

2) மோசேயின் கை வெண்குஷ்டமாக மாறியது.

(யாத் 4:6-7)

3) மோசே நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றிமொண்ட தண்ணீர் வெட்டாந்தரையில் இரத்தமானது(யாத் 4:9)


Day 21- Feb 27 2022- Sunday    

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்இந்த அடையாளம்நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” இந்த வசனம் எந்த வாதையின் போதுசொல்லப்பட்டது


விடை: வண்டு ( யாத்திராகமம் 8 : 22-23)

Day 22- Feb 28 2022- Monday    

கீழ்க்கண்டவற்றில் எந்த 3 விதமாய் இஸ்ரவேலர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை புசிக்க வேண்டும் என்று கர்த்தர்கட்டளையிட்டார்


விடை: 
1) அரைகளில் கச்சை கட்டிக்கொண்டு, 
2) கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டு 
3) கையில் தடிபிடித்துக்கொண்டு
(யாத்திராகமம் 12 : 11)


Day 23- Mar 1 2022- Tuesday (Exodus 13-15)

இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்தில் இருந்து புறப்பட்டு போகும் போதுஏன் தேவன் அவர்களை பெலிஸ்தரின்தேசம் வழியாக அனுப்பவில்லை


விடை: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்பதால் 
(யாத்திராகமம் 13 : 17-18)

Day 24- Mar 2 2022- Wednesday (யாத்திராகமம் 16-18)

கீழ்க்கண்டவற்றில் எந்த இரண்டு காரணங்களின் நிமித்தமாக மோசே ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டார்?


விடை: 
1) இஸ்ரவேல் புத்திரர் மோசேயிடம் வாதாடினதினிமித்தம்
2) இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தம்
(யாத்திராகமம் 17 : 7)

Day 25- Mar 3 2022- Thursday (யாத்திராகமம் 19-21)

தேவன் கொடுத்த பத்து கட்டளைகளில் ஐந்தாம் கட்டளை எது


விடை: 
1)என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் (யாத் 20 : 3)

2) யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம் (யாத் 20 : 4)

3) கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக (யாத் 20:7)

4)ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக (யாத் 20 : 8)

5)உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக (யாத் 20 : 12)

6)கொலை செய்யாதிருப்பாயாக (யாத் 20 : 13)

7)விபசாரம் செய்யாதிருப்பாயாக (யாத் 20 : 14)

8)களவு செய்யாதிருப்பாயாக (யாத் 20 : 15)

9)பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத் 20 : 16)

10)பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக 

(யாத் 20 : 17)


Day 26- Mar 4 2022- Friday (யாத்திராகமம் 22-24)

கீழ்க்கண்டவற்றில் எந்த இரண்டு நபர்களை மோசே இரண்டாம்தரம் தேவபர்வதத்திற்கு ஏறிச்செல்லும் போதுஜனங்களுக்கு உதவியாக நியமித்து விட்டு சென்றார்?

(கற்பலகைகளையும்கர்த்தர் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் பெற சென்றபோது)


விடை: ஆரோன், ஊர் (யாத் 24 : 14)

Day 27- Mar 5 2022- Saturday (யாத்திராகமம் 25-27)

தேவன் மோசேக்கு உடன்படிக்கைப் பெட்டியை பண்ணுவதற்கு என்ன அளவுகளைக் கொடுத்தார்? (நீளம்/அகலம்/உயரம் - முழங்களில்


விடை: 2.5/1.5/1.5 (யாத் 25:10)

Day 28- Mar 6 2022- Sunday (யாத்திராகமம் 28-30)

அசைவாட்டப்படும் காணிக்கையில்ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவின் உடலின் எந்த பாகம்மோசேயின் பங்கு என கர்த்தர் கூறினார்?


விடை: மார்க்கண்டம் (யாத் 29:26)

Day 29- Mar 7 2022- Monday (யாத்திராகமம் 31-33)

கீழ்க்கண்டவற்றில் எந்த 4 காரியத்திற்காக மோசே கர்த்தரிடம் வேண்டி கொண்டார்? (பாளைத்திற்கு புறம்பேஉள்ள ஆசரிப்பு கூடாரத்தில் முகமுகமாய் கர்த்தர் மோசேயிடம் பேசின பிறகுபாளையத்திற்கு திரும்பி மோசேதேவனிடம் வேண்டுதல் செய்த போது)


விடை:
1) உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் (யாத் 33:18)
2) உம்முடைய வழியை எனக்கு அறிவியும் (யாத் 33:13)
3) உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்ல வேண்டும் (யாத் 33:15)
4) உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்க செய்யும் (33:13)

Day 30- Mar 8 2022- Tuesday (யாத்திராகமம் 34-36)

பரிசுத்த ஸ்தலத்துக்காக இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும்தங்கள் கைகளினால் நூற்றது யார்?


விடை: ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் (யாத் 35:25)

Day 31- Mar 9 2022- Wednesday (யாத்திராகமம் 37-40)

"கர்த்தருக்குப் பரிசுத்தம்என்று எதில் எழுதப்பட்டது?


விடை: கிரீடத்தில் (யாத் 39:30)

Day 32- Mar 10 2022- Thursday (மாற்கு 1-3)

எந்த இடத்தில் ‘சூம்பின கையையுடைய ஒரு மனுஷனை’ இயேசு கண்டார்?


விடை: ஜெப ஆலயத்தில் (மாற்கு 3:1)

Day 33- Mar 11 2022- Friday (மாற்கு 4-6)

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் எதினால் பலனற்றுப்போகிறார்கள்


விடை:
1) உலகக் கவலைகளினால்
2) மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகளினால்
3) ஐசுவரியத்தின் மயக்கத்தினால்
(மாற்கு 4:18-19)

Day 34- Mar 12 2022- Saturday (மாற்கு 7-9)

ஜனங்களுக்கு உணவளித்த பிறகு (7 அப்பம்சிறு மீன்கள், 4000 பேர் - அற்புதத்திற்கு பிறகுஇயேசுவும்அவருடைய சீஷர்களும் படவில் ஏறி எங்கே போனார்கள்?


விடை: தல்மனூத்தா (மாற்கு 8 : 10)

Day 35- Mar 13 2022- Sunday (மாற்கு 10-12)

இயேசுவிடம் “கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை” எதுவென்று கேட்டது யார்


விடை: வேதபாரகர் (மாற்கு 12 : 28)

Day 36- Mar 14 2022- Monday (மாற்கு 13-16)

ரோம போர்ச்சேவகர்களின் கூட்டத்தால், இயேசு எந்த இடத்தில் பரியாசம் செய்யப்பட்டார்?


விடை: தேசாதிபதியின் அரண்மனையில் 
(மாற்கு 15 : 16 )

Day 37- Mar 15 2022- Tuesday (லேவியராகமம் 1-3)

பலிபீடத்தின்மேல் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படக்கூடாத போஜன பலி காணிக்கை எது?


விடை: முதற்கனிகள் (லேவியராகமம் 2 : 12)

Day 38- Mar 16 2022- Wednesday
(லேவியராகமம் 4-6)

எந்த பலிக்காக சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்பட வேண்டும்


விடை: பாவநிவாரண பலி  (லேவியராகமம் 6 : 25-28)

Day 39- Mar 17 2022- Thursday
(லேவியராகமம் 7-9)

ஆரோனுடைய குமாரரில்சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்குஎந்த பாகம்பங்காகச் சேரும்?


விடை: வலது முன்னத்தொடை(லேவியராகமம் 7 : 33)

Day 40- Mar 18 2022- Friday
(லேவியராகமம் 10-12)

கீழக்கண்டவற்றில் புசிக்கத்தக்கவை எவை?


விடை: 

1)சிறகும்செதிலும் உள்ளவைகள்

2)விரிகுளம்புள்ள மிருகம்

3)வெட்டுக்கிளி ஜாதி 

(லேவியராகமம் 11 )


Day 41- Mar 19 2022- Saturday

(லேவியராகமம் 13-15)


கீழ்க்கண்ட வசனத்தின் கோடிட்ட இடங்களை நிரப்புக:                                      —————————— இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்; ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் ———————————, மற்றொன்றைச் ——————————————, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.


விடை: 

எட்டாம்நாளில்பாவநிவாரணபலியும்சர்வாங்கதகனபலியுமாக்கி (லேவியராகமம் 15 : 29-30)


Day 42- Mar 20 2022- Sunday

(லேவியராகமம் 16-18)

இஸ்ரவேல் புத்திரர்தங்களுடைய சகல பாவங்களுக்காகவும் எத்தனை நாளுக்கு ஒரு முறை பாவநிவிர்த்திசெய்ய வேண்டும் என தேவன் கட்டளையிட்டார்


விடை:  ஒரு வருஷத்திற்கு ஒரு முறை

(லேவியராகமம் 16 : 34)


Day 43- Mar 21 2022- Monday

(லேவியராகமம் 19-21)

சரியாதவறா

தேவனின் கட்டளையின்படிஉங்கள் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்ககூடாது


விடை:  சரி

(லேவியராகமம் 19 : 19)


Day 44- Mar 22 2022- Tuesday

(லேவியராகமம் 22-24)


கர்த்தருடைய சந்நிதியில் மேஜையில் வைக்கப்படக்கூடிய 12 அப்பத்தில் ஒவ்வொரு அப்பமும் மரக்காலில் பத்தில் எத்தனை பங்கு மாவினால் செய்யப்பட வேண்டும்? 


விடை:  இரண்டு பங்கு

(லேவியராகமம் 24 : 5)


Day 45- Mar 23 2022- Wednesday

(லேவியராகமம் 25-27)


இஸ்ரவேலர்கள் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டுஅவைகளின்படி செய்தால்அவர்கள் தங்கள்எதிரிகளில் எத்தனை பேர்எத்தனை பேரை துரத்துவார்கள் என தேவன் சொன்னார்


விடை:  பேர் 100 பேரை; 100 பேர் 10000 பேரை

(லேவியராகமம் 26 : 8)


Day 46- Mar 24 2022- Thursday

(லூக்கா 1-3)

Match the following:

Just send me the order of the numbers.

(For example 3,4,5,6,1,2,7)


சகரியாமெத்தூசலா (1)

மரியாள் - அபியா (2)

எலிசபெத்துஆசேர் (3)

சிமியோன்ஏலி (4)

அன்னாள்நாசரேத் (5)

யோசேப்புஎருசலேம் (6)

ஏனோக்குயூதேயா (7)


விடை:  2,5,7,6,3,4,1


சகரியாஅபியா (1:5) 

மரியாள் - நாசரேத் (1:26)

எலிசபெத்துயூதேயா (1:39)

சிமியோன்எருசலேம் (2:25)

அன்னாள்ஆசேர் (2:36)

யோசேப்பு-ஏலி (3:23)

ஏனோக்குமெத்தூசலா(3:37)


Day 47- Mar 25 2022- Friday

(லூக்கா 4-6)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

அல்லாமலும் —————- தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள்இருந்தார்கள்ஆயினும் ———— தேசத்தானாகிய ——————————-அல்லாமல் அவர்களில் வேறொருவனும்சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


விடை:  எலிசாசீரியாநாகமானே (லூக்கா 4 : 27)


Day 48- Mar 26 2022- Saturday

(லூக்கா 7-9)

யவீரு என்பவரின் 12 வயது குமாரத்தி மரித்து போனாள் என அவருக்கு செய்தி கொண்டு வந்தவர் யார்? (Type the answer or else Just give me the Bible Verse Number; For example Luke 11:15)


விடை: 

அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில்ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்துஅவனை நோக்கிஉம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள்போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.

 -லூக்கா 8 : 49


Day 49- Mar 27 2022- Sunday

(லூக்கா 10-12)

இயேசுவை மனுஷர் முன்பாக அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோஅவனை மனுஷகுமாரனும் யார் முன்பாகஅறிக்கைபண்ணுவார்?


