30 வேத வினா-விடைகள்

 1. அகோலாள்அகோலிபாள் என்பதின் பொருள் என்ன?

பதில்: அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள்அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்அவர்கள்என்னுடையவர்களாகிகுமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்இவைகளே அவர்களுடைய பெயர்கள்அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும்அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.

 -எசேக்கியேல் 23 : 4


2. அவன் எரிந்து பிராகாசிக்கிற விளக்காய் இருக்கிறான் என்று இயேசு யாரைக் குறித்து கூறினார்?


பதில்: அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூரமனதாயிருந்தீர்கள்.

 -யோவான் 5 : 35


3. பெரேஸ் என்பதன் அர்த்தம் என்ன?


பதில்: பெரேஸ் என்பதற்குஉன் ராஜ்யம் பிரிக்கப்பட்டுமேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும்அர்த்தமாம் என்றான்.

 -தானியேல் 5 : 28


4. யாருடைய இரத்தத்தை பிலாத்து பலிகளோடு கலந்திருந்தான்?


பதில்: பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்அந்த வேளையிலேஅங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

 -லூக்கா 13 : 1 


5. நான் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலம் என்று கூறியது யார்?


பதில்: இப்போதும் கர்த்தாவேஎன் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்நான்உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

 -யோனா 4 : 3


6. பவுல் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என எங்குஏன் கூறுகிறார்?


பதில்:  இப்பொழுது நான் மனுஷரையாதேவனையாயாரை நாடிப் போதிக்கிறேன்மனுஷரையாபிரியப்படுத்தப்பார்க்கிறேன்நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின்ஊழியக்காரனல்லவே.

 -கலாத்தியர் 1 : 10


7. சாலொமோனுடைய நாட்கள் நீடித்திருக்க தேவன் கொடுத்த கட்டளை என்ன?


பதில்:  உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போலநீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டுஎன் வழிகளில் நடப்பாயாகில்உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.

 -1 இராஜாக்கள் 3 : 14


8. ———————————— பாவத்துக்கானாலும், ———————— கீழ்ப்படிதலுக்கானாலும்எதற்குக்கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோஅதற்கே ——————— அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

 

பதில்:  மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

 -ரோமர் 6 : 16


9. “தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ” என எந்த தீர்க்கத்தரிசியை கொண்டு கர்த்தர் கூறுகிறார்?


பதில்:  நான் தீட்டுப்படவில்லைநான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்நீ செய்ததை உணர்ந்துகொள்தாறுமாறாய் ஓடுகிற வேகமானபெண்ணொட்டகம் நீ.

 -எரேமியா 2 : 23


10.எவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று இயேசு கூறுகிறார்?


பதில்:  வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோஅவன் உள்ளத்திலிருந்துஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

 -யோவான் 7 : 38


11. கர்த்தர் யாரை அடங்காத கிடாரி என்று குறிப்பிடுகிறார்?


பதில்: இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறதுஇப்போது கர்த்தர் அவர்களை விஸ்தாரமானவெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையப்பண்ணுவார்.

 -ஓசியா 4 : 16


12. யோசுவாவின் மறுபெயர் என்ன?


பதில்: தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளேநூனின் குமாரனாகியஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

 -எண்ணாகமம் 13 : 16


13. எந்த மிருகம் தும்முகையில் ஒளி வீசும்?


பதில்: லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?

 -யோபு 41 : 1 

அது தும்முகையில் ஒளிவீசும்அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.

 -யோபு 41 : 18


14. “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்” என்று பவுலிடம்கூறியது யார்?


பதில்: அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கிநான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச்சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.

 -அப்போஸ்தலர் 26 : 28


15. யாக்கோபு ஓடிப்போனதை எத்தனை நாள் கழித்து லாபானுக்கு அறிவித்தார்கள்?


பதில்:  யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.

 -ஆதியாகமம் 31 : 22


16. வெள்ளிக்குக் ——————, பொன்னுக்குப் ————— சோதனைமனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும்——————— சோதனை.


பதில்:  வெள்ளிக்குக் குகையும்பொன்னுக்குப் புடமும் சோதனைமனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியேசோதனை.

 -நீதிமொழிகள் 27 : 21


17. தாய்,தகப்பன் இல்லாமல் அனாதையாய் இருந்த போதும்நாட்டை ஆளும்போதும் தன்னை வளர்த்தவரின்சொற்கேட்டு நடந்தது யார்?


