பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் - சாஸ்திரிகளின் காணிக்கை
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
-மத்தேயு 2 : 11
· மத்தேயுவின் இரண்டாம் அத்தியாயத்தின்படி, சாஸ்திரிகள் குழந்தை இயேசு கிறிஸ்துவிற்கு பொன், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம் போன்ற பரிசுகளை கொண்டு வந்தார்கள்.
· மூன்று பரிசுகள் இருந்ததால், மூன்று சாஸ்திரிகள் இருந்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.
· ஆனால் வேதம் உண்மையில் அந்த குறிப்பிட்ட 3 என்ற எண்ணை நமக்கு சொல்லவில்லை.
· இந்த மூன்று பரிசுகளும் பண்டைய காலங்களில் மிகவும் மதிப்புமிக்கவையாக இருந்தன.
· அவற்றின் பெரிய மதிப்புக்கு மேலதிகமாக, இந்த பரிசுகள் ஒவ்வொன்றும் அவற்றின் அடையாளத்திலும், பண்டைய ஆலய வழிபாட்டிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தது.
பொன்
· பொன் பெரும்பாலும் செல்வ செழிப்பையும், உலகத்தின் மிகப் பெரிய பொருளாகவும், அரசாட்சியின் அடையாளமாகவும் காணப்பட்டது.
· பண்டைய கட்டமைப்புகள் முழுவதும் தேவனுடைய வழிபாட்டிற்கு பொன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
· இது தெய்வத்துவத்தின் அடையாளமாகவும், தேவனின் பிரசன்னமாகவும் காணப்பட்டது.
· மோசேயின் ஆசரிப்பு கூடாரத்திற்குள் சுவர்கள் தங்கத்தால் (பொன்) மூடப்பட்டிருந்தன.
· அதே போல் பரிசுத்த ஸ்தலத்திலும், மகா பரிசுத்த ஸ்தலத்திலும் ஒவ்வொரு மரவேலையால் ஆன பொருளும் பொன்னால் மூடப்பட்டிருந்தன.
· சாலொமோனின் ஆலயத்தின் அழகாக செதுக்கப்பட்ட சுவர்களும், அத்துடன் தரையும் மற்றும் மரசாமான்களும் பொன்னால் மூடப்பட்டிருந்தன.
· ஏரோது ஆலயம்,அதாவது, இயேசுவின் காலத்தில் இருந்த ஆலயம், முழுவதும், உட்புற சுவர்களும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
· பிரதான ஆசாரியரின் ஆடைகளின் துணியிலும், தலையின் கிரீடத்திலும், பன்னிரண்டு கற்களுக்கான அமைப்புகளிலும், நீல நிற அங்கியின் முனையின் மணிகளிலும் தங்கம் நெய்யப்பட்டு இருந்தது.
· கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் பொன் கொண்டு வந்ததற்குள் அடங்கி இருக்கும் இரகசியம் என்னவென்றால்,
1) பொன் என்றால் அரசாட்சியின் சின்னம்
2) பொன் என்றால் ஆலய வழிபாடு
3) பொன் என்றால் தெய்வத்துவத்தின் அடையாளம்
சாஸ்திரிகள் பொன்னை கொண்டு வந்தார்கள் என்பது, நம் சார்பாக பரிந்து பேசும் பெரிய பிரதான ஆசாரியராகிய இரட்சகரைக் குறிக்கிறது.
பொன் – துதி
ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும்கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.
ஏசாயா 60 : 6
தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம்
· அரேபியாவிலும் வட ஆபிரிக்காவிலும் பெரும்பாலும் வளரும் இரண்டு வகையான மரங்கள் தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம்.
· அவை இரண்டும் மர பிசின்கள்
· இரண்டு தூபங்களும் மிகவும் மதிப்புமிக்கவையாக இருந்தன.
· அவற்றின் மருத்துவ குணங்கள் அக்காலத்தில் மிகவும் பிரசித்தம் பெற்றவை.
தூபவர்க்கம்
· தூபவர்க்கம் என்பது இனிப்பு தன்மை கொண்டது.
· அது எரிக்கப்படும் போது சுகந்த வாசனை அதிலிருந்து வெளியேறும்.
· அப்போது பூச்சிகள் மற்றும் பிற கிருமிகள் அழியும்.
· அதை வாசனை திரவியமாக உபயோகிப்பார்கள்.
· பழங்காலத்தில், வழக்கமாக தூபவர்க்கத்தை குளியலுக்காக பயன்படுத்துவார்கள்.
· பல மோசமான நாற்றங்களை கூட இதன் வாசனை மேற்கொள்ளும்.
· எனவே, இது பெருமதிப்பு வாய்ந்தது.
· ஆலய வழிபாட்டில், அப்பங்களின் மேஜையில் இந்த தூபவர்க்கம் வைக்கப்பட்டு, ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஆசாரியர்களால் அது எரிக்கப்படும்.
