உன்னதப்பாட்டு புத்தகம்-முன்னுரை
உன்னதப்பாட்டு புத்தகம்-முன்னுரை
- உன்னதப்பாட்டு புத்தகம் என்பது பழைய ஏற்பாட்டில் அமைந்திருக்கின்ற ஆனால் புதிய ஏற்பாட்டு சம்பந்தமான தீர்க்கத்தரிசன புத்தகம்.
- இந்த புத்தகம் ஒரு இறையியல் புத்தகம், ஒரு சரித்திர புத்தகம், ஒரு தீர்க்கத்தரிசன புத்தகம், ஒரு கவிதை புத்தகம, ஒரு ஆராதனை புத்தகம்.
- இந்த புத்தகத்தில்ஆண்டவரைப் பற்றி, ஆதியைப் பற்றி, சிருஷ்டிப்பைப் பற்றி, இயேசுவைப் பற்றி, சபையைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, பரலோகத்தைப் பற்றி, புதிய வானம், புதிய பூமியைப் பற்றி இருக்கிறது.
பெயர்க்காரணம்:
தமிழ் - உன்னதப்பாட்டு
Greek: Asma Asmatone (பாடல்களுக்கெல்லாம் பாடல்)
Hebrew: ஷீர் ஹஷீரீம் , sheh ha shaheem
Sheh-பாடல்; sheheem- பாடல்கள்
Greek: Asma Asmatone (பாடல்களுக்கெல்லாம் பாடல்)
Hebrew: ஷீர் ஹஷீரீம் , sheh ha shaheem
Sheh-பாடல்; sheheem- பாடல்கள்
Meaning: பாடல்களுக்கெல்லாம் பெரிய பாடல்
இந்த புத்தகம் தேவனால் சாலொமோன் மூலமாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் இது உன்னதப்பாட்டு என்று பெயர் பெறுகிறது.
சாலொமோனின் ஞானம்:
ஏன் உன்னதப்பாட்டு புத்தகம் பாடல்களுக்கெல்லாம் பெரிய பாடல் என்று அழைக்கப்படுகிறது?
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
-1 இராஜாக்கள் 4 : 29
வசன விளக்கம்: ஞானம்-ஆவி சம்பந்தப்பட்டது
புத்தி-ஆத்துமா(மூளை) சம்பந்தப்பட்டது
மனோவிருத்தி- psychological stamina, Mental stamina
சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
-1 இராஜாக்கள் 4 : 30
அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.
-1 இராஜாக்கள் 4 : 31
அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
-1 இராஜாக்கள் 4 : 32
சாலொமோனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. ஆனால் அதில் கொஞ்சம் தான் நமக்கு நீதிமொழிகள் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை சாலொமோன் பாடியுள்ளதால், உன்னதப்பாட்டு புத்தகம் பாடல்களுக்கெல்லாம் பெரிய பாடல் என்று அழைக்கப்படுகிறது.
சாலொமோன் அனைத்திலும் சிறந்தவர்:
லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், (Botanist) மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள்(zoologist) மச்சங்கள்(Aqua Marinologist) ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.
-1 இராஜாக்கள் 4 : 33
- விஞ்ஞானம், கலை, தீர்க்கத்தரிசனம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, ஆதி, அந்தம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர், இயேசு, சபை, புறஜாதியார், இஸ்ரவேலர்கள், பிசாசு, சோதனை, சபை எடுத்துக்கொள்ளப்படுதல், ஆயிரம் வருட அரசாட்சி, புதிய வானம், புதிய பூமி இவை அனைத்தும் உன்னதப்பாட்டு புத்தகத்தில் அடங்கியுள்ளது. இந்த புத்தகத்தில் இல்லாதது ஒன்றுமில்லை.
- ஆனால் இவை அனைத்தும் மறைப்பொருளாக காட்டப்பட்டுள்ளது.
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
-நீதிமொழிகள் 25 : 2
சாலொமோன் name meaning:
Shalom- சமாதானம்
Shalo-mone- சமாதானன்
Shilo-h- சமாதானர்
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
-ஏசாயா 9 : 6
கதாநாயகன், கதாநாயகி-Meaning:
சாலொமோன்- சமாதானப்பிரபு-இயேசு
சூலமித்தியாள் -சமாதானப்பிரபுவின் பெண்பால்- சபை
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
-கலாத்தியர் 5 : 21
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
-கலாத்தியர் 5 : 22
சாலொலோன் என்கிற இயேசுவானவரும், சூலமித்தியாள் என்று சொல்கின்ற சபையும் ஒருவரை ஒருவர் நோக்கி பாடுகின்ற அந்தப் பாடலின் மூலம், ஆண்டவர் அழகாக தன்னுடைய எதிர்ப்பார்ப்புகளை, ஏக்கங்களை, தனது அறிவுரைகளை, படிப்பினைகளை வேதத்தின் தீர்க்கத்தரிசனத்தை, விடயங்களை உள்ளடக்கி நமக்கு தந்திருக்கிறார்.
Comments
Post a Comment