உன்னதப்பாட்டு எட்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 8

உன்னதப்பாட்டு- அதிகாரம் 8- விளக்கம்

ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
 -உன்னதப்பாட்டு 8 : 1

விளக்கம்:

ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால்
  • சபையாகிய மணவாட்டி பேசுகிறாள். 
  • எபிரேய மொழியில் கூட அந்த உணர்வுப் பூர்வமான ஆ இருக்கிறது. 
  • உள்ளத்தில் இருந்து வருகின்ற உணர்வாம். 
  • ஏக்கம் கலந்த ஒன்று. 
  • ஆ இப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் என்ற உணர்வு.
  • சே! மிஸ் பண்ணிட்டேனே! என்ற உணர்வு.
  • சில கிறிஸ்தவர்கள் ஏங்குகிறார்கள் ‘நான் ஒரு இஸ்ரவேலனாய் பிறந்திருக்கக் கூடாதா’ என்று. 
  • அந்த அடிப்படையில் தான் இந்த சபையின் அங்கலாய்ப்பை தீர்க்கத்தரிசனமாக உன்னதப்பாட்டு புத்தகம் காட்டுகிறது. 
  • (எ.கா) ஒரு வேளை இயேசுவானவர் தமிழராய் பிறந்திருந்தால், நாம் எந்தளவு உரிமை கொண்டாடி இருப்போம். 
  • எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்போம். 
  • அதை தான் இங்கு காட்டுகிறது. 
நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்
  • என் கிறிஸ்தவத்தை நான் இரகசியமாய் வைத்திருக்க மாட்டேனே.
  • என் கிறிஸ்தவத்தை நான் வெளிப்படையாக காண்பித்திருப்பேனே. 
  • எத்தனை கிறிஸ்தவர்கள், தங்கள் கிறிஸ்தவத்தை மறைத்து கொண்டு இரகசிய விசுவாசியாய் இருக்கிறார்கள். 
  • அப்படி நானும் இஸ்ரவேலனாய் இருந்திருந்தால் யார்  என்னை என்ன கேள்விக் கேட்க முடியும். 
  • அது போன்ற ஒரு உணர்வு. 
என்னை நிந்திக்கவுமாட்டார்கள்
  •  அப்போது நிந்தித்திருக்கமாட்டார்கள். 
  • ஒரு வேளை நாம் இஸ்ரவேலனாக இருந்து, இஸ்ரவேலின் தேவனை வணங்கி இருந்தால் யாரும் நம்மை எதுவுமே சொல்லி விட முடியாதே. 

நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
 -உன்னதப்பாட்டு 8 : 2

விளக்கம்:

நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்
  • ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தால் நானும் இஸ்ரவேலனாக தானே இருந்திருப்பேன். 
  • தன்னை ஒரு இஸ்ரவேலனாக கற்பனைப் பண்ணிக் கொண்ட சபை சொல்லுகிறது. 
  • என் தாயின் வீடு -இஸ்ரவேல். 
  • ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தால், நான் உங்களை இஸ்ரவேலுக்கு அழைத்து சென்றிருப்பேன். 
நீர் என்னைப் போதிப்பீர்
  • நீர் எப்படி சீஷர்களுக்கு போதித்தீரோ, நீர் எப்படி 2000 வருடங்களுக்கு முன்பு அங்கிருந்தவர்களுக்கு போதித்தீரோ, அதையெல்லாம் நீர் எனக்கு போதீப்பீர்.
  • என்ன தான் நமக்கு தேவ வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரில் அவர் போதனையை கேட்டவர்களின் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை தானே. 
  • அதை தான் இங்கு காட்டுகிறது. 
கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்
  • திராட்சைரசமும், மாதுளம்பழரசமும் இஸ்ரவேலிலே மிகப் பிரபலம். 
  • இது wine அல்ல.
  • Grape juice. 
  • போதை வராத திராட்சைரசத்தை குறித்து தான் இங்கு பேசப்பட்டுள்ளது. 
திராட்சைரசத்தின் 14 நன்மைகள்

