ஆசகேலின் வீழ்ச்சி / The Fall of Asahel

          ஆசகேலின் வீழ்ச்சி

2 சாமுவேல் 2 வது அதிகாரத்தில் இரு கூட்டத்தாருக்கு 
நடுவே நடந்த யுத்தத்தை பற்றியும், அதில் ஆசகேல் தன் தற்பெருமையின் மூலம் இறந்ததைப் பற்றியும் இங்கே பார்க்க இருக்கிறோம். 

அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும், எழுந்து ஒரு பக்கமாய்ப் போய்,
 -2 சாமுவேல் 2 : 15

ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத்அசூரிம் என்னப்பட்டது.
 -2 சாமுவேல் 2 : 16

அப்னேர் யார்? 
  • பெயர் அர்த்தம்: ஒளியின் தந்தை.
  • இஸ்ரவேலின் ராஜா.
  • சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் குமாரன்.
  • சவுலின் படைத்தலைவன்.
  • வசனக்குறிப்பு: 1 சாமுவேல் 14:50, 20:25.
இஸ்போசேத் யார்?
  • சவுலின் குமாரன்.
  • இஸ்ரவேலின் ராஜா.
ஆசகேல் யார்? 
  • பெயர் அர்த்தம்: தேவனால் உருவாக்கப்பட்டது. 
  • செருயாவின் இளைய மகன். 
  • தாவீது ராஜாவின் தங்கையின் மகன்.
  • தாவீதின் தளபதி யோவாப் மற்றும் அபிசாய் ஆகிய இருவரின் இளைய சகோதரர்.
  • வசனக்குறிப்பு: 2 சாமுவேல் 2 & 3. 
செருயா யார்? 
  • ஈசாயின் மகள்.
  • தாவீது ராஜாவின் சகோதரி.
  • அபிகாயிலின் சகோதரி.
  • வசனக்குறிப்பு: 1 நாளாகமம் 2:13-17; 2சாமுவேல் 17:25.
2 சாமுவேல் 2 சம்பவம்:
  • இங்கே, பெருமை(Pride) என்ன செய்கிறது என்று பார்க்கப் போகிறோம். 
  • 2 சாமுவேல் 2 இல் அப்னேர் மற்றும் ஆசகேலைப் பற்றிய ஒரு கதை உள்ளது. 
  • அதைத் தான் இங்கு பார்க்க உள்ளோம். 
  • 2 சாமுவேல் 2:18-23 ல் வரக் கூடிய சம்பவம், ஆவிக்கும், மாம்சத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை சுட்டிக் காண்பிக்கிறது. 
மோதல்; அப்னேர்-தாவீதின் தளபதிகள்:
  • ஒரு நாள் அப்னேருக்கும், தாவீதின் தளபதிகளுக்கும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. 
  • தாவீது ராஜ்யத்தைக் கைப்பற்றவில்லை; அவர் இன்னும் யூதாவின் மீது ஆட்சி செய்கிறார்.
  • அப்னேரால் அங்கு வைக்கப்பட்ட இஸ்போசேத் இஸ்ரவேலில் ஆட்சி செய்கிறார்.  
  • அதனால் அவர்கள் அங்கும் இங்கும் மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 
  • எனவே, அப்னேர் யோவாபை அழைக்க முடிவுசெய்து, எதிரெதிரே ஒரு இடத்தில் சந்திப்பதாகக் கூறுகிறான்.
அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும், எழுந்து ஒரு பக்கமாய்ப் போய்,
 -2 சாமுவேல் 2 : 15