· கூடுதலாக, இது மற்ற தூபங்களுடன் இணைக்கப்பட்டு, தினமும் காலையிலும் மாலையிலும் தூப பலிபீடத்தில் எரிக்கப்பட்டும்..
· சங்கீத புத்தகத்தில் சொல்லியிருக்கிறப்படி, தூபம் எரிப்பது பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக கர்த்தரிடம் ஏறெடுக்கப்படும் இஸ்ரவேலின் ஜெபங்களைக் குறிக்கிறது.
தூபவர்க்கம் – ஜெபம்
என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.
சங்கீதம் 141 : 2
தூபவர்க்கம் – ஜெபம்
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடையஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
வெளிப்படுத்தல் 5 : 8
வெள்ளைப்போளம்
· வெள்ளைப்போளம் என்பது ஒரு தூபம்.
· இந்த வார்த்தை "கசப்பு" என்று பொருள்படும் அரபு வார்த்தையிலிருந்து வந்தது.
· இது அதன் நறுமணத்திற்கும், கிருமி நாசினிகள், வலி நிவாரணி (மேற்பூச்சு வலி நிவாரணி) மற்றும் பிற மருத்துவ குணங்களுக்கும் பிரசித்தம் பெற்றது.
· மருந்து மற்றும் வாசனை திரவியமாக பயன்படுத்தப்பட்டது.
· ஆலய வழிபாட்டில், அபிஷேக எண்ணெயில் வெள்ளைப்போளம் சேர்த்து அதை சூடாக்கி பின்னர் ஒலிவ எண்ணெயுடன் அதை சேர்த்துக் உபயோகிப்பார்கள்.
· இந்த பரிசுத்த அபிஷேக எண்ணெய், ஆசரிப்பு கூடாரத்திலும் பின்னர் எருசலேம் தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது.
· வெள்ளைப்போளம் பெரும்பாலும் இறந்த உடல் வாடை வராமல் இருக்க பயன்படுத்துவார்கள்.
· யோவானின் நற்செய்தின்படி, நிக்கொதேமு இயேசுவின் உடலை போர்த்த 100 பவுண்டுகள் வெள்ளைப்போளம் மற்றும் பிற கற்றாழைகளை கொண்டு வந்தார்,
· சிலுவையில், இயேசுவுக்கு வெள்ளைப்போளம் கலந்த மதுவும் வழங்கப்பட்டது,
· வெள்ளைப்போளம் மரங்கள் வெட்டப்படும் போது, காயப்பட்டு பிசின் வெளியேறுகிறது. அந்த பிசின் நமக்கு மருந்தாகவும், வாசனை திரவியவமாகவும் பயன்படுகிறது.
· அது போல, இயேசுவானவரும், காயப்பட்டு, இரத்தம் கசிந்து, நமக்கு சுகத்தையும், மீட்பையும் கொடுத்திருக்கிறார்.
· அவருடைய பாடுகளின்நிமித்தம் நமக்கு சுகம், வல்லமையின் அபிஷேகம் உண்டு.
வெள்ளைப்போளம் – மேன்மையான சுகந்தவர்க்கம்
மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,
-யாத்திராகமம் 30 : 23
வெள்ளைப்போளம் – நிக்கொதேமு
ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
யோவான் 19 : 39
சாஸ்திரிகளின் இந்த மூன்று பரிசுகளில்-பொன், தூபவர்க்கம், மற்றும் வெள்ளைப்போளம்,
பொன் தேவனுடைய அலங்கரிப்பு என்பதால், அவர் ஒருவரே தேவன் என்பதையும், ராஜாவின் அலங்கரிப்பு என்பதால் அவரே ராஜாதி ராஜா என்பதையும், அரசாட்சியின் அடையாளம் என்பதால் அவர் ஒருவரே அரசாள போகிறார் என்பதையும் குறிக்கிறது.
தூபவர்க்கம், பல கெட்ட வாடைகளை நீக்குவது போல, இயேசுவும், நம் கெட்ட அழுக்குகளை நீக்க வந்தார் என்பதை குறிக்கிறது. அதன் இனிப்பு சுவையை போல, இனிப்பான வாழ்க்கையை நமக்கு கொடுத்தருள வந்தார் என்பதையும் குறிக்கிறது.
வெள்ளைப்போளம் ,கசப்பு கலந்த வலி நிவாரணி. அது போல இயேசு நமக்காக கசப்பு கலந்த சிலுவை மரணத்தை நமக்காக ஏற்றுக் கொண்டு, நமக்கு நம் பாவமாகிய நோயிலிருந்து நமக்கு விடுதலையை கொடுக்க வந்தார் என்பதை குறிக்கிறது.
Comments
Post a Comment