ஆசரிப்புக் கூடாரம் மற்றும் மேசியா
முன்னுரை:
- ஆதியாகமம் புத்தகத்தின்படி, ஆரம்பத்தில் கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்து ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார்.
- அங்கு அவர்கள் ஆண்டவரின் முன்னிலையில் வாழ்ந்தார்கள்.
- ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தை புசித்த பிறகு, அவர்கள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- எனவே, பாவம் மற்றும் மரணத்தின் விளைவுகளை சரிசெய்ய பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே மகனை உலக மீட்பராக அனுப்பினார்.
இரட்சகரின் மகத்தான கர்த்தரின் கடைசி பலியை எதிர்பார்த்து,
- ஆதாம், நோவா போன்ற நீதியுள்ள சீஷர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பலிகளைச் செலுத்தச்சொல்லி தேவன் அறிவுறுத்தினார்.
- இறுதியில், தேவன் ஆபிரகாம் ,சாராள் என்ற நீதியுள்ள மனிதருடன் ஒரு சிறப்பு உடன்படிக்கை செய்தார்.
- அவர்களின் சந்ததியினர் இஸ்ரவேல் என்று அறியப்பட்டனர்.
மோசே எகிப்தியரின் கீழ் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலை விடுவித்த பிறகு,
- வளர்ந்து வரும் இஸ்ரவேல் குடும்பமாகிய ஆபிரகாமின் மூலம் உடன்படிக்கையை புதுப்பித்து, இவர்கள் ‘தேவனின் மக்கள்’ என்று உறுதியளித்தார்.
- இருப்பினும், பயம் நிறைந்ததும், விக்கிரக வழிபாட்டிற்கு விரைவாக திரும்புவதுமாக அவர்கள் இருந்ததால் தேவனுக்கு முன்னிலையில் அவர்களால் நிற்க முடியவில்லை.
- மாறாக, அவர்கள் மோசேயையும் அவர்கள் சார்பாக தேவனோடு உரையாட அழைக்கப்பட்ட ஆசாரியர்களை மட்டுமே நம்பியிருந்தார்கள்.
இஸ்ரவேல் மக்கள் தம்மிடம் நெருங்கி வர உதவுவதற்காக, தேவன்
- தம்முடைய நியாயப்பிரமாணத்தை மோசேக்கு வெளிப்படுத்தினார்,
- அவற்றில் ஒரு பரிசுத்த ஸ்தலம் அல்லது கூடாரத்தைக் கட்டுவதற்கான வழிமுறைகள் உட்பட, அதன் மூலம் தேவன் அவர்களிடையே அந்த வாசஸ்தலத்தில் குடியிருக்க முடியும்.
- இந்த வாசஸ்தலத்தில் ஆசாரியர்கள், மட்டும் பலிகள் மற்றும் சடங்குகளில் பங்கேற்பார்கள்.
ஆசரிப்பு கூடாரம்/வாசஸ்தலம்:
- ஆசரிப்பு கூடாரத்தின் விரிவான வடிவமைப்பு மற்றும் சடங்குகளின் அடையாளங்கள், இஸ்ரவேலுக்கு வரவிருக்கும் இரட்சகராகிய மேசியாவை நோக்கி சுட்டிக்காட்டுகிறது.
- அவர்கள் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்கப்படுவார்கள்.
1)பிரகாரம், 2)பரிசுத்த ஸ்தலம் மற்றும் 3) மகா பரிசுத்த ஸ்தலம்:
- ஆசரிப்பு கூடாரத்தின் வழியாக ,மனிதகுலம் வீழ்ச்சியடைந்த உலகத்திலிருந்து மீண்டும் தேவனின் முன்னிலையில் நிற்பதற்கு தகுதியாவதை குறிக்கிறது.
- ஆசரிப்பு கூடாரம் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது: 1)பிரகாரம், 2)பரிசுத்த ஸ்தலம் மற்றும் 3) மகா பரிசுத்த ஸ்தலம்.
- இந்த உலகத்தின் ஒரு முனையிலிருந்து தேவனை மையமாகக் கொண்ட ஒரு இடத்திற்கு புறப்படுமாறு பிரகாரம்ஒருவரை அழைக்கிறது.
