ஏசாயா 8:22 to 9:7 Explanation
ஏசாயா 8:22 to 9:7 விளக்கம்
அவர்கள் (இஸ்ரவேல் ஜனங்கள்) அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
-ஏசாயா 8 : 22
-ஏசாயா 8 : 22
முன்னுரை:
- ஏசாயா யூதா ராஜ்யத்தில் வாழ்ந்த ஒரு தீர்க்கத்தரிசி.
- யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் மாத்திரம் தான் இருந்தன.
- வடக்கு ராஜ்யத்திற்கு 10 கோத்திரங்கள் இருந்தன.
- கி.மு 722 ல் அசீரிய ராஜ்யம் வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேலுக்குள் புகுந்து அவர்களை அடித்து நொறுக்கி
- அந்த தேசத்தையே இல்லாமல் ஆக்கி விட்டது.
- அந்த தேசத்தை இல்லாமல் ஆக்கின பொழுது அங்கு அந்நியர்கள் குடியேறினார்கள்.
- அதற்கு பிறகு அந்நியர்களும், அவிசுவாசிகளும் வாழ்ந்த ஒரு பிரதேசமாக அந்த பிரதேசம் மாறியது.
வசன விளக்கம்:
- இஸ்ரவேலர்கள் தங்களுடைய நாட்டை பார்ப்பார்களாம்.
- அந்த நாடு நாசமாய் போயிருக்குமாம்.
- அந்தகாரமாய் இருக்குமாம்.
- இது நடந்தது.
- அசீரியர்கள் வந்து தேசத்தை பிடித்த போது அப்படி தான் ஆகியது.
- இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஏசாயா வருகிறார்.
- அசீரியர்கள் வந்து வடக்கு ராஜ்யத்தை அடித்து 22 வருடங்களுக்கு பிறகு ஏசாயா வருகிறார்.
- 22 வருடங்களாக இஸ்ரவேல் இருளாக அசுத்தமான இடமாக இருந்தது.
- விசேஷமாக கலிலேயா கடல் பக்கத்தில் நாசரேத் ,
- யோர்தான் நதி (கலிலேயா கடல் மேலே தொடங்கி, கீழ் வரை இருக்கும்)
- அது நல்ல தண்ணீர். உப்பு நீர் அல்ல.
- அந்த பிரதேசம் முழுக்க 22 வருஷங்களாக அந்நியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு,
- இருளடைந்து, தேவ மகிமை இல்லாமல் அலங்கோலமாய் காணப்பட்டது.
- அங்கு வாழ்ந்த இஸ்ரவேலர்கள் உலகெங்கும் சிதறிப்போய் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
- அப்போது தான் ஏசாயா வந்து தீர்க்கத்தரிசனம் உரைக்கிறார்.
- அவர்களுக்கு தான் ஏசாயா தீர்க்கத்தரிசனமாக 9வது அதிகாரத்தை சொல்கிறார்.
-ஏசாயா 9 : 1
விளக்கம்:
-ஏசாயா 9 : 2
- ஏசாயா 9:1 ஆகிலும் என தொடங்குகிறது.
- என்ன இருந்தாலும், என்ன நடந்தாலும், மாற்றவே முடியாத சூழ்நிலை என்றாலும் நான் நினைத்தால் எதையும் செய்வேன் என்கிறார் கர்த்தர்.
- யோசுவாவின் காலத்தில் தேசம் பகுதி பகுதியாக பிரித்து கொடுக்கப்பட்டது அல்லவா?
- கலிலேயா பக்கத்தில் உள்ள அந்த முழு பிரதேசமும் நப்தலி கோத்திரத்துக்கு கொடுக்கப்பட்டது.
- கானா ஊர் , நாசரேத் அந்த பிரதேசம் செபுலோன் கோத்திரத்துக்கு கொடுக்கப்பட்டது.
- எனவே நப்தலி, செபுலோன் கோத்திரம் இருந்த பிரதேசம் கலிலேயா பிரதேசம் என்று அழைக்கப்பட்டது.
- அந்த பிரதேசம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.
- ஆனால் அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார் என்று ஏசாயா தீர்க்கத்தரிசனமாக சொன்னார்.
- ஆண்டவர் அதை செய்தார்.
- எப்படி செய்தார்?
- இயேசுவை என்னவென்று சொல்லுகிறார்கள்?
- நசரேயனாகிய இயேசு.
- புதிய ஏற்பாட்டு காலத்திலே தேவாலயத்துக்கு போய் கொண்டு இருக்கும் பொழுது பேதுருவும், யோவானும் ஒரு முடவனைக் காண்கிறார்கள்.
- அவன் பிச்சை கேட்கிறான்.
- அப்போது பேதுரு பொன்னும், வெள்ளியும் என்னிடத்தில் இல்லை.
- நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று சொன்னார்.
- சம்பவம் நடந்தது எருசலேமிலே.
- நாசரேத் கலிலேயாவில் இருக்கிறது.
- இயேசுவை மாத்திரமல்ல, நாசரேத் ஐ யும் மகிமைப்படுத்தினார் பேதுரு.