விடை: 

தேவதூதர் (லூக்கா 12 : 8)

Day 50- Mar 28 2022- Monday

(லூக்கா 13-15)

ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமாஎன்று இயேசு யாரைப் பார்த்து கேட்டார்?


விடை: 

நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் 

(லூக்கா 14 : 3)


Day 51- Mar 29 2022- Tuesday

(லூக்கா 16-18)

ஒரு குருடன் “இயேசுவேதாவீதின் குமாரனேஎனக்கு இரங்கும்”, என்று கூப்பிட்ட போது இயேசு எந்தநகரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்?


விடை:  எரிகோ (லூக்கா 18 : 35)


Day 52- Mar 30 2022- Wednesday

(லூக்கா 19-21)

Match the following:

Just send me the order of the numbers.

(For example 3,4,5,6,1,2)


சகேயு - இரண்டு காசு (1)

கழுதைக்குட்டிஉயிர்த்தெழுதல் (2)

திராட்சைத்தோட்டம்இரண்டு பேர் (3)

ஏழு பேர்தேவனுடைய இராஜ்யம் (4)

விதவை - 3 ஊழியக்காரர்கள் (5)

அத்திமரம்காட்டத்திமரம் (6)


விடை:  6,3,5,2,1,4


சகேயு - காட்டத்திமரம் (19:2,4)

கழுதைக்குட்டிஇரண்டு பேர் (19:29-30)

திராட்சைத்தோட்டம்-3 ஊழியக்காரர்கள் (20:9-13)

ஏழு பேர்உயிர்த்தெழுதல்(20:33)

விதவை - இரண்டு காசு(21:2)

அத்திமரம்தேவனுடைய இராஜ்யம் (21:29-31)


Day 53- Mar 31 2022- Thursday

(லூக்கா 22-24)

அரிமத்தியனாகிய யோசேப்பு ஒரு


விடை:  ஆலோசனைக்காரன் (லூக்கா 23 : 50)


Day 54- Apr 1 2022- Friday

(யோவான் 1-3)

கீழ்க்கண்ட வசனங்களை நிறைவு செய்க:

Type the answers or mention the Bible verse alone


1)அவர் தமக்குச் —————————- வந்தார்அவருக்குச் ————————- அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.


2)——————————- அவர் அறிந்திருந்தபடியால், ——————- குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.  


3)———————— உலகத்திலே வந்திருந்தும் —————————— பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால்அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.


விடை:  

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

 -யோவான் 1 : 11


மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால்மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.  

 -யோவான் 2 : 25


ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால்அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

 -யோவான் 3 : 19


Day 55- Apr 2 2022- Saturday

(யோவான் 4-6)

இயேசு செய்த இரண்டாம் அற்புதம் எது?


விடை:   

கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனின் வியாதியை குணப்படுத்தினார் 

(யோவான் 4 : 46-54)


Day 56- Apr 3 2022- Sunday

(யோவான் 7-9)

யார் மரணத்தைக் காண்பதில்லை என்று இயேசு சொன்னார்?


விடை: 

வார்த்தையை கைக்கொள்ளுகிறவர்கள்

(யோவான் 8 : 51)


Day 57- Apr 4 2022- Monday

(யோவான் 10-12)

சரியாதவறா

நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும்” என்று பஸ்கா பண்டிகை வந்த போது யூதர்கள்இயேசுவைச் சூழ்ந்துகொண்டு கேட்டனர்.


விடை: 

தவறு ; 

தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை வந்த போது

(யோவான் 10 : 22-24)


Day 57- Apr 5 2022- Tuesday

(யோவான் 13-15)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

நீங்கள் —————— தெரிந்துகொள்ளவில்லைநான் ————————- தெரிந்துகொண்டேன்நீங்கள் என்நாமத்தினாலே ———————- கேட்டுகொள்ளுவது எதுவோஅதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாகநீங்கள் போய்க் ———————————, உங்கள் ———————————, நான் உங்களை ஏற்படுத்தினேன்.


விடை:  

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லைநான் உங்களைத் தெரிந்துகொண்டேன்நீங்கள் என்நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோஅதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாகநீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும்உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும்நான் உங்களைஏற்படுத்தினேன்.

 -யோவான் 15 : 16


Day 58- Apr 6 2022- Wednesday

(யோவான் 16-18)

என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள்உம்முடையவைகள் என்னுடையவைகள்அவர்களில் நான்மகிமைப்பட்டிருக்கிறேன்” இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்கள் யார்

(Type the answer or mention the verse)


விடை:  

நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள்அவர்களை எனக்குத் தந்தீர்அவர்கள் உம்முடைய வசனத்தைக்கைக்கொண்டிருக்கிறார்கள்.

 -யோவான் 17 : 6


என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள்உம்முடையவைகள் என்னுடையவைகள்அவர்களில் நான்மகிமைப்பட்டிருக்கிறேன்.

 -யோவான் 17 : 10


Day 59- Apr 7 2022- Thursday

(யோவான் 19-21)

சீமோன் பேதுருவின் வலையில் எத்தனை மீன்கள் அகப்பட்டு இருந்தன? (இயேசுவின் அற்புதம்)


விடை:   

சீமோன்பேதுரு படவில் ஏறிநூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில்இழுத்தான்இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

 -யோவான் 21 : 11


Day 60- Apr 8 2022- Friday

(அப்போஸ்தலர் 1-3)

கீழ்க்கண்டவற்றில் எந்த 3 நாட்டிலிருந்து பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமிற்கு வந்திருந்தார்கள்?


விடை:  ஏலாமீத்தர், பிரிகியா, லீபியா


பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

 -அப்போஸ்தலர் 2 : 9

பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

 -அப்போஸ்தலர் 2 : 10


Day 61- Apr 9 2022- Saturday

(அப்போஸ்தலர் 4-6)

ஆறுதலின் மகன் யார்அவர் எந்த கோத்திரத்தார்?


விடை:   

சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும்மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,

 -அப்போஸ்தலர் 4 : 36


Day 62- Apr 10 2022- Sunday

(அப்போஸ்தலர் 7-9)

தொற்காள் மரணமடைந்த போதுபேதுருவை அழைத்து வர எந்த ஊருக்கு ஆள் அனுப்பினார்கள்?


விடை:   

யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலேபேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள்கேள்விப்பட்டுதாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரைஅவனிடத்திற்கு அனுப்பினார்கள்.

 -அப்போஸ்தலர் 9 : 38


Day 63- Apr 11 2022- Monday

(அப்போஸ்தலர் 10-12)

பேதுரு ஆவியானவரின் கட்டளைப்படி யோப்பா பட்டணத்திலிருந்து செசரியாவுக்கு போய்அங்கு உள்ள ஒருமனிதனின் வீட்டிற்குள் பிரவேசித்த போது எத்தனை பேர் அவரோடு இருந்தார்கள்


விடை:  9

3+6=9

உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர்(3) நான் இருந்த வீட்டுக்குமுன்னேவந்துநின்றார்கள்.

 -அப்போஸ்தலர் 11 : 11 


நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்சகோதரராகிய இந்த ஆறுபேரும்(6) என்னோடேகூட வந்தார்கள்அந்த மனுஷனுடைய வீட்டுக்குள்பிரவேசித்தோம்.

 -அப்போஸ்தலர் 11 : 12


Acts 11:12


[12] And the Spirit told me to go with them, making no distinction. These six brothers also accompanied me, and we entered the man’s house.


(இது ஒரு Tricky Question என்பதால், உங்களுடைய முயற்சிக்காக, இந்த கேள்விக்கு 6 என பதிலளித்தவர்களையும் சரியான பதிவளித்தவர்களாக எடுத்துக்கொள்கிறேன். நன்றி)


Day 64- Apr 12 2022- Tuesday

(அப்போஸ்தலர் 13-15)


மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியைவிசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடிஅவர்களோடு எதிர்த்துநின்றான்” 

யார் அந்த அதிபதி?


விடை:  

அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

 -அப்போஸ்தலர் 13 : 7


Day 65- Apr 13 2022- Wednesday

(அப்போஸ்தலர் 16-18)


பெரோயாவில் பவுலைச் சமுத்திரவழியாய் அனுப்பிவிட்டுஅங்கேயே தங்கி விட்ட இரண்டு மனிதர்கள் யார்?


விடை:   

உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள்சீலாவும் தீமோத்தேயும் அங்கேதங்கியிருந்தார்கள்.

 -அப்போஸ்தலர் 17 : 14


Day 66- Apr 14 2022- Thursday

(அப்போஸ்தலர் 19-21)


பவுல் எந்த பட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தான்? (லூக்கா மற்றும் மற்ற சீஷர்கள்அவரை ஏற்றிக்கொள்ளும்படி அந்த இடத்திற்கு கப்பலில் முன்பே சென்றிருந்தனர்)


விடை:   

பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால்அவன் திட்டம்பண்ணியிருந்தபடியேநாங்கள் கப்பல் ஏறிஅந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாகஅங்கே போயிருந்தோம்.

 -அப்போஸ்தலர் 20 : 13


Day 67- Apr 15 2022- Friday

(அப்போஸ்தலர் 22-24)

Fill in the Blanks: (Give the answers or Give the verse number)

இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த —————— இவைகளைக் கேட்டபொழுதுசேனாதிபதியாகிய —————- வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி; ————— காவல்பண்ணவும்கண்டிப்பில்லாமல் நடத்தவும்அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக்கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் —————-—————————- கட்டளையிட்டுஅவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.


விடை:    

இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுதுசேனாதிபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி;

 -அப்போஸ்தலர் 24 : 22

பவுலைக் காவல்பண்ணவும்கண்டிப்பில்லாமல் நடத்தவும்அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக்கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்குஅதிபதியானவனுக்குக் கட்டளையிட்டுஅவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.

 -அப்போஸ்தலர் 24 : 23


Day 68- Apr 16 2022- Saturday

(அப்போஸ்தலர் 25-26)

“கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தெழுவார்” என ‘யார்’ முன்னுரைத்ததை நான் சொல்லுகிறேன் என பவுல் அகரிப்பா ராஜாவிடம் குறிப்பிடுகிறார்? 

விடை:     
தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
 -அப்போஸ்தலர் 26 : 23

Day 69- Apr 17 2022- Sunday 

(அப்போஸ்தலர் 27-28)


யூரோக்கிலிதோன் என்பது ஒரு


விடை:      

கடுங்காற்றின் பெயர்


கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று.

 -அப்போஸ்தலர் 27 : 14


Day 70- Apr 18 2022- Monday 

(ரோமர் 1-3)

யாருக்கு தேவன் நித்தியஜீவனை அளிப்பார் என பவுல் குறிப்பிடுகிறார்?


விடை:       

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்துமகிமையையும் கனத்தையும் அழியாமையையும்தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

 -ரோமர் 2 : 7


Day 71- Apr 19 2022- Tuesday 

(ரோமர் 4-6)

Match the following (பொருத்துக):

Just send me the order of the numbers.

(For example 3,4,5,6,1,2)


ஆபிரகாமின் நீதி - மரணம் (1)

கிரியை செய்கிறவனின் கூலி - அவயங்கள் (2)

மீறுதலின் பலன் - கடன்(3)

பாவம் என்றால் என்ன? - நித்திய ஜீவன் (4)

நீதிக்குரிய ஆயுதங்கள் - விசுவாசம் (5)

தேவனுடைய கிருபை வரம் - நியாயப்பிரமாணம் (6)


விடை: 5,3,1,6,2,4


ஆபிரகாமின் நீதி - விசுவாசம் (ரோமர் 4:9)

கிரியை செய்கிறவனின் கூலி - கடன் (4:4)

மீறுதலின் பலன் - மரணம் (5:15)

பாவம் என்றால் என்ன? - நியாயப்பிரமாணம் (5:13)

நீதிக்குரிய ஆயுதங்கள் - அவயங்கள் (6:13)

தேவனுடைய கிருபை வரம் - நித்திய ஜீவன் (6:23)


Day 72- Apr 20 2022- Wednesday 

(ரோமர் 7-9)

1) பாவம் எப்போது உயிர்கொண்டது

2) தேவனுடைய புத்திரர் யார்?

