கிறிஸ்துமஸ் உருவான கதை
கிறிஸ்துமஸ் உருவான கதை
முன்னுரை-நத்தார்:
- கிறிஸ்துமஸ் (Christmas) அல்லது கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (நத்தார்) ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.
- இவ்விழாவானது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில் பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.
- Dec 25 ம் தேதி, 336 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் நத்தார் கொண்டாடப்பட்டது.
- நத்தார் in Latin Language- Christo-Mass.
- Mass (Latin) என்பது நிறைய ஜனங்கள் கூடி வந்து ஆராதனை செய்வது என்று அர்த்தம்.
- நத்தார் in Greek Language - Christos
- அதற்கு கிறிஸ்து என்று பொருள்.
- எனவே, Christos என்ற கிறிஸ்துவுக்காக ஜனங்கள் எல்லோரும் கூடி வந்து கொண்டாடுவோம் என்ற பெயரில் 336 ஆம் ஆண்டு, Dec மாதம் 25 ம் தேதி முதற்முதல் நத்தார் கொண்டாடப்பட்டது.
- In English, Mass என்றால் ஜனத்திரள் என்று அர்த்தம்.
- அது தான் கிறிஸ்துமஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.
- அந்த 336 லிலேயே சில பேர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை எதிர்த்தார்கள்.
- அவர்கள் எதிர்த்ததுக்கு பெரிய காரணம் இருந்தது.
- என்னவென்றால் Dec 25 என்பது ரோமர்களின் சூரிய தெய்வத்தின் ஒரு பண்டிகை நாள்.
- ரோமர்கள் நிறைய தெய்வங்களை வணங்கி வந்தார்கள்.
- அவர்களுடைய ஒரு பிரதான தெய்வம் தான் சூரியன்.
- நிறைய மதங்களிலே சூரியனுக்கு தெய்வப்பதவி கொடுக்கப்பட்டிருந்தது.
- முதன்முதலில் உலகத்தில் தோன்றிய மதம் எது? பாபிலோனிய மதம்.
- அந்த பாபிலோனிய மதத்தில் சூரிய தெய்வம் ‘ரா’ என்று அழைக்கப்படுகிறது.
- சூரியன் ஆண்.
- சிந்து சமவெளி நாகரீகத்திலும் (இந்தியா) சூரியன் ஆண்.
- இந்து மதத்திலும், மகாபாரதத்தில் குந்தி தேவிக்கும்,சூரியனுக்கும் பிறந்த மகன் தான் கர்ணன்.
- எகிப்திய மதத்திலும் சூரியனுக்கு ‘ரா’ என்று தான் பெயர்.
- ஆனால் இந்த சூரியன் ஆணும், பெண்ணும் கலந்த ஒருவர்.
- அப்பா, அம்மாவாக இருபாலும் சேர்ந்த தெய்வம் என நம்பினார்கள்.
- வேதத்தின் படி ஆண்டவர் சூரியனோடு ஒப்பிடப்படுகிறார்.
- (மல்கியா-4 நீதியின் சூரியன்)
- ஆனால் ‘சூரியன் தெய்வம் அல்ல’ என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- சூரியனுடைய வெளிச்சமே, இயேசுவின் வெளிச்சம் தான்.
- சூரியன் ஒரு எரிகின்ற கிரகம்.
- வானத்தில் நட்சத்திரங்கள், கிரகங்கள் என்ற 2 இருக்கிறது.
- இந்த 2 க்கும் ஆன வித்தியாசம் நம் கண்களுக்கு தெரியாது.
- தொலைநோக்கு கருவியில் பார்த்தால் தான் தெரியும்.
- வானத்தை நோக்கிப் பார்க்கும் போது ஒரு சிறிய ஒளி மின்னினால் அது நட்சத்திரம்.
- மின்னவில்லை என்றால் அது கிரகம்.
- நட்சத்திரம் என்பதும் எரிகின்ற கிரகம் தான்.
- அவை சூரியனைப் போல நெருப்பு.
- தீ பிளம்புகள்.
- ஆகவே, நட்சத்திரத்தின் ஒளி இந்த உலகத்தை வந்தடைய 8 வருஷங்கள் ஆகின்றன.
- அதனால் தான் நட்சத்திரங்கள் மின்னி மின்னி நமக்கு காட்சியளிக்கின்றன.