பதில்: எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடிதன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும்தெரிவிக்காதிருந்தாள்எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோலஇப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.

 -எஸ்தர் 2 : 20


18. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் பேதுரு குணமாக்கிய திமிர்வாதக்காரரின் பெயர் என்ன?


பதில்: பேதுரு அவனைப் பார்த்துஐனேயாவேஇயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்நீ எழுந்துஉன்படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான்உடனே அவன் எழுந்திருந்தான்.

 -அப்போஸ்தலர் 9 : 34


19. இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா” என்று யார் யாரைப் பார்த்து கூறியது?


பதில்: ஆகாப் எலியாவைக் கண்டபோதுஆகாப் அவனை நோக்கிஇஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவாஎன்றான்.

 -1 இராஜாக்கள் 18 : 17


20. அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த நூற்றுக்கு அதிபதி யார்?


பதில்: நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோதுபவுலையும் காவலில்வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்குஅதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.

 -அப்போஸ்தலர் 27 : 1


21. கர்த்தருடைய தேவாலயத்தை கட்ட தேவையான கேதுரு மரத்திற்கு சாலொமோன் எந்த ராஜாவிடம் வேண்டுதல்செய்தார்?


பதில்: அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:

 -1 இராஜாக்கள் 5 : 2


22. பவுலை பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல் காத்தது யார்?


பதில்: தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்றுதமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக்காத்தான்;

 -2 கொரி 11 : 32


23. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட எத்தனையாவது வருஷத்தில்,சாலொமோன் தேவஆலயத்தை கட்டத்தொடங்கினான்?


பதில்: இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும்சாலொமோன்இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும்அவன் கர்த்தரின்ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.

 -1 இராஜாக்கள் 6 : 1


24. மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரை உடையவன் யார்?


பதில்: மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியைவிசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடிஅவர்களோடு எதிர்த்துநின்றான்.

 -அப்போஸ்தலர் 13 : 8


25. சங்காரப்பள்ளத்தாக்கென்று அழைக்கப்படும் இடம் எது?


பதில்: ஆதலால்இதோநாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும்இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல்சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

 -எரேமியா 7 : 32


26. மல்கியா புத்தகத்தில் கர்த்தர், “இதோகர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னேஒருவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” என்று  கூறினார்அது யார்?


பதில்: இதோகர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியாதீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

 -மல்கியா 4 : 5


27. பஸ்கூர் என்பவர் யார்அவரின் மறுபெயர் என்ன?


பதில்: எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய குமாரனும்கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

 -எரேமியா 20 : 1


மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்அப்பொழுது எரேமியாஅவனை நோக்கிகர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல்மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார்.

 -எரேமியா 20 : 3


28. பேதுரு யார் யாரிடம் “இயேசுவை தெரியாது” என மறுதலித்தார்?  அந்த 3 பேர் யார்?

 

பதில்: அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான்அப்பொழுதுவேலைக்காரிஒருத்தி அவனிடத்தில் வந்துநீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்.

 -மத்தேயு 26 : 69


அதற்கு அவன்நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.

 -மத்தேயு 26 : 70


-அவன்வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டுஇவனும் நசரேயனாகியஇயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னான்.

 -மத்தேயு 26 : 71


-சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்துமெய்யாகவே நீயும் அவர்களில்ஒருவன்உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.

 -மத்தேயு 26 : 73


29. யார் தன் மகனுக்கு “இக்கபோத்” என்று பெயர் சூட்டியதுஏன்?


பதில்: பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்அவள் தேவனுடைய பெட்டிபிடிபட்ட செய்தியையும்தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோதுஅவள்கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.

 -1 சாமுவேல் 4 : 19


தேவனுடைய பெட்டி பிடிபட்டுஅவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால்அவள்மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லிஅந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.

 -1 சாமுவேல் 4 : 21


30. ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் பெரியவன் யார் என்று இயேசு கூறுகிறார்?


பதில்: ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லைஆகிலும்பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குமெய்யாகவே சொல்லுகிறேன்.

 -மத்தேயு 11 : 11


31. எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடியார் அவனுக்குச் சகாயமாயிருந்தான்?


பதில்: ஆகிலும் எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடிசாப்பானுடைய குமாரனாகியஅகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.  

 -எரேமியா 26 : 24


32. நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் ———————— இளைக்கப்பண்ணும்விரும்பினது வரும்போதோ————————- இருக்கும்.