சண்டையிடும் போட்டி-சிலம்பம்:
  • ஒரு போட்டி (விளையாட்டு போட்டி) ஒன்று நடத்துவோம் என்று முடிவெடுத்தனர்.
  • இந்த விளையாட்டில், இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள். 
  • ஒரு கூட்டம் ஒருபுறமும், மற்றொரு கூட்டம் மறுபுறமும் அமர்ந்திருந்தனர். 
  • பின்னர் இளைஞர்கள் சண்டையிடப் போகிறார்கள். 
  • தாவீது மற்றும் கோலியாத்தின் கதையைப் போலவே இங்கும் சில ஆயிரம் பேர் வந்து சண்டையிடுகிறார்கள்.
  • இதுதான் நடக்கிறது.
தீவிரமான சண்டை:
  • இரு தரப்பிலும் 12 பேரை தேர்வு செய்தனர். 
  • ஒட்டுமொத்த யுத்தத்தின் வெற்றியாளர் யார் என்று நிர்ணயம் செய்யும் வேளையில் ஒருவரையொருவர் சந்திப்பார்கள். 
  • அவர்கள் ஒருவரையொருவர் தங்கள் தலைமுடியை பிடித்து, வாளினால் குத்தி தள்ளுகிறார்கள் என்றும், 
  • 24 இளைஞர்கள் ஒரே நேரத்தில் இறக்கிறார்கள் என்றும் வேதம் சொல்கிறது.
  • இப்போது இது இன்னும் பெரிய சண்டையாக மாறிவிட்டது. 
  • சண்டை போடும் இந்த 24 பேராலும் சண்டை முடிவுக்கு வராததால் இருவருக்கும் இடையே இப்போது தீவிரமான சண்டை நடந்து வருகிறது.
  • அதனால் கதை இப்போது இங்கே ஒருங்கிணையத் தொடங்குகிறது. 
அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.
 -2 சாமுவேல் 2 : 17

ஆசகேல்: 

அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
     -2 சாமுவேல் 2 : 18
    • ஆசகேல் ஏற்கனவே தாவீதின் படையில் (Spiritual Winning team) உள்ளான். 
    • பெரிய பதவியில் உள்ளான். 
    • ஆசகேல் வரமளிக்கப்பட்டவன். 
    • அந்த நாட்களில் இராணுவத்தில் வேகமாக ஓடக்கூடியவர்.
    • ஆனால் ஒரு விஷயம், அவர் அனுபவம் வாய்ந்தவர் அல்ல என்பதை மறந்துவிட்டார். 
    • ஆனால் அதைவிட முக்கியமாக ஆசகேல் பெருமிதத்தால் நிறைந்திருந்தான். 
    ஆசகேல்- அப்னேரை பின்தொடருகிறான்: 
    • ஆசகேல் அப்னேரைப் பின்தொடரத் தொடங்குகிறான். 
    • இது நடந்த பிறகு, இந்த விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்பதை அப்னேர் உணர்கிறான்.
    • அதனால் அவன் பின்வாங்கத் தொடங்குகிறான். 
    • ஆனால் ஆசகேல் அவனைப் பின் தொடர முடிவு செய்கிறான். 
    • அப்னேரை மட்டுமே தொடர முடிவு செய்தான்.  
    • The Little Fish (ஆசகேல்) is chasing the Big Fish (அப்னேர்).
    அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனை விட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
     -2 சாமுவேல் 2 : 19

    அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
     -2 சாமுவேல் 2 : 20

    பின்தொடர்வதை நிறுத்து:
    • ‘என்னைப் பின்தொடர்வதை நிறுத்து’ என்று அப்னேர் ஆசகேலிடம் கூறுகிறான். 
    • உன் வயதிற்கு ஏற்ற ஒருவரை நீ தேர்வு செய்துகொள் என்று அப்னேர் கூறுகிறான். 
    • ஆசகேல் கேட்க மறுத்து, அவனை தொடர முடிவு செய்தான்.  
    அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
     -2 சாமுவேல் 2 : 21

