‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ வசனத்தின் விளக்கம்

‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ வசனத்தின் விளக்கம்

முன்னுரை:

  • யாத்திராகமம் 3:14 ல் ஆண்டவர் குறிப்பிட்டுள்ள ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’  என்பதன் அர்த்தம் என்ன? 
  • ஏன் அப்படி சொன்னார்?
  • அது தமிழில் ஏன் அப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
  • அனைத்தும் விளங்க வேண்டுமென்றால் இந்த பகுதியை முழுவதும் வாசியுங்கள். 
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
 -யாத்திராகமம் 3 : 14

மோசே அறிந்திருந்த மொழிகள்:

  • மோசே முதல் 40 வருடங்கள் எகிப்திய அரண்மனையில் வளர்க்கப்பட்டபடியினால் அவருக்கு எகிப்திய மொழி தெரியும். 
  • மோசே அடுத்த 40 வருடங்கள் மீதியானில் வாழ்ந்தபடியினால் அவருக்கு மீதியானிய மொழி தெரியும். 
  • ஆனால் முதல் 3 மாதம் மட்டுமே அவருடைய தாயாருடன் இருந்தபடியினால், அவருக்கு எபிரேய மொழி தெரியாது. 

ஆண்டவர் சந்திப்பு:

  • மோசேக்கு 80 வயதாகும் போது, ஆண்டவர் மோசேயை சந்திக்கிறார் . 
  • ஆண்டவர் மோசேக்கு முட்செடியில் காட்சியளித்த போது அவருடன் மீதயானிய மொழியில் பேசினார். 
  • ஏனென்றால், மோசே கடந்த 40 வருடங்களாக மீதியான் மொழியை தான் பேசிக் கொண்டிருக்கிறார். 

தேவன் பெயர்:

  • மோசே ஆண்டவரிடம் ”உங்கள் பெயர் என்ன” என்று கேட்டார்.
  • ஆண்டவருக்கு பெயர் கிடையாது.
  • ஏனென்றால் அவர் ஒருவர் மட்டும் தான் தேவன்.
  • எனவே பெயர் தேவைப்படவில்லை.
  • அந்த நேரத்தில் ஆண்டவர் மோசேக்கு இறையியல் (ஒருவர் இருந்தால் பெயர் தேவையில்லை) என்று சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்க முடியாது. 

Haya-aser-Haya:

  • எனவே ஆண்டவர் எபிரேய மொழி மோசேக்கு தெரியாததை வைத்து, 
  • எபிரேய மொழியில் “நான்- நான் தான்” என்று சொல்லி விட்டார்.
  • Haya-aser-Haya - Hebrew 
  • I AM THAT I AM - English 
  • இருக்கிறவராகவே இருக்கிறேன்- தமிழ்
  • எனவே மோசே ‘ஹயா’ தான் அவருடைய பெயர் என்று நினைத்துக் கொண்டான். 

பெயர் வேறு-வர்ணனை வேறு:

  • யெகோவா-யீரே (கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும்) ஆதி 22:14
  • யெகோவா-ஷாலோம் (கர்த்தர் நம் சமாதானம்) நியா 6:24
  • இப்படி அவருக்கு நிறைய பெயர்கள் உண்டு என அனைவரும் நினைக்கிறார்கள்.
  • ஆனால், இதெல்லாம் பெயர்கள் அல்ல. வர்ணனைகள். 
  • (எ.கா) உயர்ந்த ஆள், குட்டையான ஆள் இவை பெயர்கள் அல்ல; வர்ணனைகள். 

ஆயிரம் நாமங்கள்:

  • யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் என்ற பாடல் நாம் அனைவரும் கேட்டிருப்போம்.
  • அது ஆயிரம் பெயர்கள் அல்ல.
  • ஆயிரம் வர்ணனைகள்; காரணப்பெயர்கள். 

