எது வேண்டும்/ கவிதை தொகுப்பு


எது வேண்டும்


உன்னுடைய முகத்தின் சிரிப்பை பார்த்து

உன்னுடன் சிரிக்கிற மனிதர்கள் வேண்டுமா?

இல்லைஉன் உள்ளத்தின் அழுகையை பார்த்து,

ஆறுதல் சொல்கின்ற தேவன் வேண்டுமா?


உன்னுடைய புறதோற்றத்தை பார்த்து உன் பின்னால் வரும் ஆண்கள் வேண்டுமா?

இல்லைஅந்த தோற்றத்தை கொடுத்த தேவன் வேண்டுமா?


நீ சிரிக்கும் போது மட்டும் கூட வரும் சொந்தங்கள் வேண்டுமா?

இல்லைஉன் துக்கத்திலும் கூட வரும் தேவன் வேண்டுமா?


ஒரு நேரம் சிரிக்க வைத்துமறுநேரம் கண்ணீரைக் கொடுக்கும் காதல் வேண்டுமா?

இல்லைஎப்போதும் சிரிப்பை மட்டும் கொடுக்கும் தேவன் வேண்டுமா?


என்றாவது ஒரு நாள் , நேரம் கிடைக்கும்போது பேசும் நட்பு வேண்டுமா?

இல்லைஒவ்வொரு நிமிடமும் உன்னிடம் பேசும் தேவன் வேண்டுமா?


தவறு செய்யும் போது உற்சாகப்படுத்தும் நண்பர்கள் வேண்டுமா?

இல்லைதவறை உணர்த்திமனந்திரும்ப வைக்கும் தேவன் வேண்டுமா?


பொய் அன்பு காட்டிஉங்களை ஏமாற்றுபவர்கள் வேண்டுமா?

இல்லைஉண்மையான அன்பு காட்டி

உங்களுக்கென்று உயிர்கொடுத்த தேவன் வேண்டுமா?

Comments