ஊரீம் மற்றும் தும்மீம்

               ஊரீம் மற்றும் தும்மீம்

12 கற்கள்: 

  • ஊரீம், தும்மீம் என்பவர்கள் ஒரு ஆசாரியனின் ஏபோத்தின், மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்ட கற்கள். 

  • ஆசாரியன் அணியக்கூடிய ஏபோத்தில் 12 கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும். 
  • அதில் ஊரீம் என்பது வெள்ளை நிறத்திலும் , தும்மீம் என்பது கறுப்பு நிறத்திலும் இருக்கும்.


ஆசாரியன் மார்ப்பதக்கத்தில்:

நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.

 -யாத்திராகமம் 28 : 30

அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,

 -லேவியராகமம் 8 : 8

(உபாகமம் 33:8, எஸ்றா 2:63, நெகேமியா 7:65)

Meaning:

ஊரீம் என்றால் Light என்று பொருள்.

தும்மீம் என்றால் Darkness என்று பொருள்.

தேவ சித்தத்தை அறிந்து கொள்ள:

  • ஊரீம் தும்மீம் என்பவைகள் தேவனுடைய சித்தத்தை அறிந்து சொல்வதற்காக உபயோகிக்கப்பட்ட புனித கற்களாகும்.
  • மனிதனின் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிப்பது இவற்றின் பணியாகும்.

அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.

 -எண்ணாகமம் 27 : 21

சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.

 -1 சாமுவேல் 28 : 6

  • இது, தேவனுக்கும், இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சாதனம் என்று கூறலாம்.
  • பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தம்முடைய மக்களிடம் பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டார் என்பதை நாம் அறிவோம். 
  • அதிர்ஷ்டவசமாக, இன்று நமக்கு ஊரிம் மற்றும் தும்மீம் தேவையில்லை. 
  • ஏனென்றால் நாம் இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் நேரடியாக தேவனிடம் பேசலாம்.
  • கர்த்தருக்கு நன்றி. 







Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4