- பரிசுத்த ஸ்தலம், எண்ணெய் விளக்குகளால் எரியும். அது பரிசுத்த ஆவியின் ஒளியின் மூலம் ஒருவர் தேவனிடம் நெருங்கிச் செல்வதைக் குறிக்கிறது.
- மகா பரிசுத்த ஸ்தலமானது, தேவனின் பிரசன்னத்திற்குள் மனந்திரும்புவதை குறிக்கிறது.
வாசஸ்தலத்தின் ஒரு நுழைவு:
- வாசஸ்தலத்தின் ஒவ்வொரு இடமும், பரலோகத்தை நோக்கிய அடையாளப் பயணத்தைப் பற்றி மேலும் வெளிப்படுத்துகிறது.
- ஒரே ஒரு நுழைவு மட்டுமே பிரகாரத்திற்குள் செல்ல இருக்கிறது.
- கிழக்கு சுவரில் உள்ள அந்த அழகான மற்றும் வண்ணமயமான வாயில் வழி, இஸ்ரவேலர் தேவனை நோக்கி ஏறத் தொடங்குகிறதை அடையாளமாக காட்டுகிறது.
- மீட்பர் தனது மரண ஊழியத்தின் போது கற்பித்தது என்னவென்றால்
- “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10 : 9)”
பலிபீடத்தின் பலிகள்:
- வாசஸ்தலத்தின் பிரகார நுழைவுவாயில் வழியாக நுழைந்தால், நாம் பலியின் வெண்கல பலிபீடத்திற்கு வருகிறோம்.
- அங்கு இஸ்ரவேல் ஆண்களும் பெண்களும் பக்தியைக் காண்பிப்பதற்கும், நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கும், மீறலுக்கான நல்லிணக்கத்தை தேடுவதற்கும் ஒரு வழிமுறையாக தேவனுக்கு பலியிட்டனர்.
- இந்த பலிகள் அனைத்தும் உலகின் பாவங்களுக்காக பலியாக்கப்பட்ண கர்த்தரையும், கறைபடாத முதல் ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் நிழலையும் குறிக்கின்றது.
வெண்கலத்தால் ஆன தொட்டி:
- பின்னர் வெண்கலத்தால் ஆன தொட்டியின் இடத்தில் வருகிறோம்.
- (கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக. :-யாத்திராகமம் 30 :18) .
- இங்கே, ஆரோனின் புத்திரர் ஒரு ஆசாரியராக மாறுவதற்கு முன்பு ஆசாரிய உடையில், கழுவப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு, ஆடை அணிந்திருந்தார்.
- ஆசாரியர்கள் பலிகளை செலுத்துவதற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்கும் முன்பாக சடங்கு முறையில் கைகளையும் கால்களையும் இங்கே கழுவ வேண்டும்.
- தொட்டியின் சுத்திகரிப்பு நீர், இரட்சகரை நினைவூட்டுகிறது, அவரின் சொற்களும் அன்பும் உயிருள்ள தண்ணீருக்கு சமானம்.
- அதில் நாம் கழுவப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு, பின்பு நிரப்பப்படுகிறோம்.
மேஜை ,அப்பம், திராட்சைரசம்:
- நாம் இப்போது கூடாரத்தின் வாசலில் பரிசுத்த ஸ்தலத்திற்குள் தேவனின் பிரசன்னத்திற்குள் நுழைகிறோம்.
- வலதுபுறத்தில் அப்பங்களின் மேஜை உள்ளது, அங்கு ஒவ்வொரு ஓய்வுநாளிலும் பன்னிரண்டு அப்பங்களை ஆசாரியர்கள் வைத்து சாப்பிட்டார்கள்.
- ஒரு குடம் திராட்சைரசமும் மேஜையில் வைக்கப்பட்டிருந்தது என்று பாரம்பரியம் கூறுகிறது.
- "நானே ஜீவ அப்பம்" (யோவான் 6:35) என்று அறிவித்த இயேசு, கிறிஸ்துவின் அறிவுரையில் நாம் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறார்.
- அப்பமும் திராட்சைரசமும் கிறிஸ்துவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் நினைவூட்டுவதாக இருக்கிறது.
