இயேசு ஏன் கன்னியின் வயிற்றில் பிறந்தார்
இயேசு ஏன் கன்னியின் வயிற்றில் பிறந்தார்
உயிர்-இரத்தம்:
- இயேசுவின் இரத்தத்தின் முக்கியத்துவம் என்ன?
- மருத்துவ துறை சொல்கிறது, மனிதன் உடம்பில் ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தம் இல்லையென்றால் அவன் செத்து விடுவான் என்று.
- மனிதன் உயிரோடு இருப்பதற்கு இரத்தம் அவனுக்குள்ளே இருந்தே ஆக வேண்டும்.
- மனிதன் உடம்பில், உயிர் இரத்தத்தில் இருக்கிறது.
-லேவியராகமம் 17 : 11
- ஆண்டவர் சொல்லிவிட்டால் அது தான் உண்மை.
- ஏனென்றால் அவர் தான் மனிதனை உண்டாக்கினவர்.
- உண்டாக்கினவரே சொல்கிறார் தான் உயிரை இரத்தத்தில் வைத்தேன் என்று.
- ஆண்டவர் ஆதாமை மண்ணினால் உண்டாக்குகிறார்.
- ஆண்டவர் ஆதாமின் நாசியில் சுவாசத்தை ஊதின போது இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது.
- வேதம் சொல்லுகிறது, தேவன் அவன் நாசியிலே ஊதினார், அவன் ஜீவாத்துமா ஆனான் என்று.
- பிசாசுக்கு தெரிந்தது.
- காயீன் ஆபேலை கொலை செய்த போது ஆண்டவர் காயீனிடம் கேட்கிறார்.
- உன் சகோதரன் எங்கே?
- அவனுடைய இரத்தம் என்னை நோக்கி கூக்குரல் இடுகிறது என்றார்.
- பிசாசு ஆபேலின் இரத்தத்தை சிந்த காயீனைப் பயன்படுத்தினான்.
- இந்த உலகத்தில் முதன்முதல் வந்த மனித மரணம் இரத்தம் சிந்துதலினால் வந்த மரணம்.
- ஆதாமுக்கு இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது.
- அதற்கு பிறகு வந்தவர்கள் எல்லாம் பிறந்து வந்தார்கள்.
- எப்படி உருவாகிறார்கள்.
- ஒவ்வொரு மனிதனும் தாயின் கருவிலே உருவாகிறான்.
- ஆணினுடைய விந்து அணுவும், பெண்ணினுடைய முட்டையும் இணைந்து கரு உருவாகிறது.
- 9 1/2 மாதங்கள் தாயினுடைய வயிற்றிலே, கருவிலே அந்த குழந்தை வளர்கிறது.
- அந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு தேவையான ஆகாரம், காற்று(Oxygen) , தண்ணீர் அத்தனையும் தாய் மூலமாக மட்டுமே கிடைக்கும்.
- தொப்புள்கொடி மூலமாக போஷிக்கப்படுகிறது.
- தாயின் இரத்தம் மூலமாக தான் அந்த கருவிலிருக்கிற குழந்தை போஷிக்கப்படுகிறது.
- ஆனால் அந்த தாயினுடைய இரத்தம் அந்த பிள்ளைக்கு உள்ளே போவதில்லை.
- அந்த பிள்ளைக்கு இரத்தம் எப்படி வருகிறது?
- ஆணினுடைய அணு, பெண்ணின் முட்டையோடு மோதும் போது அந்த ஆணின் அணு மூலமாக தான் இரத்தம் உருவாகிறது.
- அந்த ஆணின் அணு, மின்விளக்கு அந்த Switch ஐ போடுவது போன்ற வேலையை தான் செய்கிறது.
- மற்றபடி மின்சாரம் அந்த நேரத்தில் உருவாக்கப்படுகிறது.
- அதாவது, அந்த நேரத்திலே இரத்தம் உருவாக்கப்படுகிறது.
- ஒவ்வொரு குழந்தையினுடைய இரத்தமும் தனித்தனியாக கர்த்தரால் சிருஷ்டிக்கப்படுகிறது.
