ஆழமான விசுவாசம்
ஆழமான விசுவாசம் நம் அன்றாட வாழ்வில் நாம் ஆண்டவர் மேல் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறோம்? கர்த்தர் நம்முடைய குணாதிசயத்தை மாற்ற மிகவும் ஒரு வித்தியாசமான செயல்முறையைப் பயன்படுத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை நாம் விசுவாசத்தின் ஆ று கட்டங்கள் என்று அழைக்கலாம். கர்த்தரின் செயல்முறையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், பிரச்சனைகள் வரும் போது நீங்கள் மிகவும் சோர்ந்து போவீர்கள். "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?" என்று நினைப்பீர்கள். ஆனால் கர்த்தர் என்ன செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால், உ ங்கள் வாழ்க்கையிலும் உங்கள் நம்பிக்கையிலும், நீங்கள் பெரும் பலத்தை வளர்த்துக் கொள்வீர்கள். 6 D's or phases of Faith (விசுவாசம்) 1) Dream - கர்த்தர் கொடுக்கும் தரிசனம் 2) Decision - முடிவெடுத்தல் 3) Delay - தாமதம் 4) Difficulty - கடினமாக, சிரமமாக 5) Dead End - ஒரு பக்கமும் வழியில்லாதது போல தோன்றும் 6) Deliverance - விடுதலை Dream - தரிசனம்: கர்த்தர் உங்களுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுப்பார். தரிசனம் என்றால் அது ஒரு யோசனையாக, ஒரு குறிக்கோளா...