1. இரத்தம் கட்டுதலைச் சீர்படுத்தும் (Reduces Blood Clots).
2. தீய கொழுப்பை குறைக்கும் (Reduces Low Density- Lipoprotein (LDL) Cholesterol.
3. இரத்த நாளங்களை பாதுகாக்கும் (Prevent damage to Blood Vessels).
4. இரத்த அழுத்தத்தை சீர்படுத்தும் (Even the Blood Pressure). 
5. வைட்டமின் C & K கொண்டது (Vitamin C & K ). 
6. மிஞ்சிய பிராணவாய்வேற்றத்தை தடுக்கும் (Anti-Oxidant)
7. புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.. (Controls Cancer)
8. இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது (Good for Heart).
9. குருதிச் சக்கரையைக் குறைக்கும் (Reduces Sugar in Blood). 
10. கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது (Good for Eyes). 
11. ஞாபகசக்தி, கவனம் (Memory, Attention). 
12. மனநிலைச் சீராக்கம் (Mood)
13. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு (Anti Bacterial, Viral).
14. முதிர் வயது பலவீனங்களை போக்குதல் (Strength to Age related Weakness). 

திராட்சரசத்தையும்
  • நான் இஸ்ரவேலிலே இருக்கிற அந்த அருமையான திராட்சைரசத்தை உமக்கு குடிக்க கொடுப்பேன்.
  • இயேசுவானவர் வந்துவிட்டு போய் 2000 ஆண்டுகளுக்கு பிறகு, சபைக்கு இப்படி ஒரு உணர்வு வரும் என்று இயேசுவானவர் வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கத்தரிசனமாக சொல்லப்பட்ட வசனம் இது. 
மாதுளம்பழரசத்தின் 14 நன்மைகள்

1. மிஞ்சிய பிராணவாய்வேற்றத்தை தடுக்கும் (Anti-Oxidant)
2. Vitamin C ( நமது உடம்புக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுகின்ற Vitamin C ன் 40% 1 மாதுளம்பழத்தில் இருக்கிறதாம்).
3. புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது. (Controls Cancer)
4. மறதிநோயைக் கட்டுப்படுத்துகிறது (Alzheimer’s Disease-Memory Loss).
5. உணவு செமிக்கும் கோளாறு, குடல்புண் போன்றவை (Digestion, Ulcer etc..)
6. வீக்கத்தைக் குறைப்பது (Anti-Inflammatory)
7. வாத நோய்க்கு நல்லது (Good for Arthritis)
8. இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது (Good for Heart).
9. கொழுப்பை குறைக்கும் (Reduces Cholesterol).
10. இரத்த அழுத்தத்தை சீர்ப்படுத்துகிறது (Blood Pressure)
11. வைரஸ் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு (Anti-Viral).
12. வைட்டமின் E & K, பொட்டாசியம், போலேட்டு கொண்டது (Vitamin E & K, Potassium, Folate). 
13. விளையாடுகையில் மீள்சக்தியூட்டல் ( Strength Recovery for Sports). 
14. நீரிழிவு- இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்தல் (Diabetes-Decrease Insulin Resistance).

கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்
  • நான் உங்களுக்கு அதி சிறந்த மாதுளம்பழரசத்தையும், திராட்சைரசத்தையும் கொடுப்பேன். 
  • நமக்கு எல்லாமே கொடுத்தது தேவன் தான்.
  • இருந்தாலும் நமக்கு கொடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் அவருக்கு கொடுத்து உபசரிப்போம்.
  • இயேசுவை உபசரிக்கும் தன்மையை இந்த வசனம் காட்டுகிறது. 
  • என் தேவனுக்கு தண்ணீர் கலந்த ரசத்தை கொடுக்க மாட்டேன். 
  • பரிசுத்தமான திராட்சைரசத்தை கொடுத்து உபசரிப்பேன். 