- கிரகங்கள் என்பவை நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றிடம் ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன.
- அதனால் தான் அவை மின்னுவது கிடையாது.
- கிட்டதிட்ட சந்திரனைப் போல.
- “நானே உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்” என்று இயேசு சொன்னது Solar வெளிச்சம்.
- இயேசு தன்னுடைய சொந்த வெளிச்சத்தைக் பிரதிபலிக்கிறார்.
- நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. மத்தேயு 5 : 14
- அந்த இடத்தில் இயேசு பயன்படுத்தியிருக்கிற சொல் Lunar வெளிச்சம்.
- இயேசுவின் வெளிச்சத்தை எடுத்து நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள்.
- உங்களுக்கு சொந்த ஒளி இல்லை என்கிறார்.
- கிறிஸ்தவத்திலே படைக்கப்பட்ட எதர்க்கும் தெய்வபதவி இல்லை.
- ஒரே தேவன்.
- ரோமர்களுக்கு சூரியன் ‘தெய்வம்’ என்பதால், ஒவ்வொரு வாரத்திலும் முதலாம் நாள் அதை வணங்குவதற்காக அந்த நாளை வேறுபடுத்தி வைத்திருந்தார்கள்.
- வாரத்தின் முதலாவது நாள் ‘சூரிய நாள்’ என்று அழைக்கப்படுகிறது.
- எனவே தான் “வாரத்தின் முதலாவது நாளுக்கு ஆங்கிலத்திலே Sunday” என்று பெயர்.
- வருஷந்தோறும் Dec 25 ம் தேதி இந்த சூரிய தெய்வத்துக்கு ரோமர்கள் ஒரு பெரிய பண்டிகையை கொண்டாடி வந்தார்கள்.
Constantine மன்னன்- கிறிஸ்தவன்:
- ஆனால் 312 ம் ஆண்டு Constantine என்று சொல்லுகின்ற ஒரு மன்னன் திடீரென கிறிஸ்தவனாய் மாறினான்.
- அவன் கிறிஸ்தவனாய் மாறினதற்கு காரணம்- அவன் ஒரு சொப்பனம் கண்டானாம்.
Constantine மன்னன்- சொப்பனம்:
- Milvian பாலம் அந்த இடத்தின் அருகில் Maxentius என்பவன் அவனோடு யுத்தம் செய்ய போகும் பொழுது En-Tu-Ta-nica என்று கிரேக்க மொழியில் எழுதப்பட்ட எழுத்தையும், ஒரு சிலுவையையும் கண்டானாம்.
- En-Tu-Ta-nica என்றால் “இந்த அடையாளத்தை கொண்டு வெற்றிப் பெறு” என்று அர்த்தம்.(In this sign conquer.)
- எனவே, அந்த சிலுவை அடையாளத்தை வைத்து வெற்றி பெறுவதற்காக அதிகாலையிலே எழுந்து தன்னுடைய போர் வீரர்களுக்கெல்லாம் சொன்னானாம்,
- உங்களுடைய பட்டய பிடியிலே, உங்களுடைய ஈட்டிகளிலே, கேடயத்திலே, தலைச்சீராவிலே சிலுவை அடையாளத்தை போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னான்.
- அவர்கள் போட்டு கொண்டு Maxentius ஓடு யுத்தம் செய்து, Constantine வெற்றிக் கொண்டானாம்.
- வெற்றி பெற்று வீட்டிற்கு வரும் போது தான், அவருடைய தாயார் Helena சொன்னாராம், இது வேறு யாருமல்ல.
- நான் இரகசியமாய் வணங்கி வருகிற கிறிஸ்தவ தெய்வமாகிய இயேசு தான் உன்னைக் காப்பாற்றினார் என்று.
- அவரை சிலுவையில் அறைந்து நம்முடைய அரசாங்கம் தான் கொலை செய்தது என்று.
- 313 ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தை சர்வதேச மதமாக பிரகடம் செய்தான்.
- 313 க்கு பிறகு இந்த ரோம மதத்தை வணங்கி கொண்டிருந்தவர்கள் எல்லாம் அதை விட்டு விட்டு கிறிஸ்தவர்களாய் மாறி வந்த நிலையில்.