3) நாம் எதினால் நீதிப்பிரமாணத்தை தேட வேண்டும்?


விடை: 

1) முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்கற்பனை வந்தபோதுபாவம் உயிர்கொண்டதுநான் மரித்தவனானேன்.

 -ரோமர் 7 : 9


2) மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோஅவர்கள் தேவனுடையபுத்திரராயிருக்கிறார்கள்.

 -ரோமர் 8 : 14


3) என்னத்தினாலென்றால்அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல்நியாயப்பிரமாணத்தின்கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லைஇடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

 -ரோமர் 9 : 32


Day 73- Apr 21 2022- Thursday 

(ரோமர் 10-12)

1) நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருப்பது யார்
2) இந்த அதிகாரத்தில் காட்டொலிவ மரம் என பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
3) உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை என்ன செய்ய வேண்டும்?

விடை: 
1) விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

 -ரோமர் 10 : 4


2) சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்ககாட்டொலிவமரமாகிய நீ (புறஜாதியார்) அவைகள் இருந்த இடத்தில்ஒட்டவைக்கப்பட்டுஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,

 -ரோமர் 11 : 17 (ஒலிவ மரம் - இஸ்ரவேலர்கள்; காட்டொலிவ மரம் - புறஜாதியார்)


3) உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

 -ரோமர் 12 : 14


Day 74- Apr 22 2022- Friday 

(ரோமர் 13-14)

Fill in the Blanks:

எப்படியென்றால்விபசாரம் செய்யாதிருப்பாயாககொலை செய்யாதிருப்பாயாககளவு செய்யாதிருப்பாயாகபொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாகஇச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும்வேறே எந்தக்கற்பனையும், ————————————————-என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.


விடை: 

எப்படியென்றால்விபசாரம் செய்யாதிருப்பாயாககொலை செய்யாதிருப்பாயாககளவு செய்யாதிருப்பாயாகபொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாகஇச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும்வேறே எந்தக்கற்பனையும்உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரேவார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

 -ரோமர் 13 : 9


Day 75- Apr 23 2022- Saturday  

(ரோமர் 15-16)

புறஜாதியாரை எதினால் கீழ்ப்படியப்பண்ணும்படிக்குகிறிஸ்துவானவர் தன்னை கொண்டு நடப்பித்தார் எனபவுல் குறிப்பிடுகிறார்


விடை:  

புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்குஅற்புத அடையாளங்களின்பலத்தினாலும்தேவ ஆவியின் பலத்தினாலும்கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச்சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை.

 -ரோமர் 15 : 18


Day 76- Apr 24 2022- Sunday  

(1 கொரிந்தியர் 1-3)

1) யாரை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்?
2) தேவன் யாருக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லைகாது கேட்கவுமில்லைஅவைகள்மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை?
3) தேவனுடைய மாளிகை யார்

விடை:  
1) ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

 -கொரி 1 : 27


2) எழுதியிருக்கிறபடிதேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவுமில்லைகாது கேட்கவுமில்லைஅவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

 -கொரி 2 : 9


3) நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்நீங்கள்(விசுவாசிகள்) தேவனுடைய பண்ணையும்தேவனுடையமாளிகையுமாயிருக்கிறீர்கள்.

 -கொரி 3 : 9


Day 77- Apr 25 2022- Monday  

(1 கொரிந்தியர் 4-6)

கிறிஸ்துவின் அவயவங்கள் எது?

விடை:  
உங்கள்(நம்) சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
 -1 கொரி 6 : 15

Day 78- Apr 26 2022- Tuesday  

(1 கொரிந்தியர் 7-9)

1) பவுல் விவாகத்தை குறித்து நமக்கு எப்படி எடுத்துரைக்கிறார்?
2) அன்பு எதை உண்டாக்கும்?
3) நாம் எதைப் பெறும்படிக்கு இச்சையடக்கமாக இருக்க வேண்டும்?

விடை:  
1) இதை நான் கட்டளையாகச் சொல்லாமல்யோசனையாகச் சொல்லுகிறேன்.

 -கொரி 7 : 6


2) விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில்நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்றுநமக்குத் தெரியுமேஅறிவு இறுமாப்பை உண்டாக்கும்அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.

 -கொரி 8 : 1


3) பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்அவர்கள் அழிவுள்ளகிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள்நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச்செய்கிறோம்.

 -கொரி 9 : 25


Day 79- Apr 27 2022- Wednesday  

(1 கொரிந்தியர் 10-12)

1) மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் ————————- உங்களுக்கு நேரிடவில்லைதேவன்உண்மையுள்ளவராயிருக்கிறார்உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர்இடங்கொடாமல்சோதனையைத் ——————————, சோதனையோடுகூட அதற்குத் ——————————— போக்கையும் உண்டாக்குவார்.

2) ஒவ்வொரு புருஷனுக்கும் ——————- தலையாயிருக்கிறாரென்றும்ஸ்திரீக்குப் ——————— தலையாயிருக்கிறானென்றும்கிறிஸ்துவுக்கு ———————-தலையாயிருக்கிறாரென்றும்நீங்கள்அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

3) வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ——————- ஒருவரேஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, —————- ஒருவரேகிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டுஎல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும்நடப்பிக்கிற —————— ஒருவரே.

விடை:  
1) மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லைதேவன்உண்மையுள்ளவராயிருக்கிறார்உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர்இடங்கொடாமல்சோதனையைத் தாங்கத்தக்கதாகசோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

 -கொரி 10 : 13


2) ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும்ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும் கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும்நீங்கள்அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

 -கொரி 11 : 3


3) வரங்களில் வித்தியாசங்கள் உண்டுஆவியானவர் ஒருவரேஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டுகர்த்தர் ஒருவரேகிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டுஎல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே

-கொரி 12:4-6


Day 80- Apr 28 2022- Thursday  

(1 கொரிந்தியர் 13-14)


1) விசுவாசம்நம்பிக்கைஅன்பு இந்த மூன்றிலும் பெரியது எது?

2) நாம் எதில் குழந்தைகளாக இருக்க வேண்டும்?


விடை:  

1) இப்பொழுது விசுவாசம்நம்பிக்கைஅன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறதுஇவைகளில் அன்பே பெரியது.  

 -கொரி 13 : 13


2) சகோதரரேநீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்துர்க்குணத்திலே குழந்தைகளாயும்புத்தியிலோதேறினவர்களாயுமிருங்கள்.

 -கொரி 14 : 20


Day 81- Apr 29 2022- Friday  

(1 கொரிந்தியர் 15-16)


Match the following (பொருத்துக):

Just send me the order of the numbers.

(For example 7,3,4,5,6,1,2)


கிறிஸ்து எழுந்திராவிட்டால் - மரணம் (1)

கிறிஸ்துவுக்குள் - விசுவாசம் வீணாயிருக்கும் (2)

பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு - ஆவிக்குரிய சரீரம் (3)

விதை செத்தால் - உயிர்ப்பிக்கப்படுவார்கள் (4)

பிந்தினது - உயிர்க்கும் (5)

மரணத்தின் கூர் - நிலைத்திருங்கள் (6)

விசுவாசத்தில் - பாவம் (7)


விடை: 2,4,1,5,3,7,6


1)கிறிஸ்து எழுந்திராவிட்டால் - விசுவாசம் வீணாயிருக்கும் (1 கொரி 15:17)

2)கிறிஸ்துவுக்குள் - உயிர்ப்பிக்கப்படுவார்கள் ( 1 கொரி 15:22)

3)பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு - மரணம் (15:26)

4)விதை செத்தால் - உயிர்க்கும் (15:36)

5)பிந்தினது - ஆவிக்குரிய சரீரம் (15:46)

6)மரணத்தின் கூர் - பாவம் (15:56)

7)விசுவாசத்தில் - நிலைத்திருங்கள் (16:13)


Day 82- Apr 30 2022- Saturday   

(2 கொரிந்தியர் 1-3)

1) எதினால் இரட்சிப்பு பலன் செய்கிறது

2) கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே எந்த வாசனையாகவும்இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே எந்தவாசனையாகவும்அப்போஸ்தலர்கள் இருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார்?

3) எந்த ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?


விடை: 

1) ஆதலால்நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்நாங்கள்ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்நாங்கள் பாடுபடுகிறதுபோலநீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.

 -கொரி 1 : 6


2) கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும்இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்இவைகளைநடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?

 -கொரி 2 : 16


3) ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால்நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிகமகிமையுள்ளதாயிருக்குமே.

 -கொரி 3 : 9


Day 83- May 1 2022- Sunday   

(2 கொரிந்தியர் 4-6)

1) நாளுக்குநாள் புதிதாக்கப்படுவது எது?
2) இயேசு அப்போஸ்தலர்களிடம் எந்த ஊழியத்தை ஒப்புக்கொடுத்தார் என பவுல் இந்த அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்?
3) நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேதுஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” இந்த வசனத்தில் அநீதிஇருள் என்பது யாது?

விடை: 

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லைஎங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும்உள்ளானமனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

 -கொரி 4 : 16


இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறதுஅவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடேஒப்புரவாக்கிஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

 -கொரி 5 : 18


அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாகநீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேதுஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

 -கொரி 6 : 14


Day 84- May 2 2022- Monday   

(2 கொரிந்தியர் 7-9)

1) தேவனுக்கேற்ற துக்கம் எதை உண்டாக்குகிறது?
2) நாம் விசுவாசத்திலும்போதிப்பிலும்பெருகியிருக்கிறதுபோல வேறு எதிலும் பெருகி இருக்க வேண்டும்?
3) எதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நாம் சம்பூரணமுள்ளவர்களாக இருக்க வேண்டும்

விடை: 
1) தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவானமனந்திரும்புதலை உண்டாக்குகிறதுலெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

 -கொரி 7 : 10


2) அல்லாமலும்விசுவாசத்திலும்போதிப்பிலும்அறிவிலும்எல்லாவித ஜாக்கிரதையிலும்எங்கள்மேலுள்ளஉங்கள் அன்பிலும்மற்றெல்லாக் காரியங்களிலும்நீங்கள் பெருகியிருக்கிறதுபோலஇந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

 -கொரி 8 : 7


3) தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள்எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.

 -கொரி 9 : 11


Day 85- May 3 2022- Tuesday   

(2 கொரிந்தியர் 10-11)

1) அப்போஸ்தலர்களுடைய போராயுதங்கள் எப்படி இருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார்?
2) சாத்தானுடைய ஊழியக்காரர் எந்த வேஷத்தை தரித்துக் கொள்கிறார்கள் என பவுல் இந்த அதிகாரத்தில்குறிப்பிடுகிறார்

விடை: 

1) எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல்அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது

 -கொரி 10 : 4 


2) ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அதுஆச்சரியமல்லவேஅவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

 -கொரி 11 : 15


பெரும்பாலானோர் ஒளியின் தூதன் என பதிலளித்துள்ளனர். அது தவறு. 

[அது ஆச்சரியமல்லசாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

 -2 கொரி 11 : 14

சாத்தான் - ஒளியின் தூதன் வேஷத்தையும்

அவனுடைய ஊழியக்காரர்கள்நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தையும் தரித்துக்கொள்கிறார்கள்]


Day 86- May 4 2022- Wednesday   

(2 கொரிந்தியர் 12-13)


1)வசனத்தை நிறைவு செய்க:

அதற்கு அவர்என் கிருபை உனக்குப்போதும்பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்ஆகையால், ………….”