பொன் குத்துவிளக்கு :
- பரிசுத்த ஸ்தலத்தின் தெற்கே பொன் குத்துவிளக்கு இருந்தது.
- குத்துவிளக்கில் ஏழு கிளைகள் இருந்தன,
- ஒவ்வொன்றும் பாதாம் பூக்கள், மொட்டுகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
- ஆசாரியர்கள் ஒவ்வொரு மாலையும், ஒலிவ எண்ணெயால் விளக்குகள் ஒழுங்காக எரிகிறது என்பதை உறுதிசெய்து, நிரப்புவார்கள்.
- பரிசுத்த ஸ்தலத்திற்கான ஒளியின் ஒரே ஆதாரமாக இது இருந்தது,
- “நான் உலகின் ஒளி” (யோவான் 8:12) என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் நினைவூட்டலாக இது செயல்படுகிறது.
தூப பலிபீடம்:
- பின்னர், நாம் தூப பலிபீடத்திற்கு வருகிறோம்.
- அங்கு ஒரு ஆசாரியன் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் மூடுதிரை முன் தூபத்தை எரிப்பார்.
- அங்கு பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக பலிபீடத்தின் எரியும் தூபம், தேவனின் பிரசன்னத்திற்குள் நாம் நுழைவதற்கு காலையிலும், மாலையிலும் ஜெபம் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது.
- தூபத்தின் சுகந்த வாசனை பரலோகத்திற்கு மேலே செல்வது போலவே, நீதிமான்களின் ஜெபங்களும் தேவனிடம் எழுந்துமேலே செல்கின்றது.
மூடுதிரை கிழிந்தது:
- கைத்தறி மூடுதிரை பரிசுத்த ஸ்தலத்தை, மகாபரிசுத்த ஸ்தலத்திலிருந்து பிரிக்கிறது.
- மூடுதிரை மீது விசித்திரவேலையாய் கேரூபீன்கள் வரையப்பட்டுள்ளன.
- அவை தேவனின் குடியிருப்பை பாதுகாப்பதை குறிக்கும்.
- கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, ஏரோது ஆலயத்தின் மூடுதிரை மேலிருந்து கீழாக இரண்டு பிரிவுகளாக கிழிந்தது.
- இது இரட்சகரின் பலியின் மூலம், அனைவருக்கும் தேவனின் ஆலயத்திற்குள் நுழைவதற்கான வழி இப்போது திறக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
- கிறிஸ்துவின் மூலமாக, நாம் தைரியமாக மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு செல்ல முடியும் என்று
- எபிரேயரின் எழுத்தாளர் கற்பித்தார் “ஒரு புதிய மற்றும் உயிருள்ள வழி மூலம்… மூடுதிரை வழியாக, அதாவது [கிறிஸ்துவின் மாம்சம்” (எபிரெயர் 10:20).
உடன்படிக்கைப் பெட்டி :
- இப்போது நாம் மகாபரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம்.
- நாம் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வாழ்வதன் முக்கியத்துவத்தை இது குறிக்கின்றது.
- கூடாரத்தின் மையத்தில் மிக புனிதமான பொருளான உடன்படிக்கைப் பெட்டி உள்ளது.
- பெட்டியின் மேல் மறைப்பு இருக்கிறது.
- இது பெரும்பாலும் மெர்சி சீட் அல்லது கிருபாசனம்/ பாவநிவிர்த்தி இருக்கை என்று அழைக்கப்படுகிறது,
- திடமான தங்கத்தினால் ஆன இரண்டு கேரூபீன்கள் அதன் மீது வைக்கப்பட்டு இருக்கின்றன.
- இந்த கேரூபீன்கள் தங்கள் சிறகுகளை பெட்டியின் மேல் நீட்டி நிற்பது, கர்த்தருடைய பிரசன்னம் வசிக்கும் இடத்தை பாதுகாக்க கேரூபீன்கள் இருப்பதை குறிக்கிறது.
- பெட்டியின் உள்ளே ஆரோனின் கோல்,மன்னாவின் கிண்ணம், சீனாய் மலையில் மோசேக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் கற்பலகைகள் உள்ளிட்ட புனிதமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
பிரதான ஆசாரியர்:
- ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, பாவநிவிர்த்தி நாளில், பிரதான ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் நுழைய வேண்டும்.