- கி.பி 330-335 வரும் போது ரோம மதத்தை வணங்குகிறவர்களே இப்போது கிடையாது.
- எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்டனர்.
- ஆனால் பிரச்சினை என்னவென்றால், மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திலே பண்டிகை கொண்டாடி விட்டால் அந்த காலம் வரும் போது அவர்களுக்கு இருக்க முடியாது.
- Dec மாதம் வந்துவிட்டால் ரோமாபுரி எங்கும் கலை கட்டும்.
- ஆனால் இப்போது தான் சூரிய தெய்வத்தை வணங்குவது கிடையாதே.
- இதனால் தான் அவர்கள் யோசித்து அந்த நாளிலே இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என நினைத்தார்கள்.
- இயேசு பிறந்த வருடம் தெரியும்.
- தேதி தெரியாது.
- குளிர் காலத்தில் பிறந்தார் என்று தெரியும்.
- Nov last- Feb last வரை குளிர் காலம்.
- எனவே Dec 25 இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தார்கள்.
- மனிதர்களே பிறந்தநாள் கொண்டாடும் போது இயேசுவுக்காக ஒரு நாள் பிறந்தநாள் கொண்டாடுவதில் என்ன தவறு.
- ஆனால் ஏன் அந்த நாள்.
- ரோமர்களுடைய கலாச்சாரத்தை கொஞ்சம் அதில் கொண்டு வந்தார்கள்.
- அதை விலக்கி விட்டு, பண்டிகை கொண்டாடுவதில் தவறில்லை.
- ரோமர்கள் எங்கிருந்து இதை எடுத்தார்கள் என்று பார்த்தால் அது நமக்கு ஆசீர்வாதமானது.
- ரோமர்களுக்கு அது எப்பொழுது வந்தது?
- ரோமர்கள் முன்பு ஒரு சாதாரண நாடாய் இருந்து உலகத்தையே பிடித்து கொண்ட ஒரு சாம்பிராஜ்யமாக மாறியது.
- அந்த சாம்பிராஜ்யத்தின் முதல் பேரரசரின் பெயர் Gaius-Julius- Kaiser
- In English, Gaius Julius Caesar
- அவருடைய பெயரில் தான் July மாதம் வந்தது.
- அதற்கு அடுத்தபடியாக ஆட்சி செய்தவர் Augustus Kaiser
- அவருடைய பெயரில் தான் August மாதம் வந்தது.
- கி.மு 4 ம் ஆண்டிலே, Julius Caesar அவன் யூதர்களுடைய ஒரு பண்டிகையை பார்த்து ரசித்தான்.
- யூதர்கள் யார்?
- வேதத்தின் ஜனங்கள்.
- அவர்களுடைய பண்டிகையை அப்படியே இவன் எடுத்து கொண்டு ‘சூரிய தெய்வ பண்டிகையாக’ மாற்றி கொண்டான்.
Antiochus Epiphanes- சிரியா தேசத்து இராணுவ தளபதி:
- கி.மு 167 ம் ஆண்டிலே, அதாவது மல்கியாவுக்கு பிறகு Antiochus Epiphanes என்று சொல்லுகின்ற ஒரு இராணுவ தளபதி இருந்தான்.
- சிரியா என்ற தேசத்து இராணுவ தளபதி.
- அந்நாட்களிலே அவனுக்கும் பெர்சியர்களுக்கும் தொடர்பு இருந்தது.
- ஆனால் ரோமாபுரி, யுத்தம் செய்து உலகத்தை கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருந்த ஒரு காலம் அது.
- அவன் தன்னுடைய இராணுவ வீரர்களோடு எருசலேமிற்குள் வந்ததான்.
- ஏனென்றால் எருசலேமிலே இராணுவம் இல்லை. ராஜா இல்லை.
- முன்பு எருசலேமியர்கள், பெர்சியர்களுக்கு கீழே இருந்தார்கள்.
- இப்பொது எருசலேமியர்கள் கிரேக்கர்களுக்கு கீழே இருக்கிறார்கள்.
- எனவே 334 ம் ஆண்டு Alexander மன்னன் என்ற கிரேக்க மன்னன் உலகத்தை கைப்பற்றி கொண்டான்.
- அப்போது இந்த Antiochus Epiphanes என்பவன் வந்து எருசலேமை பிடித்து கிரேக்க தெய்வமாகிய Zeus தெய்வத்தின் சிலையை கொண்டு வந்து தேவாலயத்திலே வைத்தான்.