2)வசனத்தை நிறைவு செய்க:

ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும்தேவனுடைய வல்லமையினால்பிழைத்திருக்கிறார்அப்படி…….”


விடை: 

அதற்கு அவர்என் கிருபை உனக்குப்போதும்பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்ஆகையால்கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படிஎன் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும்சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

 -கொரி 12 : 9


ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும்தேவனுடைய வல்லமையினால்பிழைத்திருக்கிறார்அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும்உங்களிடமாய் விளங்கியதேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.

 -கொரி 13 : 4


Day 87- May 5 2022- Thursday   

(கலாத்தியர் 1-2)

1) பவுலால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் யாரை பிரியப்படுத்துவதாக இருந்தது?
2) நாம் எதினால் நீதிமான்களாக்கப்படுகிறோம்?

விடை: 
1) தேவனை.
இப்பொழுது நான் மனுஷரையாதேவனையாயாரை நாடிப் போதிக்கிறேன்மனுஷரையாபிரியப்படுத்தப்பார்க்கிறேன்நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின்ஊழியக்காரனல்லவே.

 -கலாத்தியர் 1 : 10

மேலும்சகோதரரேஎன்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின் படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

 -கலாத்தியர் 1 : 11


2) புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல்சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும்விசுவாசத்தினாலேயன்றிநியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன்நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்துநியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்லகிறிஸ்துவைப்பற்றும்விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

 -கலாத்தியர் 2 : 15


Day 88- May 6 2022- Friday   

(கலாத்தியர் 3-4)


Match the following (பொருத்துக):

Just send me the order of the numbers.

(For example 7,3,4,5,6,1,2)


விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ - கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள் (1)


வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி - சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் (2)


நியாயப்பிரமாணம் - கிறிஸ்துவின் சந்ததி (3)


கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள்அரபிதேசத்து சீனாய் மலை (4)


நீ அடிமையாயிராமல் - ஆபிரகாமின் பிள்ளைகள் (5)


ஈசாக்கு - கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தி (6)


ஆகார் - புத்திரனாயிருக்கிறாய் (7)


விடை: 5,3,6,1,7,2,4


விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ - ஆபிரகாமின் பிள்ளைகள் - (கலாத் 3:7)

வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி - கிறிஸ்துவின் சந்ததி (3:16,19)

நியாயப்பிரமாணம் - கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தி (3:24)

கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள்கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள் (3:27)

நீ அடிமையாயிராமல் - புத்திரனாயிருக்கிறாய்(4:7)

ஈசாக்கு - சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் (4:23,28)

ஆகார் - அரபிதேசத்து சீனாய் மலை (4:25)


Day 89- May 7 2022- Saturday   

(கலாத்தியர் 5-6)

1) கீழ்க்கண்டவற்றில் மாம்சத்தின் கரியைகள் எவை? (select 3 options) 

விக்கிரக ஆராதனை

அன்பு

பொறாமை

இச்சையடக்கம்

சாந்தம்

சண்டை


2) தான் இயேசுவினுடைய அச்சடையாளங்களை எங்கு தரித்து இருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார்?


விடை: 

1) விக்கிரக ஆராதனை, பொறாமை, சண்டை (கலாத்தியர் 5:19-21)


2) இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாககர்த்தராகிய இயேசுவினுடையஅச்சடையாளங்களை நான் என்சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.

 -கலாத்தியர் 6 : 17


Day 90- May 8 2022- Sunday   

(எபேசியர் 1-2)

1) நீங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டுவிசுவாசிகளானபோது யாரால் முத்திரைபோடப்பட்டீர்கள்?
2) அஸ்திபாரம் யார்? ; மூலைக்கல் யார்? ; தேவனுடைய வாசஸ்தலம் யார்?

விடை: 
1) நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டுவிசுவாசிகளானபோதுவாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

 -எபேசியர் 1 : 13


2) அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

 -எபேசியர் 2 : 20

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.  

 -எபேசியர் 2 : 22


Day 91- May 9 2022- Monday   

(எபேசியர் 3-4)

1) எதற்காக நமக்கு கிருபை அளிக்கப்பட்டு இருக்கிறது?
2) நாம் கெட்டுப்போகிற பழைய மனுஷனை களைந்துபோட்டு் எதை தரித்துக்கொள்ள வேண்டும்

விடை: 
1) பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
 -எபேசியர் 3 : 8
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
 -எபேசியர் 3 : 11

2) அந்தப்படிமுந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனைநீங்கள் களைந்துபோட்டு,

 -எபேசியர் 4 : 22

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி

 -எபேசியர் 4 : 23

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத்தரித்துக்கொள்ளுங்கள்.

 -எபேசியர் 4 : 24

நீங்கள் முதல் கேள்விக்கு எபேசியர் 3:8 அல்லது 3:11 இதில் ஏதேனும் ஒரு வசனத்தை குறிப்பிட்டிருந்தாலும்அது சரியான பதில் தான்மேலும் அந்த வசனத்தில் பவுல் “இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்ஆனால் கேள்வியில் “நமக்குஎன்று கேட்கப்பட்டிருக்கும்பவுலுக்கு அந்த கிருபை எதற்கு அளிக்கப்பட்டதோஅதே நோக்கத்திற்காக தான் நமக்கும் அந்த கிருபை அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்திகொள்ள விரும்புகிறேன்நன்றி.


Day 92- May 10 2022- Tuesday   

(எபேசியர் 5-6)


Match the following (பொருத்துக):

Just send me the order of the numbers.

(For example 7,10,3,4,5,8,6,1,9,2)


தகும் - பாதரட்சை (1)

தகாதவை - கச்சை (2)

சபைக்கு தலை - ஸ்தோத்திரம் செய்தல் (3)

மனைவிக்கு தலை - கேடகம் (4)

சத்தியம் - ஆவியின் பட்டயம் (5)

நீதி - கிறிஸ்து (6)

ஆயத்தம் - தலைச்சீரா (7)

விசுவாசம் - புத்தியீனமான பேச்சு (8)

இரட்சணியம் - புருஷன் (9)

தேவ வசனம் - மார்க்கவசம் (10)


விடை:  3,8,6,9,2,10,1,4,7,5


தகும் -  ஸ்தோத்திரம் செய்தல் (எபேசியர் 5:4)

தகாதவை - புத்தியீனமான பேச்சு (5:4)

சபைக்கு தலை - கிறிஸ்து (5:23)

மனைவிக்கு தலை - புருஷன் (5:23)

சத்தியம் - கச்சை(எபேசியர் 6:14)

நீதி - மார்க்கவசம் (6:14)

ஆயத்தம் - பாதரட்சை (6:15)

விசுவாசம் - கேடகம் (6:16)

இரட்சணியம் - தலைச்சீரா (6:17)

தேவ வசனம் - ஆவியின் பட்டயம் (6:17)


Day 93- May 11 2022- Wednesday   

(யோசுவா 1-2)

1) “பலங்கொண்டு திடமனதாயிரு” என எத்தனை தரம் முதல் அதிகாரத்தில் மாத்திரம் வருகிறது

2) இஸ்ரவேலர்கள் எரிகோவைத் தாக்கும் நாளில் ராகாபின் குடும்பத்தின் உயிரைக் காப்பாற்ற என்ன முன்எச்சரிக்கையை அந்த 2 வேவுக்காரர்கள்அவளுக்கு கொடுத்தார்கள்


விடை:  

1) 4


பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

 -யோசுவா 1 : 6

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

 -யோசுவா 1 : 7

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

 -யோசுவா 1 : 9

நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய் மாத்திரம் இரும் என்றார்கள்.  

 -யோசுவா 1 : 18

2) 3rd option - ராகாப் தன் குடும்பத்தை தன் வீட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கிஇதோநாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போதுநீ இந்தச் சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டிஉன் தகப்பனையும் உன் தாயையும் உன்சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.

 -யோசுவா 2 : 17


பெரும்பாலானோர் 4th option  ஆகிய “ ராகாப் தன் குடும்பத்தை காப்பாற்ற இளநீல நூல் கயிற்றை ஜன்னலில் கட்டி வைக்க வேண்டும்” select செய்துள்ளனர். அது தவறு. அது “இளநீல நூல்” என்று options ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வசனத்தில் “சிவப்பு நூல்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 


Day 94- May 12 2022- Thursday   

(யோசுவா 3-4)

1) யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நின்றது எப்போது?
2) கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரையும்யோர்தானின் தண்ணீரையும் வற்றிப் போகப் பண்ணினது ஏன்

விடை:  

1) சம்பவிப்பது என்னவென்றால்சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின்உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின்தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

 -யோசுவா 3 : 13


2) பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும்நீங்கள் சகல நாளும் உங்கள்தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,

 -யோசுவா 4 : 23


Day 95- May 13 2022- Friday   

(யோசுவா 5-6)

1) யோசுவா எங்கே நின்று கொண்டிருக்கும் போது கர்த்தருடைய சேனையின் அதிபதியை கண்டான்?

2) கீழ்க்கண்டவற்றில் எரிகோவை சுற்றி வரும் போது எந்த வரிசையில் - order போக வேண்டும் என கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டார்


அதாவது முதலில் யார்இரண்டாவது யார்? Etc.. இங்கு நான் order மாற்றிமாற்றி கொடுத்துள்ளேன்யோசுவா 6 ம் அதிகாரத்தை படித்து சரியான order  பதிலாக பதிவிடவும்


(Just send me the order of the numbers)


பிண்தண்டு (Guard) (1)


ஏழு எக்காளங்களை பிடித்துக் கொண்டு போகிற ஆசாரியர்கள் (2)


ஜனங்கள் (3)


யுத்தசன்னத்தரானவர்கள் (4)


உடன்படிக்கைப் பெட்டியை தூக்கிக் கொண்டு போகிற ஆசாரியர்கள் (5)


விடை:  

1) எரிகோவின் வெளி (அருகே)

பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போதுஇதோஒருவர்அவனுக்கு எதிரே நின்றார்உருவின பட்டயம் அவர் கையில் இருந்ததுயோசுவா அவரிடத்தில் போய்நீர்எங்களைச் சேர்ந்தவரோஎங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.

 -யோசுவா 5 : 13


2) 4,2,5,1,3


1) யுத்தசன்னத்தரானவர்கள்

2)ஏழு எக்காளங்களை பிடித்துக் கொண்டு போகிற ஆசாரியர்கள்

3) உடன்படிக்கைப் பெட்டியை தூக்கிக் கொண்டு போகிற ஆசாரியர்கள்

4)பிண்தண்டு (guard)

5)ஜனங்கள்


ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.

 -யோசுவா 6 : 4

அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் (2) கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;

 -யோசுவா 6 : 6

ஜனங்களை (5) நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள்(1) கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான்.

 -யோசுவா 6 : 7

யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (3) அவர்களுக்குப் பின் சென்றது.

 -யோசுவா 6 : 8

எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு (Guard) (4) எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின் சென்றது.

 -யோசுவா 6 : 9


Day 96- May 14 2022- Saturday   

(யோசுவா 7-8)

1) கர்மீயின் மகன் ஆகான் எவைகளை கண்டுஅவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டான்? (Select 3 options)

2) யோசுவா எந்த பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒருபலிபீடத்தைக் கட்டினான்?


விடை:  

1) கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும்இருநூறு வெள்ளிச்சேக்கலையும்ஐம்பதுசேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டுஅவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்இதோஅவைகள் என்கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறதுவெள்ளி அதின் அடியிலிருக்கிறதுஎன்றான்.