 பதில்: நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்விரும்பினது வரும்போதோஜீவவிருட்சம்போல் இருக்கும்.

 -நீதிமொழிகள் 13 : 12


33. கர்த்தர் ஒத்னியேல் கையில் ஒப்புகொடுத்தமெசொப்பொத்தாமியாவின் ராஜா யார்


பதில்: அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால்அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்துயுத்தம்பண்ணப்புறப்பட்டான்கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலேஒப்புக்கொடுத்தார்ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது.

 -நியாயாதிபதிகள் 3 : 10


34. அப்போஸ்தலர் புத்தகத்தின் படிஅத்தேனே பட்டணத்தில்பவுல் எதைக் குறித்து பிரசிங்கித்தார்


பதில்: அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள்சிலர்இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள்சிலர்இவன் அந்நிய தேவதைகளைஅறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள்அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப்பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.

 -அப்போஸ்தலர் 17 : 18


35. நோவா’ என்ற பெயரின் அர்த்தம் என்ன?


பதில்: கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும்நம்முடைய கைகளின் பிரயாசத்திலும்இவன்நம்மைத் தேற்றுவான் என்று சொல்லிஅவனுக்கு நோவா என்று பேரிட்டான்.

 -ஆதியாகமம் 5 : 29


36. சாலொமோனின் நீதிமொழிகள் புத்தகத்தின் மூலம் நாம் எவைகளை பற்றிய உபதேசத்தை அடையலாம்


பதில்: விவேகம்நீதிநியாயம்நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

 -நீதிமொழிகள் 1 : 3


37. கர்த்தர்கானானில் எத்தனை ஜனம் பெருத்த ஜாதிகளை அழித்து அந்த தேசத்தை இஸ்ரவேலிற்கு சுதந்தரமாகபங்கிட்டு கொடுத்தார்அவைகள் யாவை?


பதில்: நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணிஉன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர்கிர்காசியர்எமோரியர்கானானியர்பெரிசியர்ஏவியர்எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,

 -உபாகமம் 7 : 1


38. சாலொமோன் ராஜா தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்திய இரண்டு தூண்களின் பெயர் என்ன?


பதில்: அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்குயாகீன் என்றும்இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.

 -1 இராஜாக்கள் 7 : 21


39. பார்வோன் யோசேப்புக்கு என்ன பெயர் வைத்துஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாக கொடுத்தான்?


பதில்: மேலும்பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டுஓன் பட்டணத்து ஆசாரியனாகியபோத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்யோசேப்புஎகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

 -ஆதியாகமம் 41 : 45


40. வாலிபரின் அலங்காரம் எது?


பதில்: வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.

 -நீதிமொழிகள் 20 : 29


41. பென்யமீனுக்கு அவன் தாய் என்ன பேரிட்டாள்?


பதில்: மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போதுஅவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்அவன்தகப்பனோஅவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

 -ஆதியாகமம் 35 : 18


42. சாமுவேல் மிஸ்பாவுக்கும்சேணுக்கும் நடுவே ஒரு கல்லை நிறுத்தி என்ன பெயரிட்டார்?


பதில்: அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்துமிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்திஇம்மட்டும் கர்த்தர்எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லிஅதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

 -1 சாமுவேல் 7 : 12


43. சவுலை கொன்ற அமலேக்கிய இளைஞனுக்கு தாவீது கொடுத்த தண்டனை என்ன?


பதில்: தாவீது அவனை நோக்கிகர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப்பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி,

 -2 சாமுவேல் 1 : 14

வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டுநீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்துஅவனை வெட்டு என்றான்அவன்அவனை வெட்டினான்அவன் செத்தான்.

 -2 சாமுவேல் 1 : 15


44. ரோமர் புத்தகத்தின்படிஎப்பொழுது பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது என்று பவுல் கூறுகிறார்?


பதில்: நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால்பாவம் உங்களைமேற்கொள்ளமாட்டாது.

 -ரோமர் 6 : 14


45. கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியிட நான் இலவசமாய் வாங்க மாட்டேன்” யார் யாரிடம் கூறியது?


பதில்: ராஜா அர்வனாவைப் பார்த்துஅப்படியல்லநான் இலவசமாய் வாங்கிஎன் தேவனாகிய கர்த்தருக்குசர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல்அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லிதாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.

