வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 2 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 2 விளக்கம் 2 மற்றும் 3 ஆம் அதிகாரங்களில் இயேசுவானவர் 7 சபைகளுக்கு கொடுத்திருக்கிற செய்திகளை காணலாம். முதலாம் அதிகாரத்தில் 7 சபைகள் என்ன என்பதைக் கண்டோம். இதை ஒரு அட்டவணையாக பிரிக்கலாம். 7 சபைகளி்ல் 2 சபைகளுக்கு எந்தவித குற்றச்சாட்டும் ஆண்டவர் சொல்லவில்லை. 1) சபையின் பெயர் 2) அந்தந்த சபைக்கு இயேசு கிறிஸ்து எப்படி பேசுகிறார். (ஒவ்வொரு சபைக்கும் வித்தியாசமான முறையில் பேசி இருக்கிறார்.) 3) ஆண்டவராகிய இயேசு சபையில் இருக்கிற நல்ல காரியங்களை குறித்து பேசுகிறார். 4) ஒவ்வொரு சபையில் இருக்கிற குறைகளை எடுத்துக் காட்டுகிறார். 5) ஆலோசனை கொடுக்கிறார். 6) எச்சரிப்பைக் கொடுக்கிறார். (செய்யாவிட்டால் உங்களுக்கு இது தான் நடக்கும்) 7) செய்தால் நடக்கப் போகிற நன்மையான காரியங்கள் இவைகள் என சொல்லுகிறார்.