 -யோசுவா 7 : 21


2) அப்பொழுது யோசுவாகர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும்மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும்ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின்தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

 -யோசுவா 8 : 30


Day 97- May 15 2022- Sunday   

(யோசுவா 9-10)

1) “நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள்எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள்” என்று யோசுவாவிடம்சொன்னது யார்
2) எது வரைக்கும் ‘சூரியன்’ கிபியோன் மேலும், ‘சந்திரன்’ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் நடுவானத்தில்தரித்து நின்றது?

விடை:
1) அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கிநீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றார்கள்.

 -யோசுவா 9 : 7

2) அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்ததுசந்திரனும்நின்றதுஇது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையாஅப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல்ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

 -யோசுவா 10 : 13


Day 98- May 16 2022- Monday   

(யோசுவா 11-12)

1) இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் —————— ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை
2) யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் எத்தனை பேர்?

விடை:
1) இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ஏனாக்கியர் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லைகாசாவிலும் காத்திலும்அஸ்தோத்திலும் மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.

 -யோசுவா 11 : 22


2) திர்சாவின் ராஜா ஒன்றுஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.  

 -யோசுவா 12 : 24


Day 99- May 17 2022- Tuesday   

(யோசுவா 13-14)

1) யோசுவா எத்தனை கோத்திரங்களுக்கு சுதந்தரத்தை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என கர்த்தர் கூறினார்?

2) காலேப்

1)காலேப் யாருடைய குமாரன்?

2) காலேப் எந்த ஜாதி?

3)தேசத்தை வேவுபார்க்க சென்றபோது காலேபின் வயது?

4)இப்போது யோசுவா தேசத்தை பிரித்து கொடுக்கும் பொழுது காலேபின் வயது?

5)காலேபுக்கு எந்த இடம் சுதந்தரமாக கிடைத்தது


விடை:
1) 9 and half

ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும்மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப்பங்கிடு என்றார்.

 -யோசுவா 13 : 7


2) காலேப்

1. எப்புன்னே (யோசுவா 14:6)

2. கேனாசியன் (14:6)

3. 40 (14:7)

4. 85 (14:10)

5. எபிரோன் (14:14)


Few mistakes on yesterday’s question. I kindly apologize for it


1) காலேபின் மனைவி அக்சாள் தன் தகப்பன் ஒத்னியேலிடம் எந்த நிலத்தை தனக்கு தர வேண்டும் என்றாள்? என்று நேற்றைய கேள்வியில கேட்கப்பட்டிருந்தது. இது தவறு

ஒத்னியேலின் மனைவி அக்சாள் தன் தகப்பன் காலேபிடம் எந்த நிலத்தை தனக்கு தர வேண்டும் என்றாள்இது தான் சரியான கேள்வி.

ஆனாலும் இந்த கேள்விக்கு அனைவரும் சரியாகவே பதிலளித்துள்ளீர்கள். 


2) நேற்றைய முந்தைய நாள் கேள்விக்கான பதிலில் சிறு குழப்பம். 2nd question 1st sub question காலேப் யாருடைய குமாரன்? என்பதற்கான பதில் நூண் என நேற்றைய பதிவில் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தவறு. சரியான பதில் எப்புன்னே.


Day 100- May 18 2022- Wednesday    

(யோசுவா 15-16)

1) ஒத்னியேலின் மனைவி அக்சாள் தன் தகப்பன் காலேபிடம் எந்த நிலத்தை தனக்கு தர வேண்டும் என்றாள்?

2) எப்பிராயீமர் யாரை துரத்திவிடவில்லை?


விடை:

1) அப்பொழுது அவள்எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும்கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

 -யோசுவா 15 : 19


2) அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லைஆகையால் கானானியர்இந்நாள்மட்டும்இருக்கிறபடிஎப்பிராயீமருக்குள்ளே குடியிருந்துபகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.  

 -யோசுவா 16 : 10


Day 101- May 19 2022- Thursday    

(யோசுவா 17-18)

Match the following (பொருத்துக):

Just send me the order of the numbers.

(For example 7,10,3,4,5,8,6,1,9,2)

மனாசேயின் மூத்த குமாரன் - மோசே கொடுத்த சுதந்தரம் (1)

செலொப்பியாத்து - சீலோ (2)

பத்து பங்கு - கர்த்தருடைய ஆசாரியபட்டம் (3)

எல்லையோடிருக்கிற தப்புவா - காட்டு தேசம் (4)

எப்பிராயீம் - 14 பட்டணங்கள் (5)

யோசேப்பின் புத்திரர் - மனாசே (6)

ஆசரிப்புக் கூடாரம் - மாகீர் (7)

லேவியின் பங்கு - எப்பிராயீம் (8)

காத்ரூபன் - 5 குமாரத்திகள் (9)

பென்யமீன் சுதந்தரம் - தென்நாடு (10)


விடை: 7, 9, 6, 8, 10, 4, 2, 3, 1, 5

1) மனாசேயின் மூத்த குமாரன் - மாகீர் (யோசுவா 17:1)

2) செலொப்பியாத்து - 5 குமாரரத்திகள் (17:3)

3) 10 பங்கு - மனாசே (17:5)

4) எல்லையோடிருக்கிற தப்புவா - எப்பிராயீம் (17:8)

5) எப்பிராயீம் - தென்நாடு (17:10)

6) யோசேப்பின் புத்திரர் - காட்டு தேசம் (17:15)

7) ஆசரிப்புக் கூடாரம் - சீலோ (18:1)

8) லேவியின் பங்கு - கர்த்தருடைய ஆசாரியபட்டம் (18:7)

9) காத்ரூபன் - மோசே கொடுத்த சுதந்தரம் (18:7)

10) பென்யமீன் சுதந்தரம் - 14 பட்டணங்கள் (18:28)


Day 102- May 20 2022- Friday    

(யோசுவா 19-20)

1) நப்தலி கோத்திரத்துக்கு எத்தனை பட்டணங்கள் சுதந்தரமாக கிடைத்தது?

2) எப்பிராயீமின் மலைத்தேசத்தில் ஏற்படுத்தப்பட்ட அடைக்கல பட்டணம் எது?


விடை:

1) ஈரோன்மிக்தாலேல்ஓரேம்பெதானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளேபட்டணங்களும் அவைகளின்கிராமங்களுமுட்பட பத்தொன்பது.

 -யோசுவா 19 : 38


2) அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலை தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

 -யோசுவா 20 : 7


இரண்டாவது கேள்விக்கான சரியான பதில் சீகேம். Online Bible refer பண்ணியதால் பதில் தவறாகி விட்டது.

Options um சரியாக கொடுக்க முடியவில்லை. குழப்பத்திற்கு மன்னிக்கவும். Online Bible ல் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டிருந்தது. 


அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும்எப்பிராயீமின்மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

 -யோசுவா 20 : 7


தவறு என்னுடையது. எனவே அந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் கூறியிருந்தாலும் அது சரியான பதிலாக எடுத்துக் கொள்ளப்படும். இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். 


Day 103- May 21 2022- Saturday    

(யோசுவா 21-22)

1) கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்கள் எத்தனை?
2) ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் எதற்காக பீடத்தை உண்டாக்கினார்கள்? (Select 3 options)

விடை:

1) 

கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின்வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.

 -யோசுவா 21 : 33


2) சர்வாங்கதகனத்திற்கு அல்லபலிக்கும் அல்லஎங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும்சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் 

என்று எங்களுக்கும்

 உங்களுக்கும்நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சிஉண்டாயிருக்கும்படிக்கும்,

 -யோசுவா 22 : 26


கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடேசொல்லாதபடிக்குமேஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.

 -யோசுவா 22 : 27


கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு ஏத் என்று பேரிட்டார்கள்.  

 -யோசுவா 22 : 34


Day 104- May 22 2022- Sunday    

(யோசுவா 23-24)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1) உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு ——————, அவர்களுடைய தேவர்களின் பேரை———————, அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும்அவைகளைச் சேவியாமலும், —————————— இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.


2) ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் ——————-, அவரை உத்தமமும் ———————— சேவித்துஉங்கள்பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை ————————, கர்த்தரைச் சேவியுங்கள்.


விடை:

உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும்அவர்களுடைய தேவர்களின் 

பேரை நினையாமலும்

அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும்அவைகளைச் சேவியாமலும்பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

 -யோசுவா 23 : 7


ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்துஅவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்துஉங்கள் பிதாக்கள்நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டுகர்த்தரைச் சேவியுங்கள்.

 -யோசுவா 24 : 14


Day 105- May 23 2022- Monday    

(நியாயாதிபதிகள் 1-2)


1) அதோனிபேசேக்கு எங்கு செத்துப்போனான்?

2) இஸ்ரவேலர்கள் என்ன செய்து கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்?


விடை:

1) அப்பொழுது அதோனிபேசேக்எழுபது ராஜாக்கள்கை கால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய்என்மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்நான் எப்படிச் செய்தேனோஅப்படியே தேவன் எனக்கும்செய்து சரிக்கட்டினார் என்றான்அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்அங்கே அவன்செத்துப்போனான்.

 -நியாயாதிபதிகள் 1 : 7


2) கர்த்தரைக் கைவிட்டனர்; 

பாகாலை சேவித்தார்கள்; அஸ்தரோத்தை

 சேவித்தார்கள்.


தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டுதங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய்அவர்களைப் பணிந்துகொண்டுகர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.

 -நியாயாதிபதிகள் 2 : 12

அவர்கள் கர்த்தரை விட்டுபாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 2 : 13


Day 106- May 24 2022- Tuesday   
(நியாயாதிபதிகள் 3-4)

Match the following (பொருத்துக):
Just send me the order of the numbers.
(For example 7,10,3,4,5,8,6,1,9,2)

கூசான்ரிஷதாயீம் - பென்யமீன் கோத்திரம் (1)

கேனாஸ் - யாகேல் (2)

ஒத்னியேல் - லபிதோத்தின் மனைவி (3)

எக்லோன் - கானானியருடைய ராஜா (4)

ஏகூத் - மெசொப்பொத்தாமியாவின் ராஜா (5)

யாபீன் - மோவாபின் ராஜா (6)

தெபொராள் - சிசெரா (7)

யாபீனின் சேனாபதி - 40 வருஷ அமைதல் (8)

மோசேயின் மாமன் - காலேபின் தம்பி (9)

ஏபேரின் மனைவி - ஓபாப் (10)


விடை: 5, 9, 8, 6 1, 4, 3, 7, 10, 2


1)கூசான்ரிஷதாயீம் - மெசொப்பொத்தாமியாவின் ராஜா (3:8)

2)கேனாஸ் - காலேபின் தம்பி (3:9)

3)ஒத்னியேல் - 40 வருஷ அமைதல் (3:11)

4)எக்லோன் - மோவாபின் ராஜா (3:12)

5)ஏகூத் - பென்யமீன் கோத்திரம் (3:15)

6)யாபீன் - கானானியருடைய ராஜா (4:2)

7)தெபொராள் - லபிதோத்தின் மனைவி (4:4) 

8)யாபீனின் சேனாபதி - சிசெரா (4:7)

9)மோசேயின் மாமன் - ஓபாப் (4:11)

10)ஏபேரின் மனைவி - யாகேல் (4:17)


Day 107- May 25 2022- Wednesday   
(நியாயாதிபதிகள் 5-6)

1) சரியா? தவறா?

தெபொராள் கப்பலில் தங்கியிருந்து யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என ஆசேர் கோத்திரத்தைக்  குறிப்பிடுகிறாள்.


2) சரியா? தவறா?

கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும் என கர்த்தர் கிதியோனிடம் சொன்னார்


1) தவறு

கீலேயாத் மனுஷர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்தாண் மனுஷர் கப்பல்களில்தங்கியிருந்ததென்ன? ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கிதங்கள் குடாக்களில் தாபரித்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 5 : 17


2) சரி

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,

 -நியாயாதிபதிகள் 6 : 25


இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்துஅதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின்மேல் சர்வாங்கதகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.

