Lord, Help me praise at all the times
Lord, Help me praise at all the times
ஆண்டவரே, எப்போதும் துதித்து கொண்டிருக்க எனக்கு உதவுங்கள்
Methods of Praise (துதியின் முறைமைகள்)
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
-சங்கீதம் 71 : 8
-சங்கீதம் 71 : 8
A. Congregational Worship Service (சபையின் வழிபாட்டு முறைமை):
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
-சங்கீதம் 100 : 4
B. Singing of Psalms (சங்கீதம்) Hymns (கீர்த்தனை) and Spiritual Songs (ஆவிக்குரிய பாடல்கள்):
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
-சங்கீதம் 96 : 1
கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
-சங்கீதம் 96 : 2
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
-எபேசியர் 5 : 19
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
-கொலோசெயர் 3 : 16
a. Singing with the Understanding(புரிதலுடன் or with
the Spirit (ஆவி):
என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
-1 கொரி 14 : 14
இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
-1 கொரி 14 : 15
C. Musical Praise (இசையின் மூலம் துதித்தல்) -Instrumental (வாத்தியங்களின் இசை):
a. Horns (கொம்புகள்) and trumpets (எக்காளங்கள்), flute (குழல்), harp (சுரமண்டலம்), tambourines(தம்புரு) and cymbals(ஓசையுள்ள கைத்தாளங்கள்).
எக்காளதொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
-சங்கீதம் 150 : 3
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
-சங்கீதம் 150 : 4
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
-சங்கீதம் 150 : 5
D. In the Congregation and Among the Nations (சபையிலும், தேசங்கள்தோறும்)
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
-சங்கீதம் 22 : 22
இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
-சங்கீதம் 18 : 49
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
-சங்கீதம் 96 : 3
கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
-சங்கீதம் 96 : 4
a. உங்களை அழைத்தவரின் நாமத்தை புகழ்ந்து பாடுங்கள்:
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
-1 பேதுரு 2 : 9
b. Mission Work (தேவ வேலை):
E. Living for God's Glory (தேவ மகிமை) and honor (மரியாதை):
a. Matt 5:16 - “Let your light so shine before men…”:
தேவனின் மகிமைக்காக வாழ்வது:
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
-மத்தேயு 5 : 16
b. Phil 4:11 - “fruits of righteousness”:
என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
-பிலிப்பியர் 4 : 11
Reasons to Praise:
1) சங் 145:3
2) சங் 145:8
3) சங் 145:14
4) சங் 145:17
5) சங் 145:20
6) சங் 146:7
7) சங் 146:8
8) சங் 146:9
9) சங் 146:10
10) சங் 147:2
11) சங் 147:3
12) சங் 147:5
13) சங் 147:6
14) சங் 147:8
15) சங் 147:9
16) சங் 148:13
17) சங் 150:2
High Praise (கர்த்தரை உயர்த்தும் துதி):
அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
-சங்கீதம் 149 : 8
Godly Worship (தேவ வழிபாடு) and Spiritual Welfare: (ஆவிக்குரிய நன்மைகள்):
- சங் 149-ல் தேவனுடைய மக்களின் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியைம், கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும்(Bible) இருக்க வேண்டும் என்று பார்க்கிறோம்.
- பிசாசை வேறு எந்த வகையில் எதிர்கொள்வதை விட துதி பிசாசை மிக விரைவாக தோற்கடிக்கிறது.
- துதி என்பது நாம் அணியும் ஒரு ஆடை.
- அது நம் மனதை தோல்வியிலிருந்தும், எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாக்கும்.
- இந்த ஆடை(துதி) வெறும் உதடுகளில் இருந்து வராமல், இதயத்தின் ஆழத்தில் இருந்து உண்மையாக வர வேண்டும்.
- துதி எப்போதும் தேவனுடைய வார்த்தையை உள்ளடக்கியது.
- அவருடைய வார்த்தையின்படி துதிக்க வேண்டும்.
- அவரின் நல்ல குணங்களை பற்றி சொல்லி தேவனைத் துதிக்க வேண்டும்.
- தேவனைக் கனப்படுத்தவும், துதிக்கவும் வேண்டும் என்ற நமது விருப்பமும் அதிகமாக, வலுவாக இருக்க வேண்டும்.
- மேலும் நாம் சாத்தானின் ராஜ்யத்திற்கும், எல்லா தீமைக்கும் எதிராக நிற்க வேண்டும்.
- துதி என்பது ஒரு போர் நிலை!
- நாம் கர்த்தரை அவர் யார் என்பதற்காகவும், அவருடைய பண்புகளுக்காகவும், அவருடைய திறமைக்காகவும் வணங்க வேண்டும்.
- அப்போது நாம் அவர் வல்லமையை காண்போம்.
- துதியும் வழிபாடும் எதிரியைக் குழப்பும்.
- நீங்கள் தயாராக இருங்கள்; சாத்தானின் வீழ்ச்சியை காண்பீர்கள்.
- தேவன் எந்தவொரு போரிலும் தோற்பதில்லை.
- தேவனுக்கு ஒரு திட்டவட்டமான போர் திட்டம் உள்ளது.
- நாம் எப்போது அதைப் பின்பற்றுகிறோமோ அப்போது அவரோடு கூட வெற்றி பெறுவோம்!
Comments
Post a Comment