 -2 சாமுவேல் 24 : 24


46. ஊருக்குத் திரும்பிப்போகும்போதுதன்  இரதத்திலே உட்கார்ந்து ஏசாயா தீர்க்கத்தரிசியின் ஆகமத்தைவாசித்து கொண்டிருந்தவர் யார்?


பதில்: அந்தப்படி அவன் எழுந்துபோனான்அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகேஎன்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகியஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;

 -அப்போஸ்தலர் 8 : 27

ஊருக்குத் திரும்பிப்போகும்போதுதன் இரதத்திலே உட்கார்ந்துஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தைவாசித்துக் கொண்டிருந்தான்.

 -அப்போஸ்தலர் 8 : 28


47. சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் யார்?


பதில்: யோகனான் அசரியாவைப் பெற்றான்சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரியபணிவிடையைச் செய்தவன் இவன்தான்.

 -1 நாளாகமம் 6 : 10


48. —————— தூங்கிவிழப்பண்ணும்; ———————- பட்டினியாயிருப்பான்.


பதில்: சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

 -நீதிமொழிகள் 19 : 15


49. மீதியானியரை எதிர்த்த நியாயாதிபதி யார்


பதில்:அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.

 -நியாயாதிபதிகள் 7 : 7


50. புலம்பல் புத்தகத்தின்படிநாம் எதற்காக

நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது


பதில்: கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

 -புலம்பல் 3 : 26


51. நீ பயப்படாமல் பேசுமவுனமாயிராதே” யார் யாரிடம் கூறியது?


பதில்: இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகிநீ பயப்படாமல் பேசுமவுனமாயிராதே;

 -அப்போஸ்தலர் 18 : 9

நான் உன்னுடனேகூட இருக்கிறேன்உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லைஇந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.

 -அப்போஸ்தலர் 18 : 10


52. செத்த ஈக்கள் ————— ————————— நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்ஞானத்திலும் கனத்திலும்பேர்பெற்றவனைச் —————-அப்படியே செய்யும்.


பதில்: செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்ஞானத்திலும்கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.

 -பிரசங்கி 10 : 1


53. உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசை எடுத்தவன் நான் தான்” யார் யாரிடத்தில் சொன்னது?


பதில்: அவன் (மீகா) தன் தாயை நோக்கிஉன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றேஅதைக்குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயேஅந்தப் பணம்இதோஎன்னிடத்தில் இருக்கிறதுஅதைஎடுத்தவன் நான்தான் என்றான்அதற்கு அவன் தாய்என் மகனேநீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.

 -நியாயாதிபதிகள் 17 : 2


54. அப்போஸ்தலர் புத்தகத்தின்படிபவுலை அழைப்பித்துகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன்சொல்லக்கேட்டது யார்?


பதில்: சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்துபவுலைஅழைப்பித்துகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.

 -அப்போஸ்தலர் 24 : 24


55. எஸ்ராவின் காலத்தில் பாபிலோனை அரசாண்ட ராஜாவின் பெயர் என்ன?


பதில்: அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள்வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:

 -எஸ்றா 8 : 1


56. நீதிமானுடைய பலன் ———————-; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ———————-.


பதில்: நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

 -நீதிமொழிகள் 11 : 30


57. தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோலமுதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்” சொன்னதுயார்


பதில்: அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:

 -யோபு 4 : 1

தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோலமுதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.

 -யோபு 5 : 26


58. எது கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது?


பதில்: நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதேஉங்கள் ஜீவன் எப்படிப்பட்டதுகொஞ்சக்காலந்தோன்றிப்பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

 -யாக்கோபு 4 : 14


59. பழைய ஏற்பாட்டில்யாருக்கு ஐந்து குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்குமாரர்கள் இல்லை?


பதில்: யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில்மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனானகிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள்நோவாள்ஒக்லாள்மில்காள்திர்சாள் என்பவர்கள் வந்து,

 -எண்ணாகமம் 27 : 1


60. ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் ——————— பாராட்டுகிறவனும் உண்டுமிகுந்த செல்வமிருக்கத்தன்னைத் ———————— பாராட்டுகிறவனும் உண்டு.


பதில்: ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டுமிகுந்த செல்வமிருக்கத் தன்னைத்தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.

 -நீதிமொழிகள் 13 : 7


61. தாவீது ராஜா யாருடைய ஆலோசனையை பைத்தியமாக்கி விடுவீராக என்று தேவனிடம் விண்ணப்பம்பண்ணினார்?


