யோவான்ஸ்நானன் ; John, The Baptist

யோவான்ஸ்நானன் ; John The Baptist

யோவான்ஸ்நானனை பற்றிய தீர்க்கத்தரிசனம்:

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
 -ஏசாயா 40 : 3

பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,
 -ஏசாயா 40 : 4

கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
 -ஏசாயா 40 : 5

தீர்க்கத்தரிசனம் புதிய ஏற்பாட்டில் உறுதியாக்கப்படுதல்:

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
 -மத்தேயு 3 : 3

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
 -மாற்கு 1 : 3

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
 -லூக்கா 3 : 4

அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
 -யோவான் 1 : 23
  • நான்கு சுவிசேஷங்களிலும் இந்த தீர்க்கத்தரிசனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயம் மிக முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 
இயேசு யோவான்ஸ்நானனைப் பற்றி சொன்னது: 

இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
 -லூக்கா 7 : 27

ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 -லூக்கா 7 : 28

யோவான்ஸ்நானன்-எலியாவின் ஆவி :
  • மல்கியா 4ம் அதிகாரத்தை வாசித்தால் தெரியும்.
  • இயேசு யோவான்ஸ்நானனை எலியாவின் ஆவி என்று குறிப்பிடுகிறார். 
யோவான்ஸ்நானனின் குடும்பம்: 
  • தந்தை- சகரியா
  • தாய்- எலிசபெத்து
  • கோத்திரம்- லேவி
  • மூதாதையர்- ஆரோன், சாதோக்
  • வம்சம்ஆசாரிய வம்சம்
பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தார்கள்:
  • யோவான்ஸ்நானன் தன் தாயின் கருவில் இருக்கும் பொழுதே பரிசுத்த ஆவியால் நிறைந்தருந்தார் என்று வாசிக்கிறோம். 
  • எலிசபெத்தும் தான் கர்ப்பமடைந்த பின்பு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார் என்று லூக்கா முதலாம் அதிகாரத்தை வாசித்தால் நமக்கு தெளிவாக விளங்கும். 
  • பரிசுத்த ஆவி முதன்முதலில் ஊற்றப்பட்டது அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் தான்.
  • ஆனால் அதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் எலிசபெத்திடமும், அவள் கருவிலும் அசைவாடினார் என்று வாசிக்கிறோம். 
எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
 -லூக்கா 1 : 41