- ஆண்டவர் இன்றைக்கு வரை நாசரேத்தை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
- இயேசுவின் வருகையோடு அந்த நாசரேத் மகிமைப்பட தொடங்கியது.
- இங்கு ஏசாயா தீர்க்கத்தரிசனமாக சொல்லியிருக்கிறார் செபுலோன், நப்தலி இருக்கிற இடங்கள் இப்போது அந்நியர்களிடம் இருக்கிறது.
- ஆனால் ஒரு நாள் ஆண்டவர் அதை மகிமைப்படுத்துவார்.
- இஸ்ரவேலர்களுக்கு ஒரு பாலகன் பிறப்பார்.
- இஸ்ரவேலர்களுக்கு ஒரு குமாரன் கொடுக்கப்படுவார்.
- அவர் மூலம் அத்தேசம் மகிமைப்படும்.
- இயேசு கலிலேயாக் கடலில் நடந்தார்.
- இயேசு மறுரூபமான இடம் தாபோர் மலை. அது கலிலேயாவில் இருக்கிறது.
- இப்படி கலிலேயாவை இயேசு மகிமைப்படுத்தினார்.
-ஏசாயா 9 : 2
- கலிலேயாவில் வாழ வேண்டியவர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் அலைந்து திரிகிறபடியினால், நாடில்லாமல் அலைந்து திரிந்தார்கள்.
- அவர்கள் இருளில் இருந்தார்கள்.
- இயேசுவானவர் நாட்டை மீட்டு இஸ்ரவேலர்களுக்கு திருப்பி கொடுத்தார்.
- இயேசுவானவர் தான் அந்த பெரிய வெளிச்சம்.
- மரண இருளின் தேசம் இஸ்ரவேல்.
அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.
-ஏசாயா 9 : 3
-ஏசாயா 9 : 3
- இஸ்ரவேலர்களுக்கு சந்தோஷமே இருக்கவில்லை. நாடில்லாமல், வீடில்லாமல் இருந்தார்கள்.
- இயேசு அவர்களுக்கு நாட்டைக் கொடுத்து, வீட்டைக் கொடுத்து சந்தோஷத்தைக் கொடுத்தார்.
- தேவன் தான் மகிழ்ச்சியை பெருகப் பண்ணினார்.
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.
-ஏசாயா 9 : 4
-ஏசாயா 9 : 4
- இயேசு இஸ்ரவேலர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்.
1948 May 14:
- இஸ்ரவேல் ஒரு தேசமாக மலர்ந்த அன்றே, ஆறு தேசங்கள் இவர்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வந்தது.
- அப்போது இராணுவம் இல்லாமல், இராணுவ தளபதி இல்லாமல், பாராளுமன்றம் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல்
- இஸ்ரவேலர்கள் அந்த 6 தேசங்களையும் தோல்வியடையச் செய்து 500 சதுர மீட்டர் அதிகமாக பெற்றுக் கொண்டார்கள்.
- அந்த வெற்றியை கொடுத்தவர் இயேசு.
1967 June 5:
- எகிப்து, சீரியா, யோர்தான் என்ற 3 நாடுகளையும்,
- 6 நாட்களில் அடித்து தோற்கடித்து தோல்வியடையச் செய்தார்கள்.
- அந்த வெற்றியை கொடுத்தவர் இயேசு.
1973:
- நப்தலிக்கு சொந்தமான Golan Heights என்ற பிரதேசத்தை 25 ஏ இராணுவ வீரர்கள் போய் கைப்பற்றினார்களே!
- அதுவும் பஸ்கா நாளிலே அதை செய்தார்களே!
- அந்த வெற்றியை கொடுத்தவர் இயேசு.
முடிவுரை:
- அது போல இன்று வரை இஸ்ரவேலர்களுக்கு வெற்றியைக் கொடுத்து கொண்டிருப்பவர் இயேசு.
- இஸ்ரவேலர்களுக்கு தேவன்
2)சந்தோஷம்
3)வெற்றி
போன்ற மூன்றையும் கொடுத்து ஆசீர்வதித்தார்.
அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.
-ஏசாயா 9 : 5
- இந்த தீர்க்கத்தரிசனம் மாத்திரம் இன்னும் நிறைவேறக் காத்திருக்கிறது.
நமக்கு (இஸ்ரவேலர்களுக்கு)
ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
-ஏசாயா 9 : 6
-ஏசாயா 9 : 6
- இயேசு வருவதற்கு 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா, தீர்க்கத்தரிசனமாக இயேசுவை குறித்து சொல்லுகின்ற ஒரு வசனம்.
- பிறக்கப் போகின்ற குழந்தை.
- பரலோக பிதாவே மனிதனாக வந்து பிறக்க போகிற அந்த தீர்க்கத்தரிசனத்தை அவர் சொல்கிறார்.
-ஏசாயா 9 : 7
- இஸ்ரவேலை மறுபடியும் ஆண்டவர் தூக்கி நிறுத்துவார்.
- கர்த்தர் தன்னுடைய ஜனங்களை மீட்டு, இஸ்ரவேல் நாட்டையும் மீட்டு, அந்த தேசத்துக்கு சமாதானத்தை அருளுவார்.
Comments
Post a Comment