ஆசகேலின் வீழ்ச்சி / The Fall of Asahel
ஆசகேலின் வீழ்ச்சி 2 சாமுவேல் 2 வது அதிகாரத்தில் இரு கூட்டத்தாருக்கு நடுவே நடந்த யுத்தத்தை பற்றியும், அதில் ஆசகேல் தன் தற்பெருமையின் மூலம் இறந்ததைப் பற்றியும் இங்கே பார்க்க இருக்கிறோம். அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும், எழுந்து ஒரு பக்கமாய்ப் போய், - 2 சாமுவேல் 2 : 15 ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத்அசூரிம் என்னப்பட்டது. - 2 சாமுவேல் 2 : 16 அப்னேர் யார்? பெயர் அர்த்தம்: ஒளியின் தந்தை. இஸ்ரவேலின் ராஜா. சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் குமாரன். சவுலின் படைத்தலைவன். வசனக்குறிப்பு: 1 சாமுவேல் 14:50, 20:25. இஸ்போசேத் யார்? சவுலின் குமாரன். இஸ்ரவேலின் ராஜா. ஆசகேல் யார்? பெயர் அர்த்தம்: தேவனால் உருவாக்கப்பட்டது. செருயாவின் இளைய மகன். தாவீது ராஜாவின் தங்கையின் மகன். தாவீதின் தளபதி யோவாப...