எஜமான்-விளக்கம்:

  • எஜமான் என்பது பெயர் இல்லை, வர்ணனை.
  • அதே வார்த்தை எபிரேய மொழியில் Yahweh என்னப்படும். 
  • அந்த எஜமான் என்ற சொல் தமிழ் சொல் அல்ல. 
  • அது சமஸ்கிருத சொல், இரண்டு சொற்களின் சேர்க்கை. 
  • எஜ- பெரிய; மான்-மனிதன். 
  • மனிதர்களுக்கு பெரியவன், முதலாளி என்று அர்த்தம்.
  • எஜமான் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? 
  • கர்த்தன்அதை கௌரவமாக சொன்னால் கர்த்தர்

மோசேக்கு உண்மையான அர்த்தம் விளங்குகிறது(Haya):

  • இங்கு மோசே ‘ஹயா’  என்பது தான் ஆண்டவருடைய பெயர் என நினைத்து விட்டார். 
  • பின்பு தான் மோசே எபிரேயர்களுடன் பேசி, எபிரேய மொழியை கற்றுக் கொள்கிறார். 
  • அப்போது தான் ஹயா’ என்பது அவருடைய பெயர் அல்ல என்பதை அறிந்து கொண்டு பயந்து போனான்.
  • ஆண்டவர் தன்னை குறிப்பிடுவதற்கு சொன்ன சொல் தான் ஹயா’.
  • ஆனால் எல்லோரும் அதை உபயோகிக்கிறார்கள்.
  • ‘நான் தான்’ என்று குறிப்பிடும் இடங்களில் எல்லாம் இதை அந்த மக்கள் உபயோகித்து கொண்டிருக்கிறார்கள். 
  • அதைப் பார்த்து மோசேக்கு மிகவும் கஷ்டமாக ஆகி விட்டது.
  • யூதர்களுடைய சரித்திர புத்தகமாகிய Talmud லே இது எழுதப்பட்டிருக்கிறது. 

மாற்று வார்த்தை-அனி:

  • மோசே இஸ்ரவேலர்களுக்கு சொல்கிறார்,
  • நமது ஆண்டவர் தன்னை குறிக்க பயன்படுத்தின அந்த சொல் ‘ஹயா’ வை இனி நாம் பயன்படுத்தக் கூடாது. 
  • இனி ‘நான்’ என்ற சொல்லுக்கு ஒரு புது சொல்லை பயன்படுத்துவோம் என்று ‘அனி’ என்ற சொல்லை மோசே அறிமுகப்படுத்தினார். 
  • மோசேயின் காலத்திலுருந்து இன்றுவரை எபிரேயர்கள் ‘நான்’ என்று சொல்லும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற சொல் ‘அனி’.

ஏன் இயேசு மேல் கல்லெறிந்தார்கள்:

உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
 -யோவான் 8 : 56

அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
 -யோவான் 8 : 57

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் (ஹயா) என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 -யோவான் 8 : 58

அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.  
 -யோவான் 8 : 59
  • இது வரை யூதர்கள் பயன்படுத்தாத சொல்லை இயேசு பயன்படுத்தியதால் தான் மக்கள் அவர் மேல் கல்லெறிய தொடங்கினார்கள்.

7 இடங்களில் - இயேசு ஹயா என்று சொல்லியிருக்கிறார்: 

இயேசு 7 இடங்களில் ‘அனி’ என்ற சொல்லாமல் , ‘ஹயா’ என்று பயன்படுத்தியுள்ளார். 
  1. ஜீவ அப்பம் நானே (யோவான் 6:35).
  2. நானே உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் (யோவான் 8:12).
  3. நானே ஆடுகளுக்கு வாசல் (யோவான் 10:7).
  4. நானே நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11).
  5. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 11:25).
  6. நானே வழியும், சத்தியமும்  ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6).
  7. நானே திராட்சச்செடி (யோவான் 15:5).
  • மொத்தம் 7 தடவை தன்னை ‘ஹயா’ என்று குறிப்பிடுகின்ற தேவன், 
  • மோசேக்கு எரிகின்ற முட்செடியில் வெளிப்பட்டவர் ‘தான்’ தான் என்பதனை இயேசு நமக்கு நிரூபித்து காட்டியிருக்கிறார். 
  • ஆகவே இயேசு தான் அந்த இடத்தில் வந்தார் என்பது இயேசுவின் வாயாலேயே உறுதிப்படுகிறது.

ஏன் ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’:

  • யாத் 3:14; ஏன் ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. 
  • ‘நான் நானே’ என்று எழுதியிருக்கலாமே. 

