அப்போஸ்தலர் - அதிகாரம் 6 -முழு விளக்கம்
அப்போஸ்தலர் – அதிகாரம் 6 - விளக்கம் அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். -அப்போஸ்தலர் 6 : 1 அர்த்தம்: " அந்நாட்களில்" = எருசலேம் திருச்சபையின் ஆரம்ப காலம், பெந்தெகொஸ்தேக்குப் பிறகு சிறிது காலத்திலேயே, விசுவாசிகளின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆரம்ப தேவாலயம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில். திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று - neglected (புறக்கணிப்பு) கிரேக்க மொழி பேசும் யூதர்கள் (Hellenistic Jews) எபிரேய மொழி பேசும் யூதர்களுக்கு (Hebraic Jews) எதிராக முறுமுறுத்தனர்.(murmur) அவர்களுடைய விதவைகள் அன்றாட உணவுப் பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்டதாக கூறினர். கிரேக்கர்கள் அவர்கள் விதவைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். இது இந்த இருவருக்கும் இடையான கலாச்சார வேறுபாட்டின் காரணமாக நடந்தது.