நான் ஏன் தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்

நான் ஏன் தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்

1. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, அவர் என் ஜெபங்களைக் கேட்கிறார். 

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
 -சங்கீதம் 66 : 18
மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
 -சங்கீதம் 66 : 19

2. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, என் வாழ்க்கையில் அவர் பிரசன்னத்தை அதிகமாக என்னால் உணர முடியும். 

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக்கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடேவாசம்பண்ணுவோம்.
 -யோவான் 14 : 23

3. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, எனக்கு அதிக ஞானம் கிடைக்கும். 

அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்குஅவர் கேடகமாயிருக்கிறார்.
 -நீதிமொழிகள் 2 : 7

4. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, நான் அவருடைய நண்பன் என்பதை நிரூபிக்கிறேன். 

நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
 -யோவான் 15 : 14

5. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது,  நான் பாதுகாப்பாக வாழ்வேன்.

என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
 -லேவியராகமம் 25 : 18

6. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, நான் அதிக அன்பான நபராக மாறுகிறேன்.

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம்அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
 -1 யோவான் 2 : 5

7. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, நல்ல விஷயங்கள் என் வாழ்வில் நடக்கும். 

இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.
 -உபாகமம் 11 : 26
இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக்கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
 -உபாகமம் 11 : 27

8. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, நான் மகிழ்ச்சியாக இருப்பேன். 

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
 -நீதிமொழிகள் 29 : 18

9. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, எனக்கு மனஅமைதி கிடைக்கும். 

நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
 -சங்கீதம் 37 : 37

10. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, நான் நீண்ட காலம் வாழ்வேன்.

என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
 -நீதிமொழிகள் 3 : 1
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
 -நீதிமொழிகள் 3 : 2

முடிவுரை:

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள்பாரமானவைகளுமல்ல.
 -1 யோவான் 5 : 3

அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
 -லூக்கா 11 : 28

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்