- கர்த்தராகிய ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம், இஸ்ரவேல் தேசம், தேவனின் பிரசன்னத்தில் மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என்பதைக் குறிக்கிறது.
- கிருபாசனத்தில் பலியிலிருந்து இரத்தத்தைத் தெளிப்பது இதையே குறிக்கின்றது.
- இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றாலும், பிரதான ஆசாரியன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
- இயேசு கிறிஸ்து நம்முடைய மிகப்பெரிய பிரதான ஆசாரியராக இருக்கிறார், அவர் பிதாவுக்கு முன்பாக நம் சார்பாக பரிந்து பேசுகிறார்.
சாலமோன் மண்டபம்:
- இஸ்ரவேல், வனாந்தரத்தில் இருந்த காலத்தில், ஆசரிப்பு கூடாரம் ஒரு சிறிய கட்டமைப்பாக இடத்திலிருந்து இடத்திற்கு நகர்ந்தது.
- இறுதியில், இது சாலமோன் மண்டபம் என்று அழைக்கப்படும் மிகவும் விரிவான மற்றும் நிரந்தர கட்டமைப்பால் மாற்றப்பட்டது.
- கூடாரத்தின் வடிவத்திற்குப் பிறகு கட்டப்பட்ட சாலொமோனின் ஆலயம் பாபிலோனியர்களால் அழிக்கப்படும் வரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக எருசலேமின் முடிசூட்டப்பட்ட நகையாக இருந்தது.
இரண்டாவது ஆலயம் – இயேசு பிறப்பு:
- எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது ஆலயம் அதே மாதிரியின் படி மீண்டும் கட்டப்பட்டது.
- ஏரோது மூலம், முதல் நூற்றாண்டில் இருந்தே விரிவாக மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருந்தது.
- உலகின் முன்னறிவிக்கப்பட்ட இரட்சகராகிய இயேசு இங்கு ஒரு குழந்தையாக கொண்டு வரப்பட்டார்.
- 1.மோசேயின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கும், 2.புதிய உடன்படிக்கை மூலம் அவர் பிரசன்னத்திற்கு திரும்புவதற்கான வழியைத் திறப்பதற்கும் மற்றும் 3.தேவனின் திட்டத்தை நிறைவு செய்வதற்காகவும் அவர் உலகில் பிறந்தார்.
புதிய உடன்படிக்கை:
- கடைசி விருந்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அவருடைய துன்பத்தினாலும் மரணத்தினாலும் சாத்தியமான இந்த புதிய உடன்படிக்கையைப் பற்றி கற்பித்தார்.
- மறுநாள் பஸ்கா ஆட்டுக்குட்டியான கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரும் ஒரு பலியை அவர் ஏற்றுக்கொண்டார்.
- விலங்குகளின் பலிகளின் தேவையை மாற்றினார்.
- இந்த கட்டத்தில் இருந்து, இயேசுவின் சீஷர்களிடமிருந்து ஒரு புதிய வகையான பலி கேட்கப்படும் .
- அது என்னவென்றால், அவர்கள் இதயம்.
- ஒரு தவறான ஆவியினிடம் இருந்து அவர்கள் இதயத்தை திருப்பி, இயேசுவை பின்பற்ற நினைக்க வைப்பதாகும்.
பண்டைய ஆசரிப்பு கூடாரம் - கிறிஸ்துவை மையமாக:
- பண்டைய ஆசரிப்பு கூடாரம், பிற்காலத்தில் ஆலயங்களாக எருசலேமில் உருவெடுத்தன.
- அங்கு கிறிஸ்துவை மையமாக வைத்து பல சடங்குகளையும், பலிகளையும் பின்பற்றி வருகின்றனர்.
முடிவுரை:
அவருடைய வாழ்க்கை மற்றும் ஊழியம், அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் உச்சக்கட்டத்தை அடைந்து, ஒவ்வொரு நியாயப்பிரமாணத்தையும், கட்டளைகளையும் நிறைவேற்றி, பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவிடம் நம்மை அழைத்துச் செல்லும் பாதையைக் காட்டுகிறது.
Comments
Post a Comment