எலிசபெத்து தன் முதிர்வயதில் தான் கர்ப்பமடைந்தார். ஏன்? 
  • யோவான் என்ற ஒரே பிள்ளையை மட்டும் தான் அவள் தன் கர்ப்பத்தில் சுமக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு பிள்ளைகளையே ஆண்டவர் அவர்களுக்கு கொடுக்கவில்லை. 
4 மாதங்கள்- Essenes; 2 மாதங்கள் ஊழியம்:
  • யூத கலாச்சாரத்தின்படி 30 வயதில் தான் ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தங்க முடியும். 
  • எனவே யோவான்ஸ்நானன் தன் 30 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
  • வெளியேறிய ஐந்தாம் மாத தொடக்கத்தில் தான் பிரசிங்கிக்கவே ஆரம்பிக்கிறார். 
  • அப்படியானால், முதல் 4 மாதங்கள் எங்கு இருந்தார். என்ன செய்தார்? 
  • Essenes களோடு வாழ்ந்தார்.
  • Essenes என்றால் யார்?
  • வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
வரலாறு:
தேவாலயம் அசுசிப் பட ஆரம்பித்தது:
  • இந்த சம்பவம் நடக்க 150 வருடங்களுக்கு முன்பு, சில ஆசாரியர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறினார்கள்
  • ஏனென்றால்அந்த நேரத்தில் ஆசாரியர்கள் அரசாங்கங்களுக்கு பயந்துமந்திரிகளைராஜாக்களை காக்கா பிடிக்க ஆரம்பித்தார்கள்.
  • ஆசாரியர்கள் ராணுவ தலைவர்களை வரவழைத்து அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.
  • மந்திரிகள் தேவாலயத்திற்கு வந்தால் ஆசாரியர்கள் போக கூடிய அந்த இடத்திற்கு மந்திரிகளை வரவழைத்து அவர்களைஆசீர்வதித்து அனுப்பினார்கள்
  • அதாவது தேவாலயம் அசுசிப் பட ஆரம்பித்தது.
Essenes உருவான கதை:
  • அதைப் பார்த்த கொஞ்சம் ஆசாரியர்களுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது
  • இப்படி தேவாலயத்தை அசுசிப்படுத்துகிறார்களே என்று மனவேதனைப்பட்டார்கள். 
  • சில பேர் மாத்திரம் அதிலிருந்து வெளியேறி சவக்கடல் பக்கத்துக்கு போய் அங்கு இயற்கையாய் அமைந்திருந்த சில குகைகள் இருந்த இடத்திலே வாழ ஆரம்பித்தார்கள்
  • அந்த 150 அல்லது 200 வருட காலங்களில் எந்தெந்த ஆசாரியர்கள் அங்கு நடப்பவற்றை வெறுத்தார்களோ அவர்களெல்லாம் விலகிப் போய் அந்த வெளியேறிய ஆசாரியர்களோடு சேர்ந்துகொண்டார்கள். 
  • இந்த குழுவுக்கு அவர்களே Essenes என்று பெயர் கொடுத்துக் கொண்டார்கள்
  • Essenes என்ற வார்த்தை தூய்மை (purity)  என்ற எபிரேய பதத்திலிருந்து வந்தது
  • அவர்கள் வாழ்ந்த அந்த பிரதேசத்திற்கு பெயர் கும்ரான்(Qumran).
Essenes வாழ்க்கைமுறை:
  • அந்த Essenes எல்லாவற்றையும் பொதுவாக அனுபவித்தார்கள்
  • உனக்குஎனக்கு என்று எதுவும் இருக்கவில்லை.
  • அவர்கள் ஆடுகள், மாடுகளை வளர்த்தார்கள்
  • அது எரிகோவுக்கு பக்கத்தில் இருப்பதால் நிறைய பேரீச்சப் பனைகள் வளரும்
  • அதை வளர்த்தார்கள். 
தண்ணீர் தொட்டி- சுத்திகரிப்பு:
  • அவர்கள் ஒவ்வொரு நாளும் காலையிலே எழும்பி ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருக்கிற இடத்திற்கு வருவார்கள்
  • அந்த தண்ணீர்தொட்டியை அவர்களே செய்து வைத்திருப்பார்கள்
  • அந்த தண்ணீர் தொட்டியிலே இறங்கி நடந்து மறு பக்கத்தில் எழும்பி தன்னை துடைத்து கொள்வார்கள்.
  • தண்ணீரின் நடுவிலே 3 முறை தண்ணீருக்குள் முங்கி எழுந்திருப்பார்கள்
  • இதே காரியத்தை இரவு தூங்கப் போவதற்கு முன்பும் செய்வார்கள்
  • இதை ஒரு சுத்திகரிப்பு காரியமாக எண்ணி கடைபிடித்து கொண்டு வந்தார்கள். 
முழு நேர வேலை-Tanak-old testament எழுதுவது:
  • அதில் ஒரு சில பேருக்கு சாப்பாடு ஆயத்தம் செய்கிற வேலை.
  • அதில் ஒரு சில பேருக்கு ஆடு மாடுகளை பார்த்து கொள்கிற வேலை.
  • அதில் ஒரு சில பேருக்கு பனை மரங்களை பராமரிக்கும் வேலை.
  • மற்ற எல்லோருடைய வேலை என்னவென்றால் வேதத்தை (Tanak-old testament) எழுதுவது.
  • சுருள் சுருள்களாக எழுதி எழுதி அதைப் பானைகளுக்குள்ளேப் போடுவார்கள்
  • அந்தப் பானைகளை கொண்டுப் போய் அந்தக் குகைகளிலே ஒளித்து வைப்பார்கள்.  
  • இதற்கு தான் Dead Sea Scrolls என்று பெயர்
ஆய்வாளர்கள் - குகை கண்டுபிடிப்பு:
  • 1948 லே இவைகள் கண்டுபிடிக்கப்பட்டன
  • ஒரு மேய்ப்பன் பையன் அந்த பிரதேசத்திலே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான்
  • அப்போது கல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தான்
  • டங் என்று சத்தம் வந்தது
  • கீழே போய் பார்த்தால் குகைக்குள்ளே பானை.
  • அதற்கு பிறகு தான் ஆய்வாளர்கள் போய் அதைக் கண்டுபிடித்தார்கள்
Essenes குணாதிசயம்:
  • இந்த எசீன்ஸ் (Essenes) தங்களோடே பேசிக் கொள்ளக் கூட மாட்டார்கள்
  • அவர்கள் சைகையின் மூலம் தான் பேசிக் கொள்வார்கள்.
  • மிகவும் அமைதியாக, மௌளனமாக இருப்பார்கள். 
ஏன் வேதத்தை எழுதுகிறார்கள்:
  • ஏனென்றால் தேவாலயத்தை அசுசிப்படுத்தியதால் தேவன் மறுபடியும் அவர்களை நியாயத்தீர்ப்பிலே அடிப்பார் என்று நம்பினார்கள்.
  • இப்போது தேவாலயத்தை சில பேர் அசுசிப்படுத்திக் கொண்டிருப்பதால் தேவன் எருசலேமை நியாயம் தீர்ப்பார் என்று நம்பினார்கள். 
  • அப்போது மிச்சம் மீதியானவர்கள் தூய்மைவாதிகள் இருக்கும் பொழுது அவர்களுக்கு வாசிக்க வேதம் வேண்டுமே!
  • அதற்காக தான் அதை எழுதிப் பானைகளுக்குள்ளே ஒளித்து வைத்தார்கள்
யோவான்ஸ்நானன் 4 மாதங்கள் Essenes:
  • யோவான் லேவி கோத்திரத்தை சேர்ந்தவர். 
  • அவர் வீட்டை விட்டு போய் முதல் 4 மாதங்களும் எசீன்ஸ் (Essenes) ஓடு வாழ்ந்தார்
  • யோவான் தன் 30 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். 
  • பின்பு 4 மாதங்கள் எசீன்ஸ் (Essenes) ஓடு வாழ்ந்தார்
  • எப்படி தெரியும்? 
  • கும்ரானில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஏட்டிலே இந்த சம்பவம் எழுதப்பட்டு இருக்கிறது
  • இவர் வந்து அங்கே இருந்ததாக ஆதாரம் இருக்கிறது.
  • அதை விட மிகப் பெரிய ஆதாரம் அவர் சாப்பிட்ட உணவும், அவர் உடுத்தியருந்த உடையும் தான்
  • பொதுமக்கள் எசீன்ஸ் (Essenes) களை காண்பதே அரிது
  • அவர்களும் வெளியே போக மாட்டார்கள்
  • வெளியே இருந்து ஆட்கள் வந்து தங்களை பார்க்கவும் இடங்கொடுக்க மாட்டார்கள்
இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
 -மத்தேயு 3 : 4