 -நியாயாதிபதிகள் 6 : 26


Day 108- May 26 2022- Thursday   
(நியாயாதிபதிகள் 7-8)

1) தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தவர்கள் எத்தனை பேர்? (Please calculate carefully).
2) யாரிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது

விடை: 

1) 9700 (10000-300).

ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பிகீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய்ஓடிப்போகக்கடவன் என்றுநீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்அப்பொழுது ஜனத்தில்இருபத்தீராயிரம்பேர் திரும்பிப் போய்விட்டார்கள்பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 7 : 3

தங்கள் கையால் அள்ளிதங்கள் வாய்க்கெடுத்துநக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்மற்றஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 7 : 6


2) பின்பு கிதியோன் அவர்களை நோக்கிஉங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்நீங்கள் அவரவர்கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்அவர்கள்இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

 -நியாயாதிபதிகள் 8 : 24


Day 109- May 27 2022- Friday   
(நியாயாதிபதிகள் 9-10)

நியாயாதிபதிகள் 9 - 1st Question 


1) யார் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்? 2)விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவைஅபிஷேகம்பண்ணும்படி யாரிடம் சொன்னது?

3)யோதாம் தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து தப்பியோடி எங்கு போய் குடியிருந்தான்?

4)அபிமெலேக்கும்அவனோடிருந்த சகல ஜனங்களும்இரவில் எழுந்துபோய்சீகேமுக்கு விரோதமாகஎத்தனை படையாகப் பதிவிருந்தார்கள்?

5)அபிமெலேக்கின் மண்டையை உடைத்தது யார்?


நியாயாதிபதிகள் 10 - 2nd Question 

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்த போதுகர்த்தர் இஸ்ரவேலின்மேல்கோபமூண்டுஅவர்களை யார் கையில் விற்றுப்போட்டார்


விடை: 

நியாயாதிபதிகள் 9 - 1st Question Answer 


பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டு போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

 -நியாயாதிபதிகள் 9 : 6


விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

 -நியாயாதிபதிகள் 9 : 8


தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.

 -நியாயாதிபதிகள் 9 : 21


அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 9 : 34


அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது.

 -நியாயாதிபதிகள் 9 : 53


நியாயாதிபதிகள் 10 - 2nd Question Answer


அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.

 -நியாயாதிபதிகள் 10 : 7


Day 110- May 28 2022- Saturday   
(நியாயாதிபதிகள் 11-12)

1) யெப்தா அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போதுதன் வீட்டுவாசற்படியிலிருந்து தனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை என்ன பலியாக செலுத்துவேன் என்றான்?

2) செபுலோனியனாகிய ஏலோன் மரித்த பின்பு இஸ்ரவேலை நியாயம் விசாரித்தது யார்?


விடை: 

1) நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

 -நியாயாதிபதிகள் 11 : 31


2) பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்துசெபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்.

 -நியாயாதிபதிகள் 12 : 12

அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம்விசாரித்தான்.

 -நியாயாதிபதிகள் 12 : 13


Day 111- May 29 2022- Sunday   

(நியாயாதிபதிகள் 13-14)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1) —————————- பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், ————————————- பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்அதை ————————— அவன் மனைவியும் கண்டுதரையிலேமுகங்குப்புற விழுந்தார்கள்.


2) அவன் ——————————- குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படிஇது ————————-என்று அவன்—————————-அறியாதிருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.


விடை: 

1) அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில்கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டுதரையிலேமுகங்குப்புற விழுந்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 13 : 20


2) அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படிஇது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.

 -நியாயாதிபதிகள் 14 : 4


Day 112- May 30 2022- Monday   

(நியாயாதிபதிகள் 15-16)

1) சிம்சோன் எதை வைத்து ஆயிரம்பேரைக் கொன்றான்?

2) பெலிஸ்தர் சிம்சோனைப் பிடித்த பின் அவனை என்ன செய்தார்கள்? (Select 4 options)


விடை: 

1) அப்பொழுது சிம்சோன்கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள்கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.

 -நியாயாதிபதிகள் 15 : 16


2) பெலிஸ்தர் அவனைப் பிடித்துஅவன் கண்களைப் பிடுங்கிஅவனைக் காசாவுக்குக் கொண்டுபோய்அவனுக்குஇரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.

 -நியாயாதிபதிகள் 16 : 21 


Day 113- May 31 2022- Tuesday   

(நியாயாதிபதிகள் 17-18)

1) சரியாதவறா

மீகாவின் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்துதட்டான் கையிலே கொடுத்தாள்அவன் அதினாலேவெட்டப்படாத  ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்படாத ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்


2) சரியாதவறா

மீகாவின் வீட்டில் ஆசாரியனாயிருந்த லேவியன் அவனை விட்டு தாண் கோத்திரத்தாருடன் சென்றான்


விடை: 

1) தவறு

அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.

 -நியாயாதிபதிகள் 17 : 4


2) சரி

அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.

 -நியாயாதிபதிகள் 18 : 19


அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.

 -நியாயாதிபதிகள் 18 : 20


Day 114- June 1 2022- Wednesday    
(நியாயாதிபதிகள் 19-21)

1) லேவியன் தன் மறுமனையாட்டியை திரும்ப அழைத்து கொண்டு போகிற வழியில் எங்கே இராத்தங்கினார்கள்?

2) இஸ்ரவேல் புத்திரர் ‘பென்யமீன் புத்திரரோடே யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா’ என்று யாரிடம்விசாரித்தார்கள்?

3) இஸ்ரவேல் புத்திரர்பென்யமீன் கோத்திரத்தில் மீந்திருந்த ஆண்களுக்கு எவர்களை மனைவிகளாககொடுத்தனர்? (Select 2 options)


விடை:

1) ஆகையால் கிபியாவிலே வந்து இராத்தங்கும்படிக்குவழியைவிட்டு அவ்விடத்திற்குப் போனார்கள்அவன்பட்டணத்துக்குள் போனபோதுஇராத்தங்குகிறதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார்இல்லாததினால்வீதியில் உட்கார்ந்தான்.

 -நியாயாதிபதிகள் 19 : 15


2) ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதாஎன்று அவர்கள் விசாரித்தார்கள்அப்பொழுது கர்த்தர்போங்கள்நாளைக்கு அவர்களை உங்கள் கையில்ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

 -நியாயாதிபதிகள் 20 : 28


3) அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.

 -நியாயாதிபதிகள் 21 : 14

சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம் பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள்காணும்போதுதிராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டுஉங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில்ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.

 -நியாயாதிபதிகள் 21 : 21


Day 115- June 2 2022- Thursday    

(பிலிப்பியர் 1-2)

1) கோடிட்ட இடங்களை நிரப்புக:

நான் வந்து உங்களைக் கண்டாலும்நான் வராமலிருந்தாலும்நீங்கள் ———————-உறுதியாய் நின்று, ————————-சுவிசேஷத்தின் ——————————- கூடப்போராடிஎதிர்க்கிறவர்களால் ஒன்றிலும்மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படிஎவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின்—————————- பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.


2) கோடிட்ட இடங்களை நிரப்புக:

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி ——————————— எனக்குஉண்டாயிருப்பதற்கு, —————————- பிடித்துக்கொண்டுஉலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிறநீங்கள்,

கோணலும் ——————————- நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும்தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,

எல்லாவற்றையும் ————————————- தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.


விடை:

1) நான் வந்து உங்களைக் கண்டாலும்நான் வராமலிருந்தாலும்நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்றுஒரேஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடிஎதிர்க்கிறவர்களால் ஒன்றிலும்மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படிஎவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் 

 பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.

 -பிலிப்பியர் 1 : 27


2) நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,

 -பிலிப்பியர் 2 : 14

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,

 -பிலிப்பியர் 2 : 15

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

 -பிலிப்பியர் 2 : 16


Day 116- June 3 2022- Friday    

(பிலிப்பியர் 3-4)


1) நம்முடைய குடியிருப்பு எங்கு இருக்கிறது யார் வருவதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

2) நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல்எல்லாவற்றையுங்குறித்து ஜெபத்தில் தெரியப்படுத்தும்போதுஉங்கள்இருதயத்தை எது காத்துக் கொள்ளும்


விடை:

1) நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறதுஅங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

 -பிலிப்பியர் 3 : 20

2) நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல்எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களைஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

 -பிலிப்பியர் 4 : 6

அப்பொழுதுஎல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள்சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

 -பிலிப்பியர் 4 : 7


Day 117- June 4 2022- Saturday    

(ரூத் 1-2)

1) யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட ஏன்மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்

2) ரூத் சாயங்காலமட்டும் வயலிலே பொறுக்கிய கதிரில் எத்தனை மரக்கால் வாற்கோதுமை கிடைத்தது


விடை:

1) நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்றுஅப்பொழுதுயூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூடமோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

 -ரூத் 1 : 1

2) அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத்தீர்ந்தபோதுஅது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.

 -ரூத் 2 : 17


Day 118- June 5 2022- Sunday    

(ரூத் 3-4)

1) சரியாதவறா?

உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது” என்று நகோமி ரூத்திடம் சொன்னாள்

2) சரியாதவறா?

நான் கிலியோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்” என்ற போவாஸ் சொன்னார்


விடை:

1) தவறு

அதற்கு அவன்(போவாஸ்)மகளேநீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாகநீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமானவாலிபர்களின் பிறகே போகாததினால்உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.

 -ரூத் 3 : 10 


2) தவறு

இதுவுமல்லாமல்மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும்ஊராருக்குள்ளும்அவனுடைய பேர்அற்றுப்போகாமல்மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்தநான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும்இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.

 -ரூத் 4 : 10


Day 119- June 6 2022- Monday    

(கொலோசெயர் 1-2)

1) கொலோசெயர் அதிகாரம் 1ன் படிஇவற்றில் எது நேரடியாக "சத்திய வசனம்என்று குறிப்பிடப்படுகிறது?

2) ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டுஎதினால் அவரோடகூட எழுந்தவர்களாகஇருக்கிறோம்


விடை:

1) அந்த நம்பிக்கையைக்குறித்துநீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும்பரம்பிப் பலன்தருகிறதுபோலஉங்களிடத்திலும் வந்துநீங்கள் அதைக்கேட்டுதேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல்அது உங்களுக்குள்ளும்பலன்தருகிறதாயிருக்கிறது;

 -கொலோசெயர் 1 : 6


2) ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும்அதிலே அவரைமரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூடஎழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

 -கொலோசெயர் 2 : 12


Day 120- June 7 2022- Tuesday    

(கொலோசெயர் 3-4)

1) வேலைக்காரர்கள் யாருக்கு கீழ்ப்படிந்துஎப்படி ஊழியம் செய்ய வேண்டும்
2) அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்குஉங்கள் வசனம் எப்படிஇருக்க வேண்டும்

விடை:

1) வேலைக்காரரேசரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும்கீழ்ப்படிந்துநீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல்தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.

 -கொலோசெயர் 3 : 22


2) அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்குஉங்கள் வசனம்எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

 -கொலோசெயர் 4 : 6


Day 121- June 8 2022- Wednesday    

(1 சாமுவேல் 1-2)

1) அன்னாள் தன் குமாரனுக்கு என்ன சொல்லி சாமுவேல் என்று பேரிட்டாள்?  
2) என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்என்னை அசட்டை பண்ணுகிறவர்கள்கனவீனப்படுவார்கள்” என்று யார் சொன்னது

விடை:
1) சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகிஒரு குமாரனைப் பெற்றுகர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்என்று சொல்லிஅவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.