- உதரணமாக அப்பாவின் இரத்தம் B negative என்று வைத்துக் கொள்வோம், அம்மாவின் இரத்தம் O Positive என வைத்துக்கொள்வோம்.
- பிள்ளைக்கு A ரக இரத்தம் வரலாம்.
- அது விஞ்ஞான ரீதியாக, வைத்திய ரீதியாக உண்மை.
- அந்த தகப்பன் மூலம் வருவதால், தகப்பன் பாவியாக இருந்தால், பிள்ளையும் பாவியாக பிறக்கிறது.
- ஆதாம் முதல் மனிதன்.
- அவன் பாவம் செய்தபடியினால், அவன் மூலம் வந்த அத்தனை மனிதர்களுக்கும், பாவ இரத்தம் வந்து விட்டது.
- ஆதாம் முதல் நம் அப்பா வரை அனைவருக்கும் பாவ இரத்தம் வந்து விட்டது.
- மனிதனுடைய பாவம் இரத்தத்தில் இருக்கிறது.
- இருதயத்தில் அல்ல, மூளையில் அல்ல.
-ரோமர் 6 : 23
பாவத்தின் சம்பளம் எப்படி மரணம்:
- ஒரு மனிதனின் இரத்தத்திற்குள் பாவம் இருக்கிறது.
- அப்படியென்றால் அந்த இரத்தத்தை முழுவதும் அவனிடம் இருந்து எடுத்து விட்டால் அவனுக்குள் இருக்கிற பாவம் வெளியே போய்விடும்.
- ஒரு மனிதனுக்குள் இருக்கிற இரத்தத்தை முழுவதும் நீக்கிவிட்டால் அவன் செத்து விடுவான்.
- பாவத்தின் சம்பளம் எப்படி மரணம்?
- இரத்தம் முழுக்க வெளியேறிவிட்டால் மரணம்.
மரணம் - கிரேக்க வார்த்தைகள்:
1)Nekros - சாதாரண இயற்கை மரணம்.
2)Thanatos - சிதைந்து, உருக்குழைந்து, நசுங்கி, உடம்பில் இருக்கிற இரத்தம் முழுக்க வெளியே போய் மரணமடைவது.
இயேசு மனிதனாக பூமிக்கு வந்தது எதற்காக?
- இயேசு மனிதனாக பூமிக்கு வந்தது எதற்காக?
- நமக்காக அவருடைய இரத்தம் முழுவதையும் சிந்தி, Thanatos மரணம் அடைவதற்காக.
- அப்படி அவர் வரும் பொழுது அவருக்கு இரத்தம் வேண்டும்.
- அந்த இரத்தமும் பாவ இரத்தமாக இருந்தால் அவர் பாவி.
- அப்பொழுது அவர் அந்த இரத்தத்தை சிந்தினால் அவருக்கு மாத்திரம் தான்,
- அந்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் வருகிற பாவ விமோசனம் கிடைக்கும்.
- அப்போது அவர் அதை மற்றவர்களுக்காக செலுத்த முடியாது.
- அதனால் அவர் பிறக்கும் பொழுது அப்பா இல்லாமல் பிறந்தார்.
- ஆணின் அணு சம்பந்தமில்லாமல் அவர் கருவுற்றபடியினால் அவருடைய இரத்தத்தில் பாவம் இல்லை.
- அந்த ஒரு காரணத்திற்காக தான் இயேசு கன்னியின் வயிற்றில் கர்ப்பம் தரித்தார்.
- ஆதாமுக்கு எப்படி, நாசியிலே ஊதும் போது இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டதோ,
- அதே போல இயேசுவுக்கும் மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியானவர் ஊதும் பொழுது இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது.
- அதை தான் வேதம் சொல்லுகிறது, பரிசுத்த ஆவியின் மூலம் கர்ப்பமானாள் என்று.
- அதனால் தான் இயேசுவுக்கு இரண்டாம் ஆதாம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
- இயேசுவுக்கு மாத்திரம், ஆணின் அணு சம்பந்தமில்லாமல் இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.
Comments
Post a Comment