சபையில் பரதநாட்டியம் ஆடலாமா?
சபையில் பரதநாட்டியம் ஆடலாமா?
மதம் சம்பந்தப்பட்டது:
- கிறிஸ்தவர்கள் பரதநாட்டியத்தை சம்பந்தப்படுத்தக் கூடாது. ஏன்?
- காரணம் பரத நாட்டியம் என்பது ஒரு மதம் சம்பந்தப்பட்டது.
- கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா இவற்றிலெல்லாம் மதங்கள் சம்பந்தப்படவில்லை.
- ஆனால் பரதநாட்டியம் பாபிலோனிய மதம் சம்பந்தப்பட்டது.
- பரதநாட்டியம் உருவானது பாபிலோனிலே.
- Gilgamesh என்ற ஒரு நபர் தன்னை தெய்வம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
- அவனை வணங்குவதற்காக ஏற்படுத்தின அபிநயங்களை அடிப்படையாக வைத்தது தான் அந்த நடனம்.
- பிற்காலத்திலே அந்த நடனம் Mohenjo-daro, Harappa கலாச்சாரத்துக்கு வந்து
- சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து தோன்றிய இந்தியா என்ற அந்த தேசத்துக்கு வந்து
- ராமா என்று சொல்லுகிற ஒரு ராஜாவின் தம்பி பரத் என்ற பரதன்.
- அந்த பரதன், ராமாவின் செருப்பை வைத்து கொண்டு ஆட்சி செய்தபடியினால்
- அவர் மூலமாக இந்த நாட்டியம் பிரபலமடைந்து
- பரத தேசத்து நடனமாக இந்த Gilgamesh குரிய அந்த நடனம் பிரதிஷ்டைப் பண்ணப்பட்டது.
- அதனால் தான் அதற்கு பரதநாட்டியம் என்று பெயர்.
- பாபிலோனிய சரித்திரத்தை ஆராய்ந்தால் தான் இவ்வளவும் நமக்கு புரிய வரும்.
- பாபிலோனில் முதன்முதலில் பேசப்பட்டது Accordion மொழி.
- அந்த மொழியில் சில சரித்திரங்களை வாசிக்கும் பொழுது இந்த Gilgamesh பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.
- இது இந்து மதத்தையும், நடராஜரையும் சம்பந்தப்படுத்துகிற ஒரு விஷயம் அல்ல.
- அது இன்றைக்கு பரதநாட்டியத்தைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள் அறிந்திருக்கிற விஷயம்.
- அதற்கு முன்னால் போய், சரித்திரத்தை புரட்டிப் பார்த்தோம் என்றால் விஷயம் நமக்கு புரியும்.
வேத உதாரணம்- யோசுவா:
- பாபிலோன் துப்பட்டி ஒன்றை வைத்திருந்தான் என்று சொல்லியே ஆகான் கல்லெறிந்து கொல்லப்பட்டான் என்று வேதத்தில் யோசுவா புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம்.
- எனவே, பாபிலோன் சம்பந்தப்பட்ட இந்த நாட்டியத்தையும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
- வேறு பெயரில் இது வந்திருக்கலாம்.
- ஆனால் அதை கிறிஸ்தவத்துக்குள் பயன்படுத்தும் போது அது தேவனுக்கு செய்கின்ற துரோகம்.
- இராமாயணம் கூட அது ஒரு தமிழ் கதையே கிடையாது.
- அயோத்தியா இருப்பது திராவிடநாட்டிலே அல்ல.
- இந்தியாவை இரண்டாக பிரிக்கலாம்.
- ஆரிய நாடு, திராவிட நாடு.
- இந்த ஆரிய நாடு, திராவிட நாடு இரண்டும் ஒன்றாக சிந்து சமவெளி நாகரீகமாக Mohenjo-daro, Harappa விலே இருந்தது.
- அங்கிருந்து இந்த நாடு பிரிந்த பொழுது திராவிடர்கள் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகம் என்று சொல்லுகின்ற 4 மாநிலங்களை ஆக்கிரமித்து கொண்டார்கள்.
- இந்த 4 தான் திராவிட நாடு.
- பரதநாட்டியம் என்பது அயோத்தியாவை ஆட்சி செய்த இராமாயணத்தில் வருகிற அந்த பரதன் என்கிறவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.
- பரதநாட்டியம் என்பது வட இந்தியா சம்பந்தப்பட்டது.
- அதை எப்படி தமிழ் கலாச்சாரம் என்று சொல்ல முடியும்.
- சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து திராவிடர்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட சில விஷயங்களில் இதுவும் ஒன்று.
- இன்றைக்கு பரதநாட்டியம் ஒரு தமிழ் நடனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- ஆனால் கிறிஸ்தவர்களுக்கு பாபிலோன் சம்பந்தப்பட்ட எதுவும் தேவையில்லை.
Comments
Post a Comment