 -சாமுவேல் 1 : 20


2) ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவதுஉன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும்என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும்இனி அதுஎனக்குத் தூரமாயிருப்பதாகஎன்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 -சாமுவேல் 2 : 30


Day 122- June 9 2022- Thursday    

(1 சாமுவேல் 3-4)

1)யார் யாரிடம் சொன்னது

அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும்அவர்களைஅடக்காமற்போன பாவத்தினிமித்தம்நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன்என்று அவனுக்கு அறிவித்தேன்.

2)யார் யாரிடம் சொன்னது

உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்தேவனுடைய பெட்டியும்பிடிபட்டுப்போயிற்று என்றான்”.


விடை:

1) கர்த்தர் சாமுவேலை நோக்கிஇதோநான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்அதைக் கேட்கிறஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

 -சாமுவேல் 3 : 11 

அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும்அவர்களைஅடக்காமற்போன பாவத்தினிமித்தம்நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன்என்று அவனுக்கு அறிவித்தேன்.

 -சாமுவேல் 3 : 13


2) பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடிதன் வஸ்திரங்களைக் கிழித்துதன்தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டுஅன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

 -சாமுவேல் 4 : 12

அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.

 -1 சாமுவேல் 4 : 16


Day 123- June 10 2022-  Friday    

(1 சாமுவேல் 5-6)

1) அஸ்தோத்தின் ஜனங்கள் காத் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டு போனபின்புகர்த்தர் அந்தப் பட்டணத்தின்மனுஷருக்குள் யாரை மூலவியாதயினால் வாதித்தார்
2) லேவியர் கர்த்தருடைய பெட்டியை இறக்கி பெரிய கல்லின்மேல் வைத்ததையும்பெத்ஷிமேசின் மனுஷர்கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்தினதையும் கண்டுபெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் எங்குதிரும்பிப்போனார்கள்

விடை:

1) அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்புகர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாகஇறங்கிற்றுஅந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள்சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும்மூலவியாதியைஉண்டாக்கிஅவர்களை வாதித்தார்.

 -சாமுவேல் 5 : 9


2) பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டுஅன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.

 -சாமுவேல் 6 : 16


Day 124- June 11 2022-  Saturday    

(1 சாமுவேல் 7-8)

1) சரியா?தவறா

சாமுவேல் ஒரு காளையை கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்திஇஸ்ரவேலுக்காகக் கர்த்தரைநோக்கி வேண்டிக்கொண்டான்

2) சரியா?தவறா?

அவர்கள் உன்னைத் தள்ளவில்லைநான் அவர்களை ஆளாதபடிக்குஎன்னைத்தான் தள்ளினார்கள்” என்றுகர்த்தர் சாமுவேலிடம் சொன்னார்


விடை:

1) தவறு

அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்திஇஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்கர்த்தர் அவனுக்குமறுமொழி அருளிச்செய்தார்.

 -சாமுவேல் 7 : 9


2) சரி

அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள்சொல்லைக் கேள்அவர்கள் உன்னைத் தள்ளவில்லைநான் அவர்களை ஆளாதபடிக்குஎன்னைத்தான்தள்ளினார்கள்.

 -சாமுவேல் 8 : 7


Day 125- June 12 2022-  Sunday    

(1 சாமுவேல் 9-10)

1) கர்த்தர் சாமுவேலிடம்சவுல் என் ஜனத்தைப் யாரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான் என்றார்?

2) ‘சவுல் இனி இங்கே வருவானா’ என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோதுஅவன் எங்குஒளித்துக்கொண்டிருப்பதாக கர்த்தர் சொன்னார்?


விடை:

1)நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்அவனை என்ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின்கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான்என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால்நான்அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

 -சாமுவேல் 9 : 16


2) அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோதுஇதோஅவன்தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.

 -சாமுவேல் 10 : 22


Day 126- June 13 2022-  Monday    

(1 சாமுவேல் 11-12)

1) சவுல் பேசேக்கிலே இலக்கம் பார்த்த போது இஸ்ரவேல் புத்திரர் எத்தனை பேர் இருந்தனர்?
2) இஸ்ரவேலர் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்கு கர்த்தர் எந்த 4 நபர்களை அனுப்பி அவர்களை இரட்சித்தார்?

விடை:

1) அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம்பேரும்யூதா மனுஷரில்முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.

 -சாமுவேல் 11 : 8


2) அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும்பேதானையும்யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பிநீங்கள்பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களைநீங்கலாக்கி இரட்சித்தார்.

 -சாமுவேல் 12 : 11


Day 127 - June 14 2022 - Tuesday
(1 சாமுவேல் 13-14)

1) கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டு வந்தார்கள்அந்த மூன்றுபடைகளில் ஒவ்வொரு படையும் எந்தெந்த வழியாக போயிற்று?

2) ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டதுஅது என்ன பாவம்


விடை:

1) கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டு வந்தார்கள்ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போயிற்று.

 -சாமுவேல் 13 : 17

வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்றுவேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின்பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.

 -சாமுவேல் 13 : 18


2) அப்பொழுதுஇதோஇரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம்செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்அவன்நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்இப்போதே ஒருபெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

 -சாமுவேல் 14 : 33


Day 128 - June 15 2022 - Wednesday
(1 சாமுவேல் 15-16)


1) சவுல் எங்கு வந்துதனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டினான் என்று சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது?

2) சவுலுக்கு ஆயுததாரியானவன் யார்?


விடை:

1) மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்துதனக்குஒரு ஜெயஸ்தம்பம் நாட்டிபின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்றுசாமுவேலுக்குஅறிவிக்கப்பட்டது.

 -சாமுவேல் 15 : 12

2) அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்துஅவனுக்கு முன்பாக நின்றான்அவன் இவனை மிகவும் சிநேகித்தான்அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.

 -சாமுவேல் 16 : 21


Day 129 - June 16 2022 - Thursday
(1 சாமுவேல் 17-18)


1) தாவீது பெலிஸ்தனை மேற்கொண்டு மடங்கடித்த பிறகு யாருடைய பட்டயத்தை கொண்டு அவன் தலையைவெட்டினான்?

2) சவுல் மனதில் என்ன நினைத்துக் கொண்டு தாவீதை நோக்கி, “இதோஎன் மூத்த குமாரத்தியாகிய மேராவைஉனக்கு மனைவியாகக் கொடுப்பேன் என்றான்”?


விடை:

1) ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்றுஅவன் பட்டயத்தை எடுத்துஅதை அதின்உறையிலிருந்து உருவிஅவனைக்கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்அப்பொழுதுதங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டுஓடிப்போனார்கள்.

 -சாமுவேல் 17 : 51 


2) என் கை அல்லபெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டுசவுல் தாவீதைநோக்கிஇதோஎன் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்நீ எனக்கு நல்லசேவகனாய் மாத்திரம் இருந்துகர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

 -சாமுவேல் 18 : 17


Day 130 - June 17 2022 - Friday
(1 சாமுவேல் 19-20)


1) தாவீது சவுலுக்கு தப்பி எங்கு சென்றான்?

2) நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்குஇதோகர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும்சாட்சி என்றான்” இதை சொன்னது யார்?


விடை:

1) தாவீது தப்பிராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய்சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்குஅறிவித்தான்பின்பு அவனும் சாமுவேலும் போய்நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

 -சாமுவேல் 19 : 18


2) பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்கார வேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

 -1 சாமுவேல் 20 : 18 

நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.

 -1 சாமுவேல் 20 : 23


Day 131 - June 18 2022 - Saturday
(1 சாமுவேல் 21-22)


1) தாவீது கோலியாத்தை கொன்ற இடம் எது

2) “உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப் போலராஜாவுக்கு மருமகனும்உம்முடையகட்டளைகளின்படி செய்து வருகிறவனும்உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன்யார்?” யார் யாரிடம் சொன்னது


விடை:

1) அதற்கு ஆசாரியன்நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம்இதோஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறதுஅதை நீர் எடுக்க மனதானால்எடுத்துக்கொண்டுபோம்அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்அப்பொழுது தாவீதுஅதற்கு நிகரில்லைஅதை எனக்குத் தாரும் என்றான்.

 -சாமுவேல் 21 : 9

2) அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாகஉம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப் போலராஜாவுக்குமருமகனும்உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும்உம்முடைய வீட்டிலேகனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?

 -சாமுவேல் 22 : 14



Day 132 - June 19 2022 - Sunday
(1 சாமுவேல் 23-24)


1) கோடிட்ட இடங்களை நிரப்புக:

தாவீது ——————- வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோதுதேவன் அவனை என் கையில்——————————; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால்அடைபட்டிருக்கிறான் என்று ————- சொல்லிதாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்குகேகிலாவுக்குப் போகஎல்லா ————————- யுத்தத்திற்கு அழைப்பித்தான்.


2) கோடிட்ட இடங்களை நிரப்புக:  

என் தகப்பனே பாரும்என் கையிலிருக்கிற உம்முடைய ——————— தொங்கலைப் பாரும்உம்மைக்—————————, உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்என் கையிலே——————- துரோகமும் இல்லை என்றும்உமக்கு நான் —————————-என்றும் அறிந்துகொள்ளும்நீரோ என் பிராணனை வாங்கஅதை வேட்டையாடுகிறீர்.


விடை:

1) தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோதுதேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால்அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,

 -சாமுவேல் 23 : 7

தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்குகேகிலாவுக்குப் போகஎல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.

 -சாமுவேல் 23 : 8


2) என் தகப்பனே பாரும்என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்உம்மைக் கொன்றுபோடாமல்உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும்உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்நீரோ என்பிராணனை வாங்கஅதை வேட்டையாடுகிறீர்.

 -சாமுவேல் 24 : 11



Day 133 - June 20 2022 - Monday 
(1 சாமுவேல் 25-26)
1) யார் யாரிடம் சொன்னது
“கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார்.
2) யார் யாரிடம் சொன்னது
“இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்”.

விடை:
1) தாவீது தனக்குள்ளே பேசிக்கொண்ட விஷயம்
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோதுஎன் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில்விசாரித்துதம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லிஅபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேசதாவீது ஆட்களை அனுப்பினான்.
 -சாமுவேல் 25 : 39
(நீங்கள் அனைவரும் சற்று நிறுத்தி யோசிப்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி தான் இது.  எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொருவரும் வித்தியாசமான பதில்களை அளித்திருந்தாலும், 
அனைத்து பதில்களையும் சரியா்ன பதில்களாகவே எடுத்துக் கொண்டேன்).

2) தாவீது to சவுல்    
இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாகமலைகளில் ஒரு கவுதாரியைவேட்டையாடுகிறதுபோலஇஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.
 -1 சாமுவேல் 26 : 20

Day 134 - June 21 2022 - Tuesday 
(1 சாமுவேல் 27-28)


1) தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே எத்தனை நாட்கள் குடியிருந்தான்

2) சவுல் யாருடைய சொற்கேளாமலும்யாரின் மேல்  கர்த்தருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும்போனார்


விடை:

1) தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.

 -சாமுவேல் 27 : 7


2) நீ கர்த்தருடைய சொற்கேளாமலும்அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத்தீர்க்காமலும் போனபடியினால்கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

 -சாமுவேல் 28 : 18


Day 135 - June 22 2022 - Wednesday
(1 சாமுவேல் 29-31)


1) தாவீது யாரைப் போல தனது பார்வைக்குப் பிரியமானவன் என்று ஆகீஸ் குறிப்பிடுகிறார்

2) தாவீதிடம் இருந்து தப்பி ஓடின நானூறு அமலேக்கிய வாலிபர்கள் எதின் மேல் ஏறி போனார்கள்?