வீட்டிற்கு செல்ல அனுமதி:
  • ஆனால் ஒரு வாலிப எசீன்ஸ் (Essenes) தனது வீட்டிற்கு போய் திரும்பி வர விரும்பினால் அவர்கள் அந்த எசீன் தலைவரிடம் அனுமதி கேட்க வேண்டும்
  • அவர் கைகளை காட்டி அனுமதித்து, அவர் சொல்லும் நாளில் போய்விட்டு 3 நாளில் திரும்ப வர வேண்டும் என்று சொல்லுவார்.
  • அதே போல செய்ய வேண்டும். 
உடை மற்றும் உணவு:
  • போகும் போது அந்த நபர் ஒட்டக மயிரினால் ஆன உடையை தான் அணிந்து கொண்டு செல்ல வேண்டும்
  • அவருக்கு எல்லாவற்றையும் சாப்பிட அனுமதியில்லை. 
  • அவர் தன்னோடு பனை தேன் கொண்டு செல்ல வேண்டும்
  • இல்லையென்றால் காட்டுத்தேன் கொண்டு செல்ல வேண்டும்
  • சாப்பிடுவதற்கு வறுத்த வெட்டுகிளிகள் கொண்டு போக வேண்டும்
  • இவை தான் அவர்களுக்கு அந்த சமயத்தில் உணவு. 
இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
 -மத்தேயு 3 : 4