அவர் இடதுகை என் தலையின்கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.
 -உன்னதப்பாட்டு 8 : 3

விளக்கம்:
  • 2:6 ஐ காண்க
  • இயேசுவே! நான் உங்களிடத்தில் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவளாக வந்தேன். 
அவர் இடதுகை என் தலையின்கீழிருக்கும்
  • ஆனால் நீங்கள் எனக்கு இளைப்பாறுதலைக் கொடுத்தீர்கள். 
  • சமாதானபிரபுவே! உம்முடைய இடது கையில் நான் ஓய்வாக இருக்கிறேன். 
  • நிம்மதியாய் இருப்பதற்கான அடையாளம். 
அவர் வலதுகை என்னை அணைக்கும்
  • வலதுகை என்னை அணைக்கும் என்பது ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. 
அவர் இடதுகை என் தலையின்கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்
  • நான் இயேசுவினிடத்தில் வந்து விட்டேன். 
  • அவர் எனக்கு ஓய்வையும், சமாதானத்தையும், இளைப்பாறுதலை மாத்திரமல்ல.
  • ஆசீர்வாதத்தையும், பாதுகாப்பையும் கூட கொடுக்கிறார். 

எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.
 -உன்னதப்பாட்டு 8 : 4

விளக்கம்:

எருசலேமின் குமாரத்திகளே! 
யூதர்களே!

எனக்குப் பிரியமானவளுக்கு 
சபை எனக்கு பிரியமானவள். 

நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்
  • யூதர்களே! நான் உங்களை தெரிந்தெடுத்து கொண்டேன் தான்.
  •  நான் இஸ்ரவேலின் தேவன் தான். 
  • உங்களுக்கு என்னில் நிறைய உரிமை இருக்கிறது தான். 
  • ஆனால் இவள் புறஜாதி தான். 
  • அந்நிய தேசத்தாள் தான். 
  • ஆனால் இப்போது அவள் இரட்சிக்கப்பட்டுவிட்டாள்.
  • இப்போது அவள் எனக்கு பிரியமானவள். 
  • சபை எனக்கு பிரியமானவள். 
  • அவள் இஸ்ரவேலில் இல்லை. 
  • பரவாயில்லை. 
  • நீங்கள்(யூதர்களே) உங்கள் இஸ்ரவேலியதுவத்தை கொண்டு இவளை (சபையை) குழப்பக் கூடாது . 
  • சபையை Disturb செய்யாதீர்கள். 
  • பண்டிகைகளை ஆசரி என்று சொல்லக் கூடாது.
  • ஓய்வுநாளை கடைபிடி என்று சொல்லக் கூடாது.
  • நியாயப்பிரமாணத்தை திணிக்கக் கூடாது.
  • விருத்தசேதனத்தை திணிக்க கூடாது. 
எடுத்துக்காட்டு
  • ஒரு அம்மாவுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறது. 
  • ஒரு பிள்ளை தூங்கி கொண்டிருக்கிறது. 
  • ஒரு பிள்ளை சத்தம் போட்டு கொண்டு இருக்கிறது.
  • அப்போ அம்மா பிள்ளையை பார்த்து ஷு அக்கா தூங்குறா அமைதியா இரு என்று சொல்வார்களே!
  • அதை தான் இங்கு காட்டுகிறது. 
தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
 -உன்னதப்பாட்டு 8 : 5

விளக்கம்:

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? 

தன் நேசர்மேல்
யூதர்கள் சொல்லுகிறார்கள் தன் நேசர் என்று. 
  • யூதர்கள் இயேசுவுக்கு பிரதியுத்தரமாக இந்த வசனத்தை சொல்லுகிறார்கள். 
  • யூதர்கள் இயேசுவை பார்த்து சொல்லுகிறார்கள். 
  • நீர் எங்களுடையவர். 
  • இவள் யார் வனாந்திரத்திலிருந்து வந்திருக்கிறாள் என்று. 
  • இஸ்ரவேலர்களுக்கு புறஜாதியார் ஒரு பாலைவனம் தான். 
  • (எ.கா) நம்முடைய பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கு நாம் காட்டான்.
  • யூதர்கள் அதை தான் வனாந்தரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிறார்கள். 
கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்
  • கிச்சிலி மரம்- Tap’puah in Hebrew
  • 2:3; 2:5; 7:8 ஐ காண்க
  • இஸ்ரவேலிலே நீர் எழும்பினது எங்கள் மத்தியிலே.
  • மேசியாவை நம்புகிற Messianic யூதர்கள் தான் இதைப் பேசுகிறார்கள். 
  • நீர் எங்களுடையவர். 
  • எங்களுக்கே இப்படி சொல்லுகிறீரா? என்று. 
அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்
  • உம்மை பெறுவதற்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம். 
  • இஸ்ரவேலர் தான் பரம்பரை பரம்பரையாக தேவனுடையவர்கள். 
  • நாங்கள் கண்டிருக்கிறோமே, உம்முடைய தாய் உம்மை பெற்றதை. 

நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 8 : 6

விளக்கம்:
  • மணவாளன் சொல்லுவதையும், இஸ்ரவேலர் சொல்லுவதையும் பார்த்த சபை இங்கு பேசுகிறது.
  • அவள் உணர்வை பரிதாபமாக வெளியிடுகிறது. 
  • இயேசுவே! பார்த்தீர்களா? 
  • இந்த யூதர்கள் எங்களை பார்த்து வனாந்தரத்தில் இருந்து வந்தவள் என்கிறார்கள். 
  • உண்மை தான். 
  • நான் புறஜாதியான் தான் 
  • ஆனால் இன்று முத்திரிக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு இருக்கிறோமே!
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்

அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
 -எபேசியர் 4 : 30

நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது
  • நீர் எங்கள் மேல் வைத்த அன்பும், நாங்கள் உங்கள் மேல் வைத்த அந்த அன்பும், மரணத்தை போல இருக்கிறது. 
  • உங்களை நேசித்து அந்த நேசத்தில் வாழ்வது கஷ்டமாக இருக்கிறது. 
  • எங்கு பார்த்தாலும் அவர்கள் எங்களை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 
  • இது அந்த சபையினுடைய உபத்திரவத்தை காட்டுகிறது. 
  • இஸ்ரவேலர்களும் எங்களை ஏற்றுக் கொள்வதில்லை.
  • மற்றவர்களும் எங்களை ஏற்றுக் கொள்வதில்லை. 
  • என் மக்கள் மத்தியிலே நான் இரகசியமாய் உங்களை ஆராதிக்க வேண்டியிருக்கிறது. 
  • ஏன்? 
  • நீங்கள் ஏதோ அந்நியரைப் போல இருக்கிறீர்களாம்.
  • இது சபையினுடைய அங்கலாய்ப்பு.
  • இஸ்ரவேலர்களும் என்னை வனாந்திரத்திலிருந்து வந்தவள் என்கிறாள். 
  • ஆதலால் உங்கள் மேல் வைத்த அன்பில் வாழுவது வலிக்கிறது. 
  • மரணத்தை போல, பாதாளத்தை போல கஷ்டமாய் இருக்கிறது. 

திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
 -உன்னதப்பாட்டு 8 : 7

விளக்கம்:

திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது
  • திரளான தண்ணீர்கள் என்றால் ஆபத்துகள்.
  • சபையாகிய எனக்கு என்ன விதமான எதிர்ப்புகள் இஸ்ரவேலர்களால் வந்தாலும், 
  • மற்றவர்களால் வந்தாலும் திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது.
  • சபை சொல்லுகிறது என்ன நடந்தாலும் என்னுடைய நேசம் மாறாது என்று.
ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
 -ரோமர் 8 : 36
  • அந்த காரியத்தை தான் தீர்க்கத்தரிசனமாக இங்கு சொல்லுகிறார். 
  • உங்கள் மேல் வைத்த அன்பிலே நான் நிலைத்திருக்கப் போகிறேன் என்று சபை சொல்லுகிறது. 

நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
 -உன்னதப்பாட்டு 8 : 8

விளக்கம்:
  • சபை சொன்னதை கேட்டவுடன், இஸ்ரவேலர்கள் அப்படியே மாறிவிடுகிறார்கள். 
  • யூதர்கள் புறஜாதியாராகிய முழு சபையையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காலம் வருகிறது என்று தீர்க்கத்தரிசனமாக இங்கே காண்கிறோம். 
  • வேத காலத்திலிருந்தே யூதர்கள் புறஜாதியாரை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டார்கள். 
  • பழைய ஏற்பாட்டில் கூட சில ஏத்தியர்கள், கானானியர்கள் யூத மதத்திற்கு மாறினதை அங்கீகரித்தார்கள். 
  • (எ.கா) உரியா. 
  • புதிய ஏற்பாட்டு காலத்திலே கூட கிரேக்கர்கள் யூதர்களாக மாறினார்கள்.
  • Proselytes in English. 
  • அப்படி கிரேக்க மதத்திலுருந்து யூத மதத்திற்கு மாறியவர்கள், பிற்பாடு கிறிஸ்தவர்களாகவும் மாறினார்கள். (லூக்கா, சீலா, தீத்து). 
  • புதிய ஏற்பாட்டு சபை வந்த பிறகு ஆங்காங்கே யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் எழுந்தாலும் ஒரு சில யூதர்கள் புறஜாதியாரை ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை.
  • ஆனால் கி.பி. 70 க்கு பிறகு இஸ்ரவேலை விட்டு துரத்தியடிக்கப்பட்ட பின்பு, சபை முழுக்க முழுக்க ஒரு புறஜாதியாருடைய அமைப்பாக மாறிவிட்டது.
  • சபையில் பெரும்பான்மையினர் யூதர்கள் அல்ல.
  • இஸ்ரவேலிலே கிட்டதிட்ட 35000 யூதர்கள் , மேசியானிக் யூதர்களாக இருக்கின்றனர். 
  • இங்கு தீர்க்கத்தரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது. 
  • ஒரு காலம் வருகிறது. 
  • அப்போது அனைத்து யூதர்களும், கிறிஸ்தவர்களை எங்களுடையவர்கள் என்று ஏற்றுக்கொள்வார்களாம்.
  • எப்படியென்றால் எங்களுடைய தேவனுடைய பிள்ளைகள். 
  • தேவனுடைய பிள்ளைகள் என்றால் எங்களுக்கு சகோதரிகள். 
நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு
சிறிய சகோதரி- புறஜாதியாராகிய கிறிஸ்தவர்கள். 

அவளுக்கு ஸ்தனங்களில்லை
  • விசுவாசம், அன்பு இல்லை. 
  • புறஜாதியாராகிய கிறிஸ்தவர்களுக்கு தேவன் மேல் விசுவாசம், அன்பு இல்லையா? உண்டு. 
  • ஆனால் யூதர்கள் சொல்லுகிறார்கள் இல்லை என்று.
  • நீங்கள் என்ன தான் எங்களுடைய தேவனை பிதா என்று சொன்னாலும், 
  • உங்களுக்கு நாங்கள் ஆண்டவர் மேல் வைத்திருக்கிற அளவுக்கு விசுவாசம் இல்லை. 
  • உங்களுக்கு நாங்கள் ஆண்டவர் மேல் வைத்திருக்கிற அளவுக்கு அன்பு இல்லை. 
  • யூதர்கள் புறஜாதியாரை ஏற்றுக்கொள்ளும் ஒரு காலம் வருமாம். 
  • இந்த தீர்க்கத்தரிசனம் நடக்க தொடங்கி இருக்கிறது. 
  • இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.
நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்
  • இந்த மணவாளன் இயேசு இந்த சகோதரியை திருமணம் செய்ய கேட்கிறாராம். 
  • யூதர்கள் சொல்லுகிறார்கள், இயேசு நம்முடைய சகோதரியை பெண்கேட்கும் நாளில் எப்படி நாம் அவரிடம் கொடுப்போம் என்று. 
  • ஏனென்றால் அந்த அளவுக்கு இவளுக்கு வளர்ச்சி இல்லையே! 
  • மணவாளன், மணவாட்டியாகிய சபையை பெண் கேட்கும் போது எப்படி நாம் அவரிடம் கொடுப்போம் என்று கேட்கிறார்கள். 
  • பொதுவாக, ஒரு உடல் ரீதியாக வளர்ச்சியடையாத பெண்ணை எப்படி திருமணம் செய்து கொடுப்பார்கள்? 
  • அது போல இங்கு ஆவிக்குரிய ரீதியில் வளர்ச்சியடையாத பெண்ணை எப்படி திருமணம் செய்து கொடுப்போம் என்று யூதர்கள் சொல்லுகிறார்கள். 

அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
 -உன்னதப்பாட்டு 8 : 9

விளக்கம்:

அவள் ஒரு மதிலானால்
  • மதில் என்பது ஒரு நகரத்தின் எல்லை மற்றும் பாதுகாப்பு.
  • மதில் இல்லாவிட்டால் அந்த நகரம் ஒரு நகரமே அல்ல. 
  • யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம், யார் வேண்டுமானாலும் வெளியே போகலாம்.
அவள் கதவானால்
  • கதவு வேண்டுமே அந்த மதிலுக்குள் போக வர. 
  • கதவு என்றால் வாசல். 
  • இயேசுவானவர் அவருடைய நாமத்தை நமக்கு மதிலாக, துருகமாக கொடுத்திருக்கிறார். 
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
 -யோவான் 14 : 6

அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்
  • இந்த சபை ஒரு மதிலாய் இருக்கின்ற அளவுக்கு வளர்ச்சி அடையவில்லையே!
  • அவள் உண்மையிலேயே மதிலானால், நாங்கள் பயமில்லாமல் ஒரு வெள்ளிக்கோட்டையையே கட்டுவோமே!
  • ஆனால் இவள் மதில் இல்லையே!
  • குறைந்தப்பட்சம் இவள் ஒரு கதவாகவாவது இருந்தால் விலையுயர்ந்த கேதுரு மரத்தினால் கதவை போடுவோமே என்று யூதர்கள் சொல்லுகிறார்கள். 
  • ஒரு நாள் வரும். 
  • யூதர்கள் புறஜாதியாரை அரவணைத்து கொள்வார்கள்.
  • தங்கள் தேவனின் பிள்ளைகளாக, சகோதரிகளாக ஏற்றுக் கொள்வார்கள். 
  • ஏற்றுக்கொண்டாலும் புறஜாதியார் போதிய அளவு முதிர்ச்சி அடைந்தில்லை. 
  • போதிய அளவு வளர்ந்தில்லை என்ற உணர்விலே தான் யூதர்கள் இருப்பார்கள். 

நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.
 -உன்னதப்பாட்டு 8 : 10

விளக்கம்:

நான் மதில்தான்
  • யூதர்களுக்கு பிரதியுத்தரமாக சபை என்ன சொல்கின்றது என்று இந்த வசனத்தில் காண்போம்.
  • நீங்கள் இப்பொழுது தான் எங்களை ஏற்றுக்கொள்கிறீர்கள். 
  • எங்களுடைய வளர்ச்சி உங்களுக்கு தெரியாது.
  • நீங்கள் நினைக்கிற மாதிரி நான் தட்டை நிலம் அல்ல.
  • நான் மதில் தான். 
என் ஸ்தனங்கள் கோபுரங்கள்
  • என் விசுவாசமும், என் அன்பும் கோபுரங்கள். 
  • அவை உங்களுடைய விசுவாசத்திற்கும், அன்புக்கும் சளைத்தது அல்ல. 
  • ஏனென்றால் யூதர்களுக்கு அவர்கள் தேவனை வணங்குவதில் பிரச்சினை இல்லை. 
  • புறஜாதியார் தான் வேற்று மதத்தை விட்டு வந்து, வேற்று மதத்திற்கு நடுவில் போராட்டத்தோடு வாழ்கிறார்கள். 
  • எனவே புறஜாதியாரின் விசுவாசம் குறைந்தது அல்ல. 
அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்
  • அவருடைய கிருபையினால் தான் இவை அத்தனையும் கடைத்தது. 
புதிய ஏற்பாட்டு வசன தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
 -எபேசியர் 2 : 8

பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
 -உன்னதப்பாட்டு 8 : 11

விளக்கம்:
  • சபை இயேசுவை பற்றி ஒரு தீர்க்கத்தரிசனத்தை மிக அழகாக சொல்லுகிறது. 
  • சாலொமோன் இந்த உன்னதப்பாட்டு புத்தகத்திலே, இயேசுவுக்கு அடையாளமானவர். 
  • இந்த இடத்தில் வருகிற சாலொமோன் இயேசுவுக்கு அடையாளம். 
  • சாலொமோன் பாகால் ஆமோனிலே ஒரு திராட்சைத் தோட்டத்தை வைத்திருந்தாராம். 
பாகால் ஆமான் அமைந்திருக்கிற இடம்