3) சவுல் தன் ஆயுததாரியிடம் ‘பட்டயத்தை உருவிஎன்னைக் குத்திப்போடு’ என்றவுடன் அவன் ஏன் அதை செய்யமறுத்தான்


விடை:

1) ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாகஅதை அறிவேன்நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப்பிரியமானவன்ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள்சொல்லுகிறார்கள்.

 -சாமுவேல் 29 : 9


2) அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிரஅவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

 -சாமுவேல் 30 : 17


3) தன் ஆயுததாரியை நோக்கிஅந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்துஎன்னைக் குத்திப்போட்டுஎன்னைஅவமானப்படுத்தாதபடிக்குநீ உன் பட்டயத்தை உருவிஎன்னைக் குத்திப்போடு என்றான்அவனுடையஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால்அப்படிச் செய்யமாட்டேன் என்றான்அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டுஅதின்மேல் விழுந்தான்.

 -சாமுவேல் 31 : 4


Day 136 - June 23 2022 - Thursday 
(தெசலோனிக்கேயர் 1-2)

1) தெசலோனிக்கேயர் விசுவாசிகள் யாருக்கு மாதிரிகளானார்கள்

2) விசுவாசிகளாகிய மக்களிடையே அப்போஸ்தலர்கள் எப்படி நடந்துக் கொண்டார்கள்?


விடை:

1) இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.

 -தெசலோனிக்கேயர் 1 : 7


2) விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய்நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சிதேவனும் சாட்சி.

 -தெசலோனிக்கேயர் 2 : 10


Day 137 - June 24 2022 - Friday 
(தெசலோனிக்கேயர் 3-5)

1) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது,  நாம்அவருக்கு முன்பாக எப்படி இருக்க வேண்டும்?

2) அசட்டைபண்ணுகிறவன் மனுஷரையல்லாமல் யாரை அசட்டை பண்ணுகிறான்?

3) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது எது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்பட வேண்டும்?


விடை:

1) இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போதுநீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள்இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.  

 -தெசலோனிக்கேயர் 3 : 13


2) ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்லதமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளினதேவனையே அசட்டைபண்ணுகிறான்.

 -தெசலோனிக்கேயர் 4 : 8


3) சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராகஉங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும்நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

 -தெசலோனிக்கேயர் 5 : 23


Day 138 - June 25 2022 - Saturday 
(சாமுவேல் 1-2)

1) யார் யாரிடம் சொன்னது?

சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும்..”

2) யார் யாரிடம் சொன்னது

பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோமுடிவிலே கசப்புண்டாகும் என்றுஅறியீரோ..”


விடை:

1) சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்குஅதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,

 -சாமுவேல் 1 : 5


2) அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டுபட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோமுடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோதங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்குஎந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.

 -சாமுவேல் 2 : 26


Day 139 - June 26 2022 - Sunday 

(சாமுவேல் 3-4)


1) அப்னேரைக் கொன்றது யார்?

2) தன் பள்ளி அறையிலே தன் கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது கொலை செய்யப்பட்டவன் யார்?


விடை:

1) அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

 -2 சாமுவேல் 3 : 27


2) பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,

 -2 சாமுவேல் 4 : 5 

அவன் தன் பள்ளி அறையிலே தன் கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது இவர்கள் உள்ளே போய்அவனைக்குத்திக்கொன்று போட்டுஅவன் தலையை வெட்டிப்போட்டார்கள்பின்பு அவன் தலையை எடுத்துக்கொண்டுஇராமுழுதும் அந்தரவெளி வழியாய் நடந்து,

 -சாமுவேல் 4 : 7


Day 140 - June 27 2022 - Monday 

(சாமுவேல் 5-6)

1) பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது அவர் அவனுக்குஎன்ன பதிலளித்தார்?

2) தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிஅதை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?


விடை:

1) பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமாஅவர்களை என் கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீதுகர்த்தரிடத்தில் விசாரித்தபோதுகர்த்தர்போபெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன்என்று தாவீதுக்குச் சொன்னார்.

 -சாமுவேல் 5 : 19


2) தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிஅதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின்வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்அபினதாபின் குமாரராகிய ஊசாவும்அகியோவும் அந்தப் புது இரதத்தைநடத்தினார்கள்.

 -சாமுவேல் 6 : 3


Day 141 - June 28 2022 - Tuesday 

(சாமுவேல் 7-8)

1) தேவனாகிய கர்த்தர் தான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டுஇந்நாள்வரைக்கும் எங்கு உலாவினதாக குறிப்பிடுகிறார்

2) தாவீதின் மந்திரி யார்?


விடை:

1) நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும்நான்ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல்கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.

 -சாமுவேல் 7 : 6


2) செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.

 -சாமுவேல் 8 : 16


Day 142 - June 29 2022 - Wednesday 

(சாமுவேல் 9-10)


1) யார் யாரிடம் சொன்னது?

செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்க்கிறதற்குஉமது அடியான் எம்மாத்திரம்”.

2) யார் யாரிடம் சொன்னது?

தைரியமாயிருநம்முடைய ஜனத்திற்காகவும்நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக்காட்டுவோம்”.


விடை:

1) மேவிபோசேத் to தாவீது

சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோதுமுகங்குப்புற விழுந்துவணங்கினான்அப்பொழுது தாவீதுமேவிபோசேத்தே என்றான்அவன்இதோஅடியேன் என்றான்.

 -சாமுவேல் 9 : 6


2) யோவாப் to அபிசாய் 

யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில்அவன்இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்துஅதைச்சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,

 -சாமுவேல் 10 : 9

மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகியஅபிசாயினிடத்தில் ஒப்புவித்து:

 -சாமுவேல் 10 : 10


Day 143 - June 30 2022 - Thursday 

(சாமுவேல் 11-12)

1) சரியா?தவறா?

தாவீது யோவாபுக்கு ஒரு நிரூபத்தை எழுதிஉரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

2) சரியாதவறா?

உரியா அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி ராஜதானியைப் பிடித்தான்.


விடை:

1) சரி

காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதிஉரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

 -சாமுவேல் 11 : 14


2) தவறு

அதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணிராஜதானியைப்பிடித்து,

 -சாமுவேல் 12 : 26

தாவீதினிடத்தில் ஆள் அனுப்பிநான் ரப்பாவின்மேல் யுத்தம்பண்ணிதண்ணீர் ஓரமான பட்டணத்தைப்பிடித்துக்கொண்டேன்.

 -சாமுவேல் 12 : 27


Day 144 - July 1 2022 - Friday 

(சாமுவேல் 13-14)

1) அப்சலோம் ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு எங்கு வரச்சொல்லி அழைத்தான்?

2) இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் சவுந்தரியமுள்ளவனும்உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் ஒருபழுதும் இல்லாமல் இருந்தது யார்?


விடை:

1) இரண்டு வருஷம் சென்றபின்புஅப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்துஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்குஅழைத்தான்.

 -சாமுவேல் 13 : 23


2) இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும்இல்லைஉள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.

 -சாமுவேல் 14 : 25


Day 145 - July 2 2022 - Saturday 

(சாமுவேல் 15-16)

1) சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எங்கு திரும்பக் கொண்டுபோனார்கள்?

2) ஊசாய் யாருடைய சிநேகிதன்?


விடை:

1) அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய்அங்கே இருந்தார்கள்.

 -சாமுவேல் 15 : 29


2) அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோதுஊசாய் அப்சலோமைநோக்கிராஜாவே வாழ்கராஜாவே வாழ்க என்றான்.

 -சாமுவேல் 16 : 16


Day 146 - July 3 2022 - Sunday 

(சாமுவேல் 17-18)

1) அப்சலோம்யோவாபுக்குப் பதிலாக யாரை இராணுவத் தலைவனாக்கினான்?

2) அப்சலோம் எந்த மரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில் யோவாப் அவனை நெஞ்சிலே குத்தினான்?


விடை:

1) அப்சலோம்யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்இந்த அமாசாநாகாசின்குமாரத்தியும்செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்தஇஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.

 -சாமுவேல் 17 : 25


2) ஆதலால் யோவாப்நான் இப்படி உன்னோடே பேசிதாமதிக்கமாட்டேன் என்று சொல்லிதன் கையிலே மூன்றுவல்லயங்களை எடுத்துக்கொண்டுஅப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடேதொங்குகையில்அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.

 -சாமுவேல் 18 : 14


Day 147 - July 4 2022 - Monday 

(சாமுவேல் 19-20)

1) யார் யாரிடம் சொன்னது

ராஜாவைத் திரும்ப அழைத்துவரநீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்”.

2) யார் யாரிடம் சொன்னது?  நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டுஅவனைப் பின்தொடர்ந்துபோ”.


விடை:

1) இப்படி இஸ்ரவேலர் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறதுராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்குக்கேள்வியானபடியினால்தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பிநீங்கள் யூதாவின் மூப்பரோடே பேசிராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள்மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?

 -சாமுவேல் 19 : 11

நீங்கள் என் சகோதரர்நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள்பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.

 -சாமுவேல் 19 : 12


2) அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்துஅப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாஇப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்துநம்முடையகண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்குநீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டுஅவனைப்பின்தொடர்ந்துபோ என்றான்.

 -சாமுவேல் 20 : 6


Day 148 - July 5 2022 - Tuesday 

(சாமுவேல் 21-22)


1) கோடிட்ட இடங்களை நிரப்புக:

பெலிஸ்தரோடு இன்னும் வேறொரு ————- கோபிலே உண்டானபோதுயாரெயொர்கிமின் குமாரனாகிய————————— என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் —————————— வெட்டினான்அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் ———————- அவ்வளவு பெரிதாயிருந்தது.

2) கோடிட்ட இடங்களை நிரப்புக

கர்த்தருடைய வழிகளைக் —————————-; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லைஅவருடைய ————————- எனக்கு முன்பாக நிறுத்தினேன்நான் அவருடைய —————————— விட்டுவிலகாமல்அவர் முன்பாக மனஉண்மையாயிருந்துஎன் —————————- என்னை விலக்கிக்காத்துக்கொண்டேன்.


விடை:

1) பெலிஸ்தரோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோதுயாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்அவன்ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.

 -சாமுவேல் 21 : 19

2) கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை.

 -சாமுவேல் 22 : 22

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்நான் அவருடைய பிரமாணங்களை விட்டுவிலகாமல்,

 -சாமுவேல் 22 : 23

அவர் முன்பாக மனஉண்மையாயிருந்துஎன் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

 -சாமுவேல் 22 : 24


Day 148 - July 5 2022 - Tuesday 
(சாமுவேல் 21-22)

1) கீழ்க்கண்ட நபர்களில் தாவீதின் பராக்கிரமசாலிகள் யாவர்? (Select 3 options)

உரியா

நாத்தான்

எலியாம்

ஆசகேல்

எலிசூவா

செருயா

அபிசாய்


2) தாவீது ராஜா அர்வனாவின் களத்தையும்மாடுகளையும் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்


விடை:

1) யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.

 -2 சாமுவேல் 23 : 18

யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,

 -2 சாமுவேல் 23 : 24

மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.

 -2 சாமுவேல் 23 : 34

ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.  

 -2 சாமுவேல் 23 : 39

[

இந்த 4 பதில்களில் எந்த 3 பதில்களை நீங்கள் கூறியருந்தாலும் அது சரியான பதிலாகவே எடுத்துக் கொள்ளப்படும். 

2) ராஜா அர்வனாவைப் பார்த்துஅப்படியல்லநான் இலவசமாய் வாங்கிஎன் தேவனாகிய கர்த்தருக்குசர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல்அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லிதாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.

 -சாமுவேல் 24 : 24


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4