    சொந்த முயற்சி:
    • ஆனால் இந்த பையனைப் பற்றி மிகவும் சுவாரஸ்யமான ஒன்று இருக்கிறது. 
    • ஆசகேல் ‘அபிசாயிக்கும் யோவாபுக்கும் சகோதரன்’ என்பதும், அனைவரும் ‘தாவீதின் உறவினர்கள்’ என்பதும் உங்களுக்குத் தெரியும். 
    • எனவே இந்த பையன் தனது சொந்த முயற்சியால் இதைச் சாதிக்க விரும்புகிறான். 
    • சாதித்து முடித்த கதையை அனைவரிடமும் பகிர விரும்புகிறான். 
    • அதனால்தான் பின்தொடர்வதை நிறுத்த சொன்னாலும் கூட அவன் கேட்கவில்லை. 
    ஆசகேல் மரணம்:
    • ‘தான் எதுவும் செய்யவில்லை’ என்றாலும் இந்த பையன் என்னைக் விடப் போவதில்லை என்பதை அப்னேர் உணர்ந்தார். 
    • எனவே அவர் தனது ஈட்டியின் பின்புறத்தைப் பயன்படுத்தி, ஆசகேலின் 5வது விலா எலும்பின் கீழ் குத்துகிறார்.
    • அங்கேயே ஆசகேல் 
      இறந்துவிடுகிறான். 
    ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
     -2 சாமுவேல் 2 : 23

    2 Samuel 2:23 Howbeit he refused to turn aside: wherefore Abner with the hinder end of the spear smote him under the fifth rib, that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it came to pass, that as many as came to the place where Asahel fell down and died stood still.

    ஐந்தாவது விலா எலும்பின் கீழ் ஏன்? 
    • ஐந்தாவது விலா எலும்பின் கீழ் தான் கல்லீரல் மற்றும் குடல் இருக்கும்.
    • அங்கு வெட்டினால் உடனே மரணமடைந்துவிடுவார்கள்.
    • வேதத்தில் ஐந்தாவது விலா எழும்பில் வெட்டப்பட்டு இறந்தவர்கள் (சாமுவேல் 3:27; 2 சாமுவேல் 4:6; 2 சாமுவேல் 20:10).
    • அப்னேர் நன்கு அனுபவம் வாய்ந்தவர், எங்கு தாக்கினால் இறப்பார்கள் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
    பெருமை:

    சில சமயங்களில் நாம் நினைக்கிறோம்;
    1. தற்பெருமை போன்ற எதுவும் நமக்குள் நுழைய முடியாது.
    2. நாம் திறமையானவர்கள்.
    3. நம் சொந்த முயற்சியால் எதிரியை எதிர்கொள்ள முடியும். 
    • அது மிகத்தவறு. 
    • நாம் அப்படி நினைக்கும் போதே, பிசாசு நமக்குள் வந்து விடுவான். 
    Tombstone Technology:
    • நாம் பாடம் கற்றுக்கொள்வதற்காக, ஒருவர் மரிப்பதைக் குறிக்கும். 
    • இங்கு நமக்கு பாடம் கற்பிக்க, ஆசகேல் மரித்துள்ளான். 
    • சில கிறிஸ்தவர்கள் மிகவும் தாமதமாக தான் உண்மையை புரிந்து கொள்கிறார்கள். 
    • மனிதவாழ்வில் இச்சை, பின்மாற்றம் இருக்கும். ஆனாலும் அதை நாம் கடந்து வர வேண்டும். 
    • ஆசகேலை போல தவறான விளையாட்டை நாம் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. 
    • ஜாக்கிரதை உள்ளவர்களாக வாழ்வோம். 
    இதன் மூலம் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியவை: 
    • நாம் ஒருபோதும் ஒரு விஷயத்தை மறக்க கூடாது. 
    • வெற்றிகளை அடைவது நாம் அல்ல; அது தேவன்.
    • அதனால் நாம் பெருமை கொள்ளக் கூடாது. 
    • அது நிச்சயமாக நம்மை வீழ்த்தும். 
    • எனவே விழிப்புடன் இருங்கள். 
    • பிசாசு நன்கு அனுபவம் வாய்ந்தவன். 
    • அவனுக்கு நம்மை எப்படி வீழ்த்த வேண்டும் என்று தெரியும். 
    • நீங்கள் அவனை தேவனால் எதிர்கொள்ளாவிட்டால்,
    • உங்கள் சொந்த பலத்தால் நீங்கள் அவனை எதிர்கொள்ள நினைத்தால், நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். 
    • தேவனை சார்ந்து வாழ பழகிக் கொள்வோம். 
    • மாம்சத்தின் போராட்டத்தை ஆவியினால் வெல்வோம். 

    Comments

    Popular posts from this blog

    உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

    உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

    உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4