கொடுமை மற்றும் யூதர்களின் புரட்சி:
- தேவாலயத்திலே வைத்து பன்றியை கொன்று அதிலே பலியிட்டான்.
- யூதர்களுக்கு பன்றி என்றால் பிடிக்காது.
- ஆகவே, யூதர்கள் புரட்சி பண்ணினார்கள்.
- அம்பொழுது இவனும், இவனுடைய இராணுவ வீரர்களும் யூதர்களை பயங்கரமாக கொலை செய்தார்கள்.
- கர்ப்பிணி பெண்களை தேவாலயத்து உப்பரிகையின் மேல் இருந்து தள்ளி கொலை செய்தார்கள்.
- அந்த நேரத்தில் தேவாலயத்து பிரதான ஆசாரியனாக இருந்தவர் பெயர் Mattathias.
- அவரின் மூத்த மகன்பெயர் யெகுதா. (Yehudah Hamakabi)
- Judas Maccabeus in English.
- தமிழிலே யூதா.
- அவன் வாலிபர்களையும், தன்னுடைய தம்பிமார்களையும் கூட்டிக் கொண்டு ஒரு மலையின் மேல் போய் ஒளிந்து கொண்டிருந்து 2 வருஷங்களுக்கு பிறகு வந்து இந்த Antiochus Epiphanes ஐ துரத்தி அடித்து மறுபடியும் எருசலேமை கைப்பற்றிக் கொண்டான்.
- அவனும், அவன் தந்தையாரும் சேர்ந்து தேவாலயத்தை சுத்திகரித்து பிரதிஷ்டை செய்தார்கள்.
- பிரதிஷ்டை செய்து ‘இழந்து போன ஒளி’ மறுபடியும் வந்தது என்று தேவனுக்கு இதை பிரதிஷ்டை செய்தோம்.
- Hanuka; Han என்றால் பிரதிஷ்டை. Uk-hah என்றால் வெளிச்சம்.
- இரண்டையையும் சேர்ந்த ஒரு பண்டிகையாக Hanuka பண்டிகை அமைந்தது.
- கி.பி 325 calendar, Dec 25 இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- அந்த பண்டிகை கொண்டாடும் போது கூடுதலாக ஒளி வந்தது என்று சொல்லி அவர்கள் Menorah வில் இன்னும் இரண்டு விளக்குகளை கூட்டி 9 விளக்குகளை வைத்து Hanuka Menorah என்று பெயர் வைத்தார்கள்.
- இந்த பண்டிகையை எட்டுநாட்கள் கொண்டாடுவார்கள்.
- 8th day- Dec 25.
- அந்த எட்டு நாட்களிலும் வீடுகளில், தேவாலயத்தில் இரவில் கூட வெளிச்சம் எரியும்.
- அந்த பண்டிகை கொண்டாடப்பட்ட நாள் யூதர்களுடைய Kis-lev மாதம் 25 ம் தேதி தொடங்கி எட்டு நாட்கள்.
- ஆகவே Kis-lev என்பது நம்முடைய December மாதம்.
- அப்போ Dec 25 உண்மையாக யூதர்களுடைய பண்டிகை.
- தேவாலயத்தை சுத்திகரித்து மறுபடியும் பிரதிஷ்டை பண்ணினப்படியினால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது.
- எருசலேமின் தேவாலயத்தை சுத்திகரித்த ஒரு பண்டிகையின் நாளில் இயேசு பிறந்ததை கொண்டாடுவதில் என்ன தப்பு!
- அது அவருக்கு பிரியம்
- யோவான் 2 ல் அவரது ஊழியம் தொடங்கியவுடன், முதல் அற்புதத்தை கானா ஊர் கலியாணத்திலே செய்துவிட்டு , தேவாலயத்தை சுத்திகரிக்கிறார்.
- மத் 21 ல் கடைசியாக பிரவேசிக்கும் போது எருசலேமிற்கு, சிலுவையில் மரிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு , 2வது முறை தேவாலயத்தை சுத்திகரிக்கிறார்.
- இயேசுவின் பிறந்த நாள் என்று வருடத்தில் ஒரு நாளை ஆசரிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.
Comments
Post a Comment