சரித்திரம்-சட்டம்:

  • கி.மு 334 ஆம் ஆண்டு, அலெக்சாண்டர் மாமன்னன் முழு உலகத்தையும் கைப்பற்றினான்.
  • அதற்கு அடுத்த ஆண்டு 333 ஆம் ஆண்டு கிரேக்க மொழியை சர்வதேச மொழியாக்கினான்.
  • உலக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு மொழி சர்வதேச மொழியாகிறது. 
  • இனி எல்லோரும் கிரேக்க மொழியில் தான் பேச, எழுத, படிக்க வேண்டும்.
  • தங்கள் வீடுகளில் தங்கள் சொந்த மொழியில் பேசலாம். 
  • ஆனால் வெளியே வந்தால் அரச கரும மொழியான கிரேக்க மொழியை தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும். 
  • இதனால் புராதன எழுத்துக்கள், ஸ்ருதிகள், வேதங்கள், சட்ட நூல்கள், சரித்திர நூல்கள், இதிகாசங்கள் அனைத்தும் கிரேக்க மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டான். 

Tanakh- மொழிபெயர்ப்பு:

  • அதன்படி பழைய ஏற்பாடாகிய யூதர்களின் Tanakh - Torah, Nevi'im, Ketuvim என்ற 3 பகுதிகள் அடங்கிய புத்தகம் கிரேக்க மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டது. 
  • கி.மு 250 ஆம் ஆண்டு அது நடந்தது.
  • Tanakh -பழைய ஏற்பாட்டு நூல் (39)
  • Torah - நியாயப்பிரமாண புத்தகம் (5)
  • Nevi’im - தீர்க்கத்தரிசிகளின் புத்தகம் .
  • Ketuvim - யூதர்களின் சரித்திர புத்தகம்.

Septuagint:

  • 70 கிரேக்க மொழி தெரிந்த யூதர்களின் உதவியால் 70 நாட்களில் அந்த மொழிபெயர்ப்பு மொழிப்பெயர்த்து முடிக்கப்பட்டது. 
  • ஆகவே 70 என்ற Septuagint என்ற பெயர் அந்த மொழிபெயர்ப்புக்கு வழங்கப்பட்டது. (பழைய ஏற்பாடு)
  • 70 ஐ நீங்கள் latin எழுத்துக்களில் எழுதினால் LXX (L-50, X-10, X-10) என்று எழுத வேண்டும். 

கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பு:

  • மொழிப்பெயர்ப்பாளர்கள் யாத் 3 வது அதிகாரத்திற்கு வரும் போது அந்த ‘ஹயா’ என்ற சொல்லை குறிப்பிடுவதற்கு கிரேக்க சொற்கள் தேடுகிறார்கள். 
  • ஆனால் கிடைக்கவில்லை. 
  • எனவே இரண்டு கிரேக்க சொற்களை எழுதினார்கள். ‘Ego and Eimi’.

ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு:

  • புதிய ஏற்பாட்டு காலத்திற்கு பிறகு 1611 ம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்ட ஜேம்ஸ் மன்னன் ஆங்கிலத்தில் வேதம் மொழிப்பெயர்க்கப்பட வேண்டும் என்று சட்டம் போட்டான். 
  • அவர்கள் மொழிபெயர்க்கும் போது இதே பிரச்சனையை எதிர் கொண்டார்கள். 
  • ஆங்கிலத்தில் ’ஹயா’  என்ற சொல்லை போட வழியில்லாதபடியினால்  Septuagint ஐ பார்த்தார்கள்.
  • அதில் ‘Ego and Eimi’ என்ற இருந்தபடியினால் அதை எடுத்து ‘I am that I am’ என்று எழுதினார்கள். 

தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு:

  • ஒரு இங்கிலாந்து காரரும், இத்தாலி காரரும் சேர்ந்து தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிபெயர்த்தனர். 
  • அவர்களுக்கும் சரியான சொல் கிடைக்காதபடியினால்,
  • அவர்கள் ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று மொழிப்பெயர்த்தனர். 

முடிவுரை:

  • இப்படி தான் இந்த ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்ற வசனம் தமிழில் இடம் பெற்றது. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4