Essenes ஐ காணும் மக்களின் உணர்வு:
  • யோவான் வெளியே வந்தது வீட்டைப் பார்க்க அல்ல, இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ண
  • யாராவது எசீன்ஸ் (Essenes)  கண்டால் பரப்பரப்பாக பார்ப்பார்கள்
  • ஆனால் அவர்கள் கிட்ட போய் பேச மாட்டார்கள். 
  • ஏனென்றால் எசீன்ஸ் (Essenes) யாரோடும் பேச மாட்டார்கள்.
  • மக்கள் எசீன்ஸ் (Essenes) ஐ பரிசுத்தராக, தேவனுடைய பிள்ளைகளாக கருதினார்கள். 
  • அவர்கள் யாரும் எசீன்ஸ் (Essenes)  குரலை கேட்டது கூட இல்லை. 
யோவான்ஸ்நானன் பிரசங்கம்:
  • இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திலே திடீரென ஒரு எசீன்ஸ் (Essenes)  வந்து , நின்று பேசுகிறார் என்றால் ஜனங்கள் அதிர்ச்சி அடைந்து இருப்பார்களாஇல்லையா?  
  • Talking Essene  பார்க்க ஓடிவந்திருப்பார்கள்.
  • ஆச்சர்யமாக வாயை பிளந்து கொண்டு கேட்டிருப்பார்கள்
  • அவர் விரியன் பாம்புக்குட்டிகளே என்று திட்டியது கூட அவர்களுக்கு வலிக்க வில்லை.
  • மாறாக பயத்தை உண்டுபண்ணியது
  • அதனால் தான் யோவான் விரியன் பாம்புக்குட்டிகளே என்று சொல்லும் போது கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை.
  • அவர் கும்ரானிலே தண்ணீரிலே முங்கினது போல மக்களை தண்ணீரிலே முங்கி எழ செய்தார்
  • யோவான் அவருக்கு தெரிந்த முறையில் மக்களுக்கு சுத்திகரிப்பு கொடுத்தார். 
தேவனுடைய கிருபை எதற்கு பூமிக்கு வந்தது?
  • நீதி-பிதா; கிருபை-இயேசு; பரிசுத்தம்-பரிசுத்த ஆவியானவர். 
  • மனிதனின் பாவம் பெருகி போனதால் நீதிக்கும், கிருபைக்கும் இடையே பெரிய வாக்குவாதமே வந்தது.
  • நீதி சொன்னது- மனிதன் தன்னுடைய பாவங்களுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று.
  • கிருபை சொன்னது- நான் படைத்த மனிதனை எப்படி நான் அந்த சூழ்நிலையில் விடுவேன் என்று.
  • கடைசியாக, கிருபை நம்முடைய பாவங்களுக்காக தண்டனை பெற மனிதனாக அவதரித்து பூமிக்கு வந்தது. 
  • தேவ நீதிக்கும்தேவ கிருபைக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். அதை பரிசுத்தம் நிறைவேற்றியது

  • Thanatos (கிரேக்க வார்த்தை) மரணம் - கொடூரமான மரணம்
  • Nekros (கிரேக்க வார்த்தை) மரணம் - இயற்கை மரணம்
  • பாவத்தின் சம்பளம் என்னவென்றால் Thanatos மரணம்; Nekros மரணம் அல்ல. 
  • தேவனுடைய நீதிக்கு தேவை Thanatos மரணம்.
  • தேவனுடைய கிருபை, தேவனுடைய நீதிக்கு தேவையான Thanatos மரணம் அடைவதற்காக வந்தது. 
  • ஏனென்றால் அந்த மரணத்தை மனிதனால் மரிக்க முடியாது.  
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாகஇப்பொழுது இடங்கொடுஇப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
 -மத்தேயு 3 : 15