திராட்சைத் தோட்டம்


பாகால் ஆமோன் அமைவிடம்
  • இந்த பாகால் ஆமோன் எருசலேமிற்கு வெளியே இருக்கிறது. 
  • இது ஒரு அழகான மலைப் பிரதேசம். 
  • இன்று கூட அங்கு நிறைய வீடுகள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். 
  • அங்கே திராட்சைத்தோட்டங்கள் உண்டு. 
  • இன்று இந்த பாகால் ஆமோன் எருசலேமிற்கு உள்ளே கொண்டுவரப்பட்டு இருக்கிறது. 
  • ஆனால் வேதக் காலத்திலே இருந்த எருசலேமிற்கு வெளியே இருந்தது. 
  • அதை தான் இப்போது பழைய எருசலேம் என்று சொல்லுகிறார்கள். 
  • இது அலங்கத்துக்கு உட்பட்ட பிரதேசம். 
  • இது அலங்கத்துக்கு வெளியே கொஞ்சம் தூரத்திலே இருக்கிறது. 
பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது
  • ஆகவே, அங்கு உண்மையான சாலொமோனுக்கு உண்மையான ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது.
  • அந்த இடத்திற்கு பெயர் பாகால் ஆமோன். 
  • அது ஒரு யூதப் பெயர் அல்ல. 
  • கானானியர்களுடைய பெயர். 
  • கானானியருடைய மொழியிலே பாகால் என்றால் கர்த்தர் என்று அர்த்தம். 
  • எபிரேய மொழியின் Yahweh என்பதன் கானானிய மொழியாக்கம் தான் பாகால். 
  • யூதர்கள் Yahweh என்று சொல்லமாட்டார்கள். 
  • Adonai என்று தான் சொல்லுவார்கள்.
  • கானானியருடைய பாகால் தேவனுடைய பெயரை அவர்களுடைய மொழியில் கொண்டிருந்தது. 
  • அதனால் தான் பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் பாகாலை வெறுத்தார். 
சாலொமோன்-இயேசு
  • சாலொமோனாகிய இயேசு, எருசலேமிற்கு வெளியே ஒரு திராட்சைத்தோட்டம் வைத்திருக்கிறாராம்.
எருசலேமின் குமாரத்திகள்
  • எருசலேமின் குமாரத்திகள் என்றால் யூதர்கள்.
எருசலேமிற்கு புறம்பாக
  • எருசலேமிற்கு புறம்பாக என்றால் புறஜாதியார். 
பாகால் ஆமோன்- சபை
  • அந்த திராட்சைத்தோட்டத்திற்கு பெயர் பாகால் ஆமோன். 
  • இது புறஜாதியாருடைய சபையை காட்டுகிறது. 
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
 -யோவான் 15 : 5

அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக

திராட்சைத்தோட்டம்
சபை

திராட்சைத்தோட்டக்காரர்
பிதா

காவலாளிகள்
ஊழியர்கள்
  • ஊழியர்கள் சபையை போஷிக்க, வழிநடத்த, பாதுகாக்க வேண்டும்
  • சபையை போஷித்து வழிநடத்துவது மாத்திரமல்ல, ஒரு காவலாளியாக இருக்க வேண்டும். 
  • சபை பலன் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்
  • ஆயிரம் என்பது பேச்சுவழக்கிலே சொல்லப்பட்டுள்ளது. 
  • (எ.கா) ஆயிரத்தெட்டு பிரச்சினை பா எனக்கு. 
  • வெள்ளிக்காசு என்பது அவர்களுடைய சம்பளம். 
  • திராட்சைத்தோட்டத்திலிருந்து வருமானத்தை பெற்றுக்கொள்ள, அதை வைத்திருப்பார்கள்.
  • சரித்திரத்தின்படி சாலொமோனுக்கு ஏகப்பட்ட வருமானம் அந்த திராட்சைத்தோட்டத்தின் மூலம் வந்து குவிந்தது.
  • இங்கு வருமானம் என்பது பணத்தை குறிக்கவில்லை.
  • செழிப்பான, சுபிட்சமான, பலன் கொடுக்கிற, கனிக் கொடுக்கிற மரமாக இருக்க ஆண்டவர் நம்மை நியமித்திருக்கிறார் என்பதனைக் குறிக்கிறது. 