பதில்: அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்குஅறிவிக்கப்பட்டபோதுதாவீதுகர்த்தாவேஅகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராகஎன்றான்.

 -2 சாமுவேல் 15 : 31


62. எப்பொழுது உன் சரீரம் வெளிச்சமாயிருக்கும் என மத்தேயு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?


பதில்: கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறதுஉன் கண் தெளிவாயிருந்தால்உன் சரீரம் முழுவதும்வெளிச்சமாயிருக்கும்.

 -மத்தேயு 6 : 22


63. நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள் என யார் யாரிடம் கூறியது?


பதில்: போவாஸ்-ரூத் ; இப்போதும் மகளேநீ பயப்படாதேஉனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்நீ குணசாலி என்பதை என்ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

 -ரூத் 3 : 11


64. எந்த நாட்டு கிராமத்தில் உள்ள பத்து குஷ்டரோகிகளை இயேசு குணமாக்கினார்


பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில்அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாகநடந்துபோனார்.

 -லூக்கா 17 : 11


65. எந்த யூதாவின் ராஜா தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும்பாபிலோன் ராஜாவின் மனுஷருக்குகாண்பித்தான்?


பதில்: எசேக்கியா அவர்களை அங்கிகரித்துபின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும்வெள்ளியையும்பொன்னையும்கந்தவர்க்கங்களையும்நல்ல பரிமளதைலத்தையும்தன் ஆயுதசாலைஅனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்தன் அரமனையிலும் தன்ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

 -2 இராஜாக்கள் 20 : 13


66. மதியீனனுடைய வழி ———————————;ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ —————————.


பதில்: மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோஞானமுள்ளவன்.

 -நீதிமொழிகள் 12 : 15


67. எந்த தீர்க்கத்தரிசியை கர்த்தர் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார்


பதில்: கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்துகர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய்எலும்புகள்நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,

 -எசேக்கியேல் 37 : 1


68. யோவான் புத்தகத்தின்படிஎவன் பாவஞ்செய்யான்ஏன் பாவஞ்செய்யமாட்டான்?


பதில்: தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறதுஅவன்தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

 -1 யோவான் 3 : 9


69. உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்ததுஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் உன் சிநேகம் அதிகமாயிருந்தது.” இது யார் யாரிடம் கூறியது?


பதில்: தாவீது to யோனத்தான் 

என் சகோதரனாகிய யோனத்தானேஉனக்காக நான் வியாகுலப்படுகிறேன்நீ எனக்கு வெகுஇன்பமாயிருந்தாய்உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்ததுஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும்அதிகமாயிருந்தது.

 -2 சாமுவேல் 1 : 26


70. தேவன் எதன்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் என்று பவுல்பிலிப்பியர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்?


பதில்: ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில்உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

 -பிலிப்பியர் 2 : 13


71. அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் என்ன செய்யக் கூடாது என பிரசங்கி சொல்கிறார்?


பதில்: அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதேஇணங்குதல் பெரியகுற்றங்களையும் அமர்த்திப்போடும்.

 -பிரசங்கி 10 : 4


72. எதற்கு உடன்படாமல் கடிந்துகொள்ள வேண்டும் என பவுல் எபேசு சபைக்கு எழுதுகிறார்?


பதில்: கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல்அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

 -எபேசியர் 5 : 11


73. தாவீது எப்ரோனிலும்எருசலேமிலும் அரசாண்ட வருடங்கள் எத்தனை?


பதில்: தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்அவன் எப்ரோனில் ஏழு வருஷமும்எருசலேமில்முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.

-1 இராஜாக்கள் 2 : 11


74. வேதத்தில் உள்ள மிக நீளமான பெயர் என்ன?


பதில்: பின்னும் கர்த்தர் என்னை நோக்கிநீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலேமகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.

 -ஏசாயா 8 : 1


ரோமர் புத்தகம்


1. ரோமாபுரியாருக்கு ஆவிக்குரிய வரங்கள் ஏன் தேவைப்பட்டது?


பதில்: நீங்கள் ஸ்திரப்படுவதற்காக (strengthen)ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,

 -ரோமர் 1 : 10


2. வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது  எது? 


பதில்: சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 -ரோமர் 1 : 18


3. தேவனை அறிந்தும் மகிமைப்படுத்தாதவர்களை, அறிவை பற்றிக் கொண்டிருக்க மனதில்லாதவர்களையும் தேவன் எதற்கெல்லாம் ஒப்புக்கொடுத்தார்? 


