ரோமர் புத்தகம்- பிண்ணனி

ரோமர் புத்தகம்- பிண்ணனி 

நிரூபங்கள்:
  • பவுலடியார் 7 சபைகளுக்கு 9 நிரூபங்கள் எழுதுகிறார்.
  • கொரிந்து, தெசலோனிக்கே 2 நிரூபங்கள் கொண்டுள்ளதால் 9 நிரூபங்கள்.
ஒரு சபை: 
  • அந்த காலத்தில் ஒரு நகரம் அல்லது பட்டணம் என்று எடுத்துக் கொண்டால், அந்த பட்டணத்திற்கு ஒரே ஒரு சபை தான் இருக்கும். 
  • வேத காலத்தில் ரோமாபுரியில் ஒரு சபை தான் இருந்தது. 
  • இன்றைக்கு ஏகப்பட்ட சபைகள் உள்ளன. 
ஒரே மொழி:
  • அந்த காலத்தில் மோமாபுரி, கொரிந்து, பிலிப்பு எல்லா பட்டணங்களிலும் கிரேக்க மொழியில் தான் ஆராதனை நடக்கும். 
  • புதிய ஏற்பாட்டு காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை. 
நிரூபங்கள்-இருவகை:
  • பவுலுடைய 14 நிரூபங்கள், பெற்றுக் கொள்கிறவர்களுடைய பெயரில் உள்ளது. (Eg: தீத்து, பிலெமோன்)
  • பொதுவான நிரூபங்கள் எழுதுகிறவர்களுடைய பெயரில் இருக்கும். (Eg: யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா)
ரோமர் நிரூபம்- 1st one: ஏன்?
  • 14 நிரூபத்தில் ரோமர் புத்தகம் முதலில் இடம் பெற்றுள்ளது. 
  • ஏனென்றால் ரோமாபுரி தான் உலக தலைநகரம்.
  • ரோமாபுரிக்கு எழுதப்பட்ட நிரூபம் கண்டிப்பாக முழு உலகத்துக்கும் போய் சேரப் போகிறது. 
முழு உலகம்-சுவிசேஷம்:
  • மற்ற 13 நிரூபங்களை காட்டிலும் ரோமாபுரிக்கு எழுதப்பட்ட நிரூபம் உலகமெங்கும் போகப் போகிறது. எப்படி? 
  • உலகெங்கும் இருக்கிற ஜனங்கள் வியாபார நோக்கத்திற்காகவோ, அரசியல் நோக்கத்திற்காகவோ ரோமாபுரிக்கு போக்கும் வரத்துமாக இருப்பார்கள். 
  • All Roads lead to Rome. 
  • ரோமாபுரி சபையில் எது நடந்தாலும் அது உலகமெங்கும் போய் சேரும். 
  • அப்போஸ்தல நடபடிகள் புத்தகம் முடியும் போது சுவிசேஷம் ரோமாபுரிக்கு போய் சேர்ந்து விட்டது என்று முடிகிறது. 
  • அதற்கு என்ன அர்த்தம் என்றால், கண்டிப்பாக இது முழு உலகத்திற்கும் சென்றடைந்து விடும். 
மூல உபதேசம்:
  • பவுல் ரோமர் நிரூபம் எழுதும் போது, ஆவியானவர் அவரை 2 முக்கிய விஷயங்களை எழுத வைக்கிறார்.
  • ஒரு சபை என்றால், அந்த சபைக்கு மூல உபதேசம் (Doctrines) இருக்க வேண்டும். 
  • ஒரு Constitution (யாப்பு) என்றால் அவர்களின் நம்பிக்கையும், சட்டத்திட்டங்களும் அதில் இருக்கும். (சபை அல்லது அரசியல்). 
  • அது போல இப்போது சபை தொடங்கி விட்டது. 
  • சபை எருசலேம், அந்தியோகியாவிற்கெல்லாம்  வந்தாயிற்று.
  • இப்போது ஆண்டவர் யாரையாவது வைத்து சபைக்கு மூல உபதேசங்களை கொடுக்க வேண்டும்.
  • இல்லையென்றால் எல்லாரும் நினைக்கிறதெல்லாம் உபதேசமாக மாறி விடும். 
யூதர்கள்- ஒரே நம்பிக்கை- பழைய ஏற்பாடு:
  • ஏனென்றால் இது ஒரு ஜனக்கூட்டாத்தாரை வைத்துக் கொண்டு உருவான நம்பிக்கை அல்ல. 
  • பழைய ஏற்பாடு என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது. 
  • எல்லோருமே ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேசத்தில் வாழ்கிற ஜனங்கள். 
  • எனவே, அங்கு பெரிதாக நம்பிக்கை வித்தியாசம் வராது. 
விசுவாசிக்கிறவன் எவனோ:
  • ஆனால் இப்போது ஆண்டவர் அவருடைய குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் இரட்சிக்கப்படுவான் என்று  சொல்லி விட்டார். 
  • அந்த ‘எவனோ’ உலகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • எனவே, சபைக்கென்று ஒரு மூல உபதேசம் இருக்க வேண்டும். 
பவுல்- வரலாறு:
  • அந்த மூல உபதேசத்தை எழுதக் கூடியவன் யார்?
  • பவுல். 
  • தர்சீஸ்(சிரியா) என்ற இடத்தில் பிறந்தவர்.
  • Alexandria  தான் அவர் குடும்பத்தின் சொந்த ஊர்.
  • Alexandria Library ல உள்ள அனைத்து புத்தகங்களையும் படித்து தேர்ந்தவர். 
  • பரிசேயர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர். 
  • அவர் யூத மதத்தைப் படித்தவர். 
  • கமாலியேல் கிட்ட மொத்தமே 5 பேர் தான் படித்திருக்கிறார்கள். 
  • அதில் ஒரு ஆள் பவுல். 
பவுல்- பண்மொழி பண்டிதர்:
  • சிரியா மொழி பேசினார் (பிறந்த ஊர்). 
  • எகிப்திய மொழி பேசினார் (வளர்ந்த ஊர்).
  • லத்தீன் மொழி பேசினார்(ரோம பிரஜை). 
  • எபிரேய மொழி பேசினார் (பரிசேயர்). 
  • அராமிய மொழி பேசினார் (எருசலேமில் அராமிய பேசுகிற இடத்தில் கொஞ்ச காலம் வாழ்ந்தார்.)
  • கிரேக்க மொழி பேசினார் (சர்வதேச மொழி).
  • பண்மொழி பண்டிதர். 
சபை- மூல உபதேசம்:
  • ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராக இருந்தபடியினால் அவருக்கு சங்கங்கள், சட்டங்கள், யாப்புக்கள் எல்லாம் தெரியும். 
  • எனவே, அவரை வைத்து ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கான, சபைகளுக்கான மூல உபதேசத்தை எழுதினார். 
ரோமர் 1-11:
  • கிறிஸ்தவ மூல உபதேசங்கள் (நம்பிக்கை) கொடுக்கப்பட்டுள்ளது.
  • எல்லோருக்கும் எளிதில் புரியாது. 
ரோமர் 12-16:
  • பிரயோக ரீதியான சட்டத்திட்டங்கள். 
  • அதாவது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இருக்கும். 
  • அனைவருக்கும் எளிதில் விளங்கும். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4