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.  
 -ரோமர் 6 : 23

இயேசு ஞானஸ்நானம்:
  • யோவான்ஸ்நானன் யோர்தான் நதிக்கரையிலே மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்தார்.  
  • அப்போது இயேசு அங்கே வந்தார்
  • யோவான் எதிர்ப்பார்க்கவே இல்லை, இயேசு திரும்பி தன் பக்கம் வருவார் என்று
  • திடீரென்று இயேசு திரும்பி வந்து தண்ணீருக்குள் இறங்குகிறார்
  • யோவான் அதிர்ச்சி அடைந்திருப்பார். 
  • யோவான் தனக்கு தெரிந்த எசீன்ஸ் முறையில் மக்களுக்கு ஞானஸ்நானம் ( தண்ணீரில் மூழ்குதல்) கொடுக்கிறார். 
  • யோவான், மனந்திரும்பி வருகிற பொது ஜனங்களுக்கு எசீன் முறை படி சுத்திகரிப்பு செய்து அனுப்பினார்
  • ஆனால் இப்போதோ இயேசுவே இவரிடம் ஞானஸ்நானம் பெற வந்து நிற்கிறார். 
  • யோவானோ குழம்பி போயிருப்பார். 
  • இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், 
  • இயேசு எசீன்கள் உருவாக்கின சுத்திகரிப்பு முறையை அங்கீகரிக்கிறார்
  • எந்தளவுக்கு அங்கீகரிக்கிறார் என்றால்?
  • தான் ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு
அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
 -மத்தேயு 3 : 13

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
 -மத்தேயு 3 : 14

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாகஇப்பொழுது இடங்கொடுஇப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
 -மத்தேயு 3 : 15

யோவான்ஸ்நானன் மேசியாவுக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்தார் என்றால் என்ன
தண்ணீர் ஞானஸ்நானத்தை அறிமுகப்படுத்த வந்தார். 

தண்டனை
  • ஒரு ஆள் செய்த குற்றத்துக்கு இன்னொரு ஆள் தண்டனை அனுபவித்தால் அது நீதியா
  • உலக நீதியிலும் சரி, தேவ நீதியிலும் சரி தப்பு செய்த நபர் தான் தண்டிக்கப்பட வேண்டும்
  • ஆனால் நம்மால் சிலுவையில் அவர் கூட மரிக்கவும் முடியாது.
தண்ணீர்  ஞானஸ்நானம்- அறிமுகம்
  • எனவே, இயேசு ஞானஸ்நானத்தை எடுத்து அதையே ஒரு அடையாளமாக ஆக்கிஇயேசுவின் மரணம்அடக்கம்செய்யப்படுதல்உயிர்த்தெழுதல் இந்த மூன்றையும் ஞானஸ்நானத்துக்குள்ளே கொண்டு வந்தார்
  • நாம் ஞானஸ்நானம் எடுக்கும் போது இயேசுவோடு சிலுவையில் அறையப்படுகிறோம்
  • தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படிவதன் மூலமாக  நாம் நம்முடைய பாவங்களுக்கு தண்டனை அனுபவித்து மரிக்கிறோம். 
  • இந்த உலகத்தில் இனிமையான தண்டனை என்று ஒன்று கிடையவே கிடையாது. 
  • ஆனால் இயேசு நமக்கு தண்டனையை கூட இனிமையான ஒன்றாக கொடுத்திருக்கிறார். 
  • ரோமர் 6 ஐ வாசித்தால் இவை அனைத்தும் விளங்கும். 
  • இயேசுவின் மரணம்அடக்கம் பண்ணப்படுதல்உயிர்த்தெழுதல் ஆகிய இந்த மூன்றோடும் நம்மை இணைத்து நாமும் அவரோடு மரித்துஅடக்கம் பண்ணப்பட்டுஉயிர்த்தெழ கூடிய அடையாளமாகிய ஞானஸ்நானத்தை யோவான்ஸ்நானன் நமக்கு கொடுத்திருக்கிறார். 
  • ஞானஸ்நானம் இல்லையென்றால் அவருடைய மரணம் நமக்கு நேரடியாக பிரயோஜனமாக இருக்காது
  • தண்ணீர் ஞானஸ்நானம் என்ற ஒன்று இல்லையென்றால், நமக்கு பாவங்களுக்கு மரித்து, உயிர்த்தெழுகிற அந்த பாக்கியமே இல்லாமல் போயிருக்கும். 
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
 -ரோமர் 6 : 4

