7 Signs of a Desirable Friend ; 7 விரும்பத்தக்க நண்பனின் அடையாளங்கள்

7 Signs of a Desirable Friend  
விரும்பத்தக்க நண்பனின் அடையாளங்கள்

1) விரும்பத்தக்க நண்பன் நட்பில் உண்மையாக இருப்பான். 


சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

 -நீதிமொழிகள் 27 : 6


2) விரும்பத்தக்க நண்பன் உங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவான். 


பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

 -நீதிமொழிகள் 27 : 9


3) விரும்பத்தக்க நண்பன் உங்களை சிறந்த நபராக மாற்றிக்கொள்ள உதவுவான். 


இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேதிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.

 -நீதிமொழிகள் 27 : 17


Proverbs 27:17 Iron sharpeneth iron; so a man sharpeneth the countenance of his friend.


4) விரும்பத்தக்க நண்பன் உங்களை புத்திசாலியாக மாற்ற உதவுவான். 


ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

 -நீதிமொழிகள் 13 : 20


5) விரும்பத்தக்க நண்பன் கடினமான காலங்களில் கூட உங்களுடன் நெருக்கமாக இருப்பான். 


சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.  

 -நீதிமொழிகள் 18 : 24


6) விரும்பத்தக்க நண்பன் நீங்கள் முட்டாள்தனமான செயல்களைச் செய்தாலும்கூட உங்களை நேசிப்பான்உங்களுடன் நிற்பான். 


சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

 -நீதிமொழிகள் 17 : 17


7) ஒரு விரும்பத்தக்க நண்பன் வாழ்க்கையில் உங்களுக்கு சிக்கல்கள் வரும் போது உங்களுக்கு உதவுவான். நீங்கள் தனியாக பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. 


ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.

 -பிரசங்கி 4 : 10


மேலே பட்டியலிடப்பட்டுள்ள குணங்களைக் கொண்ட நண்பர்கள் உங்களிடம் இருந்தால்அந்த நட்பை ஜெபத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4