என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
 -உன்னதப்பாட்டு 8 : 12

விளக்கம்:

என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது
  • நல்ல நிலமாகிய என் மேல் தேவனுடைய வசனமாகிய விதை விழுந்து இப்போது நான் ஒரு தோட்டமாக இருக்கிறேன். 
சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்
  • சபை சொல்லுகிறது, ஆண்டவரே! என் பலனெல்லாம் உமக்குத் தான். 
  • அது மாத்திரமல்ல. 
  • ஊழியர்களையும் நான் மறக்க மாட்டேன். 
  • அந்த எண்களை பற்றி இங்கு பார்க்கக் கூடாது.
  • இது கவிதை. 
  • சபையினுடைய முழு கனியும், முழு பலனும் சபையின் மணவாளனுக்கு தான் என்பதை தான் இங்கு காட்டுகிறது.
  • ஊழியர்களாகிய காவலாளர்களையும் நாங்கள் மறக்க மாட்டோம் என்ற சபை சொல்லுகிறது. 
என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.  
 -வெளிப்படுத்தல் 1 : 20
  • ஊழியர்களுக்கென்று ஒரு விசேஷமான கனம் உண்டு. 
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
 -யோவான் 12 : 26
  • ஒரு விசுவாசியை விட ஒரு ஊழியனுக்கு கனம் அதிகம். 

தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
 -உன்னதப்பாட்டு 8 : 13

விளக்கம்:

தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே!
  • மணவாளன் சபையை பார்த்து சொல்லுகிறார்.
  • சுபிட்சமானவளே! அழகானவளே! பசுமையானவளே!
  • தோட்டங்களில் நின்றால் அந்த பசுமையான சூழலைப் பார்த்து (காற்று, வாசனை, நறுமணம், ஓடை சத்தம், பறவைகளின் சத்தம்) நம்மமுடைய மன உணர்வே நிறைவாக மாறி விடும்.
  • அப்படிப்பட்ட இடத்தில் வாசம் பண்ணுகிறவர்களாக சபையாகிய நாம் இருக்க வேண்டும். 
தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்
  • யார் தோழர்கள்? 
  • யூதர்கள். 
  • வெளி 19 ல் ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில், தோழர்கள் சம்பந்தப்படுகிறார்கள். 
நானும் அதைக் கேட்கட்டும்
  • சபையே! உன் சத்தத்தைக் கேட்க எனக்கு ஆசை என்று மணவாளன் சொல்லுகிறார். 
  • நாம் யோசித்துப் பார்ப்போம். 
  • அவர் ஆசைப்படக் கூடிய சத்தத்தையா நாம் பேசுகிறோம்?
  •  புலம்பல், ஒப்பாரி, அழுகை இப்படி பல விஷயங்களை செய்கிறோம். 
  • அழுக வேண்டிய விஷயங்களுக்கு அழலாம். 
  • ஆனால் எந்நேரமும் அழுது கொண்டே இருக்கக் கூடாது. 
  • மணவாளன் எதிர்பார்க்க கூடிய சத்தத்தை பேசுபவர்களாக, 
  • அந்த தோட்டத்தில் வாசம் பண்ணுகிறவளை போல நாம் இருக்க வேண்டும். 
தேவன் விரும்பக் கூடிய சத்தம்
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
 -சங்கீதம் 150 : 5

என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.    
 -உன்னதப்பாட்டு 8 : 14

விளக்கம்:

என் நேசரே! தீவிரியும்
சீக்கிரமாய் வாரும். 

கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள
பரலோகத்தையும், எருசலேமையும் குறிக்கும். 

வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.    
  • துள்ளி ஓடி சீக்கிரமாய் வாரும் என்று சபை சொல்லுகிறது. 
இதனுடைய இரகசியம் என்னவென்றால் இப்படித் தான் வெளிப்படுத்தின விசேஷம் முடிகிறது. 

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
 -வெளிப்படுத்தல் 22 : 20

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.      
 -வெளிப்படுத்தல் 22 : 21
  • சபை இயேசுவைப் பார்த்து, வாரும் என்று சொல்வது போல முடிகிறது. 

Comments