எப்படி யோவான்ஸ்நானன் மரித்தார்அந்த மரணம் இயேசுவை எப்படி பாதித்தது

ஏரோது ராஜாவின் அரண்மனைகள்:
  • செசரியாவிலே ஒரு அரண்மனை உண்டு.
  • எருசலேமிலே ஒரு அரண்மனை உண்டு
  • மக்சாதாவிலே(சவக்கடல் பக்கத்திலேஒரு அரண்மனை உண்டு
  • தெக்கப்போலியிலும் ஒரு அரண்மனை உண்டு
  • தெக்கப்போலியில் உள்ள அரண்மனையில் தான் இந்த சம்பவம் நடந்தது. (Maquar palace of Herod)
தெக்கப்போலியில் உள்ள அரண்மனையில் நடந்த சம்பவம்:
  • ஏரோது ராஜா(அந்திப்பா) அவனுடைய தம்பி பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்திருக்கிறான். 
  • ராஜா என்பதனால் யாரும் எதுவும் சொல்லவில்லை.
  • ஆனால் யோவான் நீங்கள் செய்வது தவறு என்று எதிர்த்து பேசி விட்டார். 
  • அவர் பேசினது மரண தண்டனைக்கான ஒரு குற்றம் அல்ல
  • எனவே, அவரை காவலில் வைத்திருந்தார்கள். 
  • பொது ஜனங்களுக்கு யோவான்ஸ்நானன் இடையூறாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 
  • அவரை கைது செய்து இப்பொழுது யோர்தான் நாட்டில் இருக்கின்ற Maquar என்ற ஒரு அரண்மனைக்கு கொண்டு போய்,
  • அங்கு இருக்கிற நிலத்தடி சிறைச்சாலையில் அவரை கைது செய்து வைத்திருக்கிறார்கள்.
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
 -மத்தேயு 14 : 3

ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
 -மத்தேயு 14 : 4

ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
 -மத்தேயு 14 : 5

விருந்து நடனம்:
  • அங்கு ஒரு பெரிய விருந்து நடைபெறுகிறது.
  • ராஜசமூகத்தார் எல்லாம் விருந்துக்கு வந்திருக்கிறார்கள். 
  • அப்போது ஏரோது வைத்து கொண்டிருக்கிற பிலிப்புவின் மனைவி ஏரோதியாள் அவளுக்கு 10-11 வயதில் ஒரு மகள்
  • அவள் அழகாக நடனமாடினாள்
அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
 -மத்தேயு 14 : 6

ராஜாவின் ஆணை:

அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.

 -மத்தேயு 14 : 7


10-12 வயது உள்ள மகளின் வேண்டுகோள்:


அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.

 -மத்தேயு 14 : 8


ஆணையினிமத்தம் சிரச்சேதம்:


ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு,

 -மத்தேயு 14 : 9


ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.

 -மத்தேயு 14 : 10


தாலத்தில் தலை:


அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.

 -மத்தேயு 14 : 11


யோவான் அடக்கம் செய்யப்படுதல்:
  • யோவானை காவலில் வைத்திருப்பதால், வெளியே இருக்கிற யோவானுடைய சீஷர்கள் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் போய் அவரை பார்க்கலாம். 
  • அன்று காலை கூட அவர்கள் யோவானை பார்த்து விட்டு வந்தார்கள்
  • அதற்குள்ளாக அவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி.
  • உடனே அவர்கள் அனுமதி வாங்கி கொண்டு யோவானுடைய தலையில்லாத முண்டத்தை வாங்கி அடக்கம் பண்ணிவிட்டு கலிலேயாவை நோக்கி ஓடினார்கள். 
இயேசுவுக்கு யோவான் மரணம் தெரிவிப்பு:
  • இப்போது இயேசு கலிலேயாவில் இருக்கிறார்.
  • இயேசுவிடம் விஷயத்தை சொல்ல 3 நாட்கள் ஓடுகிறார்கள்
  • அந்த Maquar palace of Herod தெக்கப்போலியிலே தான் இருக்கிறது
  • நாட்கள் நடந்து போக கூடிய தூரம்
  • கப்பர்நகூமிலே இயேசு தன் சீஷர்களுடன் இருக்கிறார்
  • இயேசு இந்த உலகத்தில் இருக்கும்பொழுது தன்னுடைய தேவத்துவத்தை தன்னில் வைத்திருக்கவில்லை
  • பிலிப்பியர் 2 ஐ வாசித்தால் அது புரியும். 
  • அவர் தேவத்துவத்தை பரலோகத்திலேயே வைத்து விட்டார். 
  • எனவே அவருக்கு தெரியாது என்ன நடந்தது என்று
  • அதிர்ச்சி ஆகி இருப்பார்
  • அவரது மனது எவ்வளவு கலங்கி துடித்திருக்கும்.
  • எனவே தனிமையாக கப்பலில் செல்கிறார்.

அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.

 -மத்தேயு 14 : 12


இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.

 -மத்தேயு 14 : 13


அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

 -பிலிப்பியர் 2 : 8


இயேசு சுகம் கொடுத்தார்: 

  • ஆனால் மக்கள் அவரை தனியாகவிடவில்லை
  • அந்த மக்களுக்கு எல்லாம் ஒரு அநுதாபத்திலே சுகம் கொடுக்கிறார்
  • அவரால் பேச முடியவில்லை
  • எனவே பிரசிங்கவில்லை.

இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.

 -மத்தேயு 14 : 14


போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி போகட்டும்:

  • பின்பு பிலிப்பு இந்த மக்களெல்லாம் சாப்பிட போகட்டும் என்று சொல்கிறான்.

சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

 -மத்தேயு 14 : 15


யூத முறைமை-விருந்து:

  • யூத வழக்கத்தின் படி நெருங்கின உறவின்மார் இறந்து விட்டால், மக்களுக்கு விருந்துவைப்பார்கள்.
  • துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு தன் கையாலேயே சாப்பாடு போட்டு அனுப்பி வைப்பார்கள். 
  • அதே போல விருந்து வைக்கலாம் என இயேசுவுக்கு தோன்றியது.

இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.

 -மத்தேயு 14 : 16


அப்பம் 2 மீன் அற்புதம்:


அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.

 -மத்தேயு 14 : 17


அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

 -மத்தேயு 14 : 18


யூத முறைமை- உட்கார வைத்து சாப்பாடு:

  • யூத மரண வீடுகளுக்கு விசாரிக்க வருபவர்களை உட்கார வைத்து தான் சாப்பாடு கொடுப்பார்கள்.
  • அதே போல இயேசு ஜனங்களை அமர செய்து போஜனம் கொடுத்தார்.

அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.

 -மத்தேயு 14 : 19


எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.

 -மத்தேயு 14 : 20


ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

 -மத்தேயு 14 : 21


யூத முறைமை- மரண வீடு- வழியனுப்புதல்:

  • யூத முறைமைப்படி மரண வீடுகளுக்கு விசாரிக்க வருபவர்களை வீட்டு உரிமையாளர் தான் வழியனுப்பி வைக்க வேண்டும். 
  • அதே போல, இயேசு ஜனங்களை தானே வழியனுப்பி வைத்தார். 
  • இயேசு தன்னுடைய சீஷர்களை பலவந்தப்படுத்தி அனுப்பி விட்டார்
  • பிறகு அனைவரையும் அவரே வழியனுப்பி விட்டு ஜெபிக்க சென்றார்.

இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

 -மத்தேயு 14 : 22


அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.

 -மத்தேயு 14 : 23


முடிவுரை:

  • இயேசுவுக்கு யோவானோடு 3 உறவுகள் இருந்தது. 
  • தூரத்து உறவினர், நண்பர், வழியை ஆயத்தம் பண்ண வந்தவர்.
  • எனவே மிகவும் துக்கித்தார். 
  • இயேசு செய்த அற்புதங்களில் தனக்காக செய்து கொண்ட ஒரே அற்புதம் இது தான். 
  • எனவே நமது வேதனைகள், வலிகள், மன அழுத்தங்கள் அனைத்தும் அவருக்கு புரியும்
  • நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை புரிந்து கொண்டு மன ஆறுதல் தருவார். 

———————————————————————-

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4