பதில்: அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

 -ரோமர் 1 : 21


தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

 -ரோமர் 1 : 28


4. தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறது? சரியா? தவறா?


பதில்: சரி

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

 -ரோமர் 2 : 2


5. ——————-குணப்படும்படி ஏவுகிறது. கோபாக்கினை நாளிலே——————-குவித்து கொள்கிறாயே. 


பதில்: அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

 -ரோமர் 2 : 4

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

 -ரோமர் 2 : 5


6. கேட்கிறவர்களல்ல, செய்கிறவர்களே நீதிமான்கள்- எதை?


பதில்: நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

 -ரோமர் 2 : 13


7. ஒரு யூதனுடைய விசேஷித்த மேன்மை எது?


பதில்: அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

 -ரோமர் 3 : 2


8. பாவத்தை குறித்த அறிவு, நீதியினால் வருகிறது. சரியா? தவறா?


பதில்: தவறு

இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

 -ரோமர் 3 : 20


9.விருத்தசேதனமில்லாதவர்களை எதன் மூலம் நீதிமான்களாக்குகிறார் தேவன்?


பதில்: விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

 -ரோமர் 3 : 30


10. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்று என்னப்படும். சரியா? தவறா? 


பதில்: தவறு

கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.

 -ரோமர் 4 : 4


11. கிரியை செய்யாமல் விசுவாசம் வைக்கிறவனுக்கு நீதியாக என்னப்படுவது எது? 


பதில்: ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

 -ரோமர் 4 : 5


12. விசுவாசம் வீணாய் போகும் வாக்குதத்தமும் அவமாகும். எப்போது? 


பதில்: நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும்.

 -ரோமர் 4 : 14


13. இயேசு ஒப்புக்கொடுக்கப்பட்டும், எழுப்பப்பட்டும் இருக்கிறார். எதற்காக?


பதில்: அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.  

 -ரோமர் 4 : 25


14. எந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது?


பதில்: மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

 -ரோமர் 5 : 5


 15. தேவனுக்கு சத்துருக்களாயிருந்த நாம் எதனாலே அவருடன் ஒப்புரவாக்கப்பட்டோம்?


பதில்: நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

 -ரோமர் 5 : 10


16. மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. சரியா? தவறா?


பதில்: சரி

ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

 -ரோமர் 5 : 15


17. ————————அநேக குற்றங்களை நீக்கி நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.


பதில்: மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

 -ரோமர் 5 : 16


18. அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் —————-னாலே கிறிஸ்துவுடனே அடக்கம் பண்ணப்பட்டோம். 


பதில்: மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

 -ரோமர் 6 : 4


19. நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியவை எவை?


பதில்: நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

 -ரோமர் 6 : 13


20. பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமையாகும் போது கிடைக்கும் பலன்?


பதில்: இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

 -ரோமர் 6 : 22


21. ——————-இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் அறிந்தேனேயன்றி மற்றபடி அறியவில்லை. 


பதில்: ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.

 -ரோமர் 7 : 7


22. ஆவியின் சிந்தையோ —————, ——————.


பதில்: மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

 -ரோமர் 8 : 6


23. தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் ——————.


பதில்: மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

 -ரோமர் 8 : 14


24. தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு மிகுந்த ஆவலோடு காத்திருப்பது எது?


பதில்: மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

 -ரோமர் 8 : 19


25. வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்வது யார்? 


பதில்: அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

 -ரோமர் 8 : 26


26. தேவன் நம் பட்சத்திலிருக்கிறார். தேவனிடத்தில் இல்லை. எது?


பதில்: இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

 -ரோமர் 8 : 31

தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

 -ரோமர் 2 : 11


27. வேண்டுதல் செய்கிற இருவர் யார், யார்? 


பதில்: ஆவியானவர்,கிறிஸ்து


அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

 -ரோமர் 8 : 26

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

 -ரோமர் 8 : 27

ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

 -ரோமர் 8 : 34


28. பரிசுத்தமாயும், நீதியாயும், நன்மையாயும் இருக்கிறது எது? 


பதில்: ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.

 -ரோமர் 7 : 12


29. மகிமையும், கணமும், சமாதானமும் உண்டாகும். யாருக்கு?


பதில்: முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

 -ரோமர் 2 : 10


30. உலகத்தை சுதந்தரிப்பான் என்ற வாக்குத்தத்தம் யாருக்கு உண்டானது? 


பதில்: அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

 